Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, October 31, 2011

நம்பலாமா?


முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள்?என அலுத்துக்கொண்டார்.

இப்படியிருக்க அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.மனிதனாய்ப்பிறந்தால் இது இயல்புதானே!இறந்தவுடன் அவரது ஆன்மா(?)கடவுள் இருக்கும் இடத்துக்கு சென்றது.அங்கே கடவுள் அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.அவரிடம் போன நமது மதபோதகர் அவரை வணங்கிவிட்டு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை அவரிடம் உடைத்தார்.

கடவுளே!நான் எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.எப்போதும் உனது பெயரை சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.இருந்தாலும் எனது வாழ்வில் சில தருணங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன்.சில கடினமான நேரங்களை கடந்திருக்கிறேன்.ஏனிப்படி?உன்னையே நினைத்திருந்தவனுக்கு நீ கொடுக்கும் பரிசு இது தானா?என்றார்.

கடவுள் மெல்லிய புன்னகையுடன் டி.வியைப்பார் என்றார்.டி.வியில் ஒரு பாதையும் நான்கு காலடிகளும் வரிசையாக தெரிந்தது.அதைக்காட்டி இதுதான் உனது வாழ்க்கைப்பாதை அதில் முன்னாலிருக்கும் இரு காலடிகள் உன்னுடையது பின் வரும் காலடிகள் என்னுடையது.நான் எப்போதும் உன்னை தொடர்ந்து தான் வந்திருக்கிறேன் என்றார்!

அந்த நேரம் பார்த்து கடவுளின் உதவியாளர் வந்து கோகுல் அடுத்த போஸ்ட் போட்டுட்டார்னு சொல்ல கடவுள் நம்மவரை டி.வி.பார்த்துக்கொண்டிருக்கச்சொல்லிவிட்டு நம்ம பிளாக் பக்கம் வந்துட்டார்.தனியா இப்ப தனியா டி.வி பாத்துக்கிட்டு இருந்த நம்மவர் சில இடங்களைப்பார்த்து அதிர்ச்சி ஆனார்.ஏனெனில்அவர் காட்சிகளில் சில இடங்களில் இரு காலடிகள் மட்டுமே இருந்தது.தனது நினைவாற்றலால் அந்த காலங்களை நினைவு கூர்ந்தார்.அந்த காலங்களே இவர் கஷ்டப்பட்டகாலங்களாய் இருந்தன.இதைக்கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார், கடவுள் நாம் கஷ்டம் வரும் காலங்களில் நம்மைப்பின் தொடராமல் போனதால் தான் நாம் துயரை அனுபவித்தோம் என கோபம் கொண்டார்.

கடவுள் திரும்ப வந்தவுடன் அவரிடம் கடிந்து கொண்டார்.இதுதான் உங்கள் நீதியா?கஷ்டப்படும் காலங்களில் பின் தொடராமல் விலகி நிற்பது தான் உங்களை வணங்கி நினைத்துக்கிடப்போர்க்கு நீங்கள் பரிசா?என பொங்கித்தள்ளினார்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கடவுள் பதிலுரைத்தார்.நீ உனது கஷ்ட காலங்களில் கண்ட இரு காலடிகள் உன்னுடையது அல்ல அவையிரண்டும் என்னுடையது.அப்போது உன்னை நான் எனது தோளில் சுமந்து துயர காலத்தைக்கடக்க வைத்தேன்.இல்லையென்றால் நீ அந்த நேரங்களில் தாங்க முடியா துயரை சந்தித்திருப்பாய் என்றார்.இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை.துன்ப நேரங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சில மனிதர்களின் இயல்பு எனவும் துன்பம் என்று ஒன்று வாழ்வில் இல்லாவிடிலும் மனிதனது முயற்சிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என வாழ்வியல் அர்த்தத்தை உணர்த்தினார்.

இதிலிருந்து பெறப்படும் நீதி என்னவெனில் ஒரு விசயத்தில் நம்பிக்கை வைத்தால் எந்த நிலையிலும் அதன் மீதுள்ள நம்பிக்கை இழக்கக்கூடாது.அதேபோல நம்பிக்கை இல்லாவிடிலும் அது கடவுளின் மீதுள்ள நம்பிக்கையாக இருந்தாலும்.(குழப்பமா இருக்கா நம்பின விசயத்த சந்தேகப்படாதிங்க,சந்தேகமான விசயத்த நம்பாதிங்க அவ்வளவுதான்) 


(இது ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னது,தமிழ்ப்படுத்தி ஒரு நீதியை வைத்து தந்திருக்கிறேன்)
மேலும் வாசிக்க "நம்பலாமா?"

Wednesday, August 24, 2011

ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!







நான் ரெண்டாங்கிளாசோ,மூணாங்கிளாசோ படிக்கும் போது
(நீ இன்னைக்கு வரைக்கும் அத தான படிச்சிருக்கன்னு சொல்லக்கூடாது)
எங்க ஆசிரியர் சொன்ன கதை. இல்ல,இல்ல,ஒரு சம்பவம் ம்ம்ம்!ஒரு சம்பவம் கலந்த கதை!
(அட ஏதோ ஒண்ணு மேட்டருக்கு வாடா!)ஓகே ஓகே இதோ வரேன்!  


ரெண்டாப்பு,மூணாப்புல தான ஓரளவுக்கு தமிழ எழுத்து கூட்டி படிக்க ஆரமிப்போம்.
(இங்கிலிபீசு இன்னைக்கு வரைக்கும் தவிடு திங்குது)
சரியா எழுத்துக்கூட்டி,வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு படிக்கலன்னா
 அர்த்தன்கெட்டுப்போயிடும்.அதுவுமில்லாமநடைமுறை வாழ்கையில 
பல சிக்கல்களையும் சந்திக்கவேண்டிக்க இருக்கும் ன்னு ஆரம்பிச்சார்.


 ஒரு தாத்தா தன் பேரன கூட்டிகிட்டு டவுனுக்கு போனார்..போனாரா போய் என்ன  பண்ணுனார்?நல்லா ஊரெல்லாம் சுத்திட்டு வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டார்.நல்லா சுத்துனதுல ரெண்டு பேருக்கும் நல்ல பசி.
நம்ம தாத்தாக்கு எழுத படிக்க தெரியாது.பேரனபாத்து பேராண்டி! இங்க எங்கியாவது சாப்பாட்டு கடை இருக்கான்னு போர்ட பாத்து சொல்லுடான்னார்!
பக்கத்துல ஒரு கடை போர்ட்ல சாப்பாடு போடப்படும் னு போட்டுஇருந்தது.பேராண்டி படிச்சான்! தாத்தா! இங்க  சாப்பா டுபப்போ டப்பா டும் னு போட்டுருக்கு தாத்தா!ன்னான்(என் இனமடா நீ!).சரி வாடா வேற கடைக்கு போலாம்ம்னு கூட்டிட்டு போனார்.பாவம் எல்லா கடைலேயும் சாப்பா டுப்போ டப்பா டும் னு தான் இருந்தது!
அடப்போடா! இந்த பட்டணத்துல சப்பாட்டுக்கடையே இல்லன்னு பட்டினியோடு ஊர் திரும்பினர்!




நீதி படிக்கற காலத்துல ஒழுங்கா சரியா படிக்கறது மட்டுமில்ல ஒழுங்கா புரிஞ்சு படிக்கலன்னா வருங்காலத்துல பட்டினிதான் மிஞ்சும்!



கற்ககசடறக்கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”   தகுக


புகைப்பட உதவி-நண்பன் மாதேஷ் முதலும் கடைசியும்)

மேலும் வாசிக்க "ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!"

Wednesday, August 17, 2011

பலே விவசாயி-பாவம் டாக்டர்!!

எல்லோருக்கும் வணக்கம்,விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டதால் ஒரு சின்ன கேப்.கடந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்களுக்கும்,வாக்களித்தவர்களுக்கும் நன்றி.
அப்பறம்,இது நான் ஏற்கனவே பகிர்ந்து கொண்ட பதிவு மீண்டும் உங்களுக்காக(பயணக்களைப்பு!!).நன்றி!




ஒரு விவசாயி ஆபத்தான நிலையிலிருந்த தன்
மனைவியை ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றார்.
அவரது தோற்றத்தை பார்த்த மருத்துவர்
அவர் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
இதனை அறிந்து கொண்ட அந்த விவசாயி
ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொன்னார்.


மருத்துவரும் அவர் பேச்சை நம்பி சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயியின் மனைவியை
அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இடிந்துபோனார் விவசாயி.


சிறிது நேரம் கழித்து விவசாயி தன் மனைவியின் உடலை
எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட்டார்.
அவரை தடுத்த மருத்துவர் எங்கே பணம் என கேட்டார்.
விவசாயியோ நான் ஏன் உங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்றார்.


நீ முன்பு என்ன சொன்னாய் ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு 
சொல்லிட்டு இப்போ பணம் கொடுக்காம போற என்றார்

அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

டாக்டருக்கு பேச வார்தைகள் வரவில்லை.


மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு!!!!!

மேலும் வாசிக்க "பலே விவசாயி-பாவம் டாக்டர்!!"

Wednesday, August 10, 2011

டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!



ரமேஷ்,சுரேஷ் என்ற இரு என்ஜினீயர் நண்பர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் S7 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருத்தன் அப்பர் பெர்த் இன்னொருத்தன் லோயர் பெர்த். .இருவரும் பயணம் போர் அடிக்காமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.


ரமேஷ் சொன்னான் டே! சுரேஷ் டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியாடா?ஆமாண்டா  ரமேஷ்!இங்கேருந்து உலகத்துல எங்கே வேணா இருக்கவங்க கூடலாம் முகம் பாத்து பேச முடியுது,சாட்டிங் ங்கறாங்க,பிளாக்கிங் ங்கறாங்க,டுவீடிங் ங்கறாங்க.எங்கயோ இருக்கறவர் எனக்கு பேஸ் புக்ல ப்ரண்டுங்கிறான்.டெக்னாலஜி ரொம்பவும்தாண்டா வளந்துடுச்சுன்னான் ரமேஷ்.

பேசிகிட்டே வந்ததுல ரெண்டு பேருக்கும் நல்லபசி.ரெண்டு பெரும் முடிவு பண்ணி அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணாங்க!
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரெண்டு பெரும் இறங்கி அங்க இருந்த ஒரு காஃபிடேரியா(CAFETARIA)க்கு சாப்பிட போனாங்க.அங்க போயும் டே! ரமேஷ் இந்த டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்திருக்கு பாத்தியா?டே!சுரேஷ் ஆமாண்டா!(மறுபடியும் முதல்ல இருந்தா)

இதுக்கு நடுவில என்னாச்சுன்னா இவங்க வந்த ட்ரெயின் கிளம்பிப்போய்விட்டது.
சற்று நேரத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதே பிளாட்பாரத்தில் வந்து நின்றது(யாருப்பா குறுக்க பூந்து லாஜிக் பாக்கிறது).இருவரும் சாப்பிட்டு முடிச்சிட்டு டெல்லி செல்லும் ட்ரெயினில் அதே S7 கோச்சில் ஏறினார்கள்.

அவரவர் பெர்த்துகளில்(என நினைத்துக்கொண்டு)ஏறிகொண்டனர்.கோச்சில் எதோ மாற்றம் இருப்பதை அறிந்த ரமேஷ் டே! சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்திருக்கு பாத்தியாடா!சாப்பிட போயிட்டு வரத்துக்குள்ள கோச்ல என்னன்னவோ மாற்றம் செஞ்சுட்டாங்க. ஆமாடா ரமேஷ்.!
மிடில் பெர்த்தில் இருந்தவரைப்பார்த்து ரமேஷ் கேட்டான் நீங்க எங்க போறீங்கன்னு.அவரு சொன்னாரு நா டெல்லிக்கு போறேன்னு.

டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா 
வளந்திருக்கு.





மேலும் வாசிக்க "டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!"