Thursday, February 23, 2012

தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்


ஸ்டாலினும்,விஜயகாந்தும்,கார்த்தி சிதம்பரமும் கடந்த வாரம் விமானப்பயணத்தில் சந்தித்த போது நடுவானில் நடந்தது என்ன?ஒரு கற்பனை ரிப்போர்ட்......

                       
விமானப்பணிப்பெண் ஜூனியர் ப.சி.யிடம்(கார்த்தி சிதம்பரம்) வந்து,சார் இதே பிளைட்ல தளபதியும் வந்திருக்காரு அப்படின்னாங்க.இளைய தளபதியா,புரட்சிதளபதியா இல்ல சின்ன தளபதியா எந்த தளபதி அப்படின்னு கேட்டாரு நம்ம ஜூனியர் ப.சி.ஜெர்க்கான பணிப்பெண்(இவரு சின்ன பகவதி க்ரூப் போல அப்படின்னு நெனைச்சுக்கிட்டு)சார் கலைஞரின் இளைஞன், திமுக இளைஞரணி(!) பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வந்திருக்காரு சார் அப்படின்னாங்க.

ஓ!அப்ப நிச்சயமா அவர சந்திச்சே ஆகணுமே அப்படின்னு கிளம்புறாரு.(கண்டிப்பா இத்தனை வயசுலயும் இளைஞரணியில் இருப்பது பற்றி கேட்டு தெளிவு பெற்றுவிட வேண்டுமென்று முடிவுடன்.பின்னே நம்ம இளைய தளபதிக்கே நோ சொல்லிட்டாரே ராகுல்ஜி)

ஜூ.ப.சி—வணக்கம் தளபதி,நலமா?

தளபதி – (யாரு இவரு வாண்டடா வந்து என்ட்ரி ஆகுறாரு,ஒரு வேளை இளைஞரணி பொறுப்பு கேட்டு பாலோ பண்றரோன்னு நினைச்சுக்கிட்டு)இளைஞரணி பொறுப்பாளர் பேர் தெரியுமா?இளைஞரணியில் சேர எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும்?

ஜூ.ப.சி—சார்,சார் என்னை தெரியலையா நான் தான் கார்த்தி.

தளபதி-ஓ!வாங்க கார்த்தி,நல்லாயிருக்கீங்களா?அண்ணன் சூர்யா,அப்பா சிவகுமார் எல்லாம் எப்படி இருக்காங்க?கேட்டதா சொல்லுங்க.அப்புறம் போன படத்துல பாத்தத விட கொஞ்சம் வெயிட் போட்டுட்ட மாதிரி இருக்கு.அடுத்த படத்துக்காகவா?

ஜூ.ப.சி.—(கிழிஞ்சது)தளபதி நான் கார்த்தி சிதம்பரம்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மைந்தன்.

தளபதி—ஹா,ஹா, வாங்க தம்பி,நல்லாருக்கீங்களா?அப்பா எப்படியிருக்காரு?டெல்லியில குண்டு வெடிச்சதை யாரோ திட்டமிட்டு செய்த சதின்னும் குண்டு  வைச்சது நன்கு பயிற்சி பெற்ற பயங்கர தீவிரவாதியா இருப்பார்னு கண்டுபிடிச்சிட்டாராமே?எப்படி இப்படியெல்லாம்?பெரிய விஞ்ஞானியா இருப்பாரு போல,அவருக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.
இருவரும் பேசிக்கொண்டிருக்க பணிப்பெண் இவர்களிடம் வந்து சார்,ரெண்டு சீட் தள்ளி கேப்டன் உக்காந்து இருக்காரு அப்படின்னாங்க(ஜூ.பசி.ஏதோ சொல்ல வாயெடுக்க ஐயோ சார் கேப்டன் தோனி இல்ல கேப்டன் விஜயகாந்த் அப்படின்னு தெளிவா சொல்லிட்டாங்க)இருவரும் கேப்டன் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்

கேப்டன் அங்கே நாக்கைத்துறுத்தி,கையை நீட்டி,மடக்கி கையில் வைத்திருந்த பேப்பரில் இருந்த வசனங்களை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.இருவரும் டரியலாகி பதுங்க பார்த்து விடுகிறார் கேப்டன்.
                      

கேப்டன்-யார்ரா அது அங்கே,புயலடிச்சுகூட பொழச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் கிடையாது வாங்க இங்கே,

இருவரும்-கேப்டன் நாங்கதான்,சட்டமன்றத்தில் உங்க அரங்கேற்றத்தை பார்த்து பிரமிச்சு போய் பாராட்டு சொல்ல வந்தோம்.

கேப்டன்- வாங்க வாங்க,நானும் நாகர்கோவில் சட்டமன்ற இடைதேர்தல் கூட்டணி பத்தி உங்களை சந்திச்சு பேசனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்,வந்துட்டீங்க.(கார்த்தி கேப்டன் அது நாகர்கோவில் அல்ல சங்கரன் கோவில்னு சொல்லவர தளபதி அவரது தொடையில் கிள்ளி எச்சரிக்கிறார்..கேப்டனின் வேட்பாளர் நிலைமை நினைவுக்கு வர கமுக்கமாகிறார் கார்த்தி )

தளபதி-போன சட்டமன்ற தேர்தல்ல அம்மா தயவால தான் உங்களுக்கு இத்தனை சீட்டு ஜெயிச்சிங்கன்னு சொல்லியிருக்காங்களே?
கேப்டன்-மக்கலு(!)க்கு தெரியும் யார் தயவால யார் ஜெயிச்சாங்கன்னு.என்னோட பிரச்சார யுக்தியை பார்த்த வாக்காளர்கள் எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைத்தார்கள் இதை தவிர வேறு காரணமில்லை.

ஜூ.ப.சி-வர்ற நாடாளுமன்ற இடைதேர்தல்ல(தளபதி-ஐயோ பாவம் இவரும் கன்பியூஸ் ஆகிட்டாரே)பொது வேட்பாளர் நிறுத்துவது பத்தி உங்க கருத்து என்ன?

கேப்டன்- அதெல்லாம் முடியாது,யாருடனும் இனி கூட்டணி இல்லை நான் ஆரம்பத்தில் சொன்னது போல மக்கலுடன் தான் இனி கூட்டணி.வேண்டுமானால்,யாருக்காவது திராணிஇருந்தால் ஒபாமாவின் ஆட்சியை இங்கே கொண்டு வர சொல்லுங்கள் அப்போது காட்டுகிறேன் நான் யாரென்று.....
                           
மறுபடியும் கேப்டனின் கண்கள் சிவக்க ஆரமிக்கிறது,நாக்கைத்துருத்த ஆரம்பிக்கிறார் கையைத்தூக்கி ஏதோ சொல்ல ஆரமிக்க விமான நிலையம் வந்துவிடுகிறது.விழுந்தடித்து ஓடுகிறார்கள் தளபதியும்,ஜூனியர்.ப.சியும்......

24 comments:

கோகுல் said... Reply to comment

போன வாரமே வந்திருக்க வேண்டிய போஸ்ட் இது.நெட் கட் ஆகி நட்டு கழண்டதால் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

ADMIN said... Reply to comment

நல்ல காமெடி..

ADMIN said... Reply to comment

நீ எப்போப் போட்டாலும் பதிவு இப்படித்தானே இருக்கும்..!! ஹி..ஹி..!!! நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்..!!

உண்மையாகவே நல்லதொரு கற்பனை மிகுந்த அருமையான பதிவு கோகுல்.. அருமை.. தொடர வாழ்த்துகள்..!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

கலகல் பகிர்வு..

arasan said... Reply to comment

செம நக்கல் ...

வெளங்காதவன்™ said... Reply to comment

Adi. Vidaathe.... Thuraththu...

Kuththu kuththu...

:-)

வெளங்காதவன்™ said... Reply to comment

Adi. Vidaathe.... Thuraththu...

Kuththu kuththu...

:-)

முத்தரசு said... Reply to comment

ஹா ஹா ஹா நல்ல கற்பனை போங்க

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

குசும்பு ரொம்ப அதிகம் உங்களுக்கு!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

த ம 1

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

பதிவும் நீங்களே போட்டுக்குங்க, மொத கமெண்டும் நீங்களே போட்டுக்குங்க...!

இதுக்கு கேப்டனே தேவலாம் போல!

சசிகுமார் said... Reply to comment

இந்த ஊரு இன்னுமா நம்மள நம்புது..ஹீ ஹீ கேனப் பயலுக #ACF Leader

Admin said... Reply to comment

ம்.கற்பனை அருமை அருமை..

மகேந்திரன் said... Reply to comment

கற்பனையில் தீட்டிய காவியம்..
உண்மையிலேயே இப்படித்தான்
நடந்திருக்குமோ..???!!!!

தினேஷ்குமார் said... Reply to comment

ஆஹா ....

தனிமரம் said... Reply to comment

சிரிப்பு வெடிதான் ஜொல்லு அதிகம் பாஸ்க்கு!

rajamelaiyur said... Reply to comment

/இளைஞரணியில் சேர எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும்?
//

ஸ்டாலின் வயதை விட குறைவா இருக்கணும்

rajamelaiyur said... Reply to comment

அதிரடி காமெடி

rajamelaiyur said... Reply to comment

இன்று

எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...

Unknown said... Reply to comment

கலக்கல்! கற்பனை!அருமை!

சா இராமாநுசம்

ராஜி said... Reply to comment

நல்ல கற்பனை வளம்தான் உங்களுக்கு

Yoga.S. said... Reply to comment

வணக்கம் கோகுல்!///கோகுல் said...

போன வாரமே வந்திருக்க வேண்டிய போஸ்ட் இது.நெட் கட் ஆகி நட்டு கழண்டதால் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.//நட்டு கழண்ட தாலன்னா ஒ.கே!

Unknown said... Reply to comment

ஏன்யா மாப்ள பய புள்ளைக்கு அங்கயும் சரக்குல மிக்ஸிங் பிராப்ளமோ!

NAGARJOON said... Reply to comment

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Electro chlorinator Manufacturers
Electro Chlorinators
Electrochlorination skid
Electrochlorinator
Sodium Hypochlorite Generator
Sodium Hypochlorite Generation
On site Sodium Hypochlorite Generator
On site Sodium Hypochlorite Generation
Electrochlorination
Chlorinator