இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கிடையே இருக்கும் கருத்துவேறுபாடு சமீபமாக தலைதூக்கியிருப்பது ஊடகங்களில் வாயிலாக தெரிகிறது,மேட்சுகளிலும் தெரிகிறது.குறிப்பாக மூத்த வீரர்கள் கேப்டன் தோனிக்கிடையேயும்,சேவாக் தோனிக்கிடையேயும் பிளவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
தூக்கிப்பிடிப்பது கீழே போட்டு அமுக்குவதற்க்கே என்று தெரியாமல் சிரிக்கிறார்
தோனி வேறு ஓய்வெடுப்பதைப்பற்றி பேசி வருகிறார்.(சச்சினை ஓய்வெடுக்க சொல்லி மறைமுகமா சொல்றாரா?) இந்த சூழலில் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பிருக்கும் வீரர் யாராக இருக்கமுடியும்.நேத்து கட்சி ஆரம்பிச்சு அடுத்த தேர்தல்ல ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு சொல்ற மாதிரி நேத்து டீம்ல சேந்தவங்க எல்லாருக்குமே கேப்டன் கனவு இருக்கும் ஆனா ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க அப்படின்னு பழமொழி சொல்வாங்க. அதனால கேப்டனாகும் அம்சம் யாருக்கு இருக்குன்னு ஒரு அலசல் எனது பார்வையில்.(நாங்க எல்லாம் கடன் வாங்கியா பாக்குரோம்னு கேக்கப்படாது ..ரைட்!).சச்சினை தவிர்த்து.
சேவாக்-தோனி இல்லாத சமயங்களில் கேப்டன் பொறுப்பு இவர் மீது விழுந்தாலும் அணியில் இடம் பிடிப்பதே இப்போதைய சூழலில் இவருக்கு கேள்விக்குறியாகிறது.அது மட்டுமல்லாமல் வந்தமா நாலு போர் ரெண்டு சிக்ஸ் அடிச்சமா,போனமா இதுதான் இவரது பாலிசி அதனால அந்த வேலைக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டாரு.
( நமக்கு ஊஊ ........தானா? )
காம்பிர்- இவரும் சில மேட்சுகளில் காப்டனாக வலம் வந்திருக்கிறார்.கடந்த நியூசிலாந்து தொடரில் அந்த அணிக்கு வெள்ளை பூசி அனுப்பினார்.டெல்லி டேர் டெவில்ஸ் க்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.ஆனால் தேர்வுக்குழுவின் மனதில் இவர் தற்காலிக கேப்டனாக மட்டுமே நினைவுக்கு வருவார்.
யுவராஜ்சிங்-திறமையான ஆல்ரவுண்டர்.முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கும் இப்போது புனே வாரியர்சுக்கும் கேப்டனாக இருப்பவர்.இந்த இரு அணிகளின் கேப்டனாக ஐ.பி.எல் ல அந்த அளவுக்கு இவரது பொறுப்பு சிறப்பா இல்ல.அதுமட்டுமில்லாம இப்ப நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.திரும்பி வந்து மீண்டு பழைய நிலையை அடைய கொஞ்ச காலம் எடுத்துக்கும்(சீக்கிரம் வாங்க யுவி,மிடில் ஆர்டர்ல ரொம்ப சொதப்புறாங்க நம்மாளுங்க வந்து என்னன்னு பாரருங்க).அதனால இவருக்கும் வாய்ப்பு குறைவுதான்.
இவங்களுக்கு அடுத்த படியா சீனியர்கள் யாரும் ஜாகீர்கான் தவிர டீமில் இல்லை.இவருக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லைன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.(யார் கண்டா எது வேணும்னாலும் நடக்கலாம்).
சரி,யாருக்குத்தான் அந்த வாய்ப்பு பிரகாசமா இருக்கு அப்படின்னு பாத்தா,ராகுல்டிராவிடின் ஒருநாள் போட்டி ஓய்வுக்கு பின் அவரது இடத்துக்கு விராட்கோக்லி,ரோகித்சர்மா,சுரேஷ் ரெய்னா இவங்கமூணு பேருக்கிடைய பலத்த போட்டியிருப்பதாக தெரிகிறது.(யுவராஜ் இல்லாததால் ரெய்னாவும்,ரோஹித்தும் மாறி மாறி ஆடறாங்க)
ஆனா விராட்கோக்லி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மேட்சின் தன்மைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடிவருவது வியப்பளிக்கிறது.இதனால்அணியில் இடம் பெற்றிருந்தாலும் விளையாடும் ப்ளேயிங் லெவனில் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.நேற்றைய போட்டி (இந்தியா இலங்கை இடையே 133 runs in just 86 ) இவரது ஆட்டங்களின் மாஸ்டர் பீஸ்னே சொல்லலாம்.ஒவ்வொரு மேட்சுலையும் இவருடைய போராடும் குணம் பாராட்டத்தக்கது. Under 19 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை வாங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு.ஃபீல்டிங்லயும் கலக்குறார்.அப்பப்போ பவுலிங்லயும் கை கொடுக்குறார்.இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது.
தோனிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக யார் வருவது என கேள்வி எழுந்ததால் விராட்கோக்லியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.
Tweet | ||||||