Thursday, July 28, 2011

எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!




ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்

உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும்


ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
வேடிக்கை பார்க்கும்

தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
சிறகு முளைக்கும்

எதுவுமே இல்லாமல்
ஏதேதோ எண்ணச்சொல்லும்
ஒன்றுமே இல்லாமல்
ஒரு மணிநேரம் கூட பேசச் சொல்லும்


இவை எல்லாம் செய்யும் இந்த_______________ காதல்

டிஸ்கி-எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அப்பா தப்பிச்சுட்டேன்)





18 comments:

மாய உலகம் said... Reply to comment
This comment has been removed by the author.
மாய உலகம் said... Reply to comment

முதல் மழை பொழிந்ததே...

மாய உலகம் said... Reply to comment

கவிதை கலக்கல் கோகுல்

மாய உலகம் said... Reply to comment

அதுவும் பைக் ஸ்டில் சூப்பர்..

மாய உலகம் said... Reply to comment

எல்லாம் செய்யும் இந்த ரெண்டுங்கெட்டான் காதல்....எல்லாம் செய்யும் இந்த பாழாய்போன காதல்... எல்லாம் செய்யும் இந்த தித்திக்கும் காதல்... என்ன கோகுல் கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொண்டேன்...ஹிஹி

மதுரன் said... Reply to comment

கவிதை சூப்பர் பாஸ்

மைந்தன் சிவா said... Reply to comment

கலக்கல் கவிதை பாஸ்!ஓட்டும் போட்டாச்சு..ஆமா இன்ட்லி எங்க?

gokul said... Reply to comment

மாய உலகம் said...
கவிதை கலக்கல் கோகுல்
நன்றி..

gokul said... Reply to comment

மதுரன் said...
கவிதை சூப்பர் பாஸ்
வருகைக்கு நன்றி மதுரன்

gokul said... Reply to comment

மைந்தன் சிவா said...
கலக்கல் கவிதை பாஸ்!ஓட்டும் போட்டாச்சு..ஆமா இன்ட்லி எங்க?
கொஞ்சம் பிரச்சினை பண்ணுது பாஸ்.இருங்க என்னன்னு பார்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

ஸ்டில்ஸூக்கு 90 மார்க், கவிதைக்கு 80 மார்க் , டிஸ்கியின் புத்ஹ்டிசாலித்தன குறும்புக்கு 95 மார்க்

Reverie said... Reply to comment

கவிதை கலக்கல் கோகுல்
...Fill in the blanks...?

காவிய ? உயிர்..? பாழாய் போன ?

gokul said... Reply to comment

சி.பி.செந்தில்குமார் said...
ஸ்டில்ஸூக்கு 90 மார்க், கவிதைக்கு 80 மார்க் , டிஸ்கியின் புத்ஹ்டிசாலித்தன குறும்புக்கு 95 மார்க்\\
எல்லாம் உங்ககிட்டு இருந்து கத்துக்கிட்டதுதான்.ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஹா ஹா ஹா ஹா காதல்ல இம்புட்டு விஷயம் இருக்கா அவ்வ்வ்வ்வ்வ்.....

gokul said... Reply to comment

\\MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா காதல்ல இம்புட்டு விஷயம் இருக்கா அவ்வ்வ்வ்வ்வ்.....\\

என்னேங்க தெரியாத மாதிரி கேக்குறிங்க ஹா ஹா

நிரூபன் said... Reply to comment

வணக்கம் சகோ,
காதல் பற்றிய பரந்து பட்ட பார்வையினைத் தாங்கி வந்திருக்கும் உங்கள் கவிதையின்,
முடிக்கும் சொற்கள் மிக நேர்த்தியாக வந்து விழுந்திருப்பது கவிதைக்குச் சிறப்பினைத் தருகின்றது.

டிஸ்கி...இந்த நாய்க் காதல் என்று போட்டால்,....அடிக்க மாட்டீங்க தானே;-))

gokul said... Reply to comment

நிரூபன் said...
டிஸ்கி...இந்த நாய்க் காதல் என்று போட்டால்,....அடிக்க மாட்டீங்க தானே;-))\\
நான் ஏதாவது போடப் போய் நீங்க அடிக்க வருவீங்கன்னுதான் பிளாங்கா விட்டேன்.ஹிஹி உங்க இஷ்டத்துக்கு நிரப்பிக்கங்க.ஒவ்வொன்னும் சுவாரஸ்யமா இருக்கு

மாய உலகம் said... Reply to comment

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com