Friday, March 30, 2012

பாதுகாப்பு உணர்வு எப்போ வேணும்?


நமக்கு அன்றாட வாழ்வில் தேவையான அத்தியாவசியமானவை என்றால் நினைவுக்கு வருவது தண்ணீர்,உணவு,உடை,இருக்க இடம் இதுதான் உயிர் வாழ அத்தியாவசிய தேவை என சொல்லுவோம்.ஆனால் நமக்கு எல்லோருக்கு இருக்கும் பெரும்பாலும் நாம் மற்றவர்களுக்கு சொல்லும்(நானும் தான்)ஒரு விசயத்தை எப்போதுமே மறந்து விடுகிறோம்.அது பாதுகாப்பு உணர்வு.

                        
பாதுகாப்பு என்னெல்லாம் இருக்க வேண்டும்,சரி எப்போதெல்லாம் வேண்டும். சுருக்கமா சொல்லனும்னா எங்கேயும் எப்போதும் வேண்டும்.
பாதுகாப்பு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்.

1.மின்சாரம்

உபயோகமில்லாத பிளக்குகளை மூடி போட்டு வைப்பது.நாமாக மின் இணைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய முயல்வதை தவிர்ப்பது,குறைபாடுள்ள மின் சாதனங்களை இயக்காமலிருப்பது,grounding,earthing சரியாக உள்ளதா என பார்ப்பது போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

2.சமையல் எரிவாயு.

       
சமையல் எரிவாயு உபயோகம் பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது.காஸ் சிலிண்டரை கவனத்துடன் கையாள பழகிக்கொள்ள வேண்டும்.காஸ் கசிவு என உணர்ந்தால் எல்லோரும் அறிந்ததைப்போல வீட்டின் எல்லா திறப்புகளையும் திறந்துவிட வேண்டும் .மின் இணைப்புகளை கண்டிப்பாக இயக்கக்கூடாது.முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது சாதனம் இயங்கிக்கொண்டிருந்தால் அதனை அணைக்க முயலக்கூடாது.காஸ் கசிவு சமயத்தில் எந்த சுவிட்சுகளையும் ஆன் செய்யவோ,ஏற்கனவே ஆன் செய்துள்ள சுவிட்சுகளை ஆப் செய்யவோ கூடாது.டியூப்களை குறித்த கால இடைவெளியில் மாற்றவும். மேலதிக சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றிய தகவல்களுக்கு கிளிக் செய்க 


3.தண்ணீர் 

            
 தண்ணீரில் கூடவா ஆபத்து?ஆமாம்.இப்போது பெரும்பாலான வீடுகளில் தரைக்கு டைல்ஸ்,மார்பில்ஸ் பயன்படுத்துகிறோம்.இவற்றில் தண்ணீர் கொட்டி விட்டால் கண்ணுக்கு தெரியாது.வழுக்கும் வாய்ப்புகள் அதிகம்.தண்ணீர் கொட்டியவுடன் சுத்தம் செய்து விடுவது சாலச்சிறந்தது.அதே போல குளியலறையிலும் வழுக்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து சாலையில்


டூ வீலர்னா ஹெல்மெட்டும் ,கார்னா சீட் பெல்ட்டும் மறக்காம போட்டுக்கங்க.பஸ்ல போறீங்களா புட்போர்ட் வேணாமே.(பீக் அவர்ல கொஞ்சம் கஷ்டம்தான்).நாமாக வாகனம் ஓட்டும் போது கவனம் சிதறும்,நிலை தடுமாற வாய்ப்புள்ள சில தருணங்கள்-கண்ணில் தூசி விழுவது,தும்மல் வருவது,சாலையில் மிகப்பெரிய எதிரி திடீரென குறுக்கிடும் நாய்கள்,எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ அப்டிங்கற மாதிரி,எந்த சந்துல இருந்து எந்த நாய் வரும்னு தெரியாது.எதிர்பாராத நேரத்தில் எங்கிருந்தோ விருட்டென ஓடிவந்து திகிலூட்டும்.வண்டியில் மோதவில்லை என்றாலும் பதற்றத்தில் நாம் நிலை தடுமாற வாய்ப்பு அதிகம்.எனவே எந்த இடையூறு வந்தாலும் சமாளிக்க தகுந்த,உடனே வாகனத்தை கட்டுக்குள் கொண்டுவர ஏதுவான வேகத்தில் எப்போதுமே பயணம் செய்வது வரும் முன் காக்க உதவும்.இன்னுமோர் முக்கியமான பிரச்சினை இரவுப்பயணங்களில் முகப்புவிளக்கால் ஏற்படும் கண் கூச்சம்.கூடுமானவரை எதிர் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கை டிம் செய்ய சிக்னல் கொடுக்கவும்.பெரும்பாலான பெரிய வாகன ஓட்டிகள் விளக்கை டிம் செய்வதில்லை,நாம கொஞ்சம் நிதானிச்சு போக வேண்டியதுதான்.


பணி புரியும் & மக்கள் கூடும் இடங்கள்


பணி புரியும் இடங்களில் செய்யும் பணிக்கு ஏற்ப பாதுகாப்பு சாதனங்களை (Personal ProtectiveEquipments)தயக்கமின்றி உபயோகப்படுத்த வேண்டும்.பணிக்கு ,உடலுக்கு இடையூறாக பாதுகாப்பு சாதனங்களை ஒரு போதும் நினைக்கக்கூடாது.நாம் பணி புரியும் இடங்களிலும்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அவசரகாலத்தில் பின் பற்றவேண்டியவை பற்றி அடிக்கடி ஒத்திகை( mock drill) செய்து பார்க்கலாம்.இந்த இடங்களில் இருக்கக்கூடிய அவசர காலத்தில் பயன்படுத்தும் சாதனங்களை இயக்க கற்றுக்கொள்ளவேண்டும்.fire extingusher,fire hose போன்றவை.மேலும் அவைகளை அவசர காலங்களில் எடுத்து பயன்படுத்தும்வகையிலும் ,சுலபமாக அணுக முடிந்த  இடங்களில் வைக்க வேண்டும்.( சென்னையில் ஒரு தியேட்டரில் fire extingusher ஏணி போட்டு எடுக்கும் உயரத்தில் இருந்ததை பார்த்தேன் ). ........


ஒரு நாள் வாழ்க்கையில் இவ்வளவு விசயங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டியிருக்கிறது.எனவே பாதுகாப்பு உணர்வை நமக்குள் எப்போதும் தூங்க வைக்காமல் விழிப்புடன் இருக்க வைப்போம்.நலமுடன் வாழ்வோம்.நல்லா இருப்போம்,நல்லா இருப்போம் ,எல்லோரும் நல்லா இருப்போம்.

உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு குறித்த தகவல்களைப்பகிரவும்.

19 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

பயனுள்ள பகிர்வு

ரெவெரி said... Reply to comment

உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு குறித்த தகவல்களைப்பகிரவும்//

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சலாம் போடுறது...
பாகிஸ்தானுக்கு மின்சாரம் தர்றது...

சரி விடுங்க...
ஆளுங்கட்சி செய்றத வாய் பொத்தி வேடிக்கை பார்க்குறது...

போதுமா கோகுல் -:)

BTW...நல்ல விழிப்புணர்வு பதிவு...

Phone bill எகிருதா...டும் டும் டும்...

மகேந்திரன் said... Reply to comment

நாம் எப்போதும் ஒரு பாதுகாப்பு
வலைக்குள் இருந்து கொள்ளவேண்டும்

அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே...

சென்னை பித்தன் said... Reply to comment

அன்றாட வாழ்வில் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய விஷயங்களை அழகாகச் சொல்லிட்டீங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நல்லதொரு பதிவு...

sathish krish said... Reply to comment

தேவையான பதிவு தான்

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

ராஜி said... Reply to comment

செல்போன்ல முன் பின் அறிமுகமில்லாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால், மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருக்கனும்

ராஜி said... Reply to comment

த ம 6

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஆஹா மிகவும் பயனுள்ள பதிவும் எல்லாரும் அறிந்து கொள்ளவேண்டிய விஷயம் இது...!!!!

வரலாற்று சுவடுகள் said... Reply to comment

அருமையான பதிவு..!

வாகனம் ஓட்டும் போது எப்போதும் நான் நிதானமான வேகத்தில் தான் செல்வதுண்டு

பகிர்வுக்கு நன்றி சகோ

புலவர் சா இராமாநுசம் said... Reply to comment

பயன்தரும் பாதுகாப்புக்கான பதிவு!
அனைவரும் அறியவேண்டிய ஒன்று
மிகவும் நன்று!

புலவர் சா இராமாநுசம்

பாரத்... பாரதி... said... Reply to comment

விழிப்புணர்வு பகிர்வு தந்ததற்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said... Reply to comment

இன்னும் கருத்துகள் கிடைக்கும் போது பதிவை நீட்டிக்கவும். பின்னர் யாரேனும் கூகுளில் தேடும் போது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மனசாட்சி™ said... Reply to comment

Safety is first - rest is next - thanks for sharing.

கோவை நேரம் said... Reply to comment

நல்ல பதிவு

மாலதி said... Reply to comment

பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு நன்று!

T.N.MURALIDHARAN said... Reply to comment

நன்றாகத் தெரிந்திருந்தும் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுகிறோம். அவ்வப்போது இதுபோல் ஏதாவது சொன்னால்தான் நினைவுக்கு வருகிறது. எச்சரிக்கைக்கு நன்றி.

சசிகலா said... Reply to comment

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

கோவை மு.சரளா said... Reply to comment

தெரிந்த விசயங்கள் என்றாலும் ந அலட்சியத்தை தட்டி எழுப்புகிறது உன்ல்கள் பதிவு ..நன்றி