இசைன்னா என்னங்க.ஹி.ஹி.இசைன்னா... ங்க..,க..ம,ப,இசைன்னா இசை.அம்புட்டுதாங்க நமக்கு தெரியும்.உங்களுக்கெப்படி?இசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்ன?அந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதா?எப்பவாவது டென்ஷனானா ஏதாவது சில இளையராஜா ,பழைய எம்.எஸ்.வி பாட்டு ஏதாவது கேட்டா மனசு லேசான மாதிரி இருக்கும்னு பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உணர்ந்தும் இருக்கேன்.ஆமா,இசை சில மனஉபாதைகளுக்கு சிறந்த மருந்து தான்.
ஆனா நமக்கு(முக்கியமா எனக்கு) தெரியாத ஒரு விசயத்த சமீபத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.இசை மனஉபாதைகளுக்கு மட்டுமில்லை,சில உடல் சார்ந்த சில குறைபாடுகளைக்களையும் மகத்துவம் இசைக்கு இருக்கிறதாம்.அப்ப லாஜிக் படி இசைஅமைப்பாளர்களுக்கு தான டாக்டர் பட்டம் குடுக்கணும்.சரி விடுங்க அதைப்பத்தி இங்கே பேச வேணாம்.
அப்படியென்ன செய்கிறது இசை?இசை மருத்துவம் என்ற ஒரு மருத்துவ முறையே இருக்கிறது.முடிந்த அளவுக்கு நாமே ஏதாவது இசைக்கருவியை வாசித்தாலோ,அல்லது பாடினாலோ உன்னதம் என்கிறது இந்த மருத்துவ முறை.என்ன ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடனுமா?அப்ப இசையை கேளுங்க அதுவே போதும்.
ஹிஸ்டீரியா அறிகுறிகளுக்கு நரம்பிசைக்கருவிகளின் இசையை கேட்க நல்ல பலன் தரும்.முக்கியமாக நரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு இசை மருத்துவம் நல்ல பலன் தருகிறது.நரம்பு மண்டலத்தை செம்மைப்படுத்துவதில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைவலி வரும் சமயங்களில் விளம்பரங்கள்ள வர்ற மாதிரி மாத்திரைகளை போட்டா அதுவே பின்னால பெரிய தலைவலியை குடுக்கும்.ஒற்றை வயலின் இசையை தொடர்ந்து கேட்டால் தலைவலியின் தாக்குதலை சமாளித்துவிடலாம்.அமெரிக்காவுல ஒரு பல்டாக்டர் பல பேரோட சொத்தை(பேஷன்ட் சொத்தை அல்ல)பல்லை மயக்க மருந்தோ,வழி குறைப்பு மருந்தோ இல்லாமல் மயக்கும் இசையை வைத்தே பிடுங்கி அசத்தியுள்ளாராம்.
நாம மட்டும் சளைத்தவர்களா?நம்ம பசு நேசர் பாட்டு பாடியே பால் கறக்கலையா?அதுவும் உண்மைதாங்க,இசைக்கு மயங்கும் பசுக்கள் அதிக பால் கொடுக்குதாம்,செடிகள் மற்ற செடிகளை செழித்து வளருதாம்.பாஸ்டன் நகரத்துல அறுவை சிகிச்சையே பண்றாங்களாம்.
என்ன இசை மருத்துவத்தை அனுபவிப்போமா?ஆனா சில கொலைவெறி இசை இருக்கும் ஆரோக்கியத்தை குலைத்து விடும்.(ஐயோ நான் ஏதும் பொடி வைச்சு பேசலைங்க).நல்ல இசை கேட்போம்.நல்ல மன,உடல் ஆரோக்கியத்தோட இருப்போம்.இனி இசை கேட்டால்......... நோய் பறந்தோடும்!
நட்புடன்.
ம.கோகுல்.
Tweet | ||||||