நமது ஊரில் கல்வி என்பது பள்ளியில் சேர்ந்து
கற்றால்தான் என ஆகிவிட்ட நிலையில் எந்த பள்ளியில் கல்வி வரையறையை நிர்ணயிப்பது
பணம் என்றாகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு என்றால் அது
ஏறக்குறைய அரசுப்பள்ளிகளில் தான்,சில மேல்தட்டு(பணம் படைத்தவர்களை
குறிப்பிடுகிறேன்) மக்களின் பிள்ளைகளைத்தவிர எல்லோரும் அரசுப்பள்ளிகளில்
படித்தவர்களே.
இன்றைய நிலை என்ன?ஊரின் மக்கள் தொகைக்கேற்ப கணிசமான
அளவில் தனியார் பள்ளிகள் கல்வியில் தங்களது பங்களிப்பை(?) செய்து வருகின்றன.சரி
அரசுப்பள்ளிகளில் இன்று படிப்பவர்கள் யார்?தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையை பொருளாதாரரீதியில் சுமக்க முடியாதவர்களின்
பிள்ளைகள் படிப்பத்தற்கான இடம் அரசுப்பள்ளிகள் என்றாகிவிட்டது.அதுவும்
கட்டணச்சுமையை சமாளிக்க முடியாததால் தான்,யாரும் விரும்பியும் தங்கள் குழந்தைகளை
அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஆய்வொன்று தெரிவிகிறது ஒவ்வொரு
ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் குறைந்துகொண்டே வருவதைஅப்படியென்றால்
தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையையும் தாங்கி
அங்கே சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கும் அளவுக்கு மக்களின்
வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதா?இல்லை அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலை
தரமிழந்திருக்கிறது.எப்பாடு பட்டாவது(தான்) தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க
விழைகின்றனர்.
முரண் துவங்குவது இங்கேதான்.பள்ளிப்படிப்பை
முடித்தபிறகு உயர் கல்வியில் எல்லோரும் சொல்லிவைத்தார் போல எப்பாடு பட்டாவது அரசு
கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடாதா என முயற்சிக்கின்றனர்.தனியார் பள்ளிகள்
அரசுக்கல்லூரிகளில் சேருவது எப்படி என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றன.
அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்,தனியார் பள்ளிகளின்
வளர்ச்சிக்கும் அரசின் பங்கே முக்கியமானது என்பது உண்மையிலும் உண்மை.அது
எப்படி?ஒரு ஊரில் தனியார் பள்ளி துவக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது
என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதனை எப்படியெல்லாம் சமாளிக்க
வேண்டுமென,(நினைவிற்கொள்க விதிமுறைகளை மட்டுமே சமாளிக்க வேண்டுமே தவிர அதை எப்படி
செயல்முறை படுத்துவது என்பதில் அல்ல) அதிகாரிகளே மேப் போட்டு காட்டுகின்றனர்
போலும்.விளைவாக முளைத்தன ஏகத்துக்கும் தனியார் பள்ளிகள்.ஆனால் ஏதாவது விபரீதங்கள்
நடக்கும்போது மட்டும் எங்கிருந்து தான் பொத்துக்கொண்டு வருகின்றனவோ உங்க
டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா என்கிற அளவிற்கான கேள்விகள்.கூடவே அதிரடி
ஆய்வுகள்(மக்களும் ஊடகங்களும் சம்பவத்தை மறக்கும் வரை மட்டும்)
காரணம்?அந்நியனில் ட்ரெயினில் டி.டி.ஆர் (மனோபாலா)
சொல்வதுதான் பதில்.அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என
ஒருவர் ஒருவர் மாற்றி கைகள் காட்டும்.சரி தரமான கல்வியை அரசுபள்ளிகளில்
கிடைக்கச்செய்ய என்ன தான் செய்வது??????
தொடரும்.....
நன்றி மாதேஷ் -புகைப்படங்கள்
Tweet | ||||||