Tuesday, December 18, 2012

மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?

கடந்த பதிவின்(வாசிக்காதவர்கள் அழுத்தவும்) தொடர்ச்சியாக அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் பற்றி எழுதியதை பதிவிடுவதற்குள் நிகழ்ந்திருக்கிறது சென்னையில் மாநகரபேருந்து விபத்தில் சிக்கி நான்கு மாணவர்கள் பலியான சம்பவம்.சொல்லப்போனால் இந்த தொடர்பதிவு எழுதுவதற்கான எண்ணம் உருவானது இதைப்போன்ற ஒரு நிகழ்ச்சிதான்.


கடந்த மாதம் ஊருக்கு(இளம்பிள்ளை-இராசிபுரம்) சென்றிந்த போது ஓரு நகரப்பேருந்தில் பயணித்தபோது உதித்தது தான் இந்த எண்ணம்.அது எல்லோருக்கும் தெரிந்த பாஷையில் பீக் அவர். பேருந்து கிளம்பி இரண்டு மூன்று நிறுத்தங்களுக்குள் பேருந்து நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு நிறுத்தத்திலும் கிட்டத்தட்ட இருபது மாணவ மாணவிகள் கூடவே நான்கைந்து பயணிகள்.எள் போட்டால் எண்ணெயாக இறங்கும் அளவுக்கு கூட்டம் என மிகையாக சொன்னாலும் அது சரியாகத்தான் தோன்றுகிறது.

பலர் நினைப்பது போல உள்ளே இடம் இருந்தும் படியிலிருந்து உள்ளே செல்ல மறுக்கும் மாணவர்களில்லை அவர்கள்.சொல்லப்போனால் இரண்டாம் படி வரை சில மாணவிகளே நின்றுகொண்டு வந்தனர்.முன்புற படிக்கட்டிலும் பின்புற படிக்கட்டிலும் சுமார் பத்து பேர் தொங்கிக்கொண்டு வந்தனர்.ஒவ்வோர் நிறுத்தத்திலும் இறங்கி வலிக்கும் கைகளை தேய்த்து ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.


பயணிகளே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏங்க ஸ்டாப்பில நிறுத்துறீங்க,இவ்ளோ கூட்டமா இருக்குல்ல,நிறுத்தாம போங்கனு சொல்றாங்க,கண்டக்டரோ நீங்க இப்டி சொல்றீங்க ஸ்கூல் டைமுக்கு இதாங்க பஸ்சு இத விட்டா அவங்க ஸ்கூல் போக முடியாது,நிறுத்தாம போனா அப்புறம் அடுத்த சிங்கிள் வரும் போது பஸ்ஸை மறிச்சு கலாட்டா பண்ணுவாங்க,இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோனு புலம்பினார்.
  

எப்படி பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து(எல்லா ஊரிலும்) கிட்டத்தட்ட பத்திலிருந்து பதினைந்து கி.மீ பயணம் செய்கின்றனர் மாணவர்கள்.தனியார் பள்ளி வாகனங்களுக்கு மட்டும் எத்தனையோ விதிமுறைகள் விதிக்கபட்டுள்ளன( சிறுமி ஸ்ருதி மரணத்திற்கு பிறகே).ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பஸ்பாஸ் வழங்குவதுடன் நின்றுவிடுகிறது அரசின் கடமை.


ஒவ்வொரு வழித்தடத்திலும் பள்ளிநேரத்தில் எல்லா பேருந்துகளிலும் ஏதாவது பத்து,இருபது மாணவர்கள் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன தான் தீர்வு? எல்லா வழித்தடங்களிலும் உள்ள பள்ளிகளில் எத்தனை இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படுகிறது என்பதை கணக்கில் கொண்டு பள்ளி நேரங்களில் அந்தந்த வழித்தடங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கலாம்.புதுச்சேரியில் இதைப்போன்ற ஒரு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.அதாவது பல வழித்தடங்களில் கிட்டத்தட்ட பதினைந்திலிருந்து இருபத்தைந்து கி.மீ வரை பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கென ஒரு ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் அரசுப்பள்ளி மட்டுமல்லாமல்தனியார் பள்ளி,கல்லூரி,பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ மாணவர்கள் உட்பட அந்த வழித்தடத்தில் உள்ள எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அடையாள அட்டையை காட்டிவிட்டு ஒரு ரூபாய் கட்டணத்தில் போய் வரலாம்.இது மாதிரி ஒரு முயற்சியை தமிழகத்திலும் பரிசீலிக்கலாமே .....  

மாணவர்களை தண்டிப்பதோ,பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்களை வஞ்சிப்பதையோ தவிர்த்து இதைப்போன்ற விசயங்களைப்பற்றி சிந்திக்கலாம்.இப்படியெல்லாம் செய்தும் படியில தான் தொங்குவேன் அப்டினு அடம புடிக்கறவங்கள "புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்"
மேலும் வாசிக்க "மாணவர்கள் விரும்பித்தான் படியில் தொங்குகிறார்களா?"

Wednesday, December 5, 2012

கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?


மனிதன் முழுமையாக(?) பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு அவனது அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக அதிகரித்தே வருகிறது.ஆரம்பத்தில் உணவு நாகரீகம் பற்றிய அறிவு தோன்றியவுடன் உடை பிறகு இருப்பிடம்.அந்த வரிசையில் ஆறாம் அறிவின் இருப்பை உணர்ந்து கொள்ள ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக கல்வியும் இணைந்திருக்கிறது. 


ஆரம்ப காலங்களில் கண் போன கால் போன போக்கில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவன் பிற்பாடு கல்விக்கான வரைமுறையையும் வகுத்துக்கொண்டான்.(அப்படி செய்யாமலே இருந்திருக்கலாம்).யாரெல்லாம் கற்க வேண்டும் என்ற வரைமுறையும் தோன்றியது.இப்போது அனைவருக்கும் கல்வியின் தேவை இவர் அவர் என்றில்லாமல் எல்லோருக்கும் அவசியமாகி இருக்கிறது.தமிழகத்தை பொறுத்தமட்டில் கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றி இன்றுவரை நினைத்து பார்க்க வைத்தவர் கர்ம வீரர் காமராஜர் என நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.  



இப்படி இன்றியமையாத கல்வி இன்றைக்கு எங்கே கிடைக்கிறது என்பதை விட எங்கே விற்கப்படுகிறது என்றே கேட்க தோன்றுகிறது.இங்கே சாப்பாடு எந்த ஹோட்டல்ல நல்லா இருக்கும்னு கேட்பது போல இங்க எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்,எங்க நல்லா சொல்லி தருவாங்க அப்படின்னு கேட்கு நிலை சாதாரணமாகிவிட்டது.இப்படியிருக்க அரசுபள்ளிகளின் நிலை என்னவாக இருக்கிறது?


அடிப்படையில் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசுப்பள்ளிகளுக்கு அரசு செலவிடும் அளவுக்கு விளைச்சல்(output) இருக்கிறதா என்றால் ?????????????



இத்தனைக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் வசதிகள் ஏராளம்.அரசுப்பள்ளிகளுக்கு இருக்கும் இட வசதியில் பாதியையாவது பெரும்பாலான தனியார் பள்ளிகளின் பார்க்க முடியுமா?ஆனால் இந்த வசதிகள் மாணவர்களுக்கு சென்று சேர்வதில்தான் சிக்கல்.


அடுத்த பதிவில் .....

அரசு தரும் உதவிகளை மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்வது யார்?
அரசு பள்ளிகளுக்கு இட ஒதுக்கீடு தரலாமா?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ள போக்குவரத்து சிக்கல்....
மேலும் வாசிக்க "கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?"

Tuesday, November 6, 2012

I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?

சமீபத்தில் முகமூடி படத்தில் வந்த வாய மூடி சும்மா இருடா என்ற பாடல் 
இணையங்களில் நமது கருத்து சுதந்திரம் உள்ள நிலைமையை எடுத்துரைப்பது போல இருக்கிறது.
நமது கரங்களை நாமே பலப்படுத்துவோம்.நம்முள் ஒருவர் துவக்கிய முயற்சிக்கு நமது ஆதரவுக்கரங்களை நீட்டுவது மூலம்.
__________________________________________________________________________________________
முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு,  அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.

========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

___________________________________________________________________________
ட்விட்டர்,பேஸ் புக், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"
நன்றி!

===================================================================================
வேண்டுகோள்:
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!

மேலும் வாசிக்க " I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?"

Friday, October 19, 2012

பல "சரக்கு" கடை 11 (19-10-2012)

அல்வா சாப்பிட ரெடியா?

ஸ்கூல் போற  வயசுல ஊர்ல பக்கத்துல இருந்த டெய்லர் கடைல அதிரும் ஸ்பீக்கர்களில் டப்பாங்குத்துப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்,அவ்வப்போது கதை வசன கேசட் என சூர்யா வம்சம்,கரகாட்டக்காரன்,விதி போன்ற படங்களின் வசனத்தையும் அலற விடுவாங்க,அந்த நேரத்துல ரொம்பநாளா அமைதிப்படை வசனம் ரெகார்டு தேயத்தேய ஓடிட்டு இருக்கும்.
சத்யராஜ் ஜோசியர்ட பேசும் நீங்க எத்தன வருஷம் உயிரோட இருப்பேன்னு சொன்னேள்?
ஜோசியர்-தொன்னூத்து அஞ்சு வருஷம், ninety five years.

டுமீல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

சத்யராஜ்- இவன் ஜாதகத்தையே இவனால ஒழுங்கா கணிக்க முடில.அடுத்தவன் ஜாதகத்த கணிக்க வந்துட்டான்.
இந்த மாதிரி பல வசனங்கள் இன்னிக்கும் நினைவுல இருக்கு.

மறுபடியும் அல்வா குடுக்க  மணிவண்ணன்,சத்யராஜ் & கோ ரெடியாகிட்டு இருக்காங்க.போன முறை சாப்ட அல்வா மாதிரியே இருக்குமா என்னவோ தெரில,அண்ணா அதே அல்வாவ சூடாக்கி குடுத்துடாதீங்க உடம்பு தாங்காது.அப்புறம் படத்துல அல்வா வாசு இருக்காரா?


காக்காவால் விழுமா பனம்பழம் ?

தொடரும் மின்வெட்டினால் கூடங்குளத்தை எதிர்த்த பொதுமக்கள் பலர் இப்போது இவ்ளோ மின்வெட்டு இருக்கும் போது அணுமின் நிலையத்தை எதிர்க்கத்தான் வேண்டுமா?என கேள்வி எழுப்புவதை பரவலாக காண முடிகிறது.இது அவர்களது சுயநலத்தை பறைசாற்றுவதாக தோன்றினாலும் அப்படியாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தின் ,ஆற்றாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்தினால்(மட்டும்) தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்துவிடுமா என்ன?

கரண்ட்டும் கடவுளும்



மகள்- அப்பா கடவுள்னா யாருப்பா?
அப்பா - கடவுள் கரண்டு மாதிரிம்மா, 
கண்ணுக்கு எல்லாம் தெரிய மாட்டாரும்மா,உணர மட்டும் தான் முடியும்.
மகள் - அப்ப சென்னைல இருக்கவங்க மட்டும் தான் கடவுளை உணர முடியுமாப்பா?
அப்பா-???????????????????????????????????????????????????


TERMS & CONDITIONS APPLY

இனி ஒரு போதும் திராவிட கட்சிகளுடன் பா.ம.க.துணை நிற்காது-டாக்டர் இராமதாஸ் # டாக்டர் Terms & conditions apply போட மறந்துட்டீங்க பாருங்க



பயணிகளின் கனிவான கவனத்திற்கு

அம்மா அவரது ஆட்சியில் புதிதாக பல வழித்தடங்களில் பல பேருந்துகளை இயக்க செய்துள்ளார்.அந்த பேருந்துகளில் போகும் பயணிகள் போகும்போதே மூவ்,ஐயோடெக்ஸ் இல்லன்னா ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணையாவது 
வாங்கிட்டு போங்க.சீட்டுகளுக்கு இடையில் காலை X,Y,Z எந்த பொசிசன்ல மடக்கி வைச்சாலும் இடிக்குது.பஸ்ல போற எல்லாருமே கார்ப்பரேசன் கழிவறையில் வரிசையில் நிற்பது போல நெளியுறாங்க.


அட போதும்பா......

நெய்யில் செய்த இனிப்பை சாப்பிடலாம்,நெய்யை அப்டியே சாப்பிட முடியுமா?அப்படி இருக்கு கிரிக்கெட் நிலவரம்.உலகக்கோப்பை T20 கிரிக்கெட் ஆட்டங்கள் முடிந்த சூட்டோடு சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களும் தொடங்கிவிட்டதால் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.பல போட்டிகளை பார்க்க முடிலன்னாலும் ரிசல்ட் என்னாச்சுன்னு போற போக்குல தெரிஞ்சுக்குவோம்.முடிவை தெரிந்துகொள்வதில் கூட ஆர்வம் ஏற்படல.


இது தெரியாம போயிடுச்சே!!!!

சமீபத்திய ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு வில்வித்தைல பதக்கம் கிடைசிருக்கணும்,ஆனா அவங்க பண்ண ஒரு சின்ன தப்பு,இல்லேன்னா கவனிக்காம விட்ட ஒரு விஷயம் இருக்கு அது என்னன்னா இந்த வீடியோ பாருங்க தெரியும்



இப்ப தெரியுதா? இந்தியா ஏன் பதக்க வாய்ப்பை இழந்துச்சுனு,அடுத்த முறை இந்த தப்பு நடக்காம பாத்துக்கங்கப்பூ,அம்புட்டுதேன்.






மேலும் வாசிக்க "பல "சரக்கு" கடை 11 (19-10-2012)"

Wednesday, September 12, 2012

ஒரு தொண்டனின் கதை



ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது என்ற யோசனை.




முடிவு பண்ணியதோடு மட்டுமல்லாமல் முன்னாள் வேலைவெட்டி இல்லாத,இந்நாள் உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருத்தரிடம் போய் தனது யோசனையை  சொல்ல,அவரும் கட்டியணைத்து வாடா தம்பி உன்னைப்போன்றவர்களைத்தான் கட்சி தேடிக்கொண்டிருக்கிறது,வா தம்பி வா,களப்பணியாற்ற  வா என இணைத்துக்கொண்டார்.


இன்னாளும்,அடிக்கடி முன்னாளை சந்தித்து சீக்கிரத்துல நாலு பேருக்கு தெரியணும் அப்டின்னு சொல்லிட்டே இருக்க ,அதுக்கு நேரம் வரும் சொல்றேன்னு சொல்லிட்டே இருந்தாரு முன்னாள்.

ஒருநாள் முன்னாள் இந்நாளை கூப்டு "தம்பி,நீ கேட்டுட்டே இருப்பியே நாலு பேருக்கு தெரியணும்னு அதுக்கு நேரம் வந்துடுச்சு,தலைவருக்கு பிறந்தநாள் வருது,நீஎன்ன பண்ற ஒரு இருவதுக்கு நாப்பது பிளக்ஸ் பேனர் அடிச்சு அதுல தலைவர் அப்டியே புயலை எதிர்கொண்டு நடந்து வர்ற மாதிரி,பில்லால அஜித் உக்காந்து இருப்பாரே அது மாதிரி ஸ்டைலா,கட்டபொம்மன் மாதிரி,கர்ணன் மாதிரி உனக்கு எப்டியெல்லாம் தோணுதோ அப்டி டிசைன் பண்ணி அடிச்சுடு,அப்டியே எங்களின் சுவாசமே,இதயமே,எதிர்காலமே ,வரலாறே,புவியியலே அப்டின்னு போட்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்,அப்டின்னு ரெடி பண்ணி முச்சந்தில வச்சுடு".





அண்ணே,முச்சந்தி மெயின் ரோடு சேற்ற இடம் அங்கே வச்சா போற வர்ற வண்டிங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே.

"தம்பி நீ நாலு பேருக்கு தெரிய வேண்டாமா?சரி விடு அப்புறம் உன் இஷ்டம்".

"பரவால்லணே பண்ணிடலாம்".

"ம்.சொல்ல மறந்துட்டேன்,அதுல அப்டியே அண்ணனோட போட்டோ தலைவர் போட்டோவ விட ஒரு மூணு இல்ல,இல்ல ரெண்டு செ.மீ கம்மியா தலைவர்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி இருக்கணும்".


"அப்புறம் அண்ணனின் விழுது அப்டின்னு ஓரமா உன்னோட போட்டோ போட்டினா ஒரே நாள்ள நீ உலக பேமஸ் ஆகிடலாம்ல".,



"எல்லாம் சர்தாண்ணே ,சுவாசமே,இதயமே,உயிர்மூச்சேனு சொல்றீங்களே தலைவரோட பெயர் என்னண்ணே?"


அட ஏம்பா,அது தெரிஞ்சா நான் போட மாட்டேனா?போன பிறந்தநாளுக்கு நான் விழுதா இருந்தேன் அப்ப இருந்த அண்ணன் எனக்கு சொன்னத நான் உனக்கு சொல்றேன்.நீ அடுத்த பிறந்தநாளுக்கு இன்னொரு தம்பிக்கு சொல்லுவ ,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"



தம்பி,இங்க பாருப்பா,என்னாச்சு?அட ,யாரப்பா அங்கே,இந்த தம்பி மயக்கம் போட்டுடுச்சு யாராவது சோடா கொண்டு வாங்கப்பா......




மேலும் வாசிக்க "ஒரு தொண்டனின் கதை"

Monday, September 3, 2012

ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!


செல் அடித்தது 

எதிர்முனையில் -கோகுல் நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலைங்க!

நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை- அதே தான் நானும் சொல்றேன்.

என்னவாயிருக்கும்னு கையில இருந்த பிஸ்கட்ட உடைச்சுக்கிட்டே
(ஏன் மண்டையத்தான் உடைசுக்கனுமா?) யோசிச்சும் பிடிபடல .,

****************************************************************************************

மறுபடியும் மறுநாள் இன்னொரு அழைப்பு 

எதிர்முனை - கோகுல் நீங்களா இப்படி?

நான்- எப்படிங்க?

எதிர்முனை- நான் நினைச்சுக்கூட பாக்கலைங்க

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை - அதே தான் நானும் சொல்றேன்.

இப்போது  வேர்க்கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டே ( ஏங்க மறுபடியும் ஏன் மண்டைலயே குறியா இருக்கீங்க) யோசிசும் புரியல.

#########################################################################################

அன்று மாலை சாட்டில்.,

நண்பர் - கோகுல் நான் உங்கள என்னவோ நினைச்சிருந்தேன்.,

நான் - ஏங்க அப்டி சொல்றீங்க?

நண்பர் - பின்ன இப்டி பண்றீங்க?

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

நண்பர்     - அதே தான் நானும் சொல்றேன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அடுத்தநாள் காலை ஒரு மெயில்

மெயில்--""அன்புள்ள நண்பருக்கு வணக்கம் ,

நான் உங்களிடம் நிறைய எதிர்பார்த்திருந்தேன்,ஏமாற்றமாக இருக்கிறது.""


எனது ரிப்ளை-- "" நண்பரே எனக்கு ஒன்றும் புரியவில்லை,நான் ஒன்னும்  பண்ணலைங்க!!

அவரது ரிப்ளை -- அதே தான் நானும் சொல்றேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இப்போ நீங்க நினைச்சது நடந்துடுச்சுங்க,ஆமாம் இம்முறை மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்ததில் கிடைத்துவிட்டது ஒவ்வொருவரும் நான் ஒன்னும் பண்ணலைன்னு சொல்லும் போது ,ஆமாம் அதே தான் நானும் சொல்றேன் அப்டின்னு சொல்றாங்க அப்டின்னா என்னவா இருக்கும்னு மண்டை உடைந்தவுடன் தான் தெரிந்தது.அனைவரும் கேட்டது அடே மடையா பதிவர் சந்திப்பு முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இன்னும் அதப்பத்தி ஒரு பதிவு கூட போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரா?

அந்த பேச்சுக்கெல்லாம் நான் ஆளாக விரும்பாமல் இதோ,



            [ இப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் புண்ணியத்தை கொட்டிக்கொண்ட மண்டபம்]



          [ நீங்க இன்னும் வளரனும் என கேபிளை தட்டிகொடுக்கும் மெட்ராஸ்பவன் சிவா ]




                                                [  நிகழ்ச்சிக்கு முன் தீவிர டிஸ்கசன்] 


                              [ திடங்கொண்டு போராடும் சீனுவுடன் குடந்தையூர் சரவணன் ]


                                       [ தம்பி இப்போ நான் என்ன சொல்டேன்னு இப்டி சிரிக்குற
                                             போவண்டோக்கு சைட்டிஷ்ஷா  போண்டா சாப்டா இப்டிதான்   ] 




  [  ஒரு வாசகம் சொன்னாலும் ஒரு வாசகம் சொன்ன பிரபா- ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம்              இல்லைங்க ]


                                                       [ ஏன் சார் இப்டி குறு குறுனு பாத்தா எப்டி பேச்சு வரும்? ]

ம்ம்ம்.,வளைச்சு வளைச்சு  கேட்டீங்க இல்ல அதுக்குள்ள முடிஞ்சுடுமா என்னே? 
மேலும் வாசிக்க "ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!"

Thursday, August 23, 2012

பல"சரக்கு"கடை-10 (23/08/2012)

2G மிஞ்சிட்டோம்ல





இந்தியா வளர்ந்து வரும் நாடுன்னு சரியாத்தான் சொல்றாங்க,அதை நிரூபிக்க நமது அரசியல்வாதிகள் ஆற்றும் தொண்டு,உழைப்பு அளப்பரியது,இதுவரை இந்திய ஊழல்களின் ராசாவாக இருந்த 2G ஊழலை மிஞ்ச செய்திருக்கின்றனர் நிலக்கரி ஊழல் மூலமாக கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடியாம்,2G 1.76 லட்சம் கோடி என்பதை இங்கே நினைவில் கொள்க.இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை காட்டுவதற்காகத்தானே தவிர வேறு ஏதும் உள்நோக்கமில்லை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.



தமிழகம் நெ.1

இதுவும் வளர்சியைப்பற்றிய ஒரு செய்திதான்.ஆனால் இந்த வளர்ச்சிகள் உகந்ததாக தெரியவில்லை.இது அதிர வைக்கும் வளர்ச்சி,கடந்த ஆண்டு இந்தியா மொத்தத்துக்கும் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம்.இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.கிட்டத்தட்ட 15,500 பேர் பலியாகி உள்ளனர்.நாம மட்டும் தான் ரோட்டுல போறோம் என்ற மனநிலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கும் வரை நாம தான் கொஞ்சம்(நெறையவே) பயந்து பயந்து போகணும்.


ஆகாககாகா

கொஞ்ச நாளைக்கு முன்னால என்னோட மொபைல் நெட்வொர்க் ஏதோ ஒரு பேக் எனக்கே தெரியாம ஆக்டிவேட் செஞ்சுட அத டீ ஆக்டிவேட் செய்ய கஸ்டமர்கேர் கூட ஓரியாடிக்கிட்டு இருக்கும் போது மயக்கமடைய வைத்த ஒரு விஷயம் இது ,கணினியில் வரும் குரல் உங்கள் மொபைல் வேலை செய்யவில்லை என்றால் ஆறை அமுக்குங்கள் என்றது.


அம்மம்மா.....

""நூலகங்கள் நாட்டின் அறிவு களஞ்சியங்கள். கேடில் விழுச்செல்வமான கல்வியை முழுமையாக பெற வேண்டுமாயின், அதற்கு பெருந்துணையாக உள்ளது நூல் நிலையங்கள். ‘பூஜை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்து கட்டும் நம் மக்கள், படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம் என்று அண்ணா கூறுவார்."" இது நா சொன்னதில்லைங்க கொஞ்ச நாளைக்கு முன்னால அண்ணா பெயரில் உள்ள நூலகத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டும் ,திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடைக்கு விட்டும் சாதனை புரிந்த அரசுக்கு சொந்தக்காரர்தான்.

HAPPY BIRTHDAY CHENNAI 



                             [ இத போடலன்னா சென்னைன்னு`நம்ப மாட்டாங்க]

சென்னைக்கு நேற்றைக்கு(AUG-22) 373-வது பிறந்தநாள்.கல்லூரிபடிப்புக்கு முன்னால் சிறு வயதில் ஒரே ஒரு முறை சென்னைக்கு போயிருக்கிறேன்.கல்லூரிபடிப்பு முடித்தவுடன் ஆண்டுக்கு மூன்று,நான்கு முறை போய் வருவதுண்டு,ஒவ்வொரு முறையும் ஏதாவது வியப்பூட்டும்,அதிர்வூட்டும்,மகிழ்வூட்டும்,நகைப்பூட்டும் உணர்வுகளை தந்திருக்கிறது.தமிழகத்தின்,தமிழர்களின்  தவிர்க்க முடியாத ஊர் சென்னை மேலும் பல்லாண்டு கால இத புகழ் உலகெங்கிலும் விரவித்திரிய வாழ்த்துகள்.

நம்மால் என்ன முடியும்?

பள்ளியில்  ஸ்ட்ரக்சர் இல்லாததால் தனது வாழ்வின் மீதி பகுதியை படுக்கையிலே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவன் லோஹித் அவர்களுக்கு நமது பதிவர்கள் சார்பில் உதவிக்கரம் நீட்ட முன்வந்து அதை செயல்படுத்த நமது பதிவர்கள் இரவுவானம் சுரேஷ் ,வீடு சுரேஷ்குமார் ஆகியோர்  அவரை நேரிலும் சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள்.மேலும் தகவல்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விணணப்பம் !!!


மதில் மேல் நிலைமை 


மிக தீவிரமாக,பிரமிக்கத்தக்க அளவில் ஏற்பாடாகி வருகிறது சென்னை உலகத்தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு.இதில் கலந்து கொள்ளவேண்டுமென்று தீர்மானித்து இருந்தாலும்,பணிச்சூழல் நிச்சயமரதாக இருக்கிறது,ஆகவ்வே நண்பர்களே  வாப்பு கிடைத்தால்  நிச்சயம் என்னை  இணைத்துக்கொள்கிறேன்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-10 (23/08/2012)"

Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை.

வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை விட்டு இறங்கியவுடன் நாமும் மறந்து தான் போகிறோம்.
யாராவது கேட்டாலும் நமக்கென்ன என யாரும் கண்டு கொள்வது கிடையாது.இங்கே எல்லாம் இப்படித்தான் நடக்கும் என சகித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதற்கு பயந்துகொண்டே(அ) சமாளிக்க இயலாமல் எத்தனையோ  வயிறுகள் பட்டினியாக பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.பிசைக்காரர்களாவது,அம்மா தாயே என கேட்டு தான் பிச்சை வாங்குகிறார்கள்,கொள்ளைக்காரர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இவர்கள் இதில் எந்த பட்டியலில் வருகிறார்கள் என தெரியவில்லை.,


ஒரு சாம்பிள் இதோ .,


இது மாமல்லபுரம் புலிக்குகைக்கு எதிரே உள்ள மோட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்,அச்சிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை மார்க்கரால் அழித்துவிட்டு பத்து ரூபாய் பாக்கெட்டை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.(எம்.ஆர்.பி.யில் மாற்றம் செய்வது,அதற்கு மேல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.)

இவங்களை என்ன தான் செய்வது? நீங்களே சொல்லுங்கள்,

மேலும் வாசிக்க "பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??"

Tuesday, July 24, 2012

பல"சரக்கு"கடை 9(24/07/12)




சல்யூட் கேப்டன்


நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணியின் பேயை கொண்ட படையில் கர்ஜித்த தமிழச்சி,மருத்துவராக இருந்த போதிலும் நாட்டிற்காக போஸின் அழைப்பை ஏற்று அவரது படையில் இணைந்தவர்.மருத்துவராக,போராளியாக,மாநிலங்களவை உறுப்பினராக,2002 குடியரசு தலைவர் வேட்பாளராக என பன்முகம் கொண்ட கேப்டன் லட்சுமி செகால் நேற்று காலமாகியிருக்கிறார்,அவருக்கு நமது அஞ்சலிகள்.
________________________________________________________________________

"பிராந்தி"ய ஒதுக்கீடு

 போன வாரம் புதுவையில் “பிராந்தி”ய இட ஒதுக்கீட்டை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது,நிற்க(சரி உக்காந்து இருந்தாலும் பரவால்ல விடுங்க இப்ப அது விஷயம் இல்ல)அது என்ன பிராந்திய இட ஒதுக்கீடு? புதுச்சேரியில் உள்ள மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு புதுவையின் ஆளுமைக்குட்பட்ட காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் இட ஒதுக்கீடால் புதுவை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம்.இதனை செயல்படுத்தக்கூடாது எனக்கோரி தான் இந்த முழு அடைப்பு நடைபெற்றது.

ஏனுங்க.,

புதுச்சேரில இருக்கவங்க அரசுபணியில் காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகள்ல வேலை செய்றாங்க,இல்ல இதனால அங்கே இருக்கவங்க இதனால பாதிக்கப்பட்றாங்க அப்டின்னு விட்டு கொடுத்துட வேண்டியதுதானே.,
_____________________________________________________________________

மறக்க முடியாத ஒலிம்பிக் துவக்கம்


2012 ஒலிம்பிக் எந்த நாளில் துவக்கப்பட்டது என வரும்காலங்களில் என்றைக்காவது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி,கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ஒரு கோடிக்கான கேள்வியில் இந்த கேள்வியை கேட்டால் நிச்சயமாக ஜூலை 27 என சொல்லி அசத்திவிடுவேன்,சும்மாவா?மறக்கக்கூடிய நாளா அது? திருமதி.கோகுலோட பிறந்த நாள் அன்னிக்கு தான்.(மறந்துட்டு இருந்துட முடியுமா என்ன?)
________________________________________________________________________


யப்பா முடியல......

நேத்து பைக்ல போகும்போது ஒருதற்கு கழுத்து ஒடிஞ்ச மாதிரி வைச்சுக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போனாரு,ஆமாங்க காதுல அதேதான்.,சரி ஹாரனை அடிச்சு முந்திட்டு போலாம்னு ஹாரன் அடிச்சு முந்தறேன்,அவரோட(?) வண்டி அப்டியே இடதுல இருந்து வலதுக்கு வந்துட்டே இருக்கு நானும் ஓரமா முடிஞ்சா வரைக்கும் போய் கடைசில ரோட்டை விட்டு கீழயே இறங்கிட்டேன்.அப்ப தான் அந்த பிரகஸ்பதி திரும்பி ரோட்டை பாக்குறாரு.கொய்யால இதே பின்னால வந்தது பஸ்சாவோ,லாரியாவோ  இருந்திருந்தா அந்த போன்ல இருந்தே வீட்டுக்கு தகவல் சொல்லியிருப்பேன் அப்டின்னு சொல்லிட்டு போனேன்,.

____________________________________________________________________

வாங்கப்பூ பிரணாப்பு



இவருக்கு யாராரோ வாழ்த்து சொல்லிருக்காங்க முகநூல் நண்பர் பிசாசுவின் வாழ்த்து மிகவும் கவர்ந்தது,நாமும் வாழ்த்துவோம்,
“”அதாகப்பட்டது !!!!!!!

இந்த பரந்து விரிந்த பாரத நாட்டினிலே , மக்களை விலைவாசி ஏற்றத்தால் தவிக்கவிட்ட ஒரு கொடுங்கோலனை , அரிசியை கடலில் கொட்டும்போது வாய்த்திறக்காத ஒரு டோமரை , பொருளாதார நிபுநிபுநிபுணியை , ஒன்றுக்கும் உதவாத ஒரு பதவிக்கு இவ்வளவு அலப்பறை கொடுத்து அதிபராக அமர வைத்திருக்கிறார்கள் ........ புல்லரிக்கிறது ........ எத்தனை மக்களின் பிராணத்தை வாங்கப்போறாரோ ???????

#
செந்தமிழ் நாடெனும் போதினிலே ......””” @ Pisaasu Kutty Pk

___________________________________________________________________________

70 பைசா எல்லாம் ஒரு மேட்டரா?விடுங்க பாஸ்


பெட்ரோல் விலை 70 பைசா உயர்ந்திருக்காம்,விடுங்க பாஸ் 70பைசா எல்லாம் ஒரு மேட்டரா?நூறு ரூவாய்க்கு கோழி பிரியாணி,எண்பது ரூவாய்க்கு குவார்ட்டர்,நூறு ரூவாய்க்கு சினிமா பாக்குறீங்க பெட்ரோல் விலை 70 பைசா ஏத்துனா மட்டும் ஏன் கொதிக்கீக?(அப்டீன்னு நான் சொல்லலீங்க யாராவது சொன்னாலும் சொல்லுவாக)


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 9(24/07/12)"