Friday, October 19, 2012

பல "சரக்கு" கடை 11 (19-10-2012)

அல்வா சாப்பிட ரெடியா?

ஸ்கூல் போற  வயசுல ஊர்ல பக்கத்துல இருந்த டெய்லர் கடைல அதிரும் ஸ்பீக்கர்களில் டப்பாங்குத்துப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்,அவ்வப்போது கதை வசன கேசட் என சூர்யா வம்சம்,கரகாட்டக்காரன்,விதி போன்ற படங்களின் வசனத்தையும் அலற விடுவாங்க,அந்த நேரத்துல ரொம்பநாளா அமைதிப்படை வசனம் ரெகார்டு தேயத்தேய ஓடிட்டு இருக்கும்.
சத்யராஜ் ஜோசியர்ட பேசும் நீங்க எத்தன வருஷம் உயிரோட இருப்பேன்னு சொன்னேள்?
ஜோசியர்-தொன்னூத்து அஞ்சு வருஷம், ninety five years.

டுமீல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

சத்யராஜ்- இவன் ஜாதகத்தையே இவனால ஒழுங்கா கணிக்க முடில.அடுத்தவன் ஜாதகத்த கணிக்க வந்துட்டான்.
இந்த மாதிரி பல வசனங்கள் இன்னிக்கும் நினைவுல இருக்கு.

மறுபடியும் அல்வா குடுக்க  மணிவண்ணன்,சத்யராஜ் & கோ ரெடியாகிட்டு இருக்காங்க.போன முறை சாப்ட அல்வா மாதிரியே இருக்குமா என்னவோ தெரில,அண்ணா அதே அல்வாவ சூடாக்கி குடுத்துடாதீங்க உடம்பு தாங்காது.அப்புறம் படத்துல அல்வா வாசு இருக்காரா?


காக்காவால் விழுமா பனம்பழம் ?

தொடரும் மின்வெட்டினால் கூடங்குளத்தை எதிர்த்த பொதுமக்கள் பலர் இப்போது இவ்ளோ மின்வெட்டு இருக்கும் போது அணுமின் நிலையத்தை எதிர்க்கத்தான் வேண்டுமா?என கேள்வி எழுப்புவதை பரவலாக காண முடிகிறது.இது அவர்களது சுயநலத்தை பறைசாற்றுவதாக தோன்றினாலும் அப்படியாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தின் ,ஆற்றாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்தினால்(மட்டும்) தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்துவிடுமா என்ன?

கரண்ட்டும் கடவுளும்மகள்- அப்பா கடவுள்னா யாருப்பா?
அப்பா - கடவுள் கரண்டு மாதிரிம்மா, 
கண்ணுக்கு எல்லாம் தெரிய மாட்டாரும்மா,உணர மட்டும் தான் முடியும்.
மகள் - அப்ப சென்னைல இருக்கவங்க மட்டும் தான் கடவுளை உணர முடியுமாப்பா?
அப்பா-???????????????????????????????????????????????????


TERMS & CONDITIONS APPLY

இனி ஒரு போதும் திராவிட கட்சிகளுடன் பா.ம.க.துணை நிற்காது-டாக்டர் இராமதாஸ் # டாக்டர் Terms & conditions apply போட மறந்துட்டீங்க பாருங்கபயணிகளின் கனிவான கவனத்திற்கு

அம்மா அவரது ஆட்சியில் புதிதாக பல வழித்தடங்களில் பல பேருந்துகளை இயக்க செய்துள்ளார்.அந்த பேருந்துகளில் போகும் பயணிகள் போகும்போதே மூவ்,ஐயோடெக்ஸ் இல்லன்னா ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணையாவது 
வாங்கிட்டு போங்க.சீட்டுகளுக்கு இடையில் காலை X,Y,Z எந்த பொசிசன்ல மடக்கி வைச்சாலும் இடிக்குது.பஸ்ல போற எல்லாருமே கார்ப்பரேசன் கழிவறையில் வரிசையில் நிற்பது போல நெளியுறாங்க.


அட போதும்பா......

நெய்யில் செய்த இனிப்பை சாப்பிடலாம்,நெய்யை அப்டியே சாப்பிட முடியுமா?அப்படி இருக்கு கிரிக்கெட் நிலவரம்.உலகக்கோப்பை T20 கிரிக்கெட் ஆட்டங்கள் முடிந்த சூட்டோடு சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களும் தொடங்கிவிட்டதால் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.பல போட்டிகளை பார்க்க முடிலன்னாலும் ரிசல்ட் என்னாச்சுன்னு போற போக்குல தெரிஞ்சுக்குவோம்.முடிவை தெரிந்துகொள்வதில் கூட ஆர்வம் ஏற்படல.


இது தெரியாம போயிடுச்சே!!!!

சமீபத்திய ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு வில்வித்தைல பதக்கம் கிடைசிருக்கணும்,ஆனா அவங்க பண்ண ஒரு சின்ன தப்பு,இல்லேன்னா கவனிக்காம விட்ட ஒரு விஷயம் இருக்கு அது என்னன்னா இந்த வீடியோ பாருங்க தெரியும்இப்ப தெரியுதா? இந்தியா ஏன் பதக்க வாய்ப்பை இழந்துச்சுனு,அடுத்த முறை இந்த தப்பு நடக்காம பாத்துக்கங்கப்பூ,அம்புட்டுதேன்.


மேலும் வாசிக்க "பல "சரக்கு" கடை 11 (19-10-2012)"