Friday, April 27, 2012

தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்

அப்படி என்னடா வயிறு எரியும்படியான தகவல்?ஏற்கனவே அடிக்குற வெயில்ல உடம்பெல்லாம் எரியுது,இதுல வயிறு மட்டும் தனியா வேற எரியனுமான்னு எல்லாரும் ஒட்டு மொத்தமா கேக்குறது கேக்குது,
விஷயம் என்னன்னா........

                                   

சொன்னா சாபம் எல்லாம் விடக்கூடாது..........



காது வழியா புகை விடக்கூடாது.........



வயித்தெரிச்சல் குறைய ஜெலுசில் வேணும்னு போன் பண்ணி தொந்தரவு கொடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க சொல்றேன்,,,,,,


விசயத்தை கேள்விப்பட்டு வயித்தெரிச்சலை போக்கனும்னு ஃபயர் சர்வீஸ்லாம் கூப்டு தொந்தரவு எல்லாம் பண்ணக்கூடாது,,,,,



என்ன சொல்லுடா வெண்ணையா??



இதுக்கு மேல பில்ட் அப் குடுத்தா flow ல கெட்ட வார்தைல்லாம் வரும்னு நினைக்குறேன் ,,,,,



சரி அது என்னானா மகாஜனங்களே,பாண்டிச்சேரில பவர் கட் கிடையாதுங்கோ................


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விஷயம் என்னன்னா நேத்து(மட்டும்) நைட்ல ஒரு ரெண்டு மணில இருந்து
காலைல வரைக்கும் பவர் கட் ஆகிடுச்சு,அந்த நேரத்தில் வியர்வையில் புரள்கையில் கண நேரத்தில் என் கபாலத்தில் உதித்ததுதான் இந்த பதிவுக்கான கரு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

27 comments:

MARI The Great said... Reply to comment

எங்க ஊர்லயும் பவர் கட் கிடையாது ..,எந்த ஊர் உன் ஊருன்னு கேக்காதீங்க ..!

*anishj* said... Reply to comment

அலோ பாஸ் ! உங்க ஊருல பவர் கட் தான் கிடையாது... எங்க ஊருல எல்லாம் பவரே கிடையாது...! :) பவர் விருந்தாளி மாதிரி எப்போவாவது வந்தாலும் உடனே போயிடும்...! ஏன்னா நாங்க இருக்குறது தமிழ்நாட்டுல... :)

Anonymous said... Reply to comment

பாண்டிச்சேரில பவர் கட் கிடையாதுங்கோ...//

C'mon bro..Don't rub it in...

TN has no Power,but has the almighty Powerstar....-:)

Anonymous said... Reply to comment

Where is your wedding Gokul?

Anonymous said... Reply to comment

அம்மாவின் பொற்கால ஆட்சியின் கீழ எங்களுக்கு மின்சாரமே தேவையில்லை.

எவ்வளவு நாள்தான் வலிக்காத மாறியே நடிக்கனுமோ தெரியலியே.

கோகுல் said... Reply to comment

@வரலாற்று சுவடுகள்

கேக்காம இருக்க முடியுமா? எந்த ஊருங்க?

Unknown said... Reply to comment

பவர்கட் இல்லையா..? கொடுத்து வச்சவங்க! நலமா ! மணவிழா எப்போது? சா இராமாநுசம்

கோகுல் said... Reply to comment

@ரெவெரி

பவர்ஸ்டார் இருக்க பவர் எதுக்கு?சரிதான்

கோகுல் said... Reply to comment

@ புலவர் சா இராமாநுசம்,@ரெவெரி


திருமணம் ஜூன் 7 ராசிபுரம்(நாமக்கல் DT),
வரவேற்பு ஜூன்- 17 புதுச்சேரி(மதகடிப்பட்டு)
கொஞ்ச நாளில் அனைவரையும் தொடர்பு கொள்கிறேன் ,நன்றி.

Unknown said... Reply to comment

பவர்கட் கிடையாதா....? ஆமாங்கோ! இங்கியும் பவர்கட் கிடையாது பவர்ன்னு இருந்தாத்தானே கட் ஆகுறதுக்கு.....
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதோ...?

CS. Mohan Kumar said... Reply to comment

//கன நேரத்தில்//

அது கண நேரமுங்கோ !

கோகுல் said... Reply to comment

@மோகன் குமார்
கண நேரத்தில் வந்ததால் இந்த குழப்பம்,நன்றி,திருத்திட்டேன்,

கூடல் பாலா said... Reply to comment

ஏதோ மூணு மணி நேரம் பவர் இருக்கிறதால இந்த மாதிரி ஷார்ட் போஸ்டுகளையாவது படிக்க முடியுது.....

Yaathoramani.blogspot.com said... Reply to comment

வயிற்று எரிச்சலை அதிகமாக்கிவிட்டீர்களே கோகுல்
படங்களுடன் பில்டப் அருமை
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said... Reply to comment

Tha.ma 5

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

ஐயோ ..... நான் இதை ஒத்துக்கொள்ளவே மாட்டேன்....

arul said... Reply to comment

how?

ராஜ நடராஜன் said... Reply to comment

தமிழகத்தின் அவலநிலையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழகத்தின் மின்சார பயன்பாடு எண்ணிக்கை அளவில் நிரப்ப முடியாமல் இருப்பது மட்டுமே மின்பற்றாக்குறைக்கான முக்கிய காரணம்.

மின்சாரப் பெட்டி கண்டு பிடித்த அமெரிக்க விஞ்ஞானி சிரிதரை உடனே தமிழகத்து வரச்சொல்லலாம்.

Rathna said... Reply to comment

எவ்வளவுதான் வெயல் கொளுத்தினாலும் 'சாகா வரம்' வாங்கி வந்திருக்கும் "கொசு பட்டாளம்" உங்க ஊர்ல இல்லன்னா நீங்க ரொம்பவே கொடுத்து வச்சவுங்க தாங்க, மின்சாரம் இருந்தாலும் இல்லைன்னாலும் 'கொசுவோட' ராஜ்யத்திற்கு அழிவே கிடையாது. மின்சாரம் இரவு நேரத்தில இல்லன்னா நல்லதுன்னு எனக்கு தெரிஞ்ச வாட்ச்மன் சொல்றாரு, ஊர்ல எங்க பார்த்தாலும் கதவ உடைச்சு பணம் நகை திருடு போகுது இல்ல, அதுக்கு ஜனங்க எல்லாரும் 'night duty' பார்க்க வசதியா இருக்குமேன்னுதான் அரசு அப்பப்ப மின்சாரத்த இரவுல நிறுத்தி வைக்கிறாங்கன்னு கூட எங்க பக்கத்துல பேசிக்கிறாங்க.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

,பாண்டிச்சேரில பவர் கட் கிடையாதுங்கோ...

ஒளி மயமான வாழ்த்துகள்..

Unknown said... Reply to comment

இப்படிலாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் என் வூட்டுக்கு கரண்ட் கனெக்ஷனே கொடுக்கல... எல்லாத்துக்கும் பக்கத்து வூடு தான்..

Unknown said... Reply to comment

இப்படிலாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் என் வூட்டுக்கு கரண்ட் கனெக்ஷனே கொடுக்கல... எல்லாத்துக்கும் பக்கத்து வூடு தான்..

Unknown said... Reply to comment

இப்படிலாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் என் வூட்டுக்கு கரண்ட் கனெக்ஷனே கொடுக்கல... எல்லாத்துக்கும் பக்கத்து வூடு தான்..

Unknown said... Reply to comment

இப்படிலாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் என் வூட்டுக்கு கரண்ட் கனெக்ஷனே கொடுக்கல... எல்லாத்துக்கும் பக்கத்து வூடு தான்..

Unknown said... Reply to comment

இப்படிலாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான் நான் என் வூட்டுக்கு கரண்ட் கனெக்ஷனே கொடுக்கல... எல்லாத்துக்கும் பக்கத்து வூடு தான்..

வவ்வால் said... Reply to comment

கோகுல்,

என்னது பவர் கட் கிடையாதா ஏன் சொல்ல மாட்டிங்க மின்சாரம் நெய்வேலி இருந்து தானே வர்து , அதுவும் அளவு குறையாம கொடுக்கிறாங்க.

அப்புறம் புதுவையிலும் நகர்ப்பகுதி தான் முழு மின்சாரம், நீங்க கல்தாகுப்பம் அதான் மதகடிப்பட்டுல இருக்கீங்க போல அங்கே எல்லாம் அறிவிக்கப்படாத மின்வெட்டு உண்டுங்கோ, பெரும்பாலும் மதியம் 2க்கு மேல கட் ஆகும் நல்லா கவனிங்க. கன்னிக்கோயில் பக்கம் எல்லாம் அப்போ அப்போ 1/2 மணி நேரம் போல விட்டு விட்டு கட் செய்றாங்க மத்தியானத்துல.

ஹி..ஹி இப்போ தமிழ் நாட்டுக்காரங்க வயிரு குளிர்ந்து போய் இருக்கும் :-))

ராஜி said... Reply to comment

கரண்ட் இருக்குன்ற தைரியத்துல இப்படிலாம் பதிவு போட கூடாது. அம்மா ஆட்சி புதுச்சேரில வரப்போகுதாம்.