Friday, August 12, 2011

லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்.


கொஞ்சம் நில்லுங்க!நில்லுங்க! உடனே மைனா !மைனா நெஞ்சுக்குள்ளன்னு டூயட் பாட கிளம்பிடாதீங்க! சொல்ல வரதை முழுசா கேளுங்க.

நீங்க லவ் பண்ணா உங்க லவ்வர கூட்டிட்டு பைக்ல சுத்த நெறைய பெட்ரோல் போடுவீங்க. சோ! பெட்ரோல் பங்க் காரர் லைப் நல்லாருக்கும்.

நிறையா கிப்ட்,கிரீட்டிங் கார்டு வாங்கிகுடுப்பிங்க,கடைக்காரர் லைப் நல்லாருக்கும்.

செல்லுல மணிக்கணக்கா பேசுவீங்க,நெட்வொர்க் காரங்க,ரீசார்ஜ் 
கடைக்காரங்க லைப் நல்லா இருக்கும்.

பீச்சுக்கு போய் கடலை போடுவீங்க கடலை விக்கறவர் லைப் நல்லாருக்கும்.

கோவிலுக்கு (?) கூட்டிட்டுப்போய் பூ வாங்கிக்குடுத்து மங்களகரமா லவ் 
பண்ணுவீங்க,பூக்காரம்மா லைப் நல்லாருக்கும்.

தியேட்டருக்கு கூட்டிட்டுப்போய் தினுசு தினுசா லவ் பண்ணுவீங்க,தியேட்டர் ஓனர் லைப் நல்லாருக்கும்.

இன்டர்வெல்லுல ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டு உருக,உருக,லவ் பண்ணுவீங்க,காண்டீன்காரர் லைப் நல்லாருக்கும்.

அவங்களுக்கு பர்த்டே ன்னு சொல்லி பிரண்ட்ஸ் எல்லாருக்கும் டாஸ்மாக்ல ட்ரீட் வைப்பீங்க.இந்த ஸ்டேட்டே நல்லாருக்கும்.



இப்பவும் சொல்றேன் லவ் பண்ணுங்க சார்!லைப் நல்லாருக்கும்!!


என்ன கேக்குறீங்க? உங்க லைஃபா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!! 


17 comments:

M.R said... Reply to comment

சொந்த வாழ்க்கையை அடமானம் வைத்து மற்றவர்களை வாழ வைன்னு சொல்றீங்க . நல்ல கருத்து

கோவை நேரம் said... Reply to comment

சொந்த காசுல சூன்யம் வைக்க சொல்றீங்க ....

ஆகுலன் said... Reply to comment

ஏன் பாஸ் குட்டைய கிளபுரீங்க....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அப்படியா சங்கதி...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அப்ப காதலிக்கிறவன் கதி அவ்வளவுதான்....


வித்தியாசமான சிந்தனை...
வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said... Reply to comment

வித்தியாசமான சிந்தனை..

Anonymous said... Reply to comment

மொத்தத்தில சுத்தியுள்ளவங்க லைவ் நல்ல இருக்கும் ஆனா லவ் பண்ணுறவங்க லைவ் ..???)

K.s.s.Rajh said... Reply to comment

”லவ் பன்னுங்க சார் லைப் நல்லா இருக்கும்.”

இந்த டயலாக்கை எழுதிய மைனா படத்தின் இயக்குனர்.பிரபு சாலமன் என்ன நினைச்சு எழுதினாறோ தெரியாது ஆனால் நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் சூப்பர் நண்பா கலக்குங்க.

அன்புடன்
Kss.Rajh
From
நண்பர்கள்

மாய உலகம் said... Reply to comment

இப்படி லவ் பதிவு போட்ட கோகுல் லைப் நல்லாருக்கும்

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

ரக்‌ஷா பந்தன் அன்னைக்கு போடற பதிவைப்பாரய்யா/.

Unknown said... Reply to comment

எங்க அம்மா அப்பவே சொல்லிச்சி கோகுல்மாரி பசங்கலாண்ட சேராதன்னு..

கோகுல் said... Reply to comment

@M.R
புரிஞ்சுகிட்டிங்க?

கோகுல் said... Reply to comment

@கோவை நேரம்
எஹெஹே!

கோகுல் said... Reply to comment

@ஆகுலன்
குழம்பின குட்டையில் மீன் பிடிக்க தான்!

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்ப காதலிக்கிறவன் கதி அவ்வளவுதான்....


வித்தியாசமான சிந்தனை...
வாழ்த்துக்கள்...//
ரைட்டு!

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்ப காதலிக்கிறவன் கதி அவ்வளவுதான்....


வித்தியாசமான சிந்தனை...
வாழ்த்துக்கள்...//
ரைட்டு!

பிரணவன் said... Reply to comment

யாரவது ஒருத்தர் செலவு செய்துதான் ஆகனும். இங்க காசோட சேர்ந்து வாழ்க்கையும் போகுது. . .அவ்வளோதான் பாஸ். . .