Wednesday, May 30, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம்(நிறையவே) தாமதமாகிவிட்டது,பொறுத்தருள்க,
அண்ணன் சிவகுமார் கடந்த மாச கடைசியில்(மாமூல் கேக்கலைங்க),சாட்டிங்ல வந்து மே 2 week யூத் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம் அப்டின்னாரு,அச்சோ அண்ணே,மே 2nd sunday வரலயே,அப்டின்னா வர்றது கஷ்டம்தான் அப்படின்னேன்,தம்பி 2nd sunday அப்டின்னு தான் சொன்னேன்,சரியா பாரு அப்டின்னாரு( நான் தெளிவாத்தான் இருந்தேன் நம்புங்க,ஏதோ சின்ன குழப்பம் அவ்ளோதான்),அப்புறம் என்ன ஜமாய்ச்சுடலாம் அப்டின்னு சொன்னேன்.நம்ம நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை நேரில் பார்த்து கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என்ற மகிழ்ச்சி அப்போதே.

                                   
[ சந்திப்பை சிறப்புற நடத்தியதில் முக்கிய பங்காற்றிய சிவகுமார் அண்ணன் ]                            
    
அப்புறம் மே மூணாவது வாரத்துக்கு சந்திப்பு மாற்றப்பட்டது இந்த சமூகம் நன்கு அறியும்.சிவகுமார் அண்ணன் ரெண்டு நாளைக்கு முன்னதாகவே போன் போட்டு அழைத்தார்.தவறாமல் வருவேன் என சொன்னேன்.சனிக்கிழமை மாலையே கிளம்பி சென்னை வந்தாச்சு.பஸ்ல வரும் போதே சிவகுமார் அண்ணன் போன் பண்ணாரு,உங்க முழு பேரு என்ன,இனிசியல் என்ன அப்டின்னு கேட்டாரு.ஒருவேளை நாம சொன்னமாதிரி பேனர் தான் அடிக்க கேக்குராறோனு நினைச்சுக்கிட்டு சொன்னேன்.உடனிருந்த FOOD ஆபிசர் பேசினார் ,சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் ஒரு SURPRISE இருப்பதாகவும் சொன்னார்,பேனர் கன்பர்ம் போல அப்டின்னு நினைச்சுக்கிட்டேன்.


[ ஆபீசருடன் சென்னைப்பித்தன் சார் ]


ஞாயிற்றுக்கிழமை நண்பனோட சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம் வரை அவரோட வேலைக்காக போயிட்டு(நாட்ல நிறைய பேர் படிக்கறாங்கப்பா),அப்டியே கே.கே.நகரை நோக்கி (ஓசி)பைக்கை போக சொன்னேன்.ரெண்டு மூணு இடத்தில் வழி கேட்டு(நன்றி –சுத்தல்ல விடாம சரியா சொன்னாங்க)சீக்கிரமாவே டிஸ்கவரி புக் பேலசை அடைந்தேன்.சிவகுமார் அண்ணனுக்கு போன் போட்டு எங்கண்ணே இருக்கீங்கனு கேட்டேன்,தோ அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன் அப்டின்னு சொன்னார்.ஓகே ஓகே,சந்திப்பில் முதலிடம் பிடித்த பதிவர் நாம தான்னு நினைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.சரியா மூணேமுக்கால் நிமிசத்தில ஆரூர் மூனா செந்திலுடன் வந்தார்.வந்து என்ன பண்ணார்.பைக் கண்ணாடியில் முகம் பார்த்து ,யூத் பதிவர் சந்திப்பில் யூத்தாக தெரியணும் அப்டின்னு சொல்லிட்டு எங்களுதும் பரட்டைத்தான்,சீப்பும் வைச்சிருக்கோம்,கலைச்சு விட்டு சீவுவோம்னு தலை சீவினார்.
[ அலை கடலென திரண்ட கூட்டத்தில் ஒரு பகுதி ]

அப்புறம் மூவருமாக புக் பேலசை அடைந்து வேடியப்பன் அவர்களை பார்த்தோம்,சிவாவும்,செந்திலும் எப்படி சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டார்கள்.நான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.அங்கே எனது முதலிட பதிவர் டைட்டிலுக்கு ஒருவர் வேட்டு வைத்தார்.அவர் வேறு யாருமல்ல கேபிளாரின் செட் அப் என்று சொல்லப்படும் பால கணேஷ்.வியர்க விறுவிறுக்க ஒரு மணி நேரமாக காத்திருந்தாராம்( நம்ம பதிவர்களோட டக்கு தெரியல போல-இனிமே தெரிஞ்சுக்குவீங்க)மறுநாள் எக்ஸாம் இருந்துச்சாம் இருந்தாலும் நம்மை எல்லாம் சந்திக்கணும்னு வந்தேன் அப்டின்னாரு.(குறிப்பாக கேபிளாரை சந்தித்து தனக்கு ஏன் பதிலளிக்கவில்லை என கேட்டு போக வந்திருப்பத்தாக சொன்னார்.)
                 [ இவர் தாங்க முதலிட பதிவர் ]

சற்று நேரத்தில் FOOD ஆபிசர் வந்தார்,அவரோடு அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தேன்,பிறகு மாஸ்சதீஷ் (எனக்கு இப்டிதான் வருது சதீஷ் மாஸ்)வந்தவுடன் ஜாக்கி வராரா,ஜாக்கி வராரா என சிவகுமார் அண்ணனை போட்டு தாளித்து கொண்டிருந்தார்.தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார்,வீடுசுரேஷ்குமார்,நாய்நக்ஸ் நக்கீரன் மூவரையும் குளிக்க அனுப்பிவிட்டு வந்தேன் இவ்ளோ நேரமா குளிக்கறாங்க என ஆரூர் மூனா புலம்பினார்,கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் வருகிறோம் எங்கே பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸ் என போன் போட்டு விசாரித்துகொண்டிருந்தனர்.
                   
                   [ மாஸ் காட்டிய சதீஸ் ]

நான் கீழே இறங்கி போய் பார்த்தேன்,நம்ம நக்ஸ் ஆட்டோல இருந்து தலைய வெளிய நீட்டிக்கிட்டு சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு வந்தாரு.பாத்து கூப்பிட்டதும் சென்னைல கூட நம்ம பேஸ் பிரபலம் ஆகிடுச்சு என புளங்காகிதம் அடைந்தார்.ஒரு தாரை இல்லையா,தப்பட்டை இல்லையா,அட்லீஸ்ட் ஒரு பட்டாசு பேனர் கூட இல்லையா?என அக்கப்போர் வராமலே அக்கப்போர் செய்தார்.பதிவர்கள் ஒவ்வொருவராக சங்கமிக்க ஆரம்பித்தனர்.பிரபாகரும் அஞ்சாசிங்கமும் வந்தனர்.பிரபாகர் சர்ச்சைக்குரிய TSHIRT அணிந்து வந்திருந்தார். [ பிரபா அணிந்திருந்த சர்ச்சைக்குரிய TSHIRT]

சந்திப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் பலரும் எழுதியிருப்பாங்க,இருந்தாலும் நானும் எழுதலைன்னா மனசு தாங்காதுங்க,சந்திப்பின் நிகழ்வுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.(ம்ம்ம்,அதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகப்போகுதோ தெரியல.......)
மேலும் வாசிக்க "சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்"

Thursday, May 17, 2012

பல"சரக்கு"கடை - 7(18/05/2012)கடவுள் இருக்காரா கொமாரு ......


கொஞ்ச நாளா பேப்பர புரட்டுனா,நியூஸ் பாக்கும் போதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு கோவில் தேரோட்டத்துல தேர் அச்சு முறிஞ்சு நாலு பேர் பலி,அஞ்சு பேர் கவலைக்கிடம் அப்டின்னு வருது,ஊருக்கே மின்சாரம் இல்ல,அப்டி இருக்கும் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது,ஒருவேளை எப்படியும் கரண்ட் இருக்காதுங்கற தைரியத்தில் போயிருப்பாங்களோ?கடவுள் இருக்காரு கொமாருனு புதுப்பேட்டைல ஒரு டயலாக் வருமே,இதெல்லாம் பாக்கும் போது மேல சொன்ன மாதிரி கேக்க தோணுது.


காத்து கொடுக்குது,நெருப்பு கெடுக்குது

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து மின்வெட்டு குறைந்த மகிழ்ச்சியை கொஞ்ச நாளைக்குள்,மேட்டூர் அனல்மின் நிலையத்தீ மட்டுப்படுத்தி விட்டது.அப்புறமென்ன வியர்வைக்குளியலுக்கு தயாராக வேண்டியது தான்,விடுங்க பாஸ்,இது என்ன நமக்கு புதுசா என்னா?


கார்த்திக்கும்,பிரபுவும்


கார்த்திக்கும்,பிரபுவும் மணிரத்னதுடன் இணைந்து (இதுக்கு நீ அக்னி நட்சத்திரம்னே சொல்லியிருக்கலாம்) படுத்தும் பாடு தாங்கலைங்க,ஒரு வாரமா,கண்ணெல்லாம் எரிச்சல்,கண்ணை சுத்தி கருப்பாகிடுச்சு(இந்த நிலைமையில இப்போ பொண்ணு பாக்க போயிருந்தா கல்யாணம் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கும்,விதி வலியது!),கால் ஷூவோட ஒட்டிக்கும் போல இருக்கு.பைக்ல போகும் போது  யாரோ நெருப்ப அள்ளி தூவுறது போல இருக்கு.போன வருசத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தில்ல,ச்சே வருசா வருஷம் இப்டி வெயில் அதிகமாகிட்டே இருந்தா எப்டிதான் மனுஷன் இருக்கிறதோ ,அப்டிங்கற வழக்கமான டயலாக்கை சொல்லி தேத்திக்க வேண்டியதுதான்.


எல்லா டிரைவருக்கும் ஓரே ஃபீலிங்

கொஞ்ச நாளா நான் போற எல்லா தனியார் பஸ்லயும் பாத்து வியந்த ஒரு விஷயம் சொல்லி வச்ச மாதிரி ஒரு மணி நேரப்பயணத்தில ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாட்டும் , வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்டும் தவறாம ஒலிக்குது,இல்ல இல்ல கதறுது.ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்,எல்லா டிரைவருக்கும் ஒரே ஃபீலிங் போல,இதே போல நான் கல்லூரி படித்த( ம்ம்ம்,சரி,சரி கல்லூரிக்கு போன அப்டினே வைச்சுக்கங்க)காலத்தில் எங்கே போனாலும் வருஷமெல்லாம் வசந்தம்,உன்னை நினைத்து பாடல்கள் ஒலித்தது நியாபகத்துக்கு வருது.


ஆ.ராசா வா ராசா

கிடைசாச்சுங்க இன்னும் சில நாட்களுக்கு பத்திரிக்கைகளுக்கும்,செய்தி சானல்களுக்கும்,ஏன் நமக்கும் தான் செம மேட்டர்.கடல்லயே இல்லேன்னு சொல்லிட்டு இருந்த ஜாமீனை எப்டியோ தேடி கண்டுபிடிச்சு கொடுத்துட்டாங்க.இதுக்கு நம்ம மௌனகுரு கருத்து சொல்ல விரும்பவில்லையாம்,என்னத்த சொல்லி என்னத்த பண்றதுனு நினைக்கிறார் போல(வழக்கம் போல),என்னத்த கண்ணையா மாதிரி இவர என்னத்த பிரதமர்னு இனிமே கூப்டுக்கலாம்.இதை பாத்துட்டு ஆகிடாதிங்க டர்ர்ர்....தானே தாங்கிய தானை தலைவர்


சென்னையில் மே 20 டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும் யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் என்னை வரவேற்று தானே தாங்கிய தானைத்தலைவர் என ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து அடைமொழி வைத்து பேனர்கள் தயாராகி வருவதாக காற்றுவாக்கில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிறைய பதிவர்கள்சென்னை மட்டுமல்லாமல்,பிற ஊர்களில் இருந்தும் வருவது மகிழ்ச்சி,சந்திப்போம் (அப்புறம் அந்த பேனர்,பேனர் மறந்துடாதிங்க பொதுக்குழு உறுப்பினர்களே)
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 7(18/05/2012)"

Friday, May 11, 2012

வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!

வணக்கம் வலையுலக நட்புகளே,

நான் பதிவெழுத வந்தது யதேச்சையிலும் யதேச்சை , ஏதோ மனசில தோன்றத எழுத ஆரம்பிச்சேன்,என்னடா நாம பாட்டுக்கு கைக்கு 
வந்தத எழுதறமே அப்டின்னு நினைச்சப்போ அட மடையா இது தாண்டா பிளாக்கிங்,இதுக்கு தாண்டா பிளாக் 
அப்டின்னு சொல்லி நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பதிவெழுத வந்ததுக்கு அப்புறம் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க.எல்லா நண்பர்களுக்கும் 
சொந்த ஊர் விட்டு வேலை காரணமா புது ஊர் வந்து நல்ல நண்பர்கள் இல்லாம 
இருந்தப்போ வலையுலகம் மூலமா இணைந்த நீங்க தான் எனக்கு நண்பர்கள் இல்லாத 
 தாக்கத்தை குறைச்சது நீங்கதான் .
                           

 இப்போ என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு,
 எத்தனை உறவுகள் இருந்தாலும் நமக்கான உறவு நம்மை மட்டுமே நம்பி வந்த உறவு 
என நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய உறவு மனைவி எனும் உறவு ( இப்ப இப்டி தான் தோணும் ,அப்புறம் பாக்கலாம்).
மனைவி எனும் உறவுடன் நான் கை கோர்த்து இல்லறம் காணும்
 நாளிற்கு  உங்கள் அனைவரது வருகையையும்,வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இந்த பதிவை அழைப்பிதழாக கருத வேண்டுகிறேன்.முடிந்தவரை எல்லோரையும் ,தொலைபேசியில்,மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன்.
 ( மே -20 சென்னை யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறேன்
பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் )

திருமண நாள் : ஜூன் 7,வியாழக்கிழமை 
மண இடம் : ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம்,
இராசிபுரம்,(நாமக்கல் -DT)
LANDMARK : புதிய பேருந்து நிலையம் எதிரில்,
வேல்முருகன் ஹோட்டல் பின்புறம்)
 வரவேற்பு : ஜூன் 17 ,ஞாயிற்றுகிழமை
இடம் ; ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபம்,
மதகடிப்பட்டு(திருக்கனூர் ரோடு) ,புதுச்சேரி 

 (புதுவை - விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் ,விழுப்புரத்திலிருந்தும் 
முப்பது நிமிட பேருந்துப்பயணம் -25
கி.மீ மதகடிப்பட்டிற்க்கு)


பதிவுலகம் ஒரு குடும்பம் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் ,எனது திருமணத்தை நமது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொள்ள 
அழைக்கிறேன்.நன்றி .
 தொடர்புக்கு 
9486146881
9791280127
மேலும் வாசிக்க "வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!"