சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. அது என்னன்னா,
நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)
(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )
ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.
நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?
சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)
இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.
வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம.குப்பைகளை அல்ல !!!Tweet | ||||||
13 comments:
குட்.நம் வீட்டு கல்யாணத்தில் பாட்டில்கள் வைக்காமல் இருப்போம் நம் சுற்றத்தாரையும் நடைமுறை படுத்த செய்வோம்.
சாப்பாட்டை பார்த்தவுடன் பசிச்சிது..இப்போ உறைக்குது~~
நல்ல தகவல்~
//"வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!"//
பல விசயங்களை நெத்தியடியாய் சமூகத்திற்கு சொல்லும் தலைப்பு அருமை..... உண்மை தான் நான் கூட கேட்டரிங் வேலைக்கு செல்லும்போது எனக்கு கூட இந்த சந்தேகம் வந்ததுண்டு.. ஆனால் பிரபலமான கேட்டரிங்கில் பயன்படுத்திய டம்ளரை திரும்ப வைக்கமாட்டார்கள்... மற்ற இடங்களி ல் எப்படி என தெரியவில்லை... ம்ம் மொத்தத்தில் பிளாஸ்டிக்கை அவாய்ட் செய்யலாமே... நல்ல பயனுள்ள பகிர்வு.. நன்றியுடன் வாழ்த்துக்கள்
சமூக கட்டுரை நண்பா....
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
சமூக அக்கறையுள்ள ஒரு பதிவு
பகிர்வுக்கு நன்றி
வணக்கம் சகோ நல்ல பொறுப்புணர்ச்சியுடன் ஒரு
தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்......
வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!//
நல்ல பயனுள்ள பகிர்வு.. வாழ்த்துக்கள்
இன்றுதான் வலைசரம் மூலம் உங்கள் வலைப்பூ எனக்கு அறிமுகம் . வலைப்பூ பதிவு மிக மிக அருமை..நல்ல விசயங்களைஸ் சொல்றீங்க..
சேர்ந்து விட்டேன்..பாராட்டுக்கள்.
கண்டிப்பாக இது எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்...
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்..
நாளை நமதாக்குவோம்...
அசத்தலான விழிப்புணர்வு பதிவு..
வாழ்த்துக்கள்..
வணக்கம் சகோ, நாளைய சந்ததி மீது, உங்களுக்குள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் அருமையான ஒரு பதிவு, எம் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பா வைத்திருக்க வேண்டும் என்றால், ப்ளாஸ்ரிக் எனும் அரக்கனை இல்லாதொழிக்க வேண்டும்,
இதனை விளக்கும் வகையில் அருமையான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.
அன்பின் கோகுல் - தேடிப்பிடித்துப் படங்களுடன் அரிய தகவல்களௌம் பகிர்ந்தமை நன்று - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Post a Comment