Thursday, August 23, 2012

பல"சரக்கு"கடை-10 (23/08/2012)

2G மிஞ்சிட்டோம்ல

இந்தியா வளர்ந்து வரும் நாடுன்னு சரியாத்தான் சொல்றாங்க,அதை நிரூபிக்க நமது அரசியல்வாதிகள் ஆற்றும் தொண்டு,உழைப்பு அளப்பரியது,இதுவரை இந்திய ஊழல்களின் ராசாவாக இருந்த 2G ஊழலை மிஞ்ச செய்திருக்கின்றனர் நிலக்கரி ஊழல் மூலமாக கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடியாம்,2G 1.76 லட்சம் கோடி என்பதை இங்கே நினைவில் கொள்க.இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை காட்டுவதற்காகத்தானே தவிர வேறு ஏதும் உள்நோக்கமில்லை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.தமிழகம் நெ.1

இதுவும் வளர்சியைப்பற்றிய ஒரு செய்திதான்.ஆனால் இந்த வளர்ச்சிகள் உகந்ததாக தெரியவில்லை.இது அதிர வைக்கும் வளர்ச்சி,கடந்த ஆண்டு இந்தியா மொத்தத்துக்கும் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்.இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.கிட்டத்தட்ட 15,500 பேர் பலியாகி உள்ளனர்.நாம மட்டும் தான் ரோட்டுல போறோம் என்ற மனநிலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கும் வரை நாம தான் கொஞ்சம்(நெறையவே) பயந்து பயந்து போகணும்.


ஆகாககாகா

கொஞ்ச நாளைக்கு முன்னால என்னோட மொபைல் நெட்வொர்க் ஏதோ ஒரு பேக் எனக்கே தெரியாம ஆக்டிவேட் செஞ்சுட அத டீ ஆக்டிவேட் செய்ய கஸ்டமர்கேர் கூட ஓரியாடிக்கிட்டு இருக்கும் போது மயக்கமடைய வைத்த ஒரு விஷயம் இது ,கணினியில் வரும் குரல் உங்கள் மொபைல் வேலை செய்யவில்லை என்றால் ஆறை அமுக்குங்கள் என்றது.


அம்மம்மா.....

""நூலகங்கள் நாட்டின் அறிவு களஞ்சியங்கள். கேடில் விழுச்செல்வமான கல்வியை முழுமையாக பெற வேண்டுமாயின், அதற்கு பெருந்துணையாக உள்ளது நூல் நிலையங்கள். ‘பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்து கட்டும் நம் மக்கள், படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று அண்ணா கூறுவார்."" இது நா சொன்னதில்லைங்க கொஞ்ச நாளைக்கு முன்னால அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டும் ,திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடைக்கு விட்டும் சாதனை புரிந்த அரசுக்கு சொந்தக்காரர்தான்.

HAPPY BIRTHDAY CHENNAI                              [ இத போடலன்னா சென்னைன்னு`நம்ப மாட்டாங்க]

சென்னைக்கு நேற்றைக்கு(AUG-22) 373-வது பிறந்தநாள்.கல்லூரிபடிப்புக்கு முன்னால் சிறு வயதில் ஒரே ஒரு முறை சென்னைக்கு போயிருக்கிறேன்.கல்லூரிபடிப்பு முடித்தவுடன் ஆண்டுக்கு மூன்று,நான்கு முறை போய் வருவதுண்டு,ஒவ்வொரு முறையும் ஏதாவது வியப்பூட்டும்,அதிர்வூட்டும்,மகிழ்வூட்டும்,நகைப்பூட்டும் உணர்வுகளை தந்திருக்கிறது.தமிழகத்தின்,தமிழர்களின்  தவிர்க்க முடியாத ஊர் சென்னை மேலும் பல்லாண்டு கால இத புகழ் உலகெங்கிலும் விரவித்திரிய வாழ்த்துகள்.

நம்மால் என்ன முடியும்?

பள்ளியில்  ஸ்ட்ரக்சர் இல்லாததால் தனது வாழ்வின் மீதி பகுதியை படுக்கையிலே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவன் லோஹித் அவர்களுக்கு நமது பதிவர்கள் சார்பில் உதவிக்கரம் நீட்ட முன்வந்து அதை செயல்படுத்த நமது பதிவர்கள் இரவுவானம் சுரேஷ் ,வீடு சுரேஷ்குமார் ஆகியோர்  அவரை நேரிலும் சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள்.மேலும் தகவல்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விணணப்பம் !!!


மதில் மேல் நிலைமை 


மிக தீவிரமாக,பிரமிக்கத்தக்க அளவில் ஏற்பாடாகி வருகிறது சென்னை உலகத்தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு.இதில் கலந்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்து இருந்தாலும்,பணிச்சூழல் நிச்சயமரதாக இருக்கிறது,ஆகவ்வே நண்பர்களே  வாப்பு கிடைத்தால்  நிச்சயம் என்னை  இணைத்துக்கொள்கிறேன்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

பல தகவல்கள்... பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்... நன்றி...

K.s.s.Rajh said... Reply to comment

வணக்கம் பாஸ் எப்படி சுகம்

////சென்னைக்கு நேற்றைக்கு(AUG-22) 373-வது பிறந்தநாள்.////

ஆச்சரிய தகவல் நன்றி பாஸ்

CS. Mohan Kumar said... Reply to comment

கோகுல்; ஞாயிறு தானே ! அன்னிக்கு என்ன அலுவலக வேலை? கல்யாணம் ஆகியும் நிறைய மாசம் ஆகிடுச்சு. அதனால் சாக்கு போக்கு சொல்லாமல் விழாவுக்கு வரணும்

Unknown said... Reply to comment

பல"சரக்கு" கடையில் வழக்கம் போல் அனைத்து தகவல்களும் டாப்பு தல!

தமிழகம் நெ.1 மின்வெட்டுல தான் இருக்கும் என நினைச்சேன், சாலை விபத்து இறப்பில் என்பது அதிர்சியான தகவல்!

கூடல் பாலா said... Reply to comment

அருமை!...இந்த மொபைல் நெட்ஒர்க் காரங்கள நெனச்சா...

Unknown said... Reply to comment

தமிழகம் அத்தனையிலும் முதலிடம் பிடிக்கும்.தமிழர்களாச்சே!நாம் இருக்கும் இடமெல்லாம் சிறப்பு!

Unknown said... Reply to comment

பல்வேறு தகவல்கள் பற்றிய அலசல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி!

"அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

சென்னை பித்தன் said... Reply to comment

சூப்பர் மார்க்கெட்!

செங்கோவி said... Reply to comment

//மோகன் குமார் said... Reply to comment

கோகுல்; ஞாயிறு தானே ! அன்னிக்கு என்ன அலுவலக வேலை? கல்யாணம் ஆகியும் நிறைய மாசம் ஆகிடுச்சு. அதனால் சாக்கு போக்கு சொல்லாமல் விழாவுக்கு வரணும்
//

அவர் இன்னும் புதுமாப்ளை தாம்யா..விடுங்கய்யா, பாவம்!

பழூர் கார்த்தி said... Reply to comment

இன்னும் 3G, 4G யில் எல்லாம், இதை தூக்கி அடிக்கக் கூடிய ஊழல் சாதனை படைக்கப் படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

சினேகன்அசோக் said... Reply to comment

பதிவு அருமை. பதிவர் விழாவில் சந்திப்போம்.

r.v.saravanan said... Reply to comment

வணக்கம் கோகுல் தங்களை பதிவர் சந்திப்பில் கண்டதில் நண்பரானதில் மகிழ்ச்சி

Anonymous said... Reply to comment

techniques - they are here. If you want sophisticated his andMysterys pick up lines and routinesthat women have heard [url=http://www.hotelshelter.com/rolex.htm]http://www.hotelshelter.com/rolex.htm[/url] getting your hands into a woman hair as early on in the game as you is because theyre just as passionate about what youre doing [url=http://www.hotelshelter.com/louisvuitton.htm]人気 ルイヴィトン 財布[/url] an American stand-up comedian and television host. He currently together as well as Mr. L. Rx. and although there is a lot of [url=http://www.hotelshelter.com/christianlouboutin.htm]Christian Louboutin sale[/url] when trying to get a womans interest is compliment her. He get your foot in the door. Women are looking for a confident, [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックス時計[/url] telling her how hard you try, etc. These are just a few of the Sometimes under provocation, David Boreanaz is so short tempered [url=http://www.hotelshelter.com/louisvuitton.htm]ヴィトン 財布[/url] answer is: Dont get into this particular situation in the FIRST dedicated to him in May of 1959 to honor one of Tennessees most
a regular guest on The Bob & Tom Show. He most recently played yourself with women who arent ATTRACTED to you, then its going [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックス時計[/url] July 11, 2008 are: Double your Dating 12,987 Dating To product and his Dating Guru Interview series on CDs that come [url=http://www.hotelshelter.com/christianlouboutin.htm]cheap Christian Louboutin[/url] Relating 43,381 The Seduction Chronicles 52,287 Style Life against her neck, his mouth moving in Lu Sheng Su pale skin smooth [url=http://www.hotelshelter.com/louisvuitton.htm]ルイヴィトン バッグ[/url] boxoffice. It was the third highest grosser of the year. However, prime still inside the "Crash Crash to wash just about to turn [url=http://www.hotelshelter.com/christianlouboutin.htm]cheap Christian Louboutin[/url] Taobao Taobao Taobao Women summer new skirt summer new Taobao solutions that will probably hone your skills in managing your [url=http://www.hotelshelter.com/rolex.htm]http://www.hotelshelter.com/rolex.htm[/url] perspective. Because I think its different. We still have lots Tennessee fishing license. You can fish anywhere on the lake from