Wednesday, October 12, 2011

நெகிழா நெகிழி!!!



என்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சா?என்ன 

இனிமேதான் பண்ணப்போறிங்களா?அப்ப இந்த பதிவ படிச்சுட்டு 

போலாமே.நெறைய துணிமணிகள்,பட்டாசுகள்,அப்பறம் தீபாவளின்னா 

இனிப்பு காரம் இல்லாமலா?அதெல்லாம் செய்ய 

மளிகைப்போருட்கள்,இதெல்லாம் வாங்கனும்தானே?



இதென்ன கேனைத்தனமான கேள்வியா இருக்கு,தீபாவளின்னா இதெல்லாம் 

வாங்காமலா இருப்பாங்கன்னு நீங்க கேக்குறது புரியுது.இதெல்லாம் 

வாங்கிட்டு வரும்போது கூடவே விலைகொடுக்காமலே(ஆனா 

கொடுத்து)நாம வாங்கி வரும் இன்னொன்றைப்பத்தித்தான் 

சொல்லப்போறேன்.அது கேரி பேக் அப்படிங்கற பிளாஸ்டிக் குப்பைங்க தான்.


இன்றைக்கு இந்த பிளாஸ்டிக் கேரிபேக் நம்ம எல்லோராலும் தவிர்க்க 

முடியாததா ஆகிடுசுங்க.என்னங்க பண்றது?இன்றைய வேகமான 

உலகத்துல எல்லாமே வேகமா நடக்கனும்னு போற போக்குல கைல 

கிடைக்கறத கொடுக்கற பையில வாங்கிட்டு வந்துட்டே இருக்கோம்.ஆனா 

இதுல ஒரு உண்மை என்னன்னா எல்லாத்தையும் வேகமாக்குனதே 

நாமதான!


நாம கொஞ்சம் அலட்சியமா போட்டு ட்டு போற சிறு சிறு பிளாஸ்டிக் கவர்கள் 

பல வருசத்துக்கு அழியாம,மக்காம சாகாவரம் வாங்கிவந்தது போல அப்படியே இருக்கும்.

இந்த பிளாஸ்டிக் னால என்னென்ன அவஸ்தை படறோம்?




மழைக்காலங்கள்ல நீர் வடியும் இடங்களில் போய் அடைச்சுக்கிட்டு 

தண்ணி போக விடாம ரோடு முழுக்க தேங்க வைக்கும்.நாம என்ன 

சொல்லுவோம்.என்னா ரோடு போடறாங்க?மழை பெயஞ்சா தண்ணி 

நிக்குது?ன்னு அதுல நமக்கும் பங்குண்டுங்க! அப்பறம் மண்ணுக்கடியில 

புதைஞ்சு இருக்கற பிளாஸ்டிக் மழை நீரை நிலதடிக்கு அனுப்பாமல் 

தடுக்கிறது.இதனால நிலத்தடி நீர் மட்டம் கொறைஞ்சு அங்கங்க பூமியை 

ஓட்டை போட்டு உறிஞ்ச வேண்டிய கட்டாயம்.



இது மட்டுமா?வீட்ட சுத்தம் பண்றோம்ங்கற பேர்ல இருக்க குப்பையை 

எல்லாம் ஒண்ணா சேத்து கொளுத்திவுட்டுடுறோம் பிளாஸ்டிக் 

குப்பையையும் சேத்து.அதுவும் போகி வந்துட்டா கேக்கவே வேணாம்.மூச்சு 

திணறிடும்.பிளாஸ்டிக் எரிக்கறதுனால என்னென்ன வரும்னு நான் 

சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல.பல ஆயிரம் சிகரெட் 

பிடிக்கறதுக்கு சமம்.இல்லேல்ல அதுக்கும் மேல விளைவுகள் 

உண்டாகும்ங்க.



சரி நாம என்ன தாங்க செய்யலாம்??நாம என்னங்க பண்ணமுடியும்?

அப்படிங்கறிங்களா?பண்ணலாம்ங்க.காய்கறி,மளிகை  

வாங்கப்போறோமா,அப்படியே கையில ஒரு பை எடுத்துட்டு போலாமே?

அது பிளாஸ்டிக் பையா கூட இருக்கட்டும்.கூடுதலா பிளாஸ்டிக் சேராம 

இருக்குமே! கடையில போய் ஏதாவது வாங்கிட்டு அப்படியே ஒரு கவர்ல 

போட்டு குடுங்க!அப்படின்னு சொல்றத மறந்துடுவோம்.(கொஞ்சம் 

கொஞ்சமா)


முக்கியமா ஹோட்டலுக்கு போகும்போது அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் 

பார்சல் அப்படின்னு  வாங்கிட்டு போறதை அவசியம் தவிர்க்கணும் ஏன்னா 

சாம்பார் கட்டி தர்ற கவர் சூடாகும் போது வேதியல் மாற்றமடைந்து பல 

நச்சுக்கள் உருவாக வாய்ப்புள்ளது.திடீர்ன்னு பிலாசஸ்டிக்கே 

பயன்படுத்தாம இருந்துட முடியாது.கொஞ்சம் கொஞ்சமா முயற்சிப்போமா?

அதற்கான முயற்சியை நம்மகிட்ட இருந்தே தொடங்கலாமே?



அப்பறம் நானும் ரொம்ப நேரமா பிளாஸ்டிக்,பிளாஸ்டிக்னே சொல்லிட்டு 


இருக்கேன்.தமிழ்ல இதுக்கு பேர் இல்லையா?இருக்குங்க.”நெகிழி”.ஆஹா 


அருமையான காரணப்பெயருங்க.ஆமா!இயற்கைக்கு நெகிழ்ந்து 


கொடுக்காததனால “நெகிழி”.அப்பறம் என்னங்க நம்ம மனசை கொஞ்சம் 


நெகிழ வைச்சு இந்த நெகிழியோட பயன்பாட்டை குறைக்க 


ஆரம்பிச்சுடுவோமா?சரி கிளம்புவோம் தீபாவளி ஷாப்பிங் க்கு.




நேரம் இருந்தா இதையும் பாருங்க!

மக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.



வருங்காலத்துக்கு வசந்தத்தை 

விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!



45 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

குட் போஸ்ட் கோகுல்....!

மகேந்திரன் said... Reply to comment

எப்பவுமே கையிலே ஒரு துணிப்பை
வைத்திருக்க பழகுவோம்..
கொஞ்ச நாள் சிரமமாத்தான் இருக்கும்,
பழகிடும்.
முயற்சி செய்வோம் தோழர்களே,
நெகிழியை தொலைத்து
வருங்கால சந்ததிகளின்
வாழ்வைக் காப்போம்.

நல்ல பதிவு தோழரே.
நன்றிகள் பல..

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

அருமை கோகுல்....

செங்கோவி said... Reply to comment

நெகிழி சூப்பர்.....நல்ல பதிவு கோகுல்.

sarujan said... Reply to comment

நல்ல தகவல்

சத்ரியன் said... Reply to comment

கை கொடுங்க கோகுல்.

மாற்றத்தை நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் - அருமை.

கூடல் பாலா said... Reply to comment

நெகிழி விழிப்புணர்வை அருமையாக சொல்லி நெகிழ வச்சிட்டீங்க ....

K.s.s.Rajh said... Reply to comment

”நெகிழி”

நல்ல ஒரு விழுப்புணர்வு பதிவு...பாஸ் உங்கள் பதிவுகளில் நான் தொடர்ந்து அவதானிக்கும் விடயம் உங்கள் ஓவ்வொறு பதிவிலும் ஒரு சமூதாய அக்கறை இருக்கின்றது..எல்லோறுக்கும் இப்படியிருப்பது இல்லை வாழ்த்துக்கள்
பாஸ்..

தமிழ் மணத்தில் நட்டத்திர பதிவராக விரைவில் இடம்பிடிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

நல்ல பதிவு .பகிர்வுக்கு நன்றி .

கடம்பவன குயில் said... Reply to comment

நெகிழி புது சொல் தெரிந்துகொண்டேன். உங்கள் பதிவுகள் அதிகமானவை விழிப்புணர்வு பதிவுகளாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் கோகுல்

Anonymous said... Reply to comment

மறுபடி மஞ்சப்பைய தூக்கணும்னு சொல்றீங்க...தூக்கிருவோம் கோகுல்...

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

நம்ம மனசை கொஞ்சம்


நெகிழ வைச்சு இந்த நெகிழியோட பயன்பாட்டை குறைக்க


ஆரம்பிச்சுடுவோமா?சரி கிளம்புவோம் தீபாவளி ஷாப்பிங் க்கு.


வெளிநாட்டிலிருந்து மகன்கள் ஷாப்பிங்கிற்கெறே அருமையான துணிப்பைகள் கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார்கள்.
மிக வசதியாக நெகிழியை விட சௌகர்யமாக இருக்கிறது.
மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு நெகிழி குறைக்க வழிசெய்யலாம்.

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

kobiraj said... Reply to comment

.நல்ல பதிவு

ஆமினா said... Reply to comment

பெரிய பெரிய கடைகளில் இப்போதெல்லாம் காகித பை தான் கொடுக்குறாங்க.... சிறு கடைகளில் சாத்தியம் இல்லை தான். பழைய படி துணி பை, கட்டை பை கொடுக்க ஆரம்பிக்கலாம்...

முன்னாடி பாலீதீன் பை ஒழிப்போம் குரல் ஓங்கிட்டு இருந்துச்சு... இப்ப ஒன்னத்தையும் காணாம்... அரசும் மறந்ததால் மக்களும் இயல்பாகிட்டாங்க :-(


நல்லதொரு பகிர்வு

Thennavan said... Reply to comment

சமூக அக்கறை உள்ள பதிவு .

சாகம்பரி said... Reply to comment

நல்ல பதிவு . பாலித்தீன் கவர்களை தவிர்க்கமுடியாவில்லையெனில் அதுபோன்ற பைகளை ஜவ்வரிசியிலிருந்து தயார் செய்து விற்கிறார்கள். வாங்கி பயன்படுத்துங்கள். இது மக்கக்கூடியது. நிறைய மளிகைப் பொருட்கள் கவரில்தான் வருகின்றன. நாம் அதனை குப்பையாக வெளியேற்றுவதால் மலைமலையாக குப்பைகள் சேருகின்றன. வீட்டுக் குப்பையை பாலித்தீன் பைகள் , பேப்பர் மற்றும் அட்டை பெட்டிகள், அழுகக்கூடிய காய்கறி குப்பைகள் என்று பிரித்து வெளியேற்றினாலே குப்பை மலையினை குறைக்க முடியும். பலித்தீன் பைகள் மற்றும் பேப்பர் வகைகளை தனியே வாங்கிக் கொள்கிறார்கள். அழுகக்கூடிய வகைகளை செடிக்கு உரமாக இடலாம் இது போன்ற அக்கரையுள்ள செயல்களை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நான் இதனைத்தான் செய்கிறேன்.

Unknown said... Reply to comment

நூற்றுக்கு நூறு சதவிகிதம்
தங்கள் கூற்று உண்ம
கோகுல்!மக்கள் கனிப்பார்களா ?
சந்தேகமே!

புலவர் சா இராமாநுசம்

வெளங்காதவன்™ said... Reply to comment

Present!

குட் போஸ்ட் கோகுல்....!

எப்பவுமே கையிலே ஒரு துணிப்பை
வைத்திருக்க பழகுவோம்..
கொஞ்ச நாள் சிரமமாத்தான் இருக்கும்,
பழகிடும்.
முயற்சி செய்வோம் தோழர்களே,
நெகிழியை தொலைத்து
வருங்கால சந்ததிகளின்
வாழ்வைக் காப்போம்.

நல்ல பதிவு தோழரே.
நன்றிகள் பல..

அருமை கோகுல்...

நெகிழி சூப்பர்.....நல்ல பதிவு கோகுல்

நல்ல தகவல்

கை கொடுங்க கோகுல்.

மாற்றத்தை நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் - அருமை.

#Yaaru kitta?

SURYAJEEVA said... Reply to comment

ஆமா, நாம மாறாம அது எப்படிங்க மாறும்...

Unknown said... Reply to comment

நல்ல கருத்து கோகுல் எல்லோரும் செய்ய வேண்டியது இன்னும் ஒரு படி மேலே இது போன்ற பிளாஸ்டிக் பைகளை தடை செய்யலாம் அரசு செய்வாங்களா தெரியாது!!

rajamelaiyur said... Reply to comment

நல்ல கருத்துள , சமுக அக்கறையுள்ள பதிவு

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

தற்போதைய காலத்துக்கு ஏற்ற பதிவு....
வாழ்த்துக்கள் கோகுல்...

சசிகுமார் said... Reply to comment

தமிழ்பெயர் சூப்பர் நண்பா....

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

இடரான சூழலில் இடப்படவேண்டிய இடுகைதான்..

அருமை..

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

தாங்கள் இட்ட தலைப்புக்கே முதலில் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்..


நல்ல பதம் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

தமிழ்நாட்டுல இராமேஸ்வரத்துல ஒரு முறை போனபோது வியந்துபோனேன்..


அங்கு இந்த நெகிழியின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு மக்களும் அதற்கேற்ப மாற்று இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தப் பண்பட்டிருந்தார்கள்..

இதை ஏன் யாவரும் பயன்படுத்தக்கூடாது என்ற சிந்தனைதான் தோன்றியது.

Unknown said... Reply to comment

நல்ல கட்டுரை கோகுல்..
எல்லாம்ரும் மனது வைத்தால் நிச்சயம் நிகழும் - மாற்றம்

ராஜா MVS said... Reply to comment

தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு சூப்பர்.. நண்பா...

மக்கள் பொருள்கள் வாங்கும் போது கடைகாரரிடம் புடிவாதமாக நெகிழி பை வேண்டாம் என்று மறுத்தால் போதும்... மாற்றம் தானாக நிகழும்...

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல பதிவு ப்ளாஸ்டிக்( நெகிழ்வு) மோகம் குறையனும் ஜனங்களிடம்.

Yoga.s.FR said... Reply to comment

அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு!மனசுக்கு நிறைவாக இருக்கிறது!வாழ்த்துக்கள்,கோகுல்!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

மக்களுக்கு தேவையான போஸ்ட்...!!!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

கன்னியாகுமரி மாவட்டத்திலும். மும்பையிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது...!!!

சக்தி கல்வி மையம் said... Reply to comment

நல்ல பதிவு..
தலைப்பு வித்தியாசம் மாப்ள.,சூப்பர்.

சென்னை பித்தன் said... Reply to comment

நன்று சொன்னீர்கள் கோகுல்.

Unknown said... Reply to comment

good Post

super

மாய உலகம் said... Reply to comment

கண்டிப்பாக குறைக்க வேண்டும் கோகுல்.. இனி கடைக்குச்சென்றால் ஒரு துணிப்பை அல்லது வயர் கூடையுடன் தான் செல்வேன்... கருத்துக்கு மிக்க நன்றி.

சம்பத்குமார் said... Reply to comment

அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே..

பகிர்விற்க்கு மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்

Anonymous said... Reply to comment

ரொம்ப கருத்தான பதிவு பாஸ்.. முடிஞ்ச வரைக்கும் நெகிழி யூஸ் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன்.நன்றி..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

//தமிழ்ல இதுக்கு பேர் இல்லையா?இருக்குங்க.”நெகிழி”.ஆஹா//

தமிழ் பெயர புரியற மாதிரி சொல்லி நெகிழ வைத்த கோகுல் வாழ்க. அருமையான பதிவு.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

//அப்பறம் என்னங்க நம்ம மனசை கொஞ்சம் நெகிழ வைச்சு இந்த நெகிழியோட பயன்பாட்டை குறைக்க ஆரம்பிச்சுடுவோமா?//

சனத்தொக பெரிகிடாதா? #டவுட்டு

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,

நான் விவாத மேடையில் பிசியாகியதால் வலைப் பக்கம் டைம்மிற்கு வர முடியலை.

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

அதுவும் பண்டிகைக் காலத்தில் ப்ளாஸ்ரிக் பாவனை அதிகமாகும் என்பதனை உணர்ந்தும், சுற்றுச் சூழல் பாதுகாப்பினை நாம் எவ்வாறு கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் நல்ல பதிவினைத் தந்திருக்கிறீங்க.

M.R said... Reply to comment

நாம் எல்லோரும் உணர வேண்டிய பதிவு ,நன்றி நண்பா

முற்றும் அறிந்த அதிரா said... Reply to comment

நல்ல பதிவு. கடலில் எங்கயோ பிளஸ்ரிக் எல்லாம் சேர்ந்து ஒரு மலையே உருவாகியிருக்குதாமே.

என்னாது... இதுக்கும் லேடிஸ் நேம் ஆஆஆஆஆ?:)))) “நெகிழி”... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்?:)))

அம்பலத்தார் said... Reply to comment

நெகிழி பற்றிய விழிப்புணர்வை ஊட்டி எங்களை நெகிழவைத்துவிட்டீர் ஐயா கோகுல்.
உண்மையிலேயே சுற்றுப்புற சூழல்பற்றிய விழிபுணர்வு நம்மவர்மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது.

cheena (சீனா) said... Reply to comment

விழிப்புணர்விற்கு இத்தனை பதிவுகளா - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா