Friday, May 11, 2012

வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!

வணக்கம் வலையுலக நட்புகளே,

நான் பதிவெழுத வந்தது யதேச்சையிலும் யதேச்சை , ஏதோ மனசில தோன்றத எழுத ஆரம்பிச்சேன்,என்னடா நாம பாட்டுக்கு கைக்கு 
வந்தத எழுதறமே அப்டின்னு நினைச்சப்போ அட மடையா இது தாண்டா பிளாக்கிங்,இதுக்கு தாண்டா பிளாக் 
அப்டின்னு சொல்லி நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

பதிவெழுத வந்ததுக்கு அப்புறம் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க.எல்லா நண்பர்களுக்கும் 
சொந்த ஊர் விட்டு வேலை காரணமா புது ஊர் வந்து நல்ல நண்பர்கள் இல்லாம 
இருந்தப்போ வலையுலகம் மூலமா இணைந்த நீங்க தான் எனக்கு நண்பர்கள் இல்லாத 
 தாக்கத்தை குறைச்சது நீங்கதான் .
                           

 இப்போ என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு,
 எத்தனை உறவுகள் இருந்தாலும் நமக்கான உறவு நம்மை மட்டுமே நம்பி வந்த உறவு 
என நாம் பெருமிதம் கொள்ளக்கூடிய உறவு மனைவி எனும் உறவு ( இப்ப இப்டி தான் தோணும் ,அப்புறம் பாக்கலாம்).
மனைவி எனும் உறவுடன் நான் கை கோர்த்து இல்லறம் காணும்
 நாளிற்கு  உங்கள் அனைவரது வருகையையும்,வாழ்த்துகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இந்த பதிவை அழைப்பிதழாக கருத வேண்டுகிறேன்.முடிந்தவரை எல்லோரையும் ,தொலைபேசியில்,மெயில் மூலம் தொடர்பு கொள்கிறேன்.
 ( மே -20 சென்னை யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறேன்
பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் )

திருமண நாள் : ஜூன் 7,வியாழக்கிழமை 
மண இடம் : ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம்,
இராசிபுரம்,(நாமக்கல் -DT)
LANDMARK : புதிய பேருந்து நிலையம் எதிரில்,
வேல்முருகன் ஹோட்டல் பின்புறம்)
 வரவேற்பு : ஜூன் 17 ,ஞாயிற்றுகிழமை
இடம் ; ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபம்,
மதகடிப்பட்டு(திருக்கனூர் ரோடு) ,புதுச்சேரி 

 (புதுவை - விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் ,விழுப்புரத்திலிருந்தும் 
முப்பது நிமிட பேருந்துப்பயணம் -25
கி.மீ மதகடிப்பட்டிற்க்கு)


பதிவுலகம் ஒரு குடும்பம் என பலர் சொல்ல கேட்டிருக்கிறேன் ,எனது திருமணத்தை நமது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொள்ள 
அழைக்கிறேன்.நன்றி .
 தொடர்புக்கு 
9486146881
9791280127
57 comments:

rajamelaiyur said... Reply to comment

ஹயா ... நீங்களும் மட்டிகிட்டிங்களா ?

rajamelaiyur said... Reply to comment

வாழ்த்துகள் நண்பா ... உங்கள் மணவாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகின்றேன்

rajamelaiyur said... Reply to comment

வீட்டில் என்ன அடிவிழுந்தாலும் வெளியில் காட்டிகொல்லாத வீரம் உங்களுக்கு கிடைக்க ஆண்டவன் ஆருள் புரியட்டும்

rajamelaiyur said... Reply to comment

இன்று

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

மனமார்ந்த வாழ்த்துகள் மக்கா....!

சமுத்ரா said... Reply to comment

வாழ்த்துகள்

நாய் நக்ஸ் said... Reply to comment

வாழ்த்துக்கள்....

மாட்டினியா.....மாட்டினியா.....
மாட்டினியா .....

CS. Mohan Kumar said... Reply to comment

மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் ஞாயிறு என்பதால் நிறைய நண்பர்கள் வருவார்கள் என நம்பலாம்

கோவி.கண்ணன் said... Reply to comment

நல்வாழ்த்துகள்

Unknown said... Reply to comment

நல்வாழ்த்துகள் கோகுல்!

கேரளாக்காரன் said... Reply to comment

Best wishes boss

Unknown said... Reply to comment

வாழ்க பல்லாண்டு!
வளம் பல சூழ்க!

புலவர் சா இராமாநுசம்

Unknown said... Reply to comment

மணமகனுக்கு முதல் ஓட்டு

புலவர் சா இராமாநுசம்

பவள சங்கரி said... Reply to comment

வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Yaathoramani.blogspot.com said... Reply to comment

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Yaathoramani.blogspot.com said... Reply to comment

Tha.ma 2

பால கணேஷ் said... Reply to comment

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கோகுல்! 20ம் தேதி வர்றீங்களா? அங்க உஙகளைச் சந்திக்கிறேன்! நன்றி!

அனுஷ்யா said... Reply to comment

யோவ்... அப்ப நா மட்டும் தான் பேச்சுலரா? சரி... போய் தொலைங்க...

அனுஷ்யா said... Reply to comment

வாழ்த்துக்கள் நண்பா...:))

Unknown said... Reply to comment

மணமகனே மருமகனே வா வா
உன் வலதுகாலை எடுத்துவைத்து வா வா.. வாழ்த்துக்கள் நண்பா.
எங்களோடு ஐக்கியமாகுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக நீங்களும்.

சேலம் தேவா said... Reply to comment

மகிழ்ச்சியும்,வாழ்த்துகளும்.

சம்பத்குமார் said... Reply to comment

மனமார்ந்த வாழ்த்துக்கள் கோகுல்...

சென்னையில் சந்திப்போம்...

நட்புடன்
சம்பத்குமார்

Angel said... Reply to comment

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் fromஏஞ்சல் அக்கா
.உங்க ப்ளாக் திறக்க மாட்டேங்குது பிளாஷ் அடிச்சிட்டே இருக்கு கோகுல்

Unknown said... Reply to comment

வாழ்த்துக்கள் ..!

கோவை நேரம் said... Reply to comment

ஜூன் ஏழு முதல் ஆயுள் தண்டனை..

வாழ்த்துக்கள்..
நேரில் வருகிறேன் வாழ்த்து சொல்ல..

Anonymous said... Reply to comment

மனமார்ந்த வாழ்த்துக்கள் கோகுல்...Welcome to the club bro...-:)

Unknown said... Reply to comment

வாழ்த்துக்கள் மாப்ளே

Unknown said... Reply to comment

இல்வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள் சகோ :)

கோகுல் said... Reply to comment

@"என் ராஜபாட்டை"- ராஜா
நான் மாட்னதுல உங்குக்கு சந்தோசம்,ம்ம்
இருக்கட்டும்,வாழ்த்துக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

@MANO நாஞ்சில் மனோ
மிக்க நன்றி மக்கா

கோகுல் said... Reply to comment

@சமுத்ரா
மிக்க நன்றி

கோகுல் said... Reply to comment

@NAAI-NAKKS
வாழ்த்து சொல்லிட்டு அப்புறம் என்ன வேட்டு வைக்குறீங்க,
அவசியம் வரணும்.

கோகுல் said... Reply to comment

@கோவி.கண்ணன்
வாழ்த்துக்கு மிக்க நன்றி

கோகுல் said... Reply to comment

@வீடு சுரேஸ்குமார்
வாழ்த்தியமைக்கு நன்றி,நேரிலும் வரவும்

கோகுல் said... Reply to comment

@மௌனகுரு
நன்றி நண்பரே

கோகுல் said... Reply to comment

@புலவர் சா இராமாநுசம்
மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி ஐயா

கோகுல் said... Reply to comment

@Ramani
ரொம்ப நன்றி சார்

கோகுல் said... Reply to comment

@கணேஷ்
வாழ்த்துக்கு நன்றி,சந்திப்போம்

கோகுல் said... Reply to comment

@மயிலன்
என்ன,மாட்டாமலா போயிடுவீங்க,வந்து கும்முறோம்,
வாழ்த்துக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

@விச்சு
செமையா பாடி வாழ்த்திடீங்க போங்க,நன்றி.

கோகுல் said... Reply to comment

@சேலம் தேவா
நம்ம பக்கத்து ஊர்ல தான் கல்யாணம்,அவசியம் வந்துடுங்க

கோகுல் said... Reply to comment

@சம்பத்குமார்
நன்றி நண்பரே,

கோகுல் said... Reply to comment

@angelin
ரொம்ப நன்றி அக்கா,

கோகுல் said... Reply to comment

@வரலாற்று சுவடுகள்
நன்றி

கோகுல் said... Reply to comment

@கோவை நேரம்
மிக்க நன்றி ஆவலுடன் எதிர் பார்த்திருப்பேன்.

கோகுல் said... Reply to comment

@ரெவெரி
வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.

கோகுல் said... Reply to comment

@விக்கியுலகம்
மாம்ஸ்,எங்கிருந்தாலும் அவசியம் வந்துடுங்க,ரிசப்சன் பாண்டியில மறந்துடாதிங்க,

கோகுல் said... Reply to comment

@ரேவா
மிக்க நன்றி சகோ.,

மனோ சாமிநாதன் said... Reply to comment

வாழ்வின் அனைத்துச் சிறப்புக்களும் பெற்று மகிழ்வுடன் என்றும் இனிதாய் இணைந்திருக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!!

tamilvaasi said... Reply to comment

அனைத்து வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக மணவாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.

Unknown said... Reply to comment

congrats........

வவ்வால் said... Reply to comment

வாழ்த்துகள்!
(வரவேற்புக்கு வந்தா சரக்கு உண்டா பாஸ்... ஹி..ஹி காரியத்துல கண்ணா இருக்கணும் )

கோகுல் said... Reply to comment

@மனோ சாமிநாதன்
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க,

கோகுல் said... Reply to comment

@தமிழ்வாசி பிரகாஷ்
உங்கள் வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை நிச்சயம் சிறக்கும்,மிக்க நன்றி.

கோகுல் said... Reply to comment

@தமிழ்வாசி பிரகாஷ்
உங்கள் வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை நிச்சயம் சிறக்கும்,மிக்க நன்றி.

K.s.s.Rajh said... Reply to comment

நண்பன் என்பதற்கு அப்பால் ஒரு சகோதரனின் திருமணம் போல சந்தோசமாக இருக்கின்றது பாஸ் உங்கள் வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள் பாஸ்

நிரூபன் said... Reply to comment

வணக்கம் கோகுல் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?

இனிய இன்பத் திருமண நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அருகே வந்து வாழ்த்த முடியவில்லை ஆயினும் அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

இல்லறம் நல்லறமாக அமையட்டும் பாஸ்!