Sunday, June 26, 2011

சாகாவரம்

             
         

         மனிதா...


நீயும் கடவுளாகலாம் !


உன் கண்களுக்கு 


சாகாவரம் அளிப்பதன் மூலம்!!
மேலும் வாசிக்க "சாகாவரம்"

இன்றைக்கு போதை ஒழிப்பு தினமாம் -கொடுமை

loading
=========================================================================
இன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தி இது.
18 வயது நிரம்பாதவர்களுக்கு போதைபோருட்களை 
விற்பனை செய்யக்கூடாது என சட்டம் இருந்தும் இது போன்ற 
வெளியே தெரியாத விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 
ஒருவேளை இந்த விபரம் அந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு தெரியவில்லை போலும்.
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?அவர்களுக்கென்று விற்பனை டார்கெட் 
நிர்ணயிக்கபட்டுள்ளது.இதை நினர்ணயம் செய்வது யார்?சிந்திப்பீர்... 
நன்றாக குடிங்கள் மக்களே அப்போது தான் 
நாளைக்கு நமக்கு மிக்சி, கிரைண்டர்,பேன் எல்லாம்
கிடைக்கும்.பிள்ளைகள் சம்பாதித்து வாங்கித்தரவேண்டியவை எல்லாம்
பிள்ளைகள் குடிப்பதால் கிடைக்கும் வருமானத்தின் மூலம் அரசு கொடுக்க போகிறது.
ஆச்சர்யபடுவதர்கில்லை தந்தைகளை ஊற்றிகொடுக்க சொன்னாலும் சொல்லும்.
இன்றைக்கு போதை ஒழிப்பு தினமாம் -கொடுமை 

மேலும் வாசிக்க "இன்றைக்கு போதை ஒழிப்பு தினமாம் -கொடுமை"

Thursday, June 16, 2011

பிளாஸ்டிக்

           

               பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
               சுற்றுசூழல் காப்போம்
               பிரசாரம் செய்தனர்
               பிளக்ஸ் போர்டில்
மேலும் வாசிக்க "பிளாஸ்டிக்"

Wednesday, June 15, 2011

தீப்பெட்டி எங்கேடா


மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க 
உத்தரவிட்டார் ஒரு அரசர்


 சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு 
கொடுப்பதாகவும் சொன்னார்.

ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.

இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.
மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்
அனைத்தும் அளிக்கப்பட்டது


பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து நீங்கள் விரும்பியதை வைத்து 
இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா என கேட்டார்மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?
பி.கு-இது ஒரு ரீமேக் பதிவு(என்னுதுதான்)மேலும் வாசிக்க "தீப்பெட்டி எங்கேடா"

குறுந்தகவலாக வந்த சில நகைச்சுவைகள்

ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவது
பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்
மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்
மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது

எல்ல்லா மனைவிகளின் பதில்

 எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???
-------------------------------------------------------------------------------------------------------------

பரிட்சை ஹாலில் ஒரு சுவாரஸ்யம்

ஒரு மாணவன் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருக்க
அவனிடம் வந்த மேற்பார்வையாளர்


ஆன்செர் ஷீட்டை மறைத்து வைத்து எழுது என்றாராம்//////////
-------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு என் காதலை அவளிடம் சொல்வதில் தயக்கம் இல்லை
அதை என் நண்பர்களிடம் பகிர்வதில் தான் பயமே
ஏனெனில் காதலை அவளிடம் வெளிப்படுத்த 2 ரூபா ரோஜாவில்
முடிந்து விடும்.ஆனால்


என் நண்பர்கள் 2௦௦௦ ரூபாய்க்கு ட்ரீட் கேட்பார்கள்////////////

மேலும் வாசிக்க "குறுந்தகவலாக வந்த சில நகைச்சுவைகள்"

Sunday, June 12, 2011

முதுகுவலி வராமல் இருக்க -

முதுகுவலி வராமல் இருக்க - 1


முதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:

1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப்பெறுங்கள்.

2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...
வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.

(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.

(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.

(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.

4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

5. உட்காரும் போது...

(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.

(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

6. நிற்கும்போது...

(அ) இரண்டு கால்களிலும் உங்கள் உடல் எடை சமமாக அமரும்படி நில்லுங்கள்.

(ஆ) நெடுநேரம் நிற்க வேண்டி இருப்பின் சற்று சுற்றிச் சுற்றி நடந்து செல்லுங்கள். உங்கள் உடல் எடையை ஒரு கால் விட்டு ஒருகால் என்று மாற்றி மாற்றி தாங்க வையுங்கள்.

(இ) நெடுநேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க ஒரு ஸ்டூல் அல்லது படி மீது ஒரு கால் மாற்றி ஒரு கால் உயர வையுங்கள்.
7. தூங்கும்போது...

(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.

8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...

(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது...

(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி!

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

மேலும் வாசிக்க "முதுகுவலி வராமல் இருக்க -"

Saturday, June 11, 2011

ராஜா ராஜா தான்

மேலும் வாசிக்க "ராஜா ராஜா தான்"

Friday, June 10, 2011

கூடா நட்பு - கலைஞரின் உள்ளும் புறமும்...


கூடா நட்பு - கலைஞரின் உள்ளும் புறமும்...

கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என திமுக தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரேயானால் அந்தத் தவறை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக ஆகும். அண்ணா, காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளை ஒன்றிணைத்து 1967-ம் ஆண்டில் காங்கிரûஸ வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார்.

ஆனால், அண்ணா மறைந்த உடனேயே காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையையும் அவருடனேயே புதைத்தார் கருணாநிதி.
1969-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸின் அதிகாரப்பூர்வமான வேட்பாளரான சஞ்சீவ ரெட்டியை எதிர்த்துப் பிரதமர் இந்திராவால் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வி.வி.கிரியை ஆதரித்து வெற்றிபெற வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு.
இத்தேர்தலில் சஞ்சீவ ரெட்டிக்கு ஆதரவு தருமாறு பெரியார் விடுத்த வேண்டுகோளை கருணாநிதி புறக்கணித்தபோது இந்திராவின் நட்பு கூடா நட்பாகத் தெரியவில்லை.

அந்தத் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு மாறி இருக்குமேயானால் இந்தியாவின் அரசியலே மாறி இருக்கும். பின்னாளில் நேர்ந்த நெருக்கடிநிலைப் பிரகடனம்,"மிசா' கொடுமைகள் போன்றவை நடந்திராது.
ஆனாலும், கருணாநிதி தனது தவறைப் பிடிவாதமாகத் தொடர்ந்தார். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரúஸôடு கூட்டுச்சேர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தன.

1975-ம் ஆண்டு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சர்வாதிகாரத்தின் சாயல் படர்ந்தது. முரசொலி மாறன், ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுகவினர் "மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.
முன்னாள் சென்னை மேயர் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருட்டிணன் போன்றவர்கள் உயிரிழந்தனர். நாடெங்கும் பல கொடுமைகள் அரங்கேறின. இதெல்லாம் தனது கூடாநட்பினால் விளைந்த கொடுமைகள் என்பதை உணர்ந்து கருணாநிதி திருந்தினாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

1980-ம் ஆண்டில், ""நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'' என்ற பதாகையைத் துôக்கிப் பிடித்து மீண்டும் காங்கிரúஸôடு கூட்டுச் சேர்ந்தவர் கருணாநிதி. சிட்டிபாபு போன்றவர்களின் மரணத்துக்குக் காரணமான காங்கிரúஸôடு கூடாநட்புக் கொள்ளலாமா என்பது குறித்து அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

கடந்த முப்பதாண்டு காலத்துக்கு மேலாக காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகௌடா தமிழர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நின்றவர். காவிரி நடுவர் குழுவின் தலைவராக இருந்த சித்ததோஷ் முகர்ஜி மீது தவறான வழக்குத் தொடர்ந்து அவர் தானாக பதவி விலகும்படி செய்தவர் தேவகௌடா.

நேர்மையானவரான முகர்ஜி பதவி விலக நேர்ந்ததால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் அதே தேவகௌடாவை இந்தியாவின் பிரதமராக்குவதில் முன் நின்றவர் கருணாநிதி. தேவகௌடாவுடன் தனது கூடாநட்பு தமிழக விவசாயிகளுக்குக் கேடாய் முடிந்ததைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை கருணாநிதி.

2003-ம் ஆண்டு காங்கிரúஸôடு இவர் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது. இலங்கை ராணுவத்தினரில் 63 சதவிகித அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டது, ஆயுதங்களும் அள்ளித் தரப்பட்டன. ஆனால், இவற்றைத் தடுத்து நிறுத்த கருணாநிதி சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.
2009-ம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்த இவர் முன்வரவில்லை.

திமுக-வின் ஆதரவோடு மட்டுமே மன்மோகன் அரசு பதவியில் நீடித்த காலம் அது, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படாவிடில் ஆதரவைத் திரும்பப் பெறுவது என இவர் உறுதியான முடிவு எடுத்திருந்தால் ஒரு லட்சம் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும்.
ஆனால், அதைவிட கூடா நட்பே மேலானது என இவர் நினைத்தது தமிழ் இனத்துக்கே கேடாய் முடிந்தது.

2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கிற்று. தங்கள் ஆட்சியைத் தொடர திமுக-வின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவைப்படும் நிலை இல்லை. எனவேதான் மகனுக்கும், மகளுக்கும் பேரனுக்கும் பதவி கேட்டு தில்லியில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடாநட்பினால் விளைந்த கேடு இது என்பதை அவர் அப்போதும் உணரவில்லை.

தமிழர்களின் ரத்தத்தால் சிவந்து கறை படிந்த ராசபட்சவின் கரங்களைக் குலுக்குவதற்குத் தனது மகள் உள்படத் தூதுக்குழுவை அனுப்புவதற்கு அவர் கொஞ்சமும் வெட்கப்பட்டதில்லை. இதன் விளைவாக, உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்ததற்கு ராசபட்சவுடன் தான் கொண்ட கூடா நட்பு தானே காரணம் என அவர் இன்னமும் உணரவில்லை.

காங்கிரúஸôடு தனது கூடா நட்பினால் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டபோது கொஞ்சமும் கவலைப்படாதவர், அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தனது மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டபோது கூடா நட்பின் விளைவு எனப் புலம்புவதில் பயன் என்ன? நாற்பதாண்டுக் காலத்துக்கு மேலாக காங்கிரஸ் கட்சியோடு ஒட்டி உறவாடிப் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் கருத்தாக இருந்தாரே தவிர, தமிழர்களுக்கு அதனால் விளைந்த கேடுகளைக் குறித்துக் கொஞ்மும் கவலைப்படவில்லை.

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளையோ, மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்புதல், சேதுக்கால்வாய் போன்றவற்றையோ, ஈழத்தமிர் பிரச்னையையோ தீர்ப்பதற்கு கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் எதுவும் செய்ய அவரால் இயலவில்லை.

இந்த நாற்பதாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இவருக்கு இருந்த நெருக்கமான நட்பும் மத்திய ஆட்சியில் இருந்த செல்வாக்கும் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க கொஞ்சமும் உதவவில்லை. மாறாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் தனது குடும்பத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. கூடா நட்பின் விளைந்த பயன் இது ஒன்றுதான்.

கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப்போல கெட்டபின் ஞானி ஆவது அவருக்கும் பயன் தராது குடும்பத்துக்கும் பயன் தராது, நாட்டுக்கும் பயன் தராது.


நன்றி : தினமணி &பழ. நெடுமாறன்
மேலும் வாசிக்க "கூடா நட்பு - கலைஞரின் உள்ளும் புறமும்..."