_________________________________________________________________________________
நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக மீண்டும் இங்கே.அப்போது வாசித்தவர்கள் பொறுத்தருள்க!
__________________________________________________________________________________
என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது தெரியாதா ன்னேன் நான் விவரமா?
அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.
ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.
தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???
ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.
நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!Tweet | ||||||