Wednesday, June 5, 2013

சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்,
சுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம் எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வேண்டும்,நம்மால் தானே பிரச்சினையே!ஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை அளவுக்கதிகமாக அரவணைத்து, அடிமையும் ஆகி இறுதியில் அந்த வசதி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஆகிவிடுகிறோம்.
அதற்கு  சரியான உதாரணம் ப்ளாஸ்டிக்.இன்றைக்கு பிளாஸ்டிக் ஒழிப்போம் என்பதைக்கூட ஒரு ப்ளக்ஸ் போர்டு அடித்து தான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற அளவுக்கு ஆகி இருக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்?
இதோ..........





பல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமே!ஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............
இதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)
 இது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?


அப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா? அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)


இப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.


இன்னும் செய்ய வேண்டிய விஷயம் இன்னொன்று இந்த பதிவுகளில்
நெகிழா நெகிழி!!!   
விட்டுப்போவது எதை?  

இவற்றை செய்தால் மட்டும் போதுமா?
ஒன்றுமே செய்யாமலிருப்பதற்கு இவை கொஞ்சம் பரவாயில்லை.



-பட்டி ,டிங்கரிங் பார்க்கப்பட்ட பழைய பதிவு.
   
மேலும் வாசிக்க "சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?"