Thursday, July 28, 2011

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........


நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.
அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல அவுட்ஆயிடரானுங்க ன்னான்.
அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் பேசுகிறோம்.

அன்றாடம் நமக்கு அத்தியாவசிய பணி செய்யும் பணியாளர்களை நாம் மரியாதையாக பெரும்பாலும் அழைப்பதில்லை.துணி தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.

ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட கட் பண்ணிட்டானே,ஆட்டோ ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் கூட  நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.
இவர்கள் மட்டுமல்ல  பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.
நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் ,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)  


சுருக்கமா நான் என்னை சொல்ல வர்றேன்னா
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை குடுங்க!!!  

10 comments:

கோவை நேரம் said... Reply to comment

அண்ணா..வணக்கமுங்க ...ஹி..ஹி..ஹி.. மரியாதையா சொன்னேன் தானே ...

gokul said... Reply to comment

கோவை நேரம் said...அண்ணா..வணக்கமுங்க ...ஹி..ஹி..ஹி.. மரியாதையா சொன்னேன் தானே ...\\
அந்த பயம் இருக்கட்டும்

வருகைக்கு நன்றி .

மைந்தன் சிவா said... Reply to comment

அண்ணே வணக்கமுங்க!!!கடைசி பன்ச் சூப்பர்!

gokul said... Reply to comment

\\ மைந்தன் சிவா said...
அண்ணே வணக்கமுங்க!!!கடைசி பன்ச் சூப்பர்!\\
வணக்கம் வணக்கம்,வருகைக்கும் இணைந்தமைக்கும் நன்றி

மாய உலகம் said... Reply to comment

கோகுல் கலக்கிட்டிருக்கீங்க தொடருங்கள் தொடருகிறோம்..... நன்றியுடன் வாழ்த்துக்கள்....

விக்கியுலகம் said... Reply to comment

மாப்ள நல்ல கருத்து!

koodal bala said... Reply to comment

இது ஒரு நல்ல அறிவுரை அண்ணாச்சி !

நிரூபன் said... Reply to comment

வணக்கம் சகோ, அருமையான ஓர் பதிவு, சிறிய சம்பவத்தினூடாக மனதில் நச்சென்று பதியும் வண்ணம் வயசிற்கு மரியாதை கொடுக்கச் சொல்லி நாசூக்காக விளக்கிய விதமும் அழகு.

Anonymous said... Reply to comment

Enna oru thinking kalakitinga poanga

Sakthi said... Reply to comment

Enna oru thinking kalakitinga poanga