Monday, April 1, 2013

மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்

உலகின் பார்வையை சற்றே தமிழகத்தின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதில் வெற்றியடைந்துள்ளது தமிழக மாணவப்பருவத்தினரின்  ஈழம் குறித்த போராட்டங்கள்.மாணவப்பருவத்தில் அவர்களுக்கேயுரிய துடிப்பை இத்தனை நாட்களாக கல்வி,சினிமா,பொழுதுபோக்கு,விளையாட்டு,காதல் மற்றும் சில பல விதங்களில் மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த போராட்டம் இந்திய அரசியலை புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.


நினைத்துப்பார்க்கையில் அவர்களை துடிக்க வைத்து போராட்டத்தில் குதிக்க வைத்தது யார்?ஆதாயம் தேடியே அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளால்தான்,அவர்கள் மேலுள்ள கோபம் தான்.நீங்க செய்ய வேண்டியதைத்தாண்டா நாங்க படிப்பை விட்டுட்டு செஞ்சுட்டு இருக்கோம் என்ற கோபம் சில அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்து பேச வந்த போது பேச மறுத்து திருப்பி அனுப்பியதிலிருந்து தெரிகிறது.

இதற்கு முன் மாணவர் போராட்டம் என்றால் பஸ்டே,கல்லூரிகளுக்கிடையில் வரும் மோதல் போன்ற சில போருக்கித்தனங்கல்தான் மக்கழ்மனத்தில் வந்து நிற்கும்.இன்று தமது இன மக்களுக்காக முழு மூச்சாக போராடும் பாங்கு வீரவணக்கம் கொள்ள செய்கிறது.இத்தனை பயன்படுத்தி ஓட்டரசியல் செய்யத்துடிக்கும் அரசியல்வாதிகளை உங்கள் கற்பனையில் எண்ணியாவாறெல்லாம் திட்டிக்கொள்ள அனுமதிக்கிறேன்.


எனக்கு நெடுங்காலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது.எனக்கு அரசியல் அனுபவம் சற்றே குறைவுதான்.அனுபவமிக்கவர்கள் சொல்லுங்கள்.ஆளுங்கட்சியாக இருந்தாலும்,எதிர்க்கட்சியாக இருந்தாலும்,அதிரி புதிரி கட்சிகளாகட்டும் மக்கள் பிரச்சினைக்காக போராடுகிறேன் என்கிறீர்கள்.ஒன்று பிரச்சினை வருவது இங்கே இருந்து என்றால் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக்கொள்வது,குறைகூறிக்கொள்வது,தூற்றிக்கொள்வது என்ன இழவு வேண்டுமானால் செய்து கொண்டு போங்கள்.          
                                      [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]

ஆனால் பிரச்சினை வருவது வெளியே இருந்து என்றால்,அதாவது வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடமிருந்து என்றாலும் கூட அதே இழவை ஏன் கூட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் கட்சியின் உண்மையான நோக்கம் மக்களின் நன்மை என்கிறீர்கள்,அப்படியானால் ஒருவரை ஒருவர் குறைகூற திட்டமிடும் நேரத்தில் எப்படியெல்லாம் போராடி நன்மை காண வழி செய்யலாம் என சிந்திக்கலாமே.,

ஒரு பிரசினைக்காகவாது இணைந்து போராடக்கூடாது என தமிழக கட்சிகளுக்கு யார் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.காவிரிப்பிரச்சினை,முல்லைப்பெரியார்,ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்,பாலாறு பிரச்சினை இது போன்ற விசயங்களில் பிரச்சினை என வரும் போது அந்தந்த மாநிலத்துக்கட்சிகள் கை கோத்துக்கிட்டுகோதாவில் இறங்கும் போது கபாடிப்போட்டியில் எல்லோரும் அவுட்டாகிவிட தனியே ரெய்டு வருபவரை எதிர் கொள்ளும் வீரனைப்போல அப்பாவியாய் நானும் போராடுகிறேன் என பேசுவது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை?


                                         [நன்றி-http://avargal-unmaigal.blogspot.in]
சரி,உங்கள் எல்லோருக்கு ஒரே ஒரு கேள்வி.எந்த பிரசினைக்காகத்தான் நீங்கள் எல்லோரும் இணைந்து போராடுவீர்கள்?ஒற்றுமையே வலிமை,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என உங்கள் பிள்ளைகளுக்கல்ல,நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.இப்போது தான் நேரம் கூடியிருக்கிறது.நமது இனத்திற்காகவாவது இணையுங்களேன்.ஒட்டு மொத்த மாணவர்களது கூட்டு குரலுக்கே திரும்பிப்பார்த்த உலகம் ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து கூப்பிட்டால் என்ன வேண்டும் உங்களுக்கென்று கேட்காமலா போய்விடும்????


அதுதான் உங்களுக்கென்று ஒரு தாரக மந்திரம் இருக்கிறதே தேர்தலுக்கு தேர்தல் ஒரு உணர்ச்சிகரமான சந்திப்புக்கு பின் சொல்லுவீர்களே ஓட்டுப்பொறுக்க  "அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்று இல்லை"என்று அதை ஒரு முறையாவது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் உங்க கொள்கைக்கு இழுக்கு ஏதாவது வந்திடுமோ? ,இல்லை அது முடியாது,நாங்கள் செய்த தியாகம் என்ன?எங்கள் வரலாறு என்ன?நாங்கள் அப்படியெல்லாம் இணைய மாட்டோம் என்றால்,இன்றைய சூழ்நிலையில் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.,அது மௌனம் பேசியது படத்தில் சூர்யா கதாபாத்திரம் கேட்குமே,நீங்கல்லாம் காதலிச்சு கல்யாணம் பண்ணி மயிரவா புடுங்கப்போறீங்க??,இங்கே காதலிச்சு,கல்யாணம் பண்ணி என்ற இடத்தில் கட்சி நடத்தி போராட்டம் பண்ணி என போட்டுக்கொள்ளவும்.  
மேலும் வாசிக்க "மாணவர் போராட்டம்-இப்போதும் இணையாத தமிழக கட்சிகள்"