Thursday, January 24, 2013

பல"சரக்கு"கடை 12 (24/01/2013)

வணக்கம் வலைப்பூ நண்பர்களே,பதிவெழுதி பலநாட்கள் ஆகின்றன,சிலநேரம் நேரமின்மை,சிலநேரம் சோம்பல் இப்படியாக காலம் கடக்கிறது.இந்த ஆண்டின் முதல் பதிவு இது.கடந்த ஆண்டின் துவக்கத்தில் புதியன புகுததில் திறக்கப்பட்ட பல சரக்கு கடை பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி.இனி மாதம் ஒன்றாவது பல சரக்கு கடையும்,வாரம் ஒரு பதிவாவது எழுதி விடுவது என நினைத்திருக்கிறேன்.நடக்கும் என நம்புவோமாக.
_________________________________________________________________________________
 

இது போட்டோஷாப்பாக இல்லாத பட்சத்தில் - நாங்கல்லாம் அப்பவே!!!
______________________________________________________________________________

உலகமே புத்தாண்டை உற்சாகமாக எதிர் நோக்கியிருந்த நேரத்தில் , விடிந்தாலாவது குடிநீரும்,மின்சாரமும் வந்துவிடாதா என பலரையும்  ஏங்க வைத்த "தானே" கடந்த சென்ற நள்ளிரவு நினைவுக்கு வந்து சென்றது
_______________________________________________________________________________

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாச்சாரம்-மருத்துவர்.
தேர்தல் அறிக்கைல இலவசங்களை அறிவிச்ச பிறகும் அவங்களோட கூட்டணி வைச்ச உங்க கலாசாரம் எந்த பட்டியல்ல வரும்? # அது போன மாசம் 
____________________________________________________________________________

.
யம்மா,யம்மா hungama

இந்த மாதம் ஃப்ராட்பேண்ட் இணைப்பிற்கான கட்டணத்தில் கூடுதலாக 200ரூபாய் one time charges என போட்டு வந்திருந்தது,விஷயம் என்னவென்று அழைத்து கேட்டதற்கு, எத்தனை மாதமாக இந்த மாதிரி வருது என கேட்க நான் இப்போது தான் வருகிறது என்றேன். ஃப்ராட்பேண்ட் இணைப்பு உள்ள எல்லோருக்கும் இது போல hungama service அவங்களா ஆக்டிவேட் பண்ணிட்டு எங்க உயிர எடுக்கறாங்க சார், நீங்க ரொம்ப லக்கி உங்களுக்கு இந்த மாசம்தான் வந்திருக்கு மூணு மாசமா சில பேர் அவஸ்தை படறாங்கனு தகவல் கிடைத்ததில் நான் ரொம்பவே லக்கி.இனி அதற்கு ஒரு கடிதம் நேரில் தலைமை அலுவலகம் சென்று வந்த பில்லில் திருத்தம் செய்ய வேண்டுமாம்,அடங்கம்மா................!!!
________________________________________________________________________________
அடுத்தவாரிசு

காங்கிரசை சுதந்திரம் வாங்கியதும் கலைத்திருக்க வேண்டுமென காந்தி வருந்தியது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது.இனி ஏதோ வயிற்றுக்கு உழைத்து உண்ணும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.அதையும் பிடுங்கித்திங்க யாரேனும் வரக்கூடும்.ஜாக்கிரத,ஜாக்கிரத!!!

_________________________________________________________________________________
ஒருநாள் வீட்டுக்கு வரும் வழியில் கூட்டமாக நாய்கள் எதற்கோ தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.எனக்கு முன்னாள் சென்ற வண்டிக்காரர் சற்று தடுமாறி கூட்டத்தில் ஒரு நாயின் மீது லேசாக மோதி விட்டார்.அவ்வளவுதான் சண்டை போட்டுக்கொண்டிருந்த எல்லா நாய்களும் ஒன்றாக சேர்ந்து அந்த வண்டியை துரத்த ஆரம்பித்து விட்டன.
# அந்த சமயத்துல எனக்கு தமிழக அரசியல்வாதிகள் நினைவுக்கு வரல.உங்களுக்கு வந்தா அதற்கு நான் பொறுப்பல்ல.
________________________________________________________________________________
ரிலாக்ஸா தேடினா கண்டிப்பா கிடைக்கும்.,தேடிப்பாருங்க 

ஒரு  ஏழேமுக்கா நிமிஷம் ஆகும் கொஞ்சம் ரிலாக்ஸா பாருங்க.,
________________________________________________________________________________

இன்னிக்கு காலைல பைக்ல போயிட்டு இருக்கும் போது ஒருத்தரு அவசர அவசரமா போயிட்டு இருந்தாரு,பாவம் என்ன அவசரமோன்னு வாங்க சார் போற வழில இறக்கி விட்டுட்றேன்னு சொன்னேன்,ஆனா அவரு மொறச்சுக்கிட்டே வேக வேகமா போய்ட்டார். # ட்ராக் சூட்டும் ஷூவும் போட்டிருந்தா பதில் சொல்லக்கூடாதா என்ன?
________________________________________________________________________________

நட்புடன்,
ம.கோகுல்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 12 (24/01/2013)"