Saturday, June 2, 2012

எதிர்பாராத முத்தம்- சென்னை யூத் பதிவர் சந்திப்பு




பதிவர்கள் ஒவ்வொருவராக(அணி அணியாகவும்,அணி திரண்டும்) வரத்துவங்கினர்,புலவர்.சா.இராமாநூசம் ஐயா வந்திருந்தது யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு சிறப்பு சேர்த்தது.சிறப்பு விருந்தினர்களான மரங்களின் இல்லை இயற்கை காவலர் திரு.யோகநாதன் மற்றும் IQ TOPPER சிறுமி விஷாலினியும் வந்தனர்.சத்யம் டி.வி.க்கு அவர்கள் பேட்டியளித்தபின் சிவகுமார் அண்ணன் என்கிட்ட்ட வந்து முன்னால போய் உக்காருங்க அப்டின்னு சொன்னாரு.

எனக்கு ஒன்னுமே புரியல.எதுக்குங்கனு கேட்டேன்,விஷயம் இருக்கு உக்காருங்கனு சொன்னாரு.நான் கூட சரி என்னோட திருமணத்தை பதிவர்கள் அனைவர் முன்னிலையில் அறிவித்து அழைப்பிதழ் கொடுக்கத்தான் போலிருக்கிறது என நினைத்து போய் அமர்ந்தேன்.

பின்னர்,விஷாலினி தன்னைப்பற்றி பேசி,அவரது தாயார் அவரைப்பற்றி பேசி,பதிவர்களின் சில பல கேள்விகளுக்கு IQ நிறைந்த பதில் சொல்லிய பின்னர் திரு யோகநாதன்,இந்த சிறுமி இந்த வயதிலேயே கணினி பற்றியும் பிற விசயங்களைப்பற்றியும் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பதையும் பார்த்து நமக்கு இந்த அளவுக்கு ஞானம் இல்லையென நினைத்து தமக்கு வெக்கமாக இருப்பதாக கூறினார்.


பிறகு கடந்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் இயற்கைக்கு காவலாகவும்,அழிந்து வரும் இயற்கையை மீட்டெடுப்பதில் அவராற்றி வரும் பங்களிப்பையும்,அதன் மூலம் அவர் அடைந்து வரும் இன்னல்களையும் பற்றி கூறினார்.இப்போது  வெக்கம் எனக்கு வந்து விட்டது.இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நம்மை அமர வைத்து விட்டார்களே என நினைத்து.தர்மசங்கடத்தில் நெளிந்தேன்.

அவர் பேசி முடித்து பதிவர்களிடையே கருத்து பரிமாற்றம் முடிந்துவுடன் நிகழ்ந்தது அந்த நிகழ்வு.சிவகுமார் அண்ணன் சந்திப்பை தொகுத்து வழங்கிய கேபிளாரின் காதில் கிசுகிசுக்க கேபிள் அறிவித்தார்.இந்த வருடம் ஒரு புதிய முயற்சியாக சிறந்த இளம் பதிவர் என்ற ஒரு விருதினை இந்த சந்திப்பில் வழங்கப்போகிறோம்,அதை பெறுபவர் கோகுல் என்றார்.


காதலியிடம் கேட்டுப்பேரும் முத்தத்தை விட எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கும்,அப்படி அமைந்தது எனக்கு அந்த தருணம்.பேசச்சொல்லி மைக்கை கொடுத்ததும்,எழுத அமரும் போது டைப்ப வரும் தைகிரியம் எங்கே போச்சோ தெரியல,ஏதோ ஒரு மாதிரியா பேசி(?)சமாளிச்சேன்.புலவர் ஐயா,சென்னைபித்தன் ஐயா கைகளால் விருதும் பரிசும் பெற்றது நெகிழ்ச்சியான தருணம். இப்போ வீட்ல கணினி முன்னால உக்காரும் போது கொஞ்சம் மரியாதை கிடைக்குற மாதிரி தெரியுது.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்து சிறப்புற நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.




( நேரமின்மை காரணமாக சந்திப்பின் சில சுவாரஸ்யங்களை,தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியல)

டிஸ்கி-இன்று ஊருக்கு கிளம்புகிறேன் திருமணத்திற்கு இராசிபுரம் வரும் நண்பர்கள் 9791280127 & 9486146881 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். அழைப்பு கிடைக்காத நண்பர்கள் இதனை அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.நன்றி.சந்திப்போம்.
மேலும் வாசிக்க "எதிர்பாராத முத்தம்- சென்னை யூத் பதிவர் சந்திப்பு"

Wednesday, May 30, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்



வணக்கம் நண்பர்களே!

கொஞ்சம்(நிறையவே) தாமதமாகிவிட்டது,பொறுத்தருள்க,
அண்ணன் சிவகுமார் கடந்த மாச கடைசியில்(மாமூல் கேக்கலைங்க),சாட்டிங்ல வந்து மே 2 week யூத் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம் அப்டின்னாரு,அச்சோ அண்ணே,மே 2nd sunday வரலயே,அப்டின்னா வர்றது கஷ்டம்தான் அப்படின்னேன்,தம்பி 2nd sunday அப்டின்னு தான் சொன்னேன்,சரியா பாரு அப்டின்னாரு( நான் தெளிவாத்தான் இருந்தேன் நம்புங்க,ஏதோ சின்ன குழப்பம் அவ்ளோதான்),அப்புறம் என்ன ஜமாய்ச்சுடலாம் அப்டின்னு சொன்னேன்.நம்ம நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை நேரில் பார்த்து கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என்ற மகிழ்ச்சி அப்போதே.

                                   
[ சந்திப்பை சிறப்புற நடத்தியதில் முக்கிய பங்காற்றிய சிவகுமார் அண்ணன் ]                            
    
அப்புறம் மே மூணாவது வாரத்துக்கு சந்திப்பு மாற்றப்பட்டது இந்த சமூகம் நன்கு அறியும்.சிவகுமார் அண்ணன் ரெண்டு நாளைக்கு முன்னதாகவே போன் போட்டு அழைத்தார்.தவறாமல் வருவேன் என சொன்னேன்.சனிக்கிழமை மாலையே கிளம்பி சென்னை வந்தாச்சு.பஸ்ல வரும் போதே சிவகுமார் அண்ணன் போன் பண்ணாரு,உங்க முழு பேரு என்ன,இனிசியல் என்ன அப்டின்னு கேட்டாரு.ஒருவேளை நாம சொன்னமாதிரி பேனர் தான் அடிக்க கேக்குராறோனு நினைச்சுக்கிட்டு சொன்னேன்.உடனிருந்த FOOD ஆபிசர் பேசினார் ,சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் ஒரு SURPRISE இருப்பதாகவும் சொன்னார்,பேனர் கன்பர்ம் போல அப்டின்னு நினைச்சுக்கிட்டேன்.


[ ஆபீசருடன் சென்னைப்பித்தன் சார் ]


ஞாயிற்றுக்கிழமை நண்பனோட சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம் வரை அவரோட வேலைக்காக போயிட்டு(நாட்ல நிறைய பேர் படிக்கறாங்கப்பா),அப்டியே கே.கே.நகரை நோக்கி (ஓசி)பைக்கை போக சொன்னேன்.ரெண்டு மூணு இடத்தில் வழி கேட்டு(நன்றி –சுத்தல்ல விடாம சரியா சொன்னாங்க)சீக்கிரமாவே டிஸ்கவரி புக் பேலசை அடைந்தேன்.சிவகுமார் அண்ணனுக்கு போன் போட்டு எங்கண்ணே இருக்கீங்கனு கேட்டேன்,தோ அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன் அப்டின்னு சொன்னார்.ஓகே ஓகே,சந்திப்பில் முதலிடம் பிடித்த பதிவர் நாம தான்னு நினைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.சரியா மூணேமுக்கால் நிமிசத்தில ஆரூர் மூனா செந்திலுடன் வந்தார்.வந்து என்ன பண்ணார்.பைக் கண்ணாடியில் முகம் பார்த்து ,யூத் பதிவர் சந்திப்பில் யூத்தாக தெரியணும் அப்டின்னு சொல்லிட்டு எங்களுதும் பரட்டைத்தான்,சீப்பும் வைச்சிருக்கோம்,கலைச்சு விட்டு சீவுவோம்னு தலை சீவினார்.
[ அலை கடலென திரண்ட கூட்டத்தில் ஒரு பகுதி ]

அப்புறம் மூவருமாக புக் பேலசை அடைந்து வேடியப்பன் அவர்களை பார்த்தோம்,சிவாவும்,செந்திலும் எப்படி சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டார்கள்.நான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.அங்கே எனது முதலிட பதிவர் டைட்டிலுக்கு ஒருவர் வேட்டு வைத்தார்.அவர் வேறு யாருமல்ல கேபிளாரின் செட் அப் என்று சொல்லப்படும் பால கணேஷ்.வியர்க விறுவிறுக்க ஒரு மணி நேரமாக காத்திருந்தாராம்( நம்ம பதிவர்களோட டக்கு தெரியல போல-இனிமே தெரிஞ்சுக்குவீங்க)மறுநாள் எக்ஸாம் இருந்துச்சாம் இருந்தாலும் நம்மை எல்லாம் சந்திக்கணும்னு வந்தேன் அப்டின்னாரு.(குறிப்பாக கேபிளாரை சந்தித்து தனக்கு ஏன் பதிலளிக்கவில்லை என கேட்டு போக வந்திருப்பத்தாக சொன்னார்.)
                 [ இவர் தாங்க முதலிட பதிவர் ]

சற்று நேரத்தில் FOOD ஆபிசர் வந்தார்,அவரோடு அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தேன்,பிறகு மாஸ்சதீஷ் (எனக்கு இப்டிதான் வருது சதீஷ் மாஸ்)வந்தவுடன் ஜாக்கி வராரா,ஜாக்கி வராரா என சிவகுமார் அண்ணனை போட்டு தாளித்து கொண்டிருந்தார்.தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார்,வீடுசுரேஷ்குமார்,நாய்நக்ஸ் நக்கீரன் மூவரையும் குளிக்க அனுப்பிவிட்டு வந்தேன் இவ்ளோ நேரமா குளிக்கறாங்க என ஆரூர் மூனா புலம்பினார்,கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் வருகிறோம் எங்கே பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸ் என போன் போட்டு விசாரித்துகொண்டிருந்தனர்.
                   
                   [ மாஸ் காட்டிய சதீஸ் ]

நான் கீழே இறங்கி போய் பார்த்தேன்,நம்ம நக்ஸ் ஆட்டோல இருந்து தலைய வெளிய நீட்டிக்கிட்டு சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு வந்தாரு.பாத்து கூப்பிட்டதும் சென்னைல கூட நம்ம பேஸ் பிரபலம் ஆகிடுச்சு என புளங்காகிதம் அடைந்தார்.ஒரு தாரை இல்லையா,தப்பட்டை இல்லையா,அட்லீஸ்ட் ஒரு பட்டாசு பேனர் கூட இல்லையா?என அக்கப்போர் வராமலே அக்கப்போர் செய்தார்.பதிவர்கள் ஒவ்வொருவராக சங்கமிக்க ஆரம்பித்தனர்.பிரபாகரும் அஞ்சாசிங்கமும் வந்தனர்.பிரபாகர் சர்ச்சைக்குரிய TSHIRT அணிந்து வந்திருந்தார்.



 [ பிரபா அணிந்திருந்த சர்ச்சைக்குரிய TSHIRT]

சந்திப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் பலரும் எழுதியிருப்பாங்க,இருந்தாலும் நானும் எழுதலைன்னா மனசு தாங்காதுங்க,சந்திப்பின் நிகழ்வுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.(ம்ம்ம்,அதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகப்போகுதோ தெரியல.......)
மேலும் வாசிக்க "சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்"

Thursday, May 17, 2012

பல"சரக்கு"கடை - 7(18/05/2012)



கடவுள் இருக்காரா கொமாரு ......


கொஞ்ச நாளா பேப்பர புரட்டுனா,நியூஸ் பாக்கும் போதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு கோவில் தேரோட்டத்துல தேர் அச்சு முறிஞ்சு நாலு பேர் பலி,அஞ்சு பேர் கவலைக்கிடம் அப்டின்னு வருது,ஊருக்கே மின்சாரம் இல்ல,அப்டி இருக்கும் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது,ஒருவேளை எப்படியும் கரண்ட் இருக்காதுங்கற தைரியத்தில் போயிருப்பாங்களோ?கடவுள் இருக்காரு கொமாருனு புதுப்பேட்டைல ஒரு டயலாக் வருமே,இதெல்லாம் பாக்கும் போது மேல சொன்ன மாதிரி கேக்க தோணுது.


காத்து கொடுக்குது,நெருப்பு கெடுக்குது

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து மின்வெட்டு குறைந்த மகிழ்ச்சியை கொஞ்ச நாளைக்குள்,மேட்டூர் அனல்மின் நிலையத்தீ மட்டுப்படுத்தி விட்டது.அப்புறமென்ன வியர்வைக்குளியலுக்கு தயாராக வேண்டியது தான்,விடுங்க பாஸ்,இது என்ன நமக்கு புதுசா என்னா?


கார்த்திக்கும்,பிரபுவும்


கார்த்திக்கும்,பிரபுவும் மணிரத்னதுடன் இணைந்து (இதுக்கு நீ அக்னி நட்சத்திரம்னே சொல்லியிருக்கலாம்) படுத்தும் பாடு தாங்கலைங்க,ஒரு வாரமா,கண்ணெல்லாம் எரிச்சல்,கண்ணை சுத்தி கருப்பாகிடுச்சு(இந்த நிலைமையில இப்போ பொண்ணு பாக்க போயிருந்தா கல்யாணம் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போயிருக்கும்,விதி வலியது!),கால் ஷூவோட ஒட்டிக்கும் போல இருக்கு.பைக்ல போகும் போது  யாரோ நெருப்ப அள்ளி தூவுறது போல இருக்கு.போன வருசத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தில்ல,ச்சே வருசா வருஷம் இப்டி வெயில் அதிகமாகிட்டே இருந்தா எப்டிதான் மனுஷன் இருக்கிறதோ ,அப்டிங்கற வழக்கமான டயலாக்கை சொல்லி தேத்திக்க வேண்டியதுதான்.


எல்லா டிரைவருக்கும் ஓரே ஃபீலிங்

கொஞ்ச நாளா நான் போற எல்லா தனியார் பஸ்லயும் பாத்து வியந்த ஒரு விஷயம் சொல்லி வச்ச மாதிரி ஒரு மணி நேரப்பயணத்தில ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாட்டும் , வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்டும் தவறாம ஒலிக்குது,இல்ல இல்ல கதறுது.ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்,எல்லா டிரைவருக்கும் ஒரே ஃபீலிங் போல,இதே போல நான் கல்லூரி படித்த( ம்ம்ம்,சரி,சரி கல்லூரிக்கு போன அப்டினே வைச்சுக்கங்க)காலத்தில் எங்கே போனாலும் வருஷமெல்லாம் வசந்தம்,உன்னை நினைத்து பாடல்கள் ஒலித்தது நியாபகத்துக்கு வருது.


ஆ.ராசா வா ராசா

கிடைசாச்சுங்க இன்னும் சில நாட்களுக்கு பத்திரிக்கைகளுக்கும்,செய்தி சானல்களுக்கும்,ஏன் நமக்கும் தான் செம மேட்டர்.கடல்லயே இல்லேன்னு சொல்லிட்டு இருந்த ஜாமீனை எப்டியோ தேடி கண்டுபிடிச்சு கொடுத்துட்டாங்க.இதுக்கு நம்ம மௌனகுரு கருத்து சொல்ல விரும்பவில்லையாம்,என்னத்த சொல்லி என்னத்த பண்றதுனு நினைக்கிறார் போல(வழக்கம் போல),என்னத்த கண்ணையா மாதிரி இவர என்னத்த பிரதமர்னு இனிமே கூப்டுக்கலாம்.



இதை பாத்துட்டு ஆகிடாதிங்க டர்ர்ர்....



தானே தாங்கிய தானை தலைவர்


சென்னையில் மே 20 டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும் யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் என்னை வரவேற்று தானே தாங்கிய தானைத்தலைவர் என ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து அடைமொழி வைத்து பேனர்கள் தயாராகி வருவதாக காற்றுவாக்கில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிறைய பதிவர்கள்சென்னை மட்டுமல்லாமல்,பிற ஊர்களில் இருந்தும் வருவது மகிழ்ச்சி,சந்திப்போம் (அப்புறம் அந்த பேனர்,பேனர் மறந்துடாதிங்க பொதுக்குழு உறுப்பினர்களே)




மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 7(18/05/2012)"

Friday, May 11, 2012

வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!

வணக்கம் வலையுலக நட்புகளே,

நான் பதிவெழுத வந்தது யதேச்சையிலும் யதேச்சை , ஏதோ மனசில தோன்றத எழுத ஆரம்பிச்சேன்,என்னடா நாம பாட்டுக்கு கைக்கு 
வந்தத எழுதறமே அப்டின்னு நினைச்சப்போ அட மடையா இது தாண்டா பிளாக்கிங்,இதுக்கு தாண்டா பிளாக் 
அப்டின்னு சொல்லி நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பதிவெழுத வந்ததுக்கு அப்புறம் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க.எல்லா நண்பர்களுக்கும் 
சொந்த ஊர் விட்டு வேலை காரணமா புது ஊர் வந்து நல்ல நண்பர்கள் இல்லாம 
இருந்தப்போ வலையுலகம் மூலமா இணைந்த நீங்க தான் எனக்கு நண்பர்கள் இல்லாத 
 தாக்கத்தை குறைச்சது நீங்கதான் .
                           

 இப்போ என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு,
 எத்தனை உறவுகள் இருந்தாலும் நமக்கான உறவு நம்மை மட்டுமே நம்பி வந்த உறவு 
என நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய உறவு மனைவி எனும் உறவு ( இப்ப இப்டி தான் தோணும் ,அப்புறம் பாக்கலாம்).
மனைவி எனும் உறவுடன் நான் கை கோர்த்து இல்லறம் காணும்
 நாளிற்கு  உங்கள் அனைவரது வருகையையும்,வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இந்த பதிவை அழைப்பிதழாக கருத வேண்டுகிறேன்.முடிந்தவரை எல்லோரையும் ,தொலைபேசியில்,மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன்.
 ( மே -20 சென்னை யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறேன்
பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் )





திருமண நாள் : ஜூன் 7,வியாழக்கிழமை 
மண இடம் : ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம்,
இராசிபுரம்,(நாமக்கல் -DT)
LANDMARK : புதிய பேருந்து நிலையம் எதிரில்,
வேல்முருகன் ஹோட்டல் பின்புறம்)




 வரவேற்பு : ஜூன் 17 ,ஞாயிற்றுகிழமை
இடம் ; ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபம்,
மதகடிப்பட்டு(திருக்கனூர் ரோடு) ,புதுச்சேரி 

 (புதுவை - விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் ,விழுப்புரத்திலிருந்தும் 
முப்பது நிமிட பேருந்துப்பயணம் -25
கி.மீ மதகடிப்பட்டிற்க்கு)


பதிவுலகம் ஒரு குடும்பம் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் ,எனது திருமணத்தை நமது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொள்ள 
அழைக்கிறேன்.நன்றி .
 தொடர்புக்கு 
9486146881
9791280127




மேலும் வாசிக்க "வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!"

Friday, April 27, 2012

தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்

அப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்?ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒட்டு மொத்தமா கேக்குறது கேக்குது,
விஷயம் என்னன்னா........

                                   

சொன்னா சாபம் எல்லாம் விடக்கூடாது..........



காது வழியா புகை விடக்கூடாது.........



வயித்தெரிச்சல் குறைய ஜெலுசில் வேணும்னு போன் பண்ணி தொந்தரவு கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க சொல்றேன்,,,,,,


விசயத்தை கேள்விப்பட்டு வயித்தெரிச்சலை போக்கனும்னு ஃபயர் சர்வீஸ்லாம் கூப்டு தொந்தரவு எல்லாம் பண்ணக்கூடாது,,,,,



என்ன சொல்லுடா வெண்ணையா??



இதுக்கு மேல பில்ட் அப் குடுத்தா flow ல கெட்ட வார்தைல்லாம் வரும்னு நினைக்குறேன் ,,,,,



சரி அது என்னானா மகாஜனங்களே,பாண்டிச்சேரில பவர் கட் கிடையாதுங்கோ................


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விஷயம் என்னன்னா நேத்து(மட்டும்) நைட்ல ஒரு ரெண்டு மணில இருந்து
காலைல வரைக்கும் பவர் கட் ஆகிடுச்சு,அந்த நேரத்தில் வியர்வையில் புரள்கையில் கண நேரத்தில் என் கபாலத்தில் உதித்ததுதான் இந்த பதிவுக்கான கரு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மேலும் வாசிக்க "தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்"

Thursday, April 19, 2012

கவுண்டமணி செந்திலும் மூணு படமும்



நம்ம கவுண்டரண்ணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பாக்குறார்,இல்ல இல்ல மூணு படம் பாக்குறார்.,பாத்துட்டு டர்ராகி கொலை வெறியுடன் சுத்திக்கொண்டிருக்க செந்தில் வருகிறார்.,

செந்தில்- வாங்கண்ணே!எங்கண்ணே ரொம்ப நாளா காணோம் எங்கண்ணே போனீங்க?

கவுண்டர்- அது வந்துடா சப்போட்டா தலையா ஜனாதிபதி தேர்தல் வரப்போகுதில்ல அதைப்பத்தி டிஸ்கஸ் பண்ண டெல்லி போயிருந்தேன்,விசயத்த சொல்லுடா வெளக்கெண்ண .,

செந்தில்-டெல்லிக்கு போனிங்களே நாட்டு நடப்பெல்லாம் எப்புடிண்ணே  இருக்கு?


கவுண்டர்-ஏண்டா போண்டா வாயா டெல்லி மட்டும் தான் நாடா?ஏன் நாம இருக்கற தமிழ்நாடு எல்லாம் நாடு இல்லையா?டெல்லிக்கு போனாதான் நாட்டு நடப்பு தெரியுமா? டீக்கடைல உக்காந்து தினத்தந்தி படிச்சாலே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்கலாம்டா.,என்னைக்குத்தான் திருந்தப்போறிங்களோ so sad.,so sad.

செந்தில் – என்னண்ணே சோ சோகமா இருக்காரா?எதுக்குண்ணே?

கவுண்டர் – அடங்கோ,டே,ஆன்ட்ராய்டு மண்டையா இதுக்குத்தான் நான் இங்கிலீஷ் பேசுறது இல்ல.

செந்தில் – சரி விடுங்கண்ணே,பத்தாவது பெயில் ஆனா இப்படித்தான் பேசத்தோணும், ஏதாவது படம் பாத்தீங்கலான்னே,

கவுண்டர் – ஆமாடா மைக்ரோமாக்ஸ் வாயா,இப்பல்லாம் எவனும் பாக்குற மாதிரி படம் எடுக்குறதில்ல,படம் பாத்தாலே நமக்கு டங்ஷன் ஆகிடுது,அதுக்காகவே படமே பாக்குறதில்லனு முடிவு பண்ணியிருந்தேன்,சரி போனா போகுதுன்னு நேத்துதான் மூணு படம் பாத்தேன்.

செந்தில் – பெரிய ஆள்ணே நீங்க.,ரொம்ப நாளா படம் பாக்காம இருந்துட்டு ஒரே நாள்ல மூணு படம் பாத்துட்டீங்க,


கவுண்டர் – அடங்கொன்னியா!அடே,அர ட்ரவுசர் பையா,மூணு படம் பாக்கலடா,ஒரு படம் பாத்ததுக்கே டர்ஸ்சாகிட்டேன்,இன்னும் மூணு படம் பாத்தா வடக்குப்பட்டி ராமசாமிக்கிட்ட குடுத்த பணம் மாதிரி ஊஊ ஊ ஊ.....தான்.

செந்தில் – சரிண்ணே மூணு படத்துலயும் யாரு ஹீரோ,யாரு ஹீரோயின்.

கவுண்டர் – அது வந்துடா ,நம்ம சூப்பர் ஸ்டாரோட மருமகப்பிள்ளை ஹீரோ,நம்ம உலக நாயகனோட புதல்விதான் ஈரோயினி,டைரக்டர் யாருன்னு கேட்டே அசந்தே போயிடுவடா தர்பூஸ் தலையா,நம்ம சூப்பர்ஸ்டாரோட மருமகனோட ஓய்பு தான் இந்த படத்தோட டைரக்டரு.


செந்தில் – அதெல்லாம் சரிண்ணே,மத்த ரெண்டு படத்தோட ஈரோ,ஈரோயின் யாருண்ணே?டைரக்டர் யாரு அவங்க வெவரம் பத்தி சொல்லுங்கண்ணே,

கவுண்டர் – என்னடா கேட்டே?

செந்தில் – வெவரம்,வெவரம்.

கவுண்டர் – டேய்,ஐ பாட் மூக்கா, இன்னிக்கு என்கிட்டே செம மாத்து வாங்காம போக மாட்ட போலிருக்கு,அதுக்குள்ளே ஓடிப்போயிடு.டே,சத்தியமா நான் பாத்தது ஓரே ஒரு படம்தாண்டா.

செந்தில் – அட போங்கண்ணே – இப்படித்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னால ரெண்டு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு என்னை ஏமாத்துணனிங்க,இப்போ மூணு படம் பாத்துட்டு ஒரு படம் தான் பாத்தேன்னு எமாத்துறீங்க,போங்கண்ணே


கவுண்டர்- -ஆமா இவரு பெரிய கன்னிப்பொண்ணு,காதலிச்சுட்டு,கர்ப்பமாக்கிட்டு ஏமாத்துறாங்க,போடா டேய்.

செந்தில் – அந்த ரெண்டு படத்துலயும் ஒரு படத்துல மாதவன்- அனுஷ்கா,இன்னொரு படத்துல மாதவன் – ரீமா சென் நடிச்சாங்கன்னு சொன்னீங்க,இந்த மூணு படத்துல யாறாருனு சொல்லுங்கண்ணே,இல்லேன்னா எனக்கு மண்டையே வெடிச்சுடும்ணே.


கவுண்டர் – அடேய்,உன்மண்டைய நானே ஓடச்சுடுவேன்,டே சத்தியமா நான் பாத்தது ஒரே ஒரு படம் தாண்டா.


செந்தில் – அட போங்கண்ணே,நான் அந்த பழம்தான் இந்த பழம்னு சொன்னப்போ உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சு,எப்படி டென்சன் ஆனீங்க,இப்போ நீங்க அந்தப்படம் தான் இந்தப்படம்னு சொல்றீங்க.


கவுண்டர் – டேய் முலாம்பழ கண்ணா,எதுக்கும் எதுக்கும்டா கனெக்சன் குடுக்குற,ரொம்பநாளாச்சே பாவம் விட்டுடலாம்னு பாத்தா விட மாட்ட போலிருக்கு.இனிமே பேசிப்பிரயோஜனம் இல்ல ஸ்டார்ட் மியூசிக்.....


மேலும் வாசிக்க "கவுண்டமணி செந்திலும் மூணு படமும்"

Wednesday, April 11, 2012

மனிதனும் கடவுளாகலாம்


             
                                                  

மனிதா...
நீயும் கடவுளாகலாம் !
உன் விழிகளுக்கு
சாகாவரம் அளிப்பதனால் !!


                                 [ photo-thanks to my friend madhesh]
மீள்வு
மேலும் வாசிக்க "மனிதனும் கடவுளாகலாம்"