வணக்கம் நண்பர்களே!கடந்த 14,15,16 மூன்று நாட்கள் நிறுவனம் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தேன்.வருண பகவானின் புண்ணியத்தால் பிளான் கேன்சல்.அதனால நாமக்கல்ல இருக்கும் அக்கா வீட்டிற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டேன்.பயணத்தில் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்.(நல்லா கிளப்புராங்கடா பீதிய!)
சனி இரவு பத்து இருக்கும்.வீட்டிலிருந்து கிளம்பி மெயின் ரோட்டை வந்தடைந்தேன்.ஆரம்பமே அளப்பறையா இருந்தது.அவ்ளோ கூட்டம்.திரும்பி வீட்டுக்கு போயிட்டு விடியற்காலையில் நேரமா எழுந்துபோலாமானு நினைச்சேன்.சரி போய்த்தான் பாப்போம்னு காத்திருந்தேன் புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துக்காக திருபுவனையில்(புதுவையிலிருந்து 25கி.மீ).வரும் பேருந்துகளெல்லாம் நிறை மாத கர்ப்பிணிகளாய் நிற்காமலே சென்றது.கிட்டத்தட்ட ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் ஒரு பஸ் நின்னுது அதுலயும் செம கூட்டம்.கண்டக்டர் எல்லாம் டாப்புல ஏறிக்கங்கன்னார்.கொஞ்சம் பயம்தான் சரி இதையும் அனுபவிச்சுதான் பாப்பமேன்னும்,வாழ்க்கையில தான் டாப்புக்கு போக முடியல,பஸ்ஸுலயாவதுபோவோம்ன்னு டாப்புல ஏறிக்கிட்டேன்.என்னுடன் ஒரு பத்து பதினைந்து பேர்.மனத்துக்குள் ஏல மச்சி!மச்சின்னு பாடிக்கொண்டேன்.
புதுவையில் மூன்று நாட்கள் விடுமுறையாதலால் புதுவையே காலியாகிக்கொண்டிருந்தது.அனைவரும் கூட்டம் கூட்டமாக சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்த்தனர்.சுற்றுலா பேருந்துகளும் வேன்களுமாக கூக்குரலும் விசிலுமாக கை காட்டிக்கொண்டே முந்திச்சென்றார்கள்(நாமளும் போயிருக்கலாமோ!).
டாப்பில் பயணிப்பது புதுமையான அனுபவமாக இருந்தது.ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப்போன்று!முன்னால் உக்காந்திருந்த ஒருத்தர் பீடி வலிக்க ஆரம்பிச்சுட்டார்.எனக்கு அன்பே சிவம் மாதவன் படும் பாடு ஞாபகம் வந்தது(வாங்கி ரெண்டு வலி வலிச்சியான்னு கேக்குறீங்களா!ஹிஹி!)
வழியில் ஒரு ஊரில் நல்லதங்காளோ,ஆரவல்லி சூரவல்லியோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்திருந்தனர்.சிறு வயதில்(இப்பவும் சிறு வயது தான்)ஊரில் விடிய விடிய உட்க்கார்ந்து தெருக்கூத்து பார்த்த ஞாபகம் வந்தது.அழிந்து வரும் கலை-லேசாக நெருடியது.
பேருந்து விழுப்புரத்தை நெருங்கியது.வழக்கமாக விழுப்புரம் முழுவதும் ப்ளெக்ஸ் போர்டில் சிரிக்கும் பொன்முடியார் இம்முறை மிஸ்ஸிங்(கொஞ்சம் சுத்தமாய் இருந்தது ஊர்).ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் சி.வி.சண்முகத்தார் புண்ணியத்தால் அம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.
வழக்கமான ட்ரேட் மார்க் மூத்திர வாசனை(!)யுடன் விழுப்புரம் பேருந்து நிலையம் வரவேற்றது.பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு அப்பறம் விழுப்புரத்திலிருந்து நாமக்கல் பயணம் அடுத்த பதிவில்!!!!
Tweet | ||||||
45 comments:
நல்ல பதிவு நண்பரே
//வாழ்க்கையில தான் டாப்புக்கு போக முடியல,பஸ்ஸுலயாவதுபோவோம்ன்னு டாப்புல ஏறிக்கிட்டேன்.//
lik it. . :) :)
@Riyas
வருகைக்கு நன்றி!நண்பரே!
@nova
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
பஸ் டாப்புல போனதை வச்சே ஒரு பதிவு தேத்திட்டாரே..
பஸ் ஸ்டாண்ட்டுக்கு அடையாளமே அந்த மூத்திர வாடை தான் போல!
@செங்கோவி
பப்ளிக்!பப்ளிக்!
நல்ல வர்ணனை!
செங்கோவி said...
பஸ் ஸ்டாண்ட்டுக்கு அடையாளமே அந்த மூத்திர வாடை தான் போல!//
இல்லேன்னா யாரும் பஸ் ஸ்டாண்டுன்னு ஒத்துக்கமாட்டாங்களாம்!
செங்கோவி said...
நல்ல வர்ணனை!//
சும்மா ட்ரை பண்ணிப்பாத்தேன்!
நாமககல்ல தான் ஆருயிர் நண்பன் சந்திரன் இருக்கான்...அடுத்த பதிவில பார்த்திருங்க...-:)
பஸ்ஸுல டாப்புக்கு போயாச்சி
வாழ்கையிலும் டாப்புக்கு போவீங்க!
நம்புங்க கோகுல்!
புலவர் சாஇராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் said...
பஸ்ஸுல டாப்புக்கு போயாச்சி
வாழ்கையிலும் டாப்புக்கு போவீங்க!
நம்புங்க கோகுல்!
புலவர் சாஇராமாநுசம்//
வாழ்த்துக்கு நன்றி ஐயா!
ஹா ஹா கலக்கல் . கண்ட்டிநியூ
பயண கட்டுரையா ?
இன்று என் வலையில்
மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?
வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க,
அலுவலகச் சுற்றுலாப் ப்ளானிலும் ஆப்பு வைச்சிட்டாங்களா
டாப்பில் ஏறி உட்கார்ந்து பயணம் செய்த,
நொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நானும் ரசித்துச் சிரித்தேன் பாஸ்,.
பாஸ் எனக்கு பஸ்இன் மேல் இருந்து போக ஆசை எப்பயாவது ஒருநாள் நடக்கும்........
என்ஜாய் பண்ணுங்க பாஸ்...
ஆகுலன் said...
பாஸ் எனக்கு பஸ்இன் மேல் இருந்து போக ஆசை எப்பயாவது ஒருநாள் நடக்கும்........//
நிச்சயம் நடக்கும் நண்பா!
நிரூபன் said...
டாப்பில் ஏறி உட்கார்ந்து பயணம் செய்த,
நொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
நானும் ரசித்துச் சிரித்தேன் பாஸ்,.//
நல்லா ரசிங்க!நிரூ!
அனுபவம் பேசட்டும்...
வாழ்க்கையில தான் டாப்புக்கு போக முடியல,பஸ்ஸுலயாவதுபோவோம்ன்னு டாப்புல ஏறிக்கிட்டேன்.என்னுடன் ஒரு பத்து பதினைந்து பேர்.மனத்துக்குள் ஏல மச்சி!மச்சின்னு பாடிக்கொண்டேன்//
விழுப்புரம் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
த.ம.ஏழு!
டாப்புக்குப் போயாச்சு!
சுவாரஸ்யம்!
பஸ் டாப்பில் ஏறி உட்கார்ந்து பயணம் செய்த அனுபவம் ரசிக்கும் படியான பதிவு
சென்னை பித்தன் said...
த.ம.ஏழு!
டாப்புக்குப் போயாச்சு!
சுவாரஸ்யம்!
//
நன்றி ஐயா!
# கவிதை வீதி # சௌந்தர் said...
அனுபவம் பேசட்டும்...
வாங்க நண்பா நன்றி!
இராஜராஜேஸ்வரி said...
விழுப்புரம் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி!
மகேந்திரன் said...
பஸ் டாப்பில் ஏறி உட்கார்ந்து பயணம் செய்த அனுபவம் ரசிக்கும் படியான பதிவு//
வருகைக்கு நன்றி!நண்பரே!
புழைக்க தெரிஞ்ச புள்ளையப்பா நீங்க.. எப்புடியெல்லாம் பதிவ தேத்துறீங்க... 25 கிலோமீற்றர் பெரிய தூரமோய்யா ஒரு சைக்கில எடுத்து நாலு மிதி மிதிச்சா போய் சேர்திடலாம்...!!?? காட்டான் இஞ்ச மாட்டு வண்டி இல்லாட்டா சைக்கில்லதான் போறான்யா.., அடுத்த பதிவ ஆவளோடு பார்க்கிறேன் மாப்பிள...!!!!
காட்டான் குழ போட்டான்..
காட்டான் said...
புழைக்க தெரிஞ்ச புள்ளையப்பா நீங்க.. எப்புடியெல்லாம் பதிவ தேத்துறீங்க... 25 கிலோமீற்றர் பெரிய தூரமோய்யா ஒரு சைக்கில எடுத்து நாலு மிதி மிதிச்சா போய் சேர்திடலாம்...!!?? காட்டான் இஞ்ச மாட்டு வண்டி இல்லாட்டா சைக்கில்லதான் போறான்யா.., அடுத்த பதிவ ஆவளோடு பார்க்கிறேன் மாப்பிள...!!!!
காட்டான் குழ போட்டான்..//
நல்லா மிதிங்க சைக்கிளை!
வருகைக்கு நன்றி!
அவ்ளோ தானா ஒரு பார்ட்டில்... டபக்குன்னு முடிச்சுடிங்க
தலைப்பு சூப்பர் நண்பா..
நல்லாத்தான் போய்ட்டு இருந்திச்சு
டக்குன்னு பதிவு முடிஞ்ச பீலிங்
குட் பதிவு பாஸ்
// ஒரு ஊரில் நல்லதங்காளோ,ஆரவல்லி சூரவல்லியோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்திருந்தனர்.சிறு வயதில்(இப்பவும் சிறு வயது தான்)ஊரில் விடிய விடிய உட்க்கார்ந்து தெருக்கூத்து பார்த்த ஞாபகம் வந்தது.அழிந்து வரும் கலை-லேசாக நெருடியது.//
எத்தனை கலைகள் அழிந்துவருகின்றன ம்.என்ன செய்வது...
சிறு வயது தான்)ஊரில் விடிய விடிய உட்க்கார்ந்து தெருக்கூத்து பார்த்த ஞாபகம் வந்தது.அழிந்து வரும் கலை-லேசாக நெருடியது.//
இது போன்ற கலைகள் அழியாமல் இருக்க இந்த கலைஞர்களை அரசு ஊக்கு விக்க வேண்டும்...மக்கள் ஆதரவு தர வேண்டும்....
வழக்கமான ட்ரேட் மார்க் மூத்திர வாசனை(!)யுடன் விழுப்புரம் பேருந்து நிலையம் வரவேற்றது//
ஹா ஹா.. யோசித்து பாருங்கள் ஒரு ஃபாரினர் வந்து விழுப்புரம் வந்து இதை அனுபவித்து அவர் பதிவிட்டால் ஹா ஹா... மானம் கப்பலேறிடும்... நாடு எவ்வளவு முன்னேறினாலும் அரசு இது போன்ற சுகாதாரமின்மையை நடவடிக்கை எடுக்காது போலிருக்குது... எந்த கழிவரையாவது டீசண்டாக இருக்கிறதா... ம்ம்ம் அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நண்பா..பயணங்கள் தொடரட்டும்
good
அடடா என்ன விழுப்புரத்திலேயே விட்டுட்டு போயிட்டீங்க ,
ஹும் எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க பதிவெழுத ..
சரி நண்பரே நாமக்கல்லில் சிந்திப்போம்
அட.....
இப்படியும் எழுதலாமோ...
வாழ்த்துக்கள் நண்பா...
சொல்லுங்க,சொல்லுங்க,இதத்தான் எதிர் பாத்தேன்ங்க
nalam
நல்ல பதிவு நண்பரே .. உங்கள் பயணம் நல்ல படியாய் தொடர வாழ்த்துக்கள்
எப்படியோ பஸ்க்கு டாப் ல போய்டீங்க இனி வாழ்க்கைலயும் டாப்க்கு போயிடுவீங்க வாழ்த்துக்கள் நண்பா
அழிந்துவரும் நம்ம கலைகளயும் பதிவில் தொட்டுச்சென்றது வரவேற்பிற்குரியவிடயம் நண்பரே
ஆகா ஆகா - அருமையான் பயணம் பற்றிய பதிவு - மிக மிக இரசித்தேன் - வாழ்க வளமுடன் கோகுல் - நட்புடன் சீனா
Post a Comment