வணக்கம் நண்பர்களே!
தானாக ரீஸ்டார்ட் ஆகும் எனது PCயின் பிடிவாதத்தையும் மீறி வரும் பதிவு இது( தீர்வு தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்).அது போக குட்டித்தலைவர் கூடவே நிறைய நேரம் இருப்பதால்மொபைலில் facebook-ல் சிலபல statusகளோடும்,FEEDLY APPல் பதிவுகளை மேய்வதொடும் இணைய தாகம் முடிந்து விடுகிறது.இப்போ தலைவர் ஊர்ல இருக்கார்.அதான் கேப்ல கடைய திறந்தாச்சு.
குப்புற கவிழ்ந்தாச்சு முன்னேற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
அவனுடைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
சர்வன் :)
சென்ட்ரல் குண்டுவெடிப்பு & செக்அப்
என்னா ஒரு ரெண்டு மாசம் ஆகியிருக்குமா?எல்லா சேனல்களும் வரிந்து கட்டிக்கொண்டு குண்டுவெடிப்பை தடுக்க பாதுகாப்பு இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்னல்லாம் ஓட்டை அப்படின்னு எல்லாம் பொளந்து கட்டினாங்க.பேட்டி கொடுத்த அதிகாரிகள், நம்ம பொது மக்களையும் சும்மா சொல்லக்கூடாது நல்லா கோ ஆப்பரேட் பண்ணாங்க.அந்த சம்பவத்துக்கு அப்புறம் விழுப்புரத்திலிருந்து சேலத்திற்கு இரண்டு முறையும்,சேலத்திலிருந்து விழுப்புரத்திற்கு ஒருமுறையும் ரயில் பயணம் வாய்த்தது.
எந்த ரயில் சந்திப்பிலும் சோதனை என்பது கமர்சியல் சினிமாவில் லாஜிக்கை பார்ப்பது போலிருந்தது.பயணத்திலும் அதே நிலைமைதான்,சரி யாரும் ரோந்து வரவில்லையே நாமாவது ஒரு ரவுண்டு போவோம் என போய் பார்த்ததில் சட்டம் ஒழுங்கு ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தது,பார்த்துவிட்டு வந்துவிட்டேன் சட்டம் ஒழுங்குடன் ஐக்கியமாக.
Survival of the fittest
கொஞ்ச நாளைக்கு முன்பாக facebookல் இந்த தலைப்பு ஓடிக்கொண்டிருந்தது.என்னைக்கேட்டால் survival of the fittestக்கு ஏகச்சிறந்த (ஏன் ஆகச்சிறந்த தான் வரணுமா?இதுவும் இருந்துவிட்டுப்போகட்டும் விடுங்க) உதாரணம் புதுப்பேட்டை திரைப்படத்தை சொல்வேன்.
படத்தின் பல வசனங்கள் இதைத்தான் உணர்த்தும்.நிச்சயமாகவே ஏய்! நாந்தான் ,நாந்தான் அப்படி ஒரு ஃபீல் வரும் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம்.படம் ஜெயா டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தவிர்த்து விடுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
1/4பந்து அனுபவங்கள்
மங்களபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி பள்ளி தான் கால்பந்து எனும் வஸ்துவை என் கண்ணில் காட்டியது.ஆறிலிருந்து எட்டுவரை வாரமிருமுறை வரும் உடற்கல்வி பீரியடில் கொஞ்ச நேர உடற்பயிற்சிக்கு பின்னர் போய் விளையாடுங்க என அனுப்பிவிடுவார்கள்.விளையாட எதுவும் தரமாட்டார்கள்.சும்மானாச்சுக்கும் மைதானத்தை சுத்தி சுத்தி வருவோம் கபடி சிலவேளை களைகட்டும்.ஒன்பதாவதிலிருந்து ஏதாவது விளையாட கொடுப்பார்கள் அது பெரும்பாலும் கால்பந்து ,பெரும்பாலும் என்ன அதை மட்டும்தான் கொடுப்பார்கள் மாணவிகளுக்கு வளைப்பந்து.
வகுப்புக்கு எத்தனை பேர் இருந்தாலும்(குறைந்தது முப்பது,நாற்பது) இருப்பதென்னவோ ஒரே பந்துதான்.விதிமுறைகளெல்லாம் தெரியாது.அணிக்கு எத்தனை பேர் தெரியாது..கோல் என்று ஒன்று இருப்பதெல்லாம் தெரியாது பந்து யாருக்கு அருகில் வந்தாலும் உதைப்போம்.அவ்ளோதான். லட்சியமெல்லாம் பீரியட் முடிவதற்குள் பந்தை ஒருமுறையாவது உதைத்துவிட வேண்டுமென்பதுதான்
அதற்கெல்லாம் சேர்த்து வாய்ப்பு கிடைத்தது +1ல் அப்போது ஆங்கிலம் தவிர பிற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமலிருந்தனர் சிலநாட்கள்.அந்நாட்களில் மைதானமே குடியாக இருந்தோம்.ஏதாவது புது ஆசிரியர் வந்தால் எங்களை மைதானம் வந்து தான் வகுப்புக்கு அழைக்க வேண்டும்.அத்தைகைய நாட்களில் தான் PET வாத்தியாரை தாஜா செய்து நீண்ட நாள் வெறியை தீர்த்துக்கொண்டோம்.
ஆப் கி பார்
"இட்லியும் பரோட்டாவும் பார்சலுக்கழகு "

அமைச்சர்கள் ;ஜி,,இத்தனை மக்கள் நம்மள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்களே,அவங்களுக்கு நாம என்ன செய்யப்போறோம்?
மோடி; இவ்வளவு நாளா காங்கிரஸ்காரங்க என்ன பண்ணாங்க?
அமைச்சர்கள் ; அவங்க தான் ஒண்ணுமே பண்ணலயே ஜி!
மோடி; நாமலும் அதான் பண்ணப்போறோம் :)

என்மொழி சில
"இட்லியும் பரோட்டாவும் பார்சலுக்கழகு "
"கேக்கறவன் கூமுட்டையா இருந்தாஆண்ட்ராய்டு ஃபோன் சார்ஜ் ஆறு நாள் நிக்கும்னு சொல்லுவாங்க ..,"
"சித்திரமும் கைபழக்கம்"
"செந்தமிழும் நாபழக்கம் "
வரிசையில்
"கியர் வண்டியும் க்ளட்ச் பழக்கம்"
"செந்தமிழும் நாபழக்கம் "
வரிசையில்
"கியர் வண்டியும் க்ளட்ச் பழக்கம்"
அறிவிப்பு
மாபெரும் குறு - கதைப் போட்டி
சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.
“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ”செல்வமுரளி” மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு - கதைப் போட்டி.

கதைகள் அனுப்ப கடைசி தேதி : 05.07.2014
மேலதிக விபரங்களுக்கு
http://yeskha.blogspot.in/2014/06/blog-post.html
https://www.facebook.com/yeskha.karthik
கலந்துகொள்ளுங்கள் நண்பர்களே வாழ்த்துகள்.
நட்புடன்,
ம.கோகுல்
Tweet | ||||||