Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Wednesday, June 5, 2013

சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்,
சுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம் எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வேண்டும்,நம்மால் தானே பிரச்சினையே!ஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை அளவுக்கதிகமாக அரவணைத்து, அடிமையும் ஆகி இறுதியில் அந்த வசதி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஆகிவிடுகிறோம்.
அதற்கு  சரியான உதாரணம் ப்ளாஸ்டிக்.இன்றைக்கு பிளாஸ்டிக் ஒழிப்போம் என்பதைக்கூட ஒரு ப்ளக்ஸ் போர்டு அடித்து தான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடியும் என்கிற அளவுக்கு ஆகி இருக்கிறது.

நம்மால் என்ன செய்ய முடியும்?
இதோ..........





பல நேரங்கள்ல சாப்பிட போகும் போதோ,இல்ல மத்த நேரங்கள்ல கை கழுவுற சமயங்கள்ல என்ன பண்றோம்,தண்ணியை தொறந்து விட்டுட்டு கைய நனைச்சிட்டு சோப்பு போட்டு தேய்க்குறவரைக்கும் தண்ணி அது வாக்குல போய்க்கிட்டே இருக்கும்.கையை நனைச்சிட்டு சோப்பு போடுறவரைக்கும் தண்ணியை நிறுத்தலாமே!ஒரு அரை லிட்டர் தண்ணி மிச்சமானாலும்.............
இதே மாதிரி தண்ணி கசிவு இருக்குற பைப் ஏதாவது இருந்தா உடனடியா சரிசெய்வதும் பல லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தும்(யோவ் மெட்ராஸ் மாதிரி ஊருல தண்ணி கிடைக்குறதே கஷ்டமா இருக்கு இதுல நாங்க ஏங்க வீணாக்க போறோம்னு கொஞ்சம் பேரு கேக்குறாங்க போல)
 இது ஒரு சின்ன உதாரணம் இதைப்போல பல தருணங்களில்(காய்கறி கழுவுகையில்,பிரஷ் பண்ணும் போது), பல அரை லிட்டர்கள் வீணாவதை தவிர்க்கமுடியும்.முடியுமா?


அப்புறம் மின்சாரம்.இல்லாத விசயத்த பத்தி என்ன பேச்சு அப்படிங்கறீங்களா? அது தெரிஞ்ச விஷயம் தானே.சரி இருக்கறப்போ என்ன பண்ணலாம்.முக்கியமா வீட்டுல ஏதாவது குண்டு பல்ப் இருந்தா அதுக்கு குட்பை சொல்லுவோம்.இது மின்சார சிக்கனத்துக்கு மட்டுமில்ல உலக வெப்பமாதல் குறையவும் நிறைய உதவும்.பிளான் பண்ணி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தினாலே இன்னும் கொஞ்சம் மின்சார செலவு கொறையும்.(இன்னும் கொஞ்ச நாள்ல கரண்ட் சார்ஜ் உயர்த்தப்படும் போது ஆட்டோமேட்டிக்கா கொறையும்னு நினைக்கிறேன்)முக்கியமா ஏ.சியை சில்லுன்னு வைச்சு யூஸ் பண்ணாம 27-29 டிகிரி செல்சியஸ்ல பயன்படுத்துறது நல்லது(உடம்புக்கும்).

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் பெட்ரோலியபொருட்கள், பெட்ரோல்,டீசல்,சமையல் கேஸ் தவிர நாம தினமும் பயன்படுத்துற நிறைய பொருட்கள் பெட்ரோலியத்தோட வழித்தோன்றல்கள் தான்( by products)கிட்டத்தட்ட 5000 க்கும் மேல. http://www.ranken-energy.com/Products%20from%20Petroleum.htm (இந்த லின்க்ல பாத்தா தெரியும்).இந்த எல்லா பொருட்களையும் தேர்ந்தெடுத்து யூஸ் பண்றத குறைப்பது கஷ்டமான விஷயம்,நேரடியா நம்மால முடிஞ்சா அளவு சிக்னல்ல நிக்கும் போது என்ஜின் ஆஃப் பண்றது,தேவையில்லாம வண்டி எடுத்துக்கிட்டு சுத்துறத தவிர்க்கறது,திட்டமிட்ட பயணம்,குழுவா பயணிக்கறது,இது போல செய்யலாம்.இதே மாதிரி சமையல் கியாஸ் பயன்படுத்தும் போதும் திட்டமிட்டு செஞ்சா நிறைய மிச்சப்படுத்தலாம்.கியாஸ் மிச்சப்படுத்த சில டிப்ஸ்(கிளிக்கவும்)


இப்படியெல்லாம் பண்ணா எனக்கு என்ன பயன் அப்படின்னு கேக்குறவங்களுக்கு-இந்த உலகத்தின் கடைசி துளி தண்ணீர் ,கடைசி சொட்டு பெட்ரோல்,கடைசி மணித்துளி மின்சாரம் நீங்க மிச்சப்படுத்தியதா இருக்கும்.அந்த பெருமை உங்களுக்குத்தான்.


இன்னும் செய்ய வேண்டிய விஷயம் இன்னொன்று இந்த பதிவுகளில்
நெகிழா நெகிழி!!!   
விட்டுப்போவது எதை?  

இவற்றை செய்தால் மட்டும் போதுமா?
ஒன்றுமே செய்யாமலிருப்பதற்கு இவை கொஞ்சம் பரவாயில்லை.



-பட்டி ,டிங்கரிங் பார்க்கப்பட்ட பழைய பதிவு.
   
மேலும் வாசிக்க "சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?"

Thursday, November 17, 2011

விட்டுப்போவது எதை?




சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா, 

நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)

(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )


ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.


நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?

சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)


இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை  நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.




சமீபத்துல பெய்த மழையில் வெள்ளம் வடியாமல் அலைகழித்ததில் இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளும் பெரும்பங்கு வகித்தன.அதேபோல் ஓரிரு நாட்களுக்கு முன் பேப்பரில் கண்ட விசயத்தை நண்பர் சம்பத்குமார் சொன்னார் ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் கவர்களை தின்று இரு பசுமாடுகள் இறந்து போனதாக.


நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?


மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
                                                                             
மேலும் வாசிக்க "விட்டுப்போவது எதை?"

Wednesday, October 12, 2011

நெகிழா நெகிழி!!!



என்னங்க தீபாவளி நெருங்கிடுச்சு.ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சாச்சா?என்ன 

இனிமேதான் பண்ணப்போறிங்களா?அப்ப இந்த பதிவ படிச்சுட்டு 

போலாமே.நெறைய துணிமணிகள்,பட்டாசுகள்,அப்பறம் தீபாவளின்னா 

இனிப்பு காரம் இல்லாமலா?அதெல்லாம் செய்ய 

மளிகைப்போருட்கள்,இதெல்லாம் வாங்கனும்தானே?



இதென்ன கேனைத்தனமான கேள்வியா இருக்கு,தீபாவளின்னா இதெல்லாம் 

வாங்காமலா இருப்பாங்கன்னு நீங்க கேக்குறது புரியுது.இதெல்லாம் 

வாங்கிட்டு வரும்போது கூடவே விலைகொடுக்காமலே(ஆனா 

கொடுத்து)நாம வாங்கி வரும் இன்னொன்றைப்பத்தித்தான் 

சொல்லப்போறேன்.அது கேரி பேக் அப்படிங்கற பிளாஸ்டிக் குப்பைங்க தான்.


இன்றைக்கு இந்த பிளாஸ்டிக் கேரிபேக் நம்ம எல்லோராலும் தவிர்க்க 

முடியாததா ஆகிடுசுங்க.என்னங்க பண்றது?இன்றைய வேகமான 

உலகத்துல எல்லாமே வேகமா நடக்கனும்னு போற போக்குல கைல 

கிடைக்கறத கொடுக்கற பையில வாங்கிட்டு வந்துட்டே இருக்கோம்.ஆனா 

இதுல ஒரு உண்மை என்னன்னா எல்லாத்தையும் வேகமாக்குனதே 

நாமதான!


நாம கொஞ்சம் அலட்சியமா போட்டு ட்டு போற சிறு சிறு பிளாஸ்டிக் கவர்கள் 

பல வருசத்துக்கு அழியாம,மக்காம சாகாவரம் வாங்கிவந்தது போல அப்படியே இருக்கும்.

இந்த பிளாஸ்டிக் னால என்னென்ன அவஸ்தை படறோம்?




மழைக்காலங்கள்ல நீர் வடியும் இடங்களில் போய் அடைச்சுக்கிட்டு 

தண்ணி போக விடாம ரோடு முழுக்க தேங்க வைக்கும்.நாம என்ன 

சொல்லுவோம்.என்னா ரோடு போடறாங்க?மழை பெயஞ்சா தண்ணி 

நிக்குது?ன்னு அதுல நமக்கும் பங்குண்டுங்க! அப்பறம் மண்ணுக்கடியில 

புதைஞ்சு இருக்கற பிளாஸ்டிக் மழை நீரை நிலதடிக்கு அனுப்பாமல் 

தடுக்கிறது.இதனால நிலத்தடி நீர் மட்டம் கொறைஞ்சு அங்கங்க பூமியை 

ஓட்டை போட்டு உறிஞ்ச வேண்டிய கட்டாயம்.



இது மட்டுமா?வீட்ட சுத்தம் பண்றோம்ங்கற பேர்ல இருக்க குப்பையை 

எல்லாம் ஒண்ணா சேத்து கொளுத்திவுட்டுடுறோம் பிளாஸ்டிக் 

குப்பையையும் சேத்து.அதுவும் போகி வந்துட்டா கேக்கவே வேணாம்.மூச்சு 

திணறிடும்.பிளாஸ்டிக் எரிக்கறதுனால என்னென்ன வரும்னு நான் 

சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல.பல ஆயிரம் சிகரெட் 

பிடிக்கறதுக்கு சமம்.இல்லேல்ல அதுக்கும் மேல விளைவுகள் 

உண்டாகும்ங்க.



சரி நாம என்ன தாங்க செய்யலாம்??நாம என்னங்க பண்ணமுடியும்?

அப்படிங்கறிங்களா?பண்ணலாம்ங்க.காய்கறி,மளிகை  

வாங்கப்போறோமா,அப்படியே கையில ஒரு பை எடுத்துட்டு போலாமே?

அது பிளாஸ்டிக் பையா கூட இருக்கட்டும்.கூடுதலா பிளாஸ்டிக் சேராம 

இருக்குமே! கடையில போய் ஏதாவது வாங்கிட்டு அப்படியே ஒரு கவர்ல 

போட்டு குடுங்க!அப்படின்னு சொல்றத மறந்துடுவோம்.(கொஞ்சம் 

கொஞ்சமா)


முக்கியமா ஹோட்டலுக்கு போகும்போது அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் 

பார்சல் அப்படின்னு  வாங்கிட்டு போறதை அவசியம் தவிர்க்கணும் ஏன்னா 

சாம்பார் கட்டி தர்ற கவர் சூடாகும் போது வேதியல் மாற்றமடைந்து பல 

நச்சுக்கள் உருவாக வாய்ப்புள்ளது.திடீர்ன்னு பிலாசஸ்டிக்கே 

பயன்படுத்தாம இருந்துட முடியாது.கொஞ்சம் கொஞ்சமா முயற்சிப்போமா?

அதற்கான முயற்சியை நம்மகிட்ட இருந்தே தொடங்கலாமே?



அப்பறம் நானும் ரொம்ப நேரமா பிளாஸ்டிக்,பிளாஸ்டிக்னே சொல்லிட்டு 


இருக்கேன்.தமிழ்ல இதுக்கு பேர் இல்லையா?இருக்குங்க.”நெகிழி”.ஆஹா 


அருமையான காரணப்பெயருங்க.ஆமா!இயற்கைக்கு நெகிழ்ந்து 


கொடுக்காததனால “நெகிழி”.அப்பறம் என்னங்க நம்ம மனசை கொஞ்சம் 


நெகிழ வைச்சு இந்த நெகிழியோட பயன்பாட்டை குறைக்க 


ஆரம்பிச்சுடுவோமா?சரி கிளம்புவோம் தீபாவளி ஷாப்பிங் க்கு.




நேரம் இருந்தா இதையும் பாருங்க!

மக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.



வருங்காலத்துக்கு வசந்தத்தை 

விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!



மேலும் வாசிக்க "நெகிழா நெகிழி!!!"

Friday, August 19, 2011

பேச்சைக்குறை!!



மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.(எனக்கு தான் மூளையே இல்லையேன்னு ல்லாம் சொல்லக்கூடாது) புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.




 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
 14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
 இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
 இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!


 உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
 செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
 அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
 இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.


 உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .


நன்றி--தினமணி நாளிதழ்.






அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!
மேலும் வாசிக்க "பேச்சைக்குறை!!"

Friday, July 29, 2011

வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!



சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா,

நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)

(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )


ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.


நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?

சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)


இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை  நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.
வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம.குப்பைகளை அல்ல !!!


மேலும் வாசிக்க "வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!"