Monday, April 9, 2012

பல"சரக்கு"கடை-6(09/04/12)


சம்சாரம் அது மின்சாரம்அது அப்போ மின்சாரமே இப்போ மின்சாரம்.மின்சாரம் இருக்கும் போது தான் ஷாக் அடிக்கும்,இப்போ இல்லாமலே ஷாக் அடிக்கப் போகுது.மக்கள் எல்லாம் அம்மா,தாயே எங்களுக்கு இலவசம் எதுவும் வேணாம்னு கை எடுத்துக்கும்பிடும் வரை அம்மாவின் அதிரடி விலைஉயர்வு அறிவிப்பு தொடரும் என தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடிவேலு பாணியில் சொல்லனும்னா ஆணியே புடுங்க வேணாம்னு எல்லோரும் பேசிக்குறாங்களாம்.

வாக்கிங்கா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தி.மு.க வினருக்கும் நடைப்பயிற்சிக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ தெரியல.ஆலடி அருணா,கு.ப.கிருஷ்ணன் வரிசைல இப்போ திருச்சி ராமஜெயம்.இனி தி.மு.க. பிரமுகர்கள் நடைப்பெயற்சி செய்ய தயங்குவார்கள்.

மல்யுத்த மகாராணிஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் இதுவரை மகளிர் பிரிவில் பங்கேற்றதில்லை.தந்த குறையை போக்கியிருக்கிறார் சகோதரி.கீதா.இதற்கான தகுதிச்சுற்றில் தங்கம் வென்று தனது ஒலிம்பிக் பயணத்திற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்து பதக்கப்பட்டியலில் இவரது பங்கு இடம்பெற வாழ்த்துவோம்.

கொசுவர்த்தி சுருள்

துவங்கியாச்சு பத்தாவதுக்கு பரிட்சை.நான் முதல் முதல்ல பாஸ்போர்ட் போட்டோ எடுத்தது பத்தாவது பப்ளிக் எக்ஸாம் ஹால்டிக்கெட்டுக்காக தான்.அந்த நினைவுகள் வந்து போகுது.அதிலும் ஒரு நண்பன் சாக்பீஸ் தூளை திருநீறாக வைத்துக்கொண்டது கொசுவர்த்தி சுருள் சுழன்றதில் வந்து போனது.அப்புறம் ஏதோ IPLலாம்,அதுவும் பத்தாவது பரிட்சை தொடங்குன அன்னிக்கே தொடங்கியிருக்காம்..

புரட்சிப்போராட்டம்மக்களையெல்லாம் புரட்சிப்போராட்டம் நடத்தச்சொல்லி விழிப்புணர்வு(?)போராட்டம் நடத்தி வந்த நகைக்கடை அதிபர்களையே புரட்சிப்போராட்டம் நடத்த வைத்திருக்கிறது மத்திய அரசு.புரட்சி(!)போராட்டத்தின் பலனாக அரசு கொஞ்சம் பணிந்து வந்திருக்கிறதாம்,புரட்சியும் கொஞ்சம் தணிந்திருக்கிறது.

நம்ம தலைவர் பாணியில் ஒரு ட்வீட்

                    [ஒரு பூ பத்தாதே சகோதரி]

உயிர் தோழியே,உடன் பிறவா சகோதரியே,நீங்கள் என்னை வீட்டை விட்டு தூக்கிப்போட்டாலும் நான் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்,நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்.


14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

எல்லா செய்திகளும் நச்...

புரட்சிப்போராட்டம் தற்போது முடிந்தது என்று நினைக்கிறேன்

மனசாட்சி™ said... Reply to comment

சரக்கு செமையாக இருக்கப்பு - குப்பு ஏறுது

கணேஷ் said... Reply to comment

பலசரக்குக் கடையில் பார்த்த எல்லாச் சரக்குகளுமே அருமை. மிக ரசித்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

யோவ் அம்மாவையே நக்கல் அடிக்கிற அளவுக்கு வந்துடுச்சா?

வெளங்காதவன்™ said... Reply to comment

///உயிர் தோழியே,உடன் பிறவா சகோதரியே,நீங்கள் என்னை வீட்டை விட்டு தூக்கிப்போட்டாலும் நான் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்,நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்/////

நச்!!!!!

அரசன் சே said... Reply to comment

மொத்தமா கலக்கி புட்டிங்க ..
நன்றி

koodal bala said... Reply to comment

வியாபாரம் ஓஹோன்னு இருக்குது!

Anonymous said... Reply to comment

வியாபாரம் பாத்திட்டுப் போகிறேன் வாழ்த்துகள் கோகுல்.
வேதா. இலங்காதிலகம்.

மோகன் குமார் said... Reply to comment

All matters :))

வரலாற்று சுவடுகள் said... Reply to comment

சரக்கு .., தூக்கலு ..!

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

சரக்கு அனைத்தும் அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

தமிழ்மணம் போட்டாசு

ஹாலிவுட்ரசிகன் said... Reply to comment

All is good. Voted in Tamilmanam.

Anonymous said... Reply to comment

பலே சரக்கு தான்..கோகுல்...

யார்ட்ட எங்கிருந்து மோதுகிறீர்கள் என்று தெரியும் தானே...-:)

இருந்தாலும் உங்கள் தைரியத்துக்கு ஒரு பூ...சாரி பூங்கொத்து...