Thursday, February 9, 2012

பல "சரக்கு"கடை 2


                       

கட்டாய விடுப்பு

வணக்கம் நண்பர்களே,நலமா?ஆஸ்திரேலியா போயிருக்குற இந்தியா டீம் மாதிரி ஆகிடுச்சு என் நிலைமை.பி.எஸ்.என்.எல் புண்ணியத்தில் பத்து நாள் பதிவுலகத்துக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது.ஊழியர்களின் சுறுசுறுப்பான பணியால் இப்போது இணைப்பு கிடைத்துவிட்டது.வந்து பார்த்தால் பிளாக்கரில் டாட்.காம் டாட்.இன்னாக மாறி ஏதேதோ நடந்திருக்கிறது.பிளாக்கர்நண்பன் உதவியுடன் ஒட்டுப்பட்டைகளை சரிசெய்தேன்.(நன்றி நண்பரே)


வெட்டு இல்லேன்னா வெட்டு

                                
எந்திரன் படத்துல VMC ஹனீபா சிட்டி ரோபாகிட்ட வெட்டுய்யா.ம்.கையில தான் அப்படிம்பாரே அப்படி கொஞ்ச நாளா நடந்துக்கிட்டு இருக்கு புதுச்சேரியில சில ரவுடிகள் கடை நடத்துபவர்கள்,தொழிலதிபர்கள்,தனியார் ஒயின்ஸ் அதிபர்கள் இவங்களுக்கெல்லாம் போன் போட்டு மாமூல் கேட்டு மிரட்டுவது தினசரி செய்தியாகிறது.அப்படி மறுத்த ஒரு கடை ஓனருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.ஒரு பாரில் கொள்ளையும் நடந்துள்ளது.இது கூட பரவாயில்லை ஒரு கடை ஓனருக்கு போன் பண்ண ரவுடி ஜெயில்ல இருக்காராம்.

அப்பவும் இப்பவும்

படிக்கும்,பார்க்கும் சில விஷயங்கள் பல வருசங்களுக்கு அப்பறமும் அப்போதைய சூழ்நிலைக்கு பொருந்தும்.அப்படி ஞாபகத்துக்கு வந்த ஒரு விஷயம் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி விகடன்லயோ,குமுதத்திலோ படிச்சது.செய்தி-1999  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெப்சிதான் பிரதான ஸ்பான்சர் கமெண்ட்- அப்ப பாரதிராஜா மேட்ச் பாக்கமாட்டாருனு சொல்லுங்க.

புதிய புயல்கள்
                           
                           

கடந்த சில ஆண்டுகளாக டென்னிசில் வீசிக்கொண்டிருந்த பெடரர்,நடால் புயல்களை சற்றே சீற்றம் குறையச்செய்து எழுச்சி கொண்டிருக்கும் நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராக(லாரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக) தேர்வாகியுள்ளார்.கடந்த சீசனில் மட்டும் கிட்டத்தட்ட 70 போட்டிகளில் வென்றிருக்கிறார்.ஆறோ,ஏழோ போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்து இந்த மகுடத்தை சூடியிருக்கிறார் இந்த 24 வயதுப்புயல்.போட்டியில் மெஸ்ஸியும்,உசேன் போல்ட்டும் சேர்த்து ஆறு பேர்.பெண்கள் பிரிவில் மகுடம் சூடியிருப்பவர் விவியன் செரியோத் என்ற கென்ய தடகள வீராங்கனை.டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா வும் களத்திலிருந்த அறுவரில் ஒருவர்.

வொர்த்தா இல்லையா ?

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதினைஞ்சு வருஷம் பணியாற்றியப்புறம் கவர்மெண்டு அவங்க செயல்பாட்டை அக்குவேறா,ஆணி வேரா ஆராய்ஞ்சு அவங்க செயல்பாடு வொர்த்தா இல்லையான்னு பாத்துட்டு வொர்த் இல்லேன்னா அவங்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்போறதா அறிவிச்சிருக்காங்க.ம் நம்ம ஏக்கம் எல்லாம் இந்த கட்டாய வி.ஆர்.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தானா?

செல்லில் சிக்கியது.சிலந்தியின் வீடு
செடிக்குப்போர்வை


நன்றி

தானே முன் வரலாமே என பதிவின் மூலம் அறிவித்திருந்த வேண்டுகோளை விடுத்திருந்தேன்.சில நண்பர்கள் விகடனுக்கு நேரடியாகவும்,சிலர் அரசுக்கும்,சில நண்பர்கள் இணைந்து களப்பணி ஆற்றி வருவதாகவும் சொல்லியிருந்தார்கள்.காணாமல் போன கனவுகள் ராஜி மேடம் ரூ.1000அனுப்பியிருந்தார்.மொத்தமாக ரூ.2500 விகடனுக்கு அனுப்பி வைத்தேன்.ஆதரவளித்த உதவிய அனைவருக்கும் நன்றி.
28 comments:

K.s.s.Rajh said... Reply to comment

வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

அந்த பாரதிராஜா கமண்ட் பிரமாதம்

கோகுல் said... Reply to comment

@K.s.s.Rajh

வணக்கம் பாஸ்,நலம்.
இப்ப இருக்குற சூழலுக்கு ஞாபகம் வந்துச்சு.அந்த கமெண்ட் அதான்.

கோவை நேரம் said... Reply to comment

பல சரக்கு கடையில சரக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு போல ....

rajamelaiyur said... Reply to comment

நல்ல சுவையான சரக்குகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

Anonymous said... Reply to comment

நல்ல கதம்பம் கோகுல்...ஜோகர் எனக்கும் பிடித்த ஆட்டக்காரர்...

CS. Mohan Kumar said... Reply to comment

Interesting collection.

Good to know about ur social commitment for Thane cylone

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

நல்ல பதிவு ! நன்றி கோகுல் !

நிரூபன் said... Reply to comment

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?

கூகிள் மாற்றமும், தங்களின் இணைய இணைப்பு விவகாரமும் - வேதனையான விடயம்,

புதுச்சேரி ரவுடிங்க மேட்டர்: கொடுமை! தட்டிக்கேட்க போலீஸ் இருப்பாங்க என்றால் அவங்களுக்கும் மாமூல் கொடுப்பாங்க என்று நினைக்கிறேன்.

அப்பவும், இப்பவும். செம டைம்மிங் காமெடி.

விகடன் உதவி: நல்ல முயற்சி,

சுவையான தொகுப்பினை தந்திருக்கிறீங்க கோகுல்
நன்றி.

தனிமரம் said... Reply to comment

வணக்கம் கோகுல்.
நலமா நீண்ட இடைவெளி என்பது போல இருக்கு. 
புதுச்சேரி நிலையை புட்டுவைத்தும் பெப்சியில் கமடி செய்தும் பதிவு தந்திருக்கும் முறை பிடித்திருக்கு.

தனிமரம் said... Reply to comment

வணக்கம் கோகுல்.
நலமா நீண்ட இடைவெளி என்பது போல இருக்கு. 
புதுச்சேரி நிலையை புட்டுவைத்தும் பெப்சியில் கமடி செய்தும் பதிவு தந்திருக்கும் முறை பிடித்திருக்கு.

பால கணேஷ் said... Reply to comment

சரக்குகள் ரசிக்க வைத்தன கோகுல்! அதிலும் அந்த சிலந்தி வலைப் படம்... அருமை! வெட்டு சீன் நானும் மிக ரசித்த ஒன்று! பாரதிராஜா பற்றி நீங்கள் அடித்த கமெண்ட்... ஹா! ஹா!

மகேந்திரன் said... Reply to comment

வணக்கம் நண்பரே,
சிறு இடைவெளிக்குப் பின்னர் தங்களை சந்திப்பதில்
மகிழ்ச்சி.
வந்ததும் மணக்க மணக்க பலசரக்குகளை
அள்ளிக் கொடுத்தமை நன்று.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

நம்ம ஏக்கம் எல்லாம் இந்த கட்டாய வி.ஆர்.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் தானா?

அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

கோகுல் said... Reply to comment

கோவை நேரம் said...
பல சரக்கு கடையில சரக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு போல ....
//
கம்மியா இருக்குன்னு சொல்றீங்களோ?

கோகுல் said... Reply to comment

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல சுவையான சரக்குகள் .. தொடர்ந்து கலக்குங்கள்
//
நிச்சயம்.நண்பரே.

கோகுல் said... Reply to comment

ரெவெரி said...
நல்ல கதம்பம் கோகுல்...ஜோகர் எனக்கும் பிடித்த ஆட்டக்காரர்...
//
வாங்க நண்பரே,நலமா?
அவர் இந்த சீசனிலும் கலக்குவார் என நினைக்கிறேன்.

கோகுல் said... Reply to comment

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல பதிவு ! நன்றி கோகுல் !
நன்றி,நண்பரே.

கோகுல் said... Reply to comment

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?

கூகிள் மாற்றமும், தங்களின் இணைய இணைப்பு விவகாரமும் - வேதனையான விடயம்,

புதுச்சேரி ரவுடிங்க மேட்டர்: கொடுமை! தட்டிக்கேட்க போலீஸ் இருப்பாங்க என்றால் அவங்களுக்கும் மாமூல் கொடுப்பாங்க என்று நினைக்கிறேன்.

அப்பவும், இப்பவும். செம டைம்மிங் காமெடி.

விகடன் உதவி: நல்ல முயற்சி,

சுவையான தொகுப்பினை தந்திருக்கிறீங்க கோகுல்
நன்றி.//

வணக்கம் பாஸ்,முதலில் என் ஞாபக மறதிக்காக வருந்துகிறேன்.
தானே முன் வரலாமே என்ற பதிவை உங்கள் தளத்தில் வெளியிட்டியிருந்தீர்கள் அதனை சுட்டிக்காட்ட மறந்து விட்டேன்.

கோகுல் said... Reply to comment

தனிமரம் said...
வணக்கம் கோகுல்.
நலமா நீண்ட இடைவெளி என்பது போல இருக்கு.
புதுச்சேரி நிலையை புட்டுவைத்தும் பெப்சியில் கமடி செய்தும் பதிவு தந்திருக்கும் முறை பிடித்திருக்கு.
//
பெப்சி கமெண்ட் நான் படித்தது தான்.பகிர்ந்திருக்கிறேன்.

கோகுல் said... Reply to comment

கணேஷ் said...
சரக்குகள் ரசிக்க வைத்தன கோகுல்! அதிலும் அந்த சிலந்தி வலைப் படம்... அருமை! வெட்டு சீன் நானும் மிக ரசித்த ஒன்று! பாரதிராஜா பற்றி நீங்கள் அடித்த கமெண்ட்... ஹா! ஹா!
//
சார்,அது எனது கமெண்ட் அல்ல நான் படித்த இதழில் வந்தது தான் இன்றைய சூழலுக்கு பொருந்தியிருப்பதால் பகிர்ந்திருக்கிறேன்.

கோகுல் said... Reply to comment

மோகன் குமார் said...
Interesting collection.

Good to know about ur social commitment for Thane cylone
//
வாழ்த்துக்கு நன்றி.

கோகுல் said... Reply to comment

மகேந்திரன் said...
வணக்கம் நண்பரே,
சிறு இடைவெளிக்குப் பின்னர் தங்களை சந்திப்பதில்
மகிழ்ச்சி.
வந்ததும் மணக்க மணக்க பலசரக்குகளை
அள்ளிக் கொடுத்தமை நன்று.//

நன்றி நண்பரே,ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு.

கோகுல் said... Reply to comment

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம்.

சாதாரணமானவள் said... Reply to comment

செல்லில் சிக்கியது சூப்பர். வலையை வலைதளத்துல போட்டுடீங்களா? நல்லா இருக்கு

Admin said... Reply to comment

அனைத்தும் அருமை தோழர்.உண்மையில் பலசரக்கு கடைதான்.

நாய் நக்ஸ் said... Reply to comment

நல்ல பல சரக்கு கடை...

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said... Reply to comment

நலமா கோகுல்!
நீண்ட இடைவெளி!
பல சரக்கு விற்பனை அருமை!

புலவர் சா இராமாநுசம்