கடந்த பலசரக்கு கடை பதிவில் எனது ஒகேனக்கல் பயணம் பற்றி நாலு வரியில் எழுதிவிட்டு ரெண்டு நாளா தூக்கமே வரல.பின்னே ஒரு பதிவரா இருந்துக்கிட்டு எங்கையாவது போய்வந்துட்டு ஒரு ரெண்டு பதிவாவது போட்டாதான பதிவர்னு ஒத்துக்குவாங்க.நாலு வரியில் எழுதினதுனால பதிவர் சங்கத்துல இருந்து தூக்கிடாதிங்க இதோ ஒகேனக்கல் விசிட் ஒரு முழுப்பதிவாக.,( என்னாமா குடுக்குது பாரு பில்ட் அப்பு)
அஞ்சு பேர் போறதா பிளான்.ஆளாளுக்கு ஒரு ஊர்ல இருக்கறதுனால அவங்கவங்க பஸ் புடிச்சு ஒகேனக்கல்ல காலைல வந்து சேந்துடமுன்னு பேசிக்கிட்டோம்.நான் கள்ளகுறிச்சியில இருக்குற ஒரு நண்பரை பிக்அப் பண்ணிக்கிட்டு [ஆமா இவரு பெரிய பென்ஸ் கார்ல போய் பிக்அப் பண்ணாரு.,கார்ப்பரேஷன் பஸ்ல போற நாய்க்கு லொள்ள பாரு]மேட்டூரில் இருக்கும் நண்பரின் அறையில் தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து புறப்படுவதற்காக இரவு அங்கே போய் சேர்ந்தோம்.அதற்கு முன்பாக சேலத்தில் ஹோட்டலில் சாப்பிடும் போது எங்களுக்குள் அலெர்ட் ஆறுமுகமாக மாறி ஸ்ப்ரிங் ரோல் இருக்கா?,கபாங்?டக்கீலா? என பேசிக்கொண்டு இருக்க எதிரில் இருந்தவர் டர்ரானார்.போதாததுக்கு சாப்டு முடிச்சதும் பர்ஸ்ச அடிச்சுட்டு ஓடிடுடா என சொன்னதும் மேலும் மெர்சலாகிப்போனார்.
அங்கே போய் தூங்க இரவு கிட்டத்தட்ட 1 மணியாகியதால் காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்து கிளம்பி அங்கிருந்து மேச்சேரி போய் ஒரு அரசு பஸ் பிடித்து பென்னாகரம் போனோம்.அதற்கும் சென்னை,பெங்களூரில் இருந்து வந்த நண்பர்கள் ஒகேனக்கல் போய் சேர்ந்து ஹோட்டலில் ரூம்(மட்டும்) எடுத்து காத்திருப்பதாக சொன்னார்கள்(இவர்களல்லவா நண்பர்கள்).மேச்சேரி டூ பென்னாகரம் பயணத்தில் டிரைவர் பஸ் ஒட்டிய விதம் எந்திரன் பட சன் டி.வி. பேட்டியில் காதல் அணுக்கள் பாட்டுக்கு ஒரு இன்ட்ரோ குடுப்பாரே “அந்த இடத்துல பிளசெண்டா,ஃப்ரீஸியா,கேசுவலா ஒரு சாங் “அப்படின்னு அப்டி இருந்தது அவ்வளவு கேசுவலா ஓட்டினார்.
[[ லலல்லா ள லாகியே ]]
பென்னாகரத்திலிருந்து வேறு பஸ் பிடித்து(எத்தனை)ஒகேனக்கல் போய் ரூமில் ரிபிரேஷ்(மட்டும்)பண்ணிக்கொண்டு கிளம்பினோம்.முதலில் பரிசல் பயணம் என முடிவு செய்து போனோம்.அங்கே மீன் சமைத்து கொடுப்பதற்கென்று ஒரு கூடம் இருக்கிறது சில(பல) பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர் மீன் விற்க்குமிடத்துக்கு அழைத்து சென்று மீன் வாங்கி சமைத்து வைத்திருக்கிறேன் போய் சுற்றி விட்டு குளித்துவிட்டு வாங்க என்றார்.
[[ ஏன்கா சுறா மீன் இருக்கானு தான கேட்டோம் இப்டி மொறைக்குறீங்க ]]
பரிசல் மையத்துக்கு போனால் கடந்த பதிவில் சொன்ன மாதிரி நிர்ணய கட்டணம் இல்லை போலும் 100-150,160 என ஒருவருக்கு வசூலிக்கிறார்கள்.LIFE JACKET கட்டணம் ஐந்து ரூபாய் தனி.ஒரு பரிசலில் ஆறு பேர் வரை [பரிசல் காரர் உட்பட] பயணிக்கிறார்கள்(லாமா?).இது ஒரு நல்ல அனுபவம்.கொஞ்ச தூரம் போய் இறக்கிவிட்டு கொஞ்சம் நடந்து வாங்க அந்தபக்கம் வந்து ஏறிக்கங்கனு(ஒரு நீர் வீழ்ச்சி குறுக்கிடுகிறது) சொல்லிட்டு பரிசலை தூக்கிகொண்டு அவர் நடக்க ஆரம்பித்தார்.கொஞ்சதூரம் போன பிறகு மீண்டும் பரிசல் பயணம். அங்கே ஆத்துலயே ஒன்றிரண்டு பரிசல் கடைகள் ஸ்நாக்ஸ்,கூல்டிரிங்ஸ்,வாட்டர்பாக்கெட் விற்பனையும் நடக்கிறது.
[[ பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே ]]
ஆளாளுக்கு தங்களது மொபைல் கேமிராவில் பி.சி.ஸ்ரீராமாக மாறிக்கொண்டிருந்தோம்.வலையில் இன்னுமோர் அருவி.சினிபால்ஸ் எனநினைக்கிறேன்.பரிசலை அருவிக்குள்ள விடட்டுமா என்றார் பரிசல்காரர்.ஜெர்க்கானேன் நான்,என்னது அருவிக்குள்ள விடப்போறிங்களா?னேன்.அதற்குள் போலாம் ரைட் என நண்பர்கள் சொல்ல அருவிக்குள் புகுந்தது பரிசல்.............
[[ பரிசல உள்ளே விடட்டுமா?
ஏண்ணா இஸ்ரோ ல இருந்து ராக்கெட் விடட்டுமாங்கற மாதிரி கேக்குறிங்க ]]
Tweet | ||||||
25 comments:
நானும் போய் இருக்கேன்... ஆனால் படகு சவாரி போகல மீனாட்சி சொல்லி இருக்கா எனக்கு தண்ணில கண்டமாம்........
அனுபவங்கள் தொடரட்டும்...
ஆனா அடுத்த பதிவுல முடிச்சிடனும் இல்லான்னா அம்புட்டுத்தான்...
:-)
ஏங்கன்னு ஒரே கல்லு ஒகேனக்கல்லு அதானே...என்சாய்!
“அதுக்குள்ளே முடிச்சுட்டா பதிவர் சங்கத்துல இருந்து நோட்டிஸ் அனுப்பிடுவாங்க மீதி அடுத்த பதிவில்.”
அது ஏன்யா மனோவ கலாய்க்கிர ஹெஹெ!
இதுவரை போனதில்லை ..,
போய் பாக்கணும்ங்ற என்னத்தை ஏற்படுத்தியது உங்கள் அனுபவப்பதிவு..
குழந்தைத்தொழிலாளி கோகுல் பரிசலில் கடத்தல்!!
Interesting.
Naanum payana katturai ezhuthuren. Ennai thaanae kindal seyreenga?? :))
கல்லூரி பருவத்தில் சென்றது..பலவருடமாயிற்று! பதிவிட்டு ஞாபகமூட்டியாச்சு! இனி போய்த்தானே ஆவணும்!
[ஆமா இவரு பெரிய பென்ஸ் கார்ல போய் பிக்அப் பண்ணாரு.,கார்ப்பரேஷன் பஸ்ல போற நாய்க்கு லொள்ள பாரு]
>>>>
பணக்கார வீட்டு புள்ளை போல பஸ்சுலலாம் போயிருக்கீங்க????!!!!
எப்பவோ பார்த்த ஞாபகம் நண்பரே..
ம்ம்
இன்னும் எழுதுங்கள் .....
)::
ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப...
நல்லவனா எம்புட்டு நேரம்....
நடிக்கிறது....??????????
அனுபவங்கள் தொடரட்டும்...
@சசிகுமார் அது யாருங்க மீனாச்சி
@கவிதை வீதி... // சௌந்தர் // முயற்சி பண்றேங்க,
@விக்கியுலகம்மாம்சு அவரு அருவாளோட வந்துட போறாரு
@வரலாற்று சுவடுகள் ம்.போய் பாத்துட்டு வாங்க.
@! சிவகுமார் ! பிறகு நடந்தது என்ன?பொறுத்திருந்து பாருங்கள்.
@மோகன் குமார் ஹா,ஹா, போங்க சார்.
@ரமேஷ் வெங்கடபதி போய் நல்லா அனுபவிசுட்டு வாங்க.
@ராஜி ஆஹா,இப்டி ஒரு விஷயம் இருக்கறத மறந்துட்டனே அக்கா.
@NAAI-NAKKS இந்த கமெண்ட்ல கொஞ்சம் வில்லத்தனம் தெரியுதே> எனி உள்குத்து?
நான் பலமுறை பார்த்த இடம்!
உங்களைத்தான் என் வலைப்பக்கம் பார்க்க முடியவில்லை!
புலவர் சா இராமாநுசம்
அருமையான பயணப் பகிர்வுகள்..
அருமையான பகிர்வு
Post a Comment