Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Thursday, August 23, 2012

பல"சரக்கு"கடை-10 (23/08/2012)

2G மிஞ்சிட்டோம்ல





இந்தியா வளர்ந்து வரும் நாடுன்னு சரியாத்தான் சொல்றாங்க,அதை நிரூபிக்க நமது அரசியல்வாதிகள் ஆற்றும் தொண்டு,உழைப்பு அளப்பரியது,இதுவரை இந்திய ஊழல்களின் ராசாவாக இருந்த 2G ஊழலை மிஞ்ச செய்திருக்கின்றனர் நிலக்கரி ஊழல் மூலமாக கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடியாம்,2G 1.76 லட்சம் கோடி என்பதை இங்கே நினைவில் கொள்க.இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை காட்டுவதற்காகத்தானே தவிர வேறு ஏதும் உள்நோக்கமில்லை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.



தமிழகம் நெ.1

இதுவும் வளர்சியைப்பற்றிய ஒரு செய்திதான்.ஆனால் இந்த வளர்ச்சிகள் உகந்ததாக தெரியவில்லை.இது அதிர வைக்கும் வளர்ச்சி,கடந்த ஆண்டு இந்தியா மொத்தத்துக்கும் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்.இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.கிட்டத்தட்ட 15,500 பேர் பலியாகி உள்ளனர்.நாம மட்டும் தான் ரோட்டுல போறோம் என்ற மனநிலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கும் வரை நாம தான் கொஞ்சம்(நெறையவே) பயந்து பயந்து போகணும்.


ஆகாககாகா

கொஞ்ச நாளைக்கு முன்னால என்னோட மொபைல் நெட்வொர்க் ஏதோ ஒரு பேக் எனக்கே தெரியாம ஆக்டிவேட் செஞ்சுட அத டீ ஆக்டிவேட் செய்ய கஸ்டமர்கேர் கூட ஓரியாடிக்கிட்டு இருக்கும் போது மயக்கமடைய வைத்த ஒரு விஷயம் இது ,கணினியில் வரும் குரல் உங்கள் மொபைல் வேலை செய்யவில்லை என்றால் ஆறை அமுக்குங்கள் என்றது.


அம்மம்மா.....

""நூலகங்கள் நாட்டின் அறிவு களஞ்சியங்கள். கேடில் விழுச்செல்வமான கல்வியை முழுமையாக பெற வேண்டுமாயின், அதற்கு பெருந்துணையாக உள்ளது நூல் நிலையங்கள். ‘பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்து கட்டும் நம் மக்கள், படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று அண்ணா கூறுவார்."" இது நா சொன்னதில்லைங்க கொஞ்ச நாளைக்கு முன்னால அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டும் ,திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடைக்கு விட்டும் சாதனை புரிந்த அரசுக்கு சொந்தக்காரர்தான்.

HAPPY BIRTHDAY CHENNAI 



                             [ இத போடலன்னா சென்னைன்னு`நம்ப மாட்டாங்க]

சென்னைக்கு நேற்றைக்கு(AUG-22) 373-வது பிறந்தநாள்.கல்லூரிபடிப்புக்கு முன்னால் சிறு வயதில் ஒரே ஒரு முறை சென்னைக்கு போயிருக்கிறேன்.கல்லூரிபடிப்பு முடித்தவுடன் ஆண்டுக்கு மூன்று,நான்கு முறை போய் வருவதுண்டு,ஒவ்வொரு முறையும் ஏதாவது வியப்பூட்டும்,அதிர்வூட்டும்,மகிழ்வூட்டும்,நகைப்பூட்டும் உணர்வுகளை தந்திருக்கிறது.தமிழகத்தின்,தமிழர்களின்  தவிர்க்க முடியாத ஊர் சென்னை மேலும் பல்லாண்டு கால இத புகழ் உலகெங்கிலும் விரவித்திரிய வாழ்த்துகள்.

நம்மால் என்ன முடியும்?

பள்ளியில்  ஸ்ட்ரக்சர் இல்லாததால் தனது வாழ்வின் மீதி பகுதியை படுக்கையிலே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவன் லோஹித் அவர்களுக்கு நமது பதிவர்கள் சார்பில் உதவிக்கரம் நீட்ட முன்வந்து அதை செயல்படுத்த நமது பதிவர்கள் இரவுவானம் சுரேஷ் ,வீடு சுரேஷ்குமார் ஆகியோர்  அவரை நேரிலும் சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள்.மேலும் தகவல்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விணணப்பம் !!!


மதில் மேல் நிலைமை 


மிக தீவிரமாக,பிரமிக்கத்தக்க அளவில் ஏற்பாடாகி வருகிறது சென்னை உலகத்தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு.இதில் கலந்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்து இருந்தாலும்,பணிச்சூழல் நிச்சயமரதாக இருக்கிறது,ஆகவ்வே நண்பர்களே  வாப்பு கிடைத்தால்  நிச்சயம் என்னை  இணைத்துக்கொள்கிறேன்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-10 (23/08/2012)"

Monday, April 9, 2012

பல"சரக்கு"கடை-6(09/04/12)


சம்சாரம் அது மின்சாரம்



அது அப்போ மின்சாரமே இப்போ மின்சாரம்.மின்சாரம் இருக்கும் போது தான் ஷாக் அடிக்கும்,இப்போ இல்லாமலே ஷாக் அடிக்கப் போகுது.மக்கள் எல்லாம் அம்மா,தாயே எங்களுக்கு இலவசம் எதுவும் வேணாம்னு கை எடுத்துக்கும்பிடும் வரை அம்மாவின் அதிரடி விலைஉயர்வு அறிவிப்பு தொடரும் என தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வடிவேலு பாணியில் சொல்லனும்னா ஆணியே புடுங்க வேணாம்னு எல்லோரும் பேசிக்குறாங்களாம்.

வாக்கிங்கா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தி.மு.க வினருக்கும் நடைப்பயிற்சிக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ தெரியல.ஆலடி அருணா,கு.ப.கிருஷ்ணன் வரிசைல இப்போ திருச்சி ராமஜெயம்.இனி தி.மு.க. பிரமுகர்கள் நடைப்பெயற்சி செய்ய தயங்குவார்கள்.

மல்யுத்த மகாராணி



ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் இதுவரை மகளிர் பிரிவில் பங்கேற்றதில்லை.தந்த குறையை போக்கியிருக்கிறார் சகோதரி.கீதா.இதற்கான தகுதிச்சுற்றில் தங்கம் வென்று தனது ஒலிம்பிக் பயணத்திற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்து பதக்கப்பட்டியலில் இவரது பங்கு இடம்பெற வாழ்த்துவோம்.

கொசுவர்த்தி சுருள்

துவங்கியாச்சு பத்தாவதுக்கு பரிட்சை.நான் முதல் முதல்ல பாஸ்போர்ட் போட்டோ எடுத்தது பத்தாவது பப்ளிக் எக்ஸாம் ஹால்டிக்கெட்டுக்காக தான்.அந்த நினைவுகள் வந்து போகுது.அதிலும் ஒரு நண்பன் சாக்பீஸ் தூளை திருநீறாக வைத்துக்கொண்டது கொசுவர்த்தி சுருள் சுழன்றதில் வந்து போனது.அப்புறம் ஏதோ IPLலாம்,அதுவும் பத்தாவது பரிட்சை தொடங்குன அன்னிக்கே தொடங்கியிருக்காம்..

புரட்சிப்போராட்டம்



மக்களையெல்லாம் புரட்சிப்போராட்டம் நடத்தச்சொல்லி விழிப்புணர்வு(?)போராட்டம் நடத்தி வந்த நகைக்கடை அதிபர்களையே புரட்சிப்போராட்டம் நடத்த வைத்திருக்கிறது மத்திய அரசு.புரட்சி(!)போராட்டத்தின் பலனாக அரசு கொஞ்சம் பணிந்து வந்திருக்கிறதாம்,புரட்சியும் கொஞ்சம் தணிந்திருக்கிறது.

நம்ம தலைவர் பாணியில் ஒரு ட்வீட்

                    [ஒரு பூ பத்தாதே சகோதரி]

உயிர் தோழியே,உடன் பிறவா சகோதரியே,நீங்கள் என்னை வீட்டை விட்டு தூக்கிப்போட்டாலும் நான் உங்கள் காலடியிலேயே விழுந்து கிடப்பேன்,நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம்.


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-6(09/04/12)"

Thursday, February 9, 2012

பல "சரக்கு"கடை 2


                       

கட்டாய விடுப்பு

வணக்கம் நண்பர்களே,நலமா?ஆஸ்திரேலியா போயிருக்குற இந்தியா டீம் மாதிரி ஆகிடுச்சு என் நிலைமை.பி.எஸ்.என்.எல் புண்ணியத்தில் பத்து நாள் பதிவுலகத்துக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது.ஊழியர்களின் சுறுசுறுப்பான பணியால் இப்போது இணைப்பு கிடைத்துவிட்டது.வந்து பார்த்தால் பிளாக்கரில் டாட்.காம் டாட்.இன்னாக மாறி ஏதேதோ நடந்திருக்கிறது.பிளாக்கர்நண்பன் உதவியுடன் ஒட்டுப்பட்டைகளை சரிசெய்தேன்.(நன்றி நண்பரே)


வெட்டு இல்லேன்னா வெட்டு

                                
எந்திரன் படத்துல VMC ஹனீபா சிட்டி ரோபாகிட்ட வெட்டுய்யா.ம்.கையில தான் அப்படிம்பாரே அப்படி கொஞ்ச நாளா நடந்துக்கிட்டு இருக்கு புதுச்சேரியில சில ரவுடிகள் கடை நடத்துபவர்கள்,தொழிலதிபர்கள்,தனியார் ஒயின்ஸ் அதிபர்கள் இவங்களுக்கெல்லாம் போன் போட்டு மாமூல் கேட்டு மிரட்டுவது தினசரி செய்தியாகிறது.அப்படி மறுத்த ஒரு கடை ஓனருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.ஒரு பாரில் கொள்ளையும் நடந்துள்ளது.இது கூட பரவாயில்லை ஒரு கடை ஓனருக்கு போன் பண்ண ரவுடி ஜெயில்ல இருக்காராம்.

அப்பவும் இப்பவும்

படிக்கும்,பார்க்கும் சில விஷயங்கள் பல வருசங்களுக்கு அப்பறமும் அப்போதைய சூழ்நிலைக்கு பொருந்தும்.அப்படி ஞாபகத்துக்கு வந்த ஒரு விஷயம் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி விகடன்லயோ,குமுதத்திலோ படிச்சது.செய்தி-1999  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெப்சிதான் பிரதான ஸ்பான்சர் கமெண்ட்- அப்ப பாரதிராஜா மேட்ச் பாக்கமாட்டாருனு சொல்லுங்க.

புதிய புயல்கள்
                           
                           

கடந்த சில ஆண்டுகளாக டென்னிசில் வீசிக்கொண்டிருந்த பெடரர்,நடால் புயல்களை சற்றே சீற்றம் குறையச்செய்து எழுச்சி கொண்டிருக்கும் நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக(லாரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக) தேர்வாகியுள்ளார்.கடந்த சீசனில் மட்டும் கிட்டத்தட்ட 70 போட்டிகளில் வென்றிருக்கிறார்.ஆறோ,ஏழோ போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்து இந்த மகுடத்தை சூடியிருக்கிறார் இந்த 24 வயதுப்புயல்.போட்டியில் மெஸ்ஸியும்,உசேன் போல்ட்டும் சேர்த்து ஆறு பேர்.பெண்கள் பிரிவில் மகுடம் சூடியிருப்பவர் விவியன் செரியோத் என்ற கென்ய தடகள வீராங்கனை.டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா வும் களத்திலிருந்த அறுவரில் ஒருவர்.

வொர்த்தா இல்லையா ?

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதினைஞ்சு வருஷம் பணியாற்றியப்புறம் கவர்மெண்டு அவங்க செயல்பாட்டை அக்குவேறா,ஆணி வேரா ஆராய்ஞ்சு அவங்க செயல்பாடு வொர்த்தா இல்லையான்னு பாத்துட்டு வொர்த் இல்லேன்னா அவங்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்போறதா அறிவிச்சிருக்காங்க.ம் நம்ம ஏக்கம் எல்லாம் இந்த கட்டாய வி.ஆர்.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தானா?

செல்லில் சிக்கியது.



சிலந்தியின் வீடு
செடிக்குப்போர்வை


நன்றி

தானே முன் வரலாமே என பதிவின் மூலம் அறிவித்திருந்த வேண்டுகோளை விடுத்திருந்தேன்.சில நண்பர்கள் விகடனுக்கு நேரடியாகவும்,சிலர் அரசுக்கும்,சில நண்பர்கள் இணைந்து களப்பணி ஆற்றி வருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.காணாமல் போன கனவுகள் ராஜி மேடம் ரூ.1000அனுப்பியிருந்தார்.மொத்தமாக ரூ.2500 விகடனுக்கு அனுப்பி வைத்தேன்.ஆதரவளித்த உதவிய அனைவருக்கும் நன்றி.




மேலும் வாசிக்க "பல "சரக்கு"கடை 2"