Thursday, August 25, 2011

அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)




எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்!
இப்போதாவது நான் அவளைப்பற்றி!!

ஒன்றுமே இல்லாத எனக்கு
உரு கொடுத்தவள்

ஒன்றும் புரியாமலிருந்த எனக்கு
உலகம் புரிய வைத்தவள்

நான் காயப்பட்டால்
தான் அழுபவள்

வறட்சியை தான் ஏற்றுக்கொண்டு
வசந்தத்தை எனக்கு தருபவள்

புயலை எதிர் கொண்டு தென்றலாய்
என் மீது வீசுபவள்

புறப்படும்போது
புன்னகைத்திருப்பாள்

திரும்பி வரும் வரை
துடித்திருப்பாள்

முள்ளை தாங்கிக்கொண்டு
என் பாதையில் பூ தூவுபவள்

நான் தோல்வியுறும் போது
தோள் கொடுப்பவள்

எனது வெற்றியில்
என்னை விட புளங்காகிதம் கொள்பவள்


இன்னும் என்ன சொன்னாலும் தகும்
உன்னைப்பற்றி என்றால்

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!






பி.கு-இது ஒரு ரிப்பீட்டு பதிவு.ஏற்கனவே வாசித்து சென்றவர்கள் வைய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்!







40 comments:

அம்பலத்தார் said... Reply to comment

அம்மான்னால் சும்மாவா வாழ்த்துக்கள்

Anonymous said... Reply to comment

தாயின் உணர்வுகளை பறைசாரும் வரிகள்

Anonymous said... Reply to comment

நான் சாக்காயிட்டேன்.... அம்மான்ன உடனே...

அருமை...

மகேந்திரன் said... Reply to comment

தமிழ்மணம் 4

அன்னை எனும்
அன்பூற்றிர்கொர்
அழகிய கவிதை.
அழகு

rajamelaiyur said... Reply to comment

Super sentimental kavithai

rajamelaiyur said... Reply to comment

Kavithai super

தனிமரம் said... Reply to comment

அம்மாவின் சிறப்பைச் சொல்லும் அழகு கவிதை வாழ்த்துக்கள் சகோ!

குறையொன்றுமில்லை. said... Reply to comment

அம்மா வுக்கு அருமையான கவிதை.

கோகுல் said... Reply to comment

அம்பலத்தார் said...
அம்மான்னால் சும்மாவா வாழ்த்துக்கள்
//
கந்தசாமி. said...
தாயின் உணர்வுகளை பறைசாரும் வரிகள்//
//
ரெவெரி said...
நான் சாக்காயிட்டேன்.... அம்மான்ன உடனே...//
//
மகேந்திரன் said...
தமிழ்மணம் 4

அன்னை எனும்
அன்பூற்றிர்கொர்
அழகிய கவிதை.
அழகு//
//

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Super sentimental kavithai//
//

Nesan said...
அம்மாவின் சிறப்பைச் சொல்லும் அழகு கவிதை வாழ்த்துக்கள் சகோ!//

வருகைதந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி!

ஆகுலன் said... Reply to comment

அண்ணே கவிதை அருமை.......

செங்கோவி said... Reply to comment

//அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!//

அது தான் அம்மா...இல்லையா?

Chitra said... Reply to comment

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!

....very sweetly said! :-)

சுதா SJ said... Reply to comment

அம்மாவின் பெருமைகளை பறைசாற்றும் கவிதை.
சூப்பர்

Prabu Krishna said... Reply to comment

அம்மா மூன்றே எழுத்துகளில் பிரபஞ்சம் எல்லாம் அடங்கிவிடும்.

கடைசி வரிகள் எல்லா அம்மாக்களும் சொல்வது...

பிரணவன் said... Reply to comment

அடப்போடா!அம்மா என்று சொல்அதுவே போதும் என்கிறாய்!
இது தான் அம்மா. . .அருமை. . .

மதுரை சரவணன் said... Reply to comment

kadaisi variyil ammaavai nanaiththu vitteerkal.. vaalththukkal

மதுரை சரவணன் said... Reply to comment

kadaisi variyil ammaavai nanaiththu vitteerkal.. vaalththukkal

மதுரை சரவணன் said... Reply to comment

kadaisi variyil ammaavai nanaiththu vitteerkal.. vaalththukkal

Philosophy Prabhakaran said... Reply to comment

ஒரே ஃபீலிங்க்ஸ்...

vidivelli said... Reply to comment

தெய்வத்தை பற்றி எழுதத்தான் ஏராளம் இருக்கிறது..
ஆனால் எழுததான் காகிததாள் போதாதே...
அருமையான அம்மா கவிதை..
பாராட்டுக்கள்..

Mathuran said... Reply to comment

அம்மா பற்றிய அருமையான கவிதை

மாய உலகம் said... Reply to comment

அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவைப்பற்றி கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பா

மாய உலகம் said... Reply to comment

தமிழ் மணம் 10

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அருமை .

ஆச்சி ஸ்ரீதர் said... Reply to comment

அம்மா என்றாலே பூரித்துவிடும்
அம்மாவிற்காக உலகத்தில் உள்ள வார்த்தைகளெல்லாம் தேடி எழுதினாலும் நம் மனது மட்டும் திருப்தியடையாது.

rajamelaiyur said... Reply to comment

//
இன்னும் என்ன சொன்னாலும் தகும்
உன்னைப்பற்றி என்றால்

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!
//

உண்மைதான்

kobiraj said... Reply to comment

அருமையான கவிதை

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

70 மார்க்

சேலம் தேவா said... Reply to comment

//அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)//

தலைப்புல காமெடி பண்ணிட்டு பதிவுல நெஞ்சத்தொட்டுட்டீங்க...

M.R said... Reply to comment

ஆசைப்பட்ட எல்லாத்தையும்
காசிருந்தால் வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா
சொல்லு அம்மாவை வாங்க முடியுமா .

அம்மா அம்மா எனது ஆருயிரே...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே .

நன்றி சகோ...அம்மா பதிவிற்கு (நானும் அரசியல் அம்மாவை சொல்லவில்லை )

M.R said... Reply to comment

தமிழ் மணம் 15

பி.அமல்ராஜ் said... Reply to comment

நல்ல கவிதை... முடிவு இன்னும் தூக்கல்.. சூப்பர் பாஸ்..

test said... Reply to comment

Super! :-)

சக்தி கல்வி மையம் said... Reply to comment

அம்மா பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... Reply to comment

அருமை..

Riyas said... Reply to comment

தாய் பற்றி அழகான கவிதை

காந்தி பனங்கூர் said... Reply to comment

அம்மாவுக்கு ஈடு இணையானவள் யாரும் இல்லை. நன்றி.

கவி அழகன் said... Reply to comment

அருமையான கவிதை கோகுல்

நிரூபன் said... Reply to comment

அன்னையின் அன்பினை, அன்னையின் பெருமைகளை விளக்கும் அற்புதமான கவிதை நண்பா.

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல்

அன்னையின் அன்பு அளவற்றது - அம்மான்னு சொல்டா அது போது - அது தான் அன்னை.

நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா