Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts
Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts

Tuesday, December 23, 2014

தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!


தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி  பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வேற  கேப்பாங்க இல்ல). அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் அதி(பயங்கர) மேதாவிகளே.



நீங்கள்தான்  ரசிகர்களின்  கலைத்தாகத்தை தீர்க்கும் அமுதத்தை ,(அடிக்கடி சொல்லமாட்டேன் நீங்களே அவ்வப்போது இந்த பத்தியில எங்கெங்க தேவைப்படுதோ  போட்டுக்கங்க,எதையா? ஏன்யா என் வாயாலே சொல்ல வைக்குறிங்க?அதான் ,அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்)தரும் வல்லவர்கள்.
நீங்கள்தான்உங்கள் கலைப்படைப்பின் மூலம் துவண்டு கிடக்கும் ரசிகனோடதை தட்டி எழுப்புகிறீர்கள்,எதையா ?என்னய்யா உங்களோட? புத்துணர்ச்சியைத்தான்.
நீங்கள் தான் ரசிகனின் தேவையை உணர்ந்து  அவனுக்கு என்ன தேவையோ அதை அவனிடம்சரியாக கொண்டு போய் சேர்ப்பதில்  கை தேர்ந்தவர்கள்.
நீங்கள் தான் உங்கள் மூளையை மீண்டும் சொல்கிறேன் உங்கள் மூளையை கசக்கிபிழிந்து புதுப்புது பரிமாணங்களில்(பரிணாமங்களில் கூட )சினிமாவை ரசிகனிடம் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்.
நீங்கள்தான் .......இன்னும் சொல்லிக்கொண்டே போலாம் போதும் கை வலிக்கிறது.(அதுமட்டுமல்ல ஒருநாளைக்கு நான்கைந்து பொய்கள் தான் சொல்வது வழக்கம்)


விசயத்துக்கு வருவோம்
நாங்கள் ரசிகர்களுக்காக படம் எடுக்கிறோம் அவர்கள் ரசிக்கிறார்கள்,ஆனால் இந்த இணையத்தில் எழுதுபவர்கள்தான் நொர நாட்டியம் பேசுகிறார்கள்,நொட்டம் சொல்கிறார்கள் என்கிறீர்கள்.சரிதான்

நீங்கள் சோறு தானே சாப்பிடுகிறீர்கள்?அய்யய்யோ கதை கெட்டுது,(அட உங்க கதை இல்லைய்யா,நான் சொல்ல வந்த கதை) நான் சொல்ல வந்ததின் அர்த்தம் அதுவல்ல.நீங்கள் உணவு உண்கிறீர்கள் தானே.உதாரணத்திற்கு உங்கள் மனைவி சமைத்ததை சப்புக்கொட்டி சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் அப்போது உங்கள் மனைவி நேற்று டிவியில் பார்த்த புது பதார்த்தமொன்றை,நானே புதுசா ஒரு ஐட்டம் ட்ரை பண்ணியிருக்கேன் (எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்)சாப்பிடுங்கன்னு வைக்குறாங்க,அதை சாப்பிட்டதும் உங்க முகம் இஞ்சி சாப்பிட்ட சிங்கம் மாதிரி ஆனாலும் வெளிக்காட்டிக்காம நல்லா இருக்கும்மா அப்படின்னுட்டு போயிடுவீங்க( இதுதான் நீங்க சொல்ற ரசிகர்களுக்காக படம் எடுக்குறோம் அவங்க ரசிக்குறாங்க).

இப்போ  நீங்க செம்ம பசியில போய் ஒரு  ஹோட்டல்ல எது ரெடியா இருக்கோ சீக்கிரம் கேட்டுட்டு இட்லி என்றதும் நாலு வாங்கி  சாப்பிடுறீங்க,பசியடங்கிய பின் மெனு கார்டை பார்த்து இருப்பதிலே விலையுயர்ந்த ஒண்ணை ஆர்டர் செஞ்சுட்டு காத்திருக்கீங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வந்த ஐட்டமோ அன்னைக்கு உங்க மனைவி செஞ்ச புது ஐட்டத்தை விட சுமாராதான் இருக்கு.என்ன உப்பு தான் கொஞ்சம் கூட(பயபுள்ள உங்க மூஞ்ச பாத்து என்ன நினைச்சுதோ தெரியல).இப்ப உங்க ரியாக்சன் எப்படி இருக்கும் அன்னைக்கு சாப்பிட்ட மாதிரி பொத்திக்கிட்டு சாப்பிட்டுட்டு வந்துடுவீங்களா?ஓட்டலாயா நடத்துறீங்க ஓட்டலுன்னு கலகலப்புல வர்ற ஆண்ட்டி ரேஞ்சுக்கு சவுண்டு விடமாட்டீங்க?

உங்க சத்தத்தை கேட்ட ஹோட்டல் சூப்பர்வைசர் வந்து பிரச்சினையை கேட்டுட்டு,"சாப்பிட இஷ்டமா இருந்தா சாப்பிடு இல்லன்னா திண்ணதுக்கு பில்லை கட்டுட்டு போயிட்டே இரு","அவனவன் எவ்ளோ கஷ்டப்பட்டு சமைக்கிறான்,ஒரு நாள் பூரா நெருப்புல நின்னு,அங்கங்க சூடு பட்டுக்கிட்டு புகையில,மசாலா நெடியில லோல் பட்டுக்கிட்டு புதுப்புது ஐட்டமா செஞ்சு குடுத்தா நல்லாயில்லயாம்ல,நல்லாயில்ல.நாலு இட்லி சாப்டவுடனே உன் பசி அடங்கிடுச்சுல்ல,அப்பவே எழுந்து போக வேண்டியது தானே.இந்த ஐட்டமே வெளிய இருக்க கையேந்திபவன்ல பாத்திரம் கழுவுறவரு சொல்லித்தந்த மெனுயா.இஷ்டமா இருந்தா திண்ணு இல்லன்னா போயிட்டே இரு"."எங்க சாப்பாட்டை சப்புக்கொட்டி சாப்பிட நிறைய ஆளுங்க இருக்காங்க அவங்களுக்குதான் நாங்க ஹோட்டல் நடத்துறோம்,போங்க சார்"


அவர் சொல்வது போல கஷ்டப்பட்டு சமைக்கும் ஒரே காரணத்திற்க்காக நல்லா இல்லன்னா கூட மூடிக்கிட்டு சாப்பிட்டுட்டு வரவா முடியும்.
அப்படித்தான் இருக்கிறது உங்கள் பிரசங்கமும்.

ஓகே ஆல்ரைட்.கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன் இணையத்தில் இயங்கும் திரைப்படரசிகர்கள் சார்பில்.
தலைப்பை ஒரு முறை வாசிக்க,
உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கும் பக்குவம்(வக்கு என்றும் பொருள் கொள்ளலாம்)இல்லையெனில் இணையப்பக்கம் வராமல் மூடிக்கொண்டு இருக்கவும்,எதையா உங்களுக்கு ஓயாம விளக்கம் குடுக்கனுமாய்யா?உங்கள் லேப்டாப்பையும்,இன்ன பிறதையும்.என்ன இன்ன பிறதுன்னாவா ??ஷ்ஷ்ஷ்ஷ் பா,PCயையும் மொபைலையும்.கடைசியா வைத்திருப்பது டாட்


மேலும் வாசிக்க "தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!"

Tuesday, November 6, 2012

I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?

சமீபத்தில் முகமூடி படத்தில் வந்த வாய மூடி சும்மா இருடா என்ற பாடல் 
இணையங்களில் நமது கருத்து சுதந்திரம் உள்ள நிலைமையை எடுத்துரைப்பது போல இருக்கிறது.
நமது கரங்களை நாமே பலப்படுத்துவோம்.நம்முள் ஒருவர் துவக்கிய முயற்சிக்கு நமது ஆதரவுக்கரங்களை நீட்டுவது மூலம்.
__________________________________________________________________________________________
முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு,  அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.

========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

___________________________________________________________________________
ட்விட்டர்,பேஸ் புக், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
நன்றி!

===================================================================================
வேண்டுகோள்:
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!

மேலும் வாசிக்க " I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?"