Wednesday, November 9, 2011

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?



பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா”ரணங்கள்”.அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ”ரம்ப” காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியதையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல’க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது,அப்பறம் 

அரசியல் ஆர்வம்(அதனாலதான அணில்?),அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.   


42 comments:

Yoga.S. said... Reply to comment

இரவு வணக்கம்,நானும் கூட நடு நிலை?!ரசிகன் தான்!ஹி!ஹி!ஹி!!!

செங்கோவி said... Reply to comment

தல அப்பப்போ வரலாறு மாதிரி படங்கள்ல ’நடிப்பாரு’...ஆனா தளபதி?

செங்கோவி said... Reply to comment

தளபதி நண்பன் மூலமா புது இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார்..பார்ப்போம்!

Anonymous said... Reply to comment

மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க...

அது மட்டும் அடிக்கடி..அடிக்கு அடி படிக்கணும் போல...-:)

ம.தி.சுதா said... Reply to comment

////அப்படினா தல படம் வரும் போது

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.////

யாரப்பா அப்படி சொன்னது மங்காத்தாவிற்கு அவர்கள் பட்ட பாடு இதை விட மோசமே... (நான் இருவர் ரசினனுமல்ல..)

ஆனால் இப்போது விஜய் ரசிகரின் எதிர் அஜித்தல்ல சூர்யா தான்?

Philosophy Prabhakaran said... Reply to comment

தல... மேட்டர் என்னன்னா அஜீத்தை விஜய் ரசிகர்கள் மட்டும்தான் கலாய்ப்பார்கள்... விஜயை எல்லா தரப்பினர்களும் கலாய்ப்பார்கள்...

காட்டான் said... Reply to comment

வணக்கம் மாப்பிள
என்ன நீங்களும் இறங்கீட்டிங்களா களத்தில.. ஹி ஹி முதல் வரியையும் கடைசி வரியையும் நான் படிக்கல!!!

கேணியூர் வீறுடை வேந்தனார் said... Reply to comment

மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க...

அது மட்டும் அடிக்கடி..அடிக்கு அடி படிக்கணும் போல...-:)://///

இக்கருத்தை வழி மொழிகிறேன்.

கவி அழகன் said... Reply to comment

Unmaiyil nadunila than gokul

*anishj* said... Reply to comment

//ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர்

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு //

அதுதுதுதுதுது... இதற்காகதான் ஒரு நல்ல மனிதராக அஜித்தை எனக்கு பிடிக்கும்...!

பதிவுக்கு நன்றி நண்பா...!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

அடடா.. தமிழ் சினிமாவின் புரியாத புத்திர புரிஞ்சுக்க ட்ரை பண்றீங்க போல.. வாழ்க வாழ்க..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

அகாதுகா அப்பாடக்கர்ஸ்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா இளையதளபதி?

இது ரொம்ப நாளுக்கு மொத போட்ட ஒரு பதிவு, சும்மா படிச்சு பாருங்க..

Unknown said... Reply to comment

மாப்ள யாரை காப்பி அடிச்சி நடிசாரோ(!).. யாரை தலீவருன்னு சொல்லிட்டு இருந்தாரோ(!)....சட்டுன்னு ஞானோதயம் வந்து தலீவர மாத்துன அன்னைக்கே புடிச்சிது சனி...ஹிஹி!

விச்சு said... Reply to comment

அஜீத் அரசியலில் இறங்கவில்லை.

அன்புடன் நான் said... Reply to comment

நல்ல நடுனிலை.... ஆனா விஜய்க்கு டாக்டர் பட்டமெல்லாம்... சரியாவா படுது.... வெறுப்பைதான் ஏற்படுத்துது.

ரைட்டர் நட்சத்திரா said... Reply to comment

நடுநிலை ரசிகருக்கு நன்றி

K.s.s.Rajh said... Reply to comment

பாஸ் நானும் எந்த நடிகருக்கும் ரசிகன் கிடையாது.....

விஜய் ரஜனி பார்முலாவை எடுத்தார் ஆனால் அவர் அதில் பைட்.பாட்டு பார்முலாவைதான் பின்பற்றுகின்றார்...காரணம் ரஜனியின் மாஸ் படங்களிலும் எதாவது ஓரு வித்தியாசம் இருக்கும் உதாரணம் பாட்ஷா...சந்திரமுகி....சந்திரமுகி கூட ஜந்து பாட்டு பைட் பார்முலா படம் தான் ஆனால் அதில் எவ்வளவு மேட்டர்களை திணித்திருந்தார்கள் ரஜனியைவிட ஜோதிகாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்
அந்த படத்தின் கதையை படம் பார்க்கும் போது கிளைமாக்ஸ் என்ன என்பது முதல் கொண்டு எதனையும் எதிர்வு கூறமுடியாது...ஓரு விறுவிறுப்பு இருக்கும்.....

ரஜனி படங்களில் உள்ள இந்த விறுவிறுப்பு விஜய் படங்களில் இருப்பது இல்லை
இதே போலதான் தல படங்களும் மங்காத்தா கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்கவே இல்லை இதனால் படம் சுவாரஸ்யமாக இருந்தது

ஆனால் வேலாயுதம் கிளைமாக்ஸ் என்ன என்பது பாதிப்படத்திலேயே தெரிந்துவிடும்....பொதுவாக விஜயின் மாஸ் படங்களின் கிளைமாக்ஸ் என்ன என்பதை பாதிப்படம் பார்க்கும் போதே தெரிந்து கொள்ளாம் இதனால் சுவாரஸ்யம் இருக்காது.......

K.s.s.Rajh said... Reply to comment

////ம்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது(அதனாலதான அணில்?),அப்பறம்

அரசியல் ஆர்வம்,அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.////

இதுவும் ஓரு காரணம் தான்

K.s.s.Rajh said... Reply to comment

ஆனால் விஜய்க்கு நண்பன் ஓரு வித்தியாசமான படமாக இருக்கும்

உணவு உலகம் said... Reply to comment

வரட்டும் பார்க்கலாம்.

M.R said... Reply to comment

தங்கள் கருத்தை படித்தேன் நண்பரே

Unknown said... Reply to comment

'கடைசி பன்ச் சூப்பர்!!நடுநிலையை காப்பாத்தீட்டீங்க!!

Unknown said... Reply to comment

தலய பிடிச்சவங்க எண்ணிக்கையை விட தளபதியை பிடிக்காதவங்க எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல அதான் எங்கே போனாலும் தளபதியை கிண்டல் பண்ணுறதை பார்க்க முடியுது

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,

நடு நிலமை விளக்கம் அசத்தல்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்புறம் பின்னூட்டப் பெட்டியை மாற்றியதற்கு மிக்க நன்றி.

நிரூபன் said... Reply to comment

தல, தளபதியின் கடந்த கால சினிமா ஏற்ற இறக்கங்களை சுருக்கமாக அலசியிருப்பதோடு, இறுதியில் இனிவரப் போகும் பாங்கள் எதிர்பார்ப்பினைக் கூட்டும் என்று சொல்லியிருக்கிறீங்க.

பொறுத்திருந்து பார்ப்போம்!

சசிகுமார் said... Reply to comment

எனக்கும் இதே டவுட்டு தான் மாப்ள...

சக்தி கல்வி மையம் said... Reply to comment

நடுநிலையான அலசல்..

அந்த படங்கள் வரும்போது பார்ப்போம் மாறி இருக்கிறாரா என்று?

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

நடுநிலை தவறேல்....
நம்ம கோகுலும் பின் விளைவுகளை சந்திக்க களத்துல இறங்கிட்டாரே?


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

ராஜா MVS said... Reply to comment

இதுதான் நடுநிலையா??? சொல்லவே இல்ல....

N.H. Narasimma Prasad said... Reply to comment

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கோகுல். பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

.அடப்பாவிகளா ஒரு மனுசனை இம்புட்டு கஷ்ட்ட படுத்தியும் ஸ்டெடியா நிக்குறார்னா புரியலையா உங்களுக்கு...

Anonymous said... Reply to comment

தலயோ தளபதியோ !! நாம என்னிக்கும் தல-தளபதி ஃபேன்தான்...

Anonymous said... Reply to comment

//து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி

இருக்கிறது என நினைக்கிறேன்.///

ஹீ ஹீ.. துள்ளாத மனமும் துள்ளும் படத்துல பாத்ரூம்ல ஒக்காந்து அழுவாறு பாருங்க ஒரு சீன். சான்சே இல்ல.. அப்புறம் பிரண்ட்ஸ் அந்த கிளைமாக்ஸ் சீன் அட அட அட...குஷில கூட அந்த மும்தாஜ் எபிசோட் செம... ஆயிரம் சொல்லுங்க தளபதி தளபதிதான்....

அம்பாளடியாள் said... Reply to comment

பகிர்வுக்கு நன்றி சகோ வாழ்த்துக்கள் ........

Unknown said... Reply to comment

தளபதி ரொம்ப ஓவராப் பண்றாப்புல - ன்னு நினைக்கிறேன்.
வெரைட்டி காட்ட மாட்டேன்குராப்புல.
அப்பவுலேர்ந்த்து இப்ப வரை ஒரே முகம் - ஒரு சின்ன மரு கூட முகத்துல வைக்கிரதுல்லா அப்புறம் எப்படி?

சம்பத்குமார் said... Reply to comment

வணக்கம் தல தளபதி..

//அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.//

இது சரியானதாய் படுகிறது..

//நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ
கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில்
ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)//

இது மிகச்சரியானது...

நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

Anonymous said... Reply to comment

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Unknown said... Reply to comment

///ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில்

நிலை நாட்டியத்தையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).///

கோகுல் அது ரஜினி படம் அல்ல ரஜினி நடித்த இயக்குனர் மகேந்திரனின் படம் தமிழ் திரையில் மகேந்திரன் ஒரு சகாப்தம்

HOTLINKSIN.com said... Reply to comment

உங்கள் பதிவுகள் ஏராளமான வாசகர்களை சென்றடைய hotlinksin.com ல் உங்கள் பதிவுகளை பகிருங்கள்...

Rais said... Reply to comment

@K.s.s.Rajh

nanban ஒரு ரீமேக் படம்.

Unknown said... Reply to comment

கல்கல் ஆய்வு
நன்று! நன்றி!


புலவர் சா இராமாநுசம்

Unknown said... Reply to comment

nan enna solerena vijay matrum ajith rendu perumey waste en peru gokul nan the best ena na yarayum emathula