மே மாத இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டது. செல்போன் அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் வரும் என்பதுதான் அந்தத் தகவல்.(எனக்கு தான் மூளையே இல்லையேன்னு ல்லாம் சொல்லக்கூடாது) புற்றுநோய் அபாயப் பொருள் பட்டியலில் 2பி ( 2ஜி அல்ல. அது அரசியல் புற்றுநோய்) என்ற இடத்தில் இப்போது செல்போன் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய (கார்சினோஜெனிக்) 2பி பட்டியலில் வாகனப்புகை, குளோரோபாம், காரீயம், பூச்சிக்கொல்லி மருந்து, சில ஊறுகாய் வகைகளும்கூட இடம்பெற்றுள்ளன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் இப்போது செல்போன் சேர்வதால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விஷயம் அப்படியாகக் கவலைப்படாமல் விட்டுத்தள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால், மற்ற விஷயங்களை ஒருவர் தவிர்த்துவிட முடியும். ஆனால், செல்போன் ஒரு மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.
14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு- செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள கிளையல் செல் எனப்படும் செல்களைத் தாக்கி, புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு, ஒரு நாளைக்குச் சராசரியாக அரைமணி நேரம் செல்போனில் பேசுபவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவில் நாம் தினமும் எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதைக் கணக்கெடுத்து, அவரவர்களே தங்கள் மூளையைச் சோதித்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாக உயர்ந்துவிட்டது. உயர்ந்துகொண்டும் வருகிறது. 2004 மார்ச் மாதம் 35.62 மில்லியனாக இருந்த செல்போன் இணைப்புகள், 2010 அக்டோபர் மாதம் 706.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது 1884 விழுக்காடு அதிகம்! ஆனால், லேண்ட்லைன் எனப்படும் கம்பிவழித் தொலைபேசிகள் குறைந்து வருகின்றன. 2004-ம் ஆண்டு 40.9 மில்லியனாக இருந்தது, 2010 அக்டோபரில் 35.4 மில்லியனாகக் குறைந்துவிட்டது. அதாவது 13.4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுபோதாதென்று, ஒவ்வொரு போனிலும் இரண்டு சிம்கார்டுகள் வைத்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்து வருகிறார்கள். அதாவது ஒவ்வொரு நபரும் இரண்டு, மூன்று சிம் கார்டு வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வணிகம் இது. இதனால் அவர்களுக்கு லாபம். எல்லா சிம் கார்டையும் பயன்படுத்திப் பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். மூளைப் புற்றுநோய் வந்தால், அந்த நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் போய் பணத்தைக் கொட்டி சிகிச்சை பெறலாம்!
உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தகவலை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்-ரே, புறஊதாக் கதிர்கள் உடலில் உள்ள செல்களைத் தாக்கி, பாதிக்கச் செய்யும் தன்மையுள்ளவை (அயோனைசிங் ரேடியேஷன்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவ்வாறு நம் உடலின் செல்களைப் பாதிக்காத கதிர்வீச்சுகள் (நான்-அயோனைசிங் ரேடியேஷன்) என்றுதான் ரேடியோ அலைகள் அறியப்பட்டுள்ளன. அந்த வகையைச் சேர்ந்த மின்காந்த அலைகளால் இயங்கும் செல்போன், எவ்வாறு மூளையின் செல்களைப் பாதிக்கும் என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது உண்மையே என்றாலும், செல்போன் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படச் சொல்வதற்கு யாராலும் முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். ஆனால், அதன் பயன்பாட்டை தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்துவது என்பது எல்லோராலும் இயலக்கூடியது.
அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவோரின் காதுகளுக்குக் கேட்புத்திறன் குறையத் தொடங்குகிறது என்று ஏற்கெனவே ஓர் ஆய்வறிக்கை வெளியானது. இப்போது அதைவிடவும் ஆபத்தானது என்று அறிக்கை சொல்கிறது. இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பாகக் குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் செய்யலாம்.
இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு - ஏன், மழலையர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும்கூட-செல்போன் கொடுக்கிறார்கள். கேட்டால், ""பள்ளி முடிந்தவுடன் என் குழந்தை என்னிடம் பேசி, ஆட்டோ வந்தது ஏறிவிட்டேன் என்று சொன்னாலொழிய என்னால் நிம்மதியாக அலுவலகத்தில் இருக்க முடியாது'' என்று சொல்லும் பெற்றோரின் கவலை புரிகிறது. ஆனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மட்டும் பேசினால் அது தகவல் தொழில்நுட்பத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று பொருள். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களுடன்- ஆட்டோவில் ஏறியது முதல் நீங்கள் வீடு திரும்பும்வரை- பேசிக்கொண்டே இருக்குமானால் அதை எப்படித் தடுக்க முடியும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அறிவுரை இதுதான்: "பேச்சைக் குறை' .
நன்றி--தினமணி நாளிதழ்.
அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்!
Tweet | ||||||
41 comments:
என்னைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்...
@Reverie
அப்படியும் வைச்சுக்கலாம்!ஹிஹி!
என்ன பண்றது கோகுல்...செல்லரித்துப்போகும் வரை செல் தான்னு எல்லாரும் ஆளுக்கு ஒன்றை
வச்சுக்கிட்டு அலையறாங்களே ....
ஹலோ...ராங் நம்பர்க..
@Reverie
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்!
Reverie said...
ஹலோ...ராங் நம்பர்க..//
எனக்கு கூட சிக்னல் சரியா கிடைக்கல!ஹலோலோலோலொலோ
ஒருத்தரும் எழுதல போல...நீங்க மட்டும் கொட்ட கொட்ட முழிச் இருக்கீங்க போல...
@Reverie
அதானே!
செங்கோவி இன்னும் அரை மணி நேரத்திலே...போடுவார்னு நினைக்கிறேன்...தண்ணிய போட்டுட்டு மல்லாந்துட்டாரான்னு தெரியல...
@Reverie
ஹிஹி பாப்போம்!
எப்படியும் பாருங்க நம்ம பிரகாஷ் முதல் வடை வாங்கிடுவார்.
அவர் எப்பவும் "பேச்சை குறைக்காம" செல் போனோட தான் இருப்பார் போல...
இந்த பதிவ தமிழ்வாசிக்கு DEDICATE பண்ணிருங்க..
Reverie said...
இந்த பதிவ தமிழ்வாசிக்கு DEDICATE பண்ணிருங்க..//
ஏன் வம்புல மாட்டி வுடுறீங்க டென்சன் ஆகிடப்போறார்!
சரிங்க...அப்புறம் பார்க்கலாம்...இல்லாட்டி பதிவு போட்டு திட்டுவாங்க...கமெண்ட் பாக்ஸ்ல சாட் பண்றாங்கன்னு...குட் நைட் கோகுல்.....
btw ...பதிவு நல்லா இருந்திச்சு...ஹிஹிஹி...
கொஞ்சம் பயமாக தான் இருக்குது.....
நன்றி தினமணியா? இப்பவேவா?...ரைட்டு!
விழிப்புணர்வு பகிர்வு
@செங்கோவி
பழசுதான்!தூசுதட்டி போட்டாச்சு!
@ஆகுலன்
பத்திரமா பாத்துக்கோங்க!
ஹலோ ஆர்ர்ர் ப்பேசறத்தூஊஊ... ஹலோஓஓஓஓஓ... ஹலோஓஓஓஓ
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்... எப்போ உள்ளே வருவார்?
செல் செல்லின் கதிர்கள் கொல்.. கொல்லாமல் கொல்லும் என்பதை சொல்லாமல் சொல்லி அசத்தியுள்ளீர்கள் கோகுல்
@மாய உலகம்
என்னங்க உங்களுக்கும் சிக்னல் கிடைக்கலையா?
வணக்கம் பாஸ்,
நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
தொலைபேசிப் பாவனை மூலம் கிடைக்கபெறும் கதிர் வீச்சின் ஊடாக உடலுக்கு எவ்வாறு தீங்கு நிகழ்கிறது என்பதனை விளக்கப் பகிர்வாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி சகோ.
இன்றைக்கு தேவையான சமூக மற்றும் மருத்துவ ரீதியான விழிப்புணர்வுப் பதிவு.
இன்றைய தினத்தில் அலைபேசி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இருப்பினும்
அதன் பயன்பாட்ட கொஞ்சம் குறைத்துக்கொள்ள முயற்ச்சிக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்!!
பகிர்வுக்கு நன்றிகள் பாஸ்!!
விசயகாந்த் மாதிரி விலாசித்தல்லியிருக்கிங்க கோகுல்
நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவினைப் பகிர்ந்திருப்பதற்கு நன்றி.
எப்பவுமே எல்லாவிஷயங்களிலும்
நன்மையும் தீமையும் கலந்துதான்
இருக்கு. நாமதான் கவனமா இருக்கனும் நல்ல விழிப்புணர்வு பதிவு
தான். இன்றைய கால கட்டத்தில்
செல்போன் இல்லாதவங்களைப்பார்ப்பதே
அரிதாகத்தான் இருக்கு.
@Lakshmi
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா!
பல காதலர்கள் இதுகளைப்பற்றி கவலைப்படாமல்.எப்பவும் போன் பேசுதுகள்.அதுகள் இதைப்பற்றி கவலைப்பட்டமாதிரி தெரியலை.ஒரு வேளை அவர்களுக்கு மூளை இல்லையோ.....ஹி.ஹி.ஹி.ஹி
(மகா ஜனங்களே யாரும் கடுப்பாக வேண்டாம் சும்மா சோக்கு)
//எனக்கு தான் மூளையே இல்லையேன்னு ல்லாம் சொல்லக்கூடாது//
கோகுல்,
என்கிட்ட செல் போனே இல்லையே!
ஆகா, நைட்டு செங்கோவி பதிவில் என்னை பற்றி கமென்ட் போட்டதுக்கு காரணம் இப்ப தானே தெரிஞ்சது!
என்னய்யா பண்றது, வீட்டுல கம்பியுட்டர்ல நெட், வெளியில மொபைல்ல நெட். அவ்ளோ தான். ஆமா பின்ன, உங்கள மாதிரி ஆட்களை தவறாம பாலோ பன்னனும்ல.
ஹா ஹா
நாங்க எப்போவோ பேச்சை குறைச்சுட்டோம் இல்ல
ரைட்டு...
தமிழ்மணம் 7 ஓட்டு போட்டு நான் எஸ்கேப் ஆயிட்டேன்...
உங்களுக்கு இம்மாத செல் பில் ஜாஸ்தியாகிவிட்டதா?
உண்ணும் போதும் செல்லேதான்
உறங்க கனவி்ல் செல்லேதான்
எண்ணம் அனைத்தும் செல்லேதான்
எவரே இல்லார் செல்லேதான்
மண்ணில் உயர்ந்தது செல்லேதான்
மங்கையர் கழுத்தில் செல்லேதான்
விண்ணில் பறப்பினும் செல்லேதான்
வீழினும் வாழினும்செல்லேதான்
மூச்சைக் குறையென சொல்லினும்
சொல்லற்க
பேச்சைக் குறையென உரை
புலவர் சா இராமாநுசம்
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் ஆய்வறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
நல்ல பகிர்வு.
Post a Comment