யாருக்கு எப்படியோ
இந்த பழக்கம் எனக்கு
எப்படி வந்தது என்று
எனக்கே தெரியவில்லை
அவளது உதடுகளை உரசாமல்
அன்றைய தினம் எனக்கு
அவ்வளவு இனிப்பாய் இருப்பதில்லை
அது என்னவோ தெரியவில்லை
ஒரு நாள் தவறினால் கூட
ஒரு கை இழந்தது போலிருக்கும்
நான் முத்தமிடும் நேரத்தில்
எனக்கு சொந்தமான அந்த உதடுகள்
எஞ்சிய நேரங்களில் வேறு யாருடனோ
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
இதில் எனக்கு அவமானமோ வருத்தமோ
இம்மியளவும் இருப்பதில்லை
சொல்லப்போனால் இது எனக்கு
சந்தோசத்தையே தருகிறது
ஏனிப்படி சொல்லுகிறேன் என்றால்
இச்சமூகத்தில் நிலவிய
சாதி பாகுபாட்டை
சிறிதளவு குறித்த பெருமை இவளது
உதடுகளையே சேரும்
சிலநேரம் இவளை முத்தமிடும் தருணங்களில் தான்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன
அது அரசியலாகட்டும்
அலுவலகமாகட்டும்
ஆனால் பல நேரங்களில்
இததருணங்கள் இக்கட்டில் போய் முடியும்
ஆனாலும் அவளது உதடுகளை
முத்தமிடாமல் என்னாலிருக்கமுடியாது
என்னால் மட்டுமல்ல என்னைப்போல்
பலரும் அவளது உதட்டு சுவைக்கு
அடிமையாகிக்கிடக்கின்றனர்
அப்படிதானே!
இதோ நீங்களும் முத்தமிடுங்கள்
அவளது உதடுகளில்!!!Tweet | ||||||
3 comments:
சிம்பு படம் பார்த்த போதே நினைச்சேன்..வம்பு தான்னு ..காப்பாத்தீட்டீங்க..
டீ, காஃபி குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்கு கிடையாதுங்க.
கோகுல் கலக்கிட்டீயே காப்பி
Post a Comment