அது முன்னிரவா நள்ளிரவா
நேரம் தெரியவில்லை
நெடுநேரமாக முயன்றேன்
உறக்கத்தை விழிகளில் அமர்த்த
உறக்கம் வரவில்லை என்றால்
வற்புறுத்தாதீர்கள்
வரும் போது அரவணைத்து கொள்ளுங்கள்
அது வரை வேறு எதையாவது
செய்துகொண்டோ
சிந்தித்து கொண்டோ இருங்கள் என்று
எங்கோ படித்தோ கேட்டோ ஞாபகம்
என்ன செய்யலாம்
எழுந்து காலாற நடக்கலாமா என்றால்
கடும்குளிர் வீசுது வெளியில்
புத்தகம் படிக்கலாமா என்றால்
விளக்கை போட்டால்
விழித்து கொள்வர் அனைவரும்
வேறென்ன செய்யலாம்
ஒரு கவிதை சிந்திக்கலாமா
சரி
எதை பற்றி எழுதுவது
புதுக்கவிதையா மரபுக்கவிதையா
காதலின் களிவை பற்றியா
நட்பின் நல்லிணக்கம் பற்றியா
பெண்மை,தாய்மையின் மகத்துவமா
இயற்கை எழிலா,மனிதரின் மாண்பா
சமூக அக்கறையா
அரசியல் அவலமா
எந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்
எதுகை மோனையை எங்கே போடலாம்
என்றெல்லாம் எண்ணிக்கொண்டே
உறங்கிப்போனேன்
கவிதைக்கனவுகளோடு .......
(அப்பறம் ட்ரெயின் வரத்துகுள்ள யாராவது இவர எழுப்பிட்டுப்போங்க)
நன்றி-http://www.beencaughtsleeping.comஇணையம் for photos.
Tweet | ||||||
27 comments:
கவிதை கருவுக்காக ஒரு கவிதை..... சூப்பர்!!!!
Chitra said...
கவிதை கருவுக்காக ஒரு கவிதை..... சூப்பர்!!!!//
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
கவிதை எழுதுவதை பற்றி ஒரு கவிதை...ஆகா அருமை அருமை....
என்ன எழுதலாம்னு நினைத்தே ஒரு பதிவா
நல்லா இருக்கே ஐடியா .
கடைபிடிக்கிறேன்
"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super kavithai//
நன்றி நண்பா!
ஆகுலன் said...
கவிதை எழுதுவதை பற்றி ஒரு கவிதை...ஆகா அருமை அருமை....//
வருக ஆகுலன்.வருக!
M.R said...
என்ன எழுதலாம்னு நினைத்தே ஒரு பதிவா
நல்லா இருக்கே ஐடியா .
கடைபிடிக்கிறேன்//
எப்படில்லாம் யோசிக்க வேண்டியிருக்கு!
கனவே கலையாதே..
கவிதைக்கான போராட்டமே கவிதையானது அழகு கோகுல்!
செங்கோவி said...
கவிதைக்கான போராட்டமே கவிதையானது அழகு கோகுல்!//
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி!
தூங்கிட்டீங்கன்னா எப்ப எழுதினீங்க கோகுல்...லாஜிக் உதைக்குதே...
இளைய கவிப்பேரரசர் உதயம்...
Reverie said...
தூங்கிட்டீங்கன்னா எப்ப எழுதினீங்க கோகுல்...லாஜிக் உதைக்குதே...
இளைய கவிப்பேரரசர் உதயம்...//
எங்கடா யாரும் கேக்கலன்னு பாத்தேன் .ஹிஹி
என்னா சார்ப்பு! ஏமாத்த முடியாது போலிருக்கே?
கவிதை உருவான விதமே கவிதையாய்.. நல்லாருக்கு.
அமைதிச்சாரல் said...
கவிதை உருவான விதமே கவிதையாய்.. நல்லாருக்கு.//
தங்கள் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி!
கவிதை எழுத நினைத்தே கவிதையா... பாராட்டத்தக்க சிந்தனை.
தமிழ்வாசி - Prakash said...
கவிதை எழுத நினைத்தே கவிதையா... பாராட்டத்தக்க சிந்தனை.
நன்றி நண்பரே!
தோன்றதை எழுதுவோம் என்பது தோன்றியதை அல்லது தோன்றுவதை என்பதே பொருத்தமென நினைக்கிறேன்.
கவிதை எழுதுறதுக்கே கவிதையா.. கலக்குங்க
வணக்கம் நண்பா உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முதலில் வருகின்றேன்.உங்கள் பதிவுகள்.சூப்பரா இருக்கின்றது.இனி தொடர்ந்து வருவேன்.
நன்றி
அன்புடன்
உங்கள்
Kss.Rajh(கே.எஸ்.எஸ்.ராஜ்)
From
நண்பர்கள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என
இதைத்தான் சொல்வார்களோ?
கவிதைக்கான கருவைத் தேடுதலையே
ஒரு கவிதை ஆக்குவதென்றால் ....
எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
ஃஃஃஃஉறக்கம் வரவில்லை என்றால்
வற்புறுத்தாதீர்கள்
வரும் போது அரவணைத்து கொள்ளுங்கள்ஃஃஃஃ
ஹ...ஹ.. அதுவம் சரி தான்.. விரும்பியோ வரும்பாமலோ வரத் தானே வேணும்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று
கவிதைக்கோர் கருப்பொருள் தேடிய விதம்
அருமையாக உள்ளது நண்பரே.
அழகிய படைப்பு வாழ்த்துக்கள். . .
உறக்கம் இன்மையால் கவிதை
உதித்ததா இந்த கவிதை
சிறக்க அமைந்தது கவிதை
சிந்திக்க வைத்தது கவிதை
புலவர் சா இராமாநுசம்
தூங்கி வழிஞ்சத கூட எவ்வளவு தூக்கலா சொல்லிருக்காரு மாப்ள !
பின்னூட்டமிட்ட அனைவருக்கும்,இணைந்தவர்களுக்கும் நன்றிகள்.
பின்னிடீங்க கோகுல் ஹா ஹா கவிதை படித்து சிரித்தது இங்கே தான்... கவிதை கனவுகள் கலக்கல்
Post a Comment