சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. அது என்னன்னா,
நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)
(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )
ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.
நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?
சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)
இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.
சமீபத்துல பெய்த மழையில் வெள்ளம் வடியாமல் அலைகழித்ததில் இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளும் பெரும்பங்கு வகித்தன.அதேபோல் ஓரிரு நாட்களுக்கு முன் பேப்பரில் கண்ட விசயத்தை நண்பர் சம்பத்குமார் சொன்னார் ராமேஸ்வரத்தில் பிளாஸ்டிக் கவர்களை தின்று இரு பசுமாடுகள் இறந்து போனதாக.
நாம் வருங்கால சந்ததியினருக்கு விட்டுசெல்லப்போவது எதை?
வசந்ததையா?குப்பைகளின் கூடாரங்களையா?
மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
மீள்வு-சில மாற்றங்களுடன்
படங்கள்-கூகுளில் பிடித்தது.
| Tweet | ||||||


