Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை.

வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை விட்டு இறங்கியவுடன் நாமும் மறந்து தான் போகிறோம்.
யாராவது கேட்டாலும் நமக்கென்ன என யாரும் கண்டு கொள்வது கிடையாது.இங்கே எல்லாம் இப்படித்தான் நடக்கும் என சகித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதற்கு பயந்துகொண்டே(அ) சமாளிக்க இயலாமல் எத்தனையோ  வயிறுகள் பட்டினியாக பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.பிசைக்காரர்களாவது,அம்மா தாயே என கேட்டு தான் பிச்சை வாங்குகிறார்கள்,கொள்ளைக்காரர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இவர்கள் இதில் எந்த பட்டியலில் வருகிறார்கள் என தெரியவில்லை.,


ஒரு சாம்பிள் இதோ .,


இது மாமல்லபுரம் புலிக்குகைக்கு எதிரே உள்ள மோட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்,அச்சிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை மார்க்கரால் அழித்துவிட்டு பத்து ரூபாய் பாக்கெட்டை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.(எம்.ஆர்.பி.யில் மாற்றம் செய்வது,அதற்கு மேல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.)

இவங்களை என்ன தான் செய்வது? நீங்களே சொல்லுங்கள்,

17 comments:

Admin said... Reply to comment

முற்றுரிமை வியாபாரம் கோகுல்.. அதை தடுப்பது என்பது சற்று சிரமம்தான்..

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

இது பரவாயில்லையே... பல இடங்களில் பத்து ரூபாய் பிஸ்கட் இருபது ரூபாய்... சில இடங்களில் அதற்கும் மேல்...

பிச்சைகாரர்களை விட கொள்ளைகாரர்கள் இப்போது அதிகமாகி வருகிறார்கள்.

நியாயமாய் செய்ய வேண்டியது : நுகர்வோர் அமைப்பில் புகார் செய்யலாம். (அப்படீன்னா என்ன என்று கேட்பவர்கள் உண்டு)

பகிர்வுக்கு நன்றி...
(த.ம. 3)

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

MARI The Great said... Reply to comment

மாதவன் ஏதோ ஒரு படத்துல கிரிக்கெட் பேட்டாலா அடிச்சு நொருக்குவாரே அத மாதிரித்தான் செய்யணும் :(

Anonymous said... Reply to comment

//வரலாற்று சுவடுகள் said...

மாதவன் ஏதோ ஒரு படத்துல கிரிக்கெட் பேட்டாலா அடிச்சு நொருக்குவாரே அத மாதிரித்தான் செய்யணும் :(//

அப்ப கூட அது ஒரிஜினல் பேட்டான்னு பாத்து வாங்கணும் :)

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இவர்களுக்கு எத்தனை விவேக் வந்தாலும் திருந்தமாட்டாங்க...

rajamelaiyur said... Reply to comment

இதுபோல தியட்டர் , மற்றும் பல சுற்றுலா தளங்களில் இப்படிதான் கொள்ளை அடிகின்றனர்

rajamelaiyur said... Reply to comment

இன்று


Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

sathishsangkavi.blogspot.com said... Reply to comment

பிச்சை எடுக்கும் கொள்ளக்காரர்கள்...

CS. Mohan Kumar said... Reply to comment

மோட்டல்னாலே கொள்ளை தான்,. கேஸ் போட்டு நீதிமன்ற ஆணை வாங்கினா தான உருப்படுவாங்க

கோவி said... Reply to comment

நான் எப்பவுமே பஸ்ல ஏறதுக்கு முன்னாடியே வாங்கி வச்சுக்குவேன்.

கவி அழகன் said... Reply to comment

Pakal kolai nanpa

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

காசு கூடுதல் மட்டுமில்லை நண்பா.....சாப்பாட்டை வாயில் வைக்கமுடியாது, மட்டன்கறி கருவாட்டு நாத்தம் அடிக்கும் ஸோ பிரயாணம் போகும் போது எல்லாவற்றையும் கையோடு கொண்டு போவதே நல்லது.

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

காசு கூடுதல் மட்டுமில்லை நண்பா.....சாப்பாட்டை வாயில் வைக்கமுடியாது, மட்டன்கறி கருவாட்டு நாத்தம் அடிக்கும் ஸோ பிரயாணம் போகும் போது எல்லாவற்றையும் கையோடு கொண்டு போவதே நல்லது.

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

இவர்கள் எல்லாம் அரசியல் வாதிகளின் பினாமிகள்! பகல் கொள்ளையடிக்கும் இவர்களுக்கு கடவுள் தான் தண்டனை தர வேண்டும்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

சட்டம் தன் கடமையை செய்யும்.
ஆனால்,காலமாகும் .

Unknown said... Reply to comment

கண்டிக்க தக்க செயல் பூனைக்கு யார்தான் மணி கட்டுவது.

தக்களின் ஈமெயில் மூலம் பதிவு பெறும் சேவை வேலை செய்ய மாட்டேங்குது.அதை சரி பண்ணி தெரிய படுத்துங்கள்.star9688@gmail.com

குட்டன்ஜி said... Reply to comment

வானொலியில் விளம்பரம் செய்கிறார்கள்,நுகர்வோர் அமைப்பிடம் புகார் செய்யச்சொல்லி.!நடக்கிற காரியமா?
த.ம.1