Tuesday, March 27, 2012

ஒகேனக்கல் விசிட்-ரைட்டு கர்நாடகாவாம்,லெப்ட் தமிழ்நாடாம் பதிவர் சங்க வேண்டுகோளை ஏற்று எனது ஒகேனக்கல் விசிட் பற்றிய கடந்த பதிவின் தொடர்ச்சி.,

பரிசலுடன் அருவிக்குள் போலாமா என பரிசல்காரர் கேட்டதும் என்ன அருவிக்குள்லையா என்ற எனது அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் போலாம் ரைட் என நண்பர்கள் சொன்னதால் அருவிக்குள் சில நொடிகளில் புகுந்தது பரிசல்.வேகமாக சென்று விட்டதால் மொபைல்,கேமிராவை பாதுகாப்பாக வைப்பதற்குள் கொஞ்சமாக நனைந்து விட்டது.நல்லவேளையாக ஒன்றும் ஆகவில்லை.
                            [ கேப்டன்னாலே தண்ணில சும்மா பூந்து விளையாடுறாங்க ]     
அப்புறம் பரிசலை பம்பரம் போல கரகரவென சுத்திவிட்டார்.தலை சுற்ற ஆரம்பிப்பதற்குள் நிறுத்திவிட்டதால் தலை தப்பியது.என் நண்பன் ஒருவனுக்கு துடுப்பு போடும் ஆவல் வர பரிசல் காரரிடம் துடுப்பு வாங்கி போட்டுப்பார்க்க அது கர்நாடகா பார்டர் பக்கம் போனது,ஆமாங்க அங்கே லெப்ட் பாறை தமிழ்நாடாம்,ரைட்டு பாறை கர்நாடகாவாம்.சொன்னாங்க.ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு இருக்குன்னு சொல்லி துடுப்பை வாங்கி பரிசல் கேப்டனிடமே கொடுத்தோம்.
                     [தம்பி அவங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு -வண்டிய திருப்பு]                   

பரிசல் போடுவது கொஞ்சம் கடினமான வேலைதான்.இடப்பக்கம் இரண்டுமுறை,வலப்பக்கம் இரண்டுமுறை துடுப்பை பிடித்திருக்கும் முறையை மாற்றி மாற்றி போட்டால்தான் பரிசல் சொன்ன பேச்சு கேக்குமாம்.சுமார் நானூறு பரிசல்கள் இருக்கிறதாம் ஒகேனக்கலில்.ஒரு நாளைக்கு இருநூறு பேரும் அடுத்த நாளைக்கு அடுத்த இருநூறு பேரும் மாறி மாறி பணி புரிவார்களாம்.சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு மூன்று ட்ரிப் கிடைக்குமாம்,மற்ற நேரங்களில் ஒன்று கிடைத்தாலே அதிகம் என்கிறார்கள்.ஒரு ட்ரிப்க்கு 200 ரூபாய்தான் கிடைக்கும் என்றார் எங்கள் பரிசல்காரர்.இதைதான் நம்ப முடியவில்லை நாங்கள் மட்டுமே 800ரூபாய் கொடுத்தோம்.அப்ப மீதி காசு எங்கே போகிறது?அது போக டிப்ஸ் வேறு கேட்கிறார்கள்.             
அருவிகளில் இருந்து சமவெளியில் தண்ணீர் ஓடு ஒரு இடத்திற்கு போய் இறக்கிவிட்டுட்டு போய் குளிச்சுட்டு வாங்க வெயிட் பண்றேன்னு சொல்லிட்டார் பரிசல் கேப்டன்.அதுக்கப்புறம் தண்ணியை கண்ட ............களாட்டம் ஆட்டம் போட தயாரானோம்.ஹலோ,ஹலோ முதலைகள்னு சொல்ல வந்தேன்,நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க.தண்ணியில கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் செம ஆட்டம்.ஒரு வருசத்துக்கு சேத்து குளிச்சாச்சு.உடம்பெல்லாம் ஊரிப்போகும் அளவுக்கு தண்ணியில இருந்தாச்சு,இதுக்கு மேல இருந்தா சின்ன கல் பட்டாகூட காயம் ஆகிடும் அந்த அளவுக்கு கும்மாளம் போட்டுட்டு கரையேறினோம்.திரும்பவும் பரிசலில் ஏறி ஏறின இடத்தில் இறங்கினோம்.
   [ஏண்டா இந்த தண்ணி கடலுக்குதான போகுது அது மட்டும் ஏன் உப்பா இருக்கு]

அதற்குள் வாங்கிக்கொடுத்திருந்த மீன் வறுவலாகவும்,குழம்பாகவும் உருவெடுத்திருந்தது.தண்ணீரில் போட்ட ஆட்டத்தால் செம பசி.சமைக்கும் இடத்துக்கு அருகில் சாப்பிட ஒதுக்கப்பட்டுள்ள இடம் இன்னும் கொஞ்சம்,இல்லை இல்லை நிறையவே பராமரிக்கலாம்.அதற்கு நுழைவுக்கட்டணம் ஐந்து ரூபாய் வேறு.நான் சைவ பட்சினி என்பதால் எனக்கு காரகுழம்பும்,ரசமும்.வாங்கி வந்த தயிர் பாக்கெட்டை நமது மூத்த மூதாதையார் ஒருவர் எடுத்துக்கொண்டு ஓடி விட்டார். தயிர் போச்சே என நொந்து கொண்டு சாப்பிட்டோம்.ஐந்து பேர் சாப்பிட்டதற்கு மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட 700 ரூபாய். 
                                               
                    [அட மீன் செத்தா கருவாடு...சாரி வறுவல் ]


சாப்பிட்டு விட்டு மெயின் அருவி வியூ பாயிண்ட்கு போனோம்.அதற்கு கட்டணம் ஐந்து ரூபாய்.அங்கே சில,ஸ்டில்ஸ் எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் சுற்றினோம்.அதன் பிறகு களைத்து போய் அறைக்கு திரும்பினோம்.காலையில் எழுந்து அவரவர் பேருந்துகளை பிடித்து கிளம்பினோம்.

          [நாங்க அஞ்சு பேரு எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது ]
               
சொல்ல(வேண்டிய) மறந்த சில விஷயங்கள்

ரோடு முழுக்க நிறைய மாடுகள் மேய்கின்றன.யாரையும் எதுவும் செய்வதில்லை என்றாலும் பார்த்தாலே பயத்தை வரவைக்கின்றன.போதாதற்கு,காகித ,பிளாஸ்டிக் கப்புகளை லபக்கென்று விழுங்குகின்றன.
                                      
                                 
    [ இந்தகோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் ]


உ.பா.பிரியர்கள் கவனத்திற்கு-ஒகேனக்கலில் டாஸ்மாக் கிடையாது.வெளியில் இருந்து எடுத்து வருபவர்களையும் அனுமதிப்பதில்லையாம்.ஆனால் கள்ளச்சந்தையில் விற்பனை அமோகமாக நடக்கிறது.


இந்த சமயங்களில் வெயில் ஜாஸ்தியாக இருக்கிறது.தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் சுரீர் என்கிறது.டிசம்பரில் நன்றாக இருக்குமாம்.

அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் முதலைப்பண்ணை ஒன்று இருக்கிறது.நாங்கள் போகவில்லை.நேரமிருந்தால் அதையும் ஒரு விசிட் அடிக்கலாம்.

ஒருநாள் போய் ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு வரலாம் ஒரு மீடியம் பட்ஜெட்டில்...


4 comments:

கேரளாக்காரன் said... Reply to comment

Next time kandippa poganum boss.... Aamaa meen taste nalla irunthucha illayaannu sollave illaye

கவி அழகன் said... Reply to comment

Supper anupava pathivu valthukkal

Unknown said... Reply to comment

யார் சொன்னது..தமிழ்நாரு ஓட்டல் இருக்கு,டாஸ்மாக் இருக்கு,பரிசல்ல அந்த பக்கம் வேணுங்கற சரக்கு வாங்கிக்கலாமே..

Anonymous said... Reply to comment

எங்களுக்கு தெரியாமல் நீங்க சங்கம்லாம் வச்சிருக்கீங்களா?...

நல்ல அனுபவம்...அடுத்த முறை முயற்சிக்கிறேன்...