Monday, September 3, 2012

ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!


செல் அடித்தது 

எதிர்முனையில் -கோகுல் நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலைங்க!

நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை- அதே தான் நானும் சொல்றேன்.

என்னவாயிருக்கும்னு கையில இருந்த பிஸ்கட்ட உடைச்சுக்கிட்டே
(ஏன் மண்டையத்தான் உடைசுக்கனுமா?) யோசிச்சும் பிடிபடல .,

****************************************************************************************

மறுபடியும் மறுநாள் இன்னொரு அழைப்பு 

எதிர்முனை - கோகுல் நீங்களா இப்படி?

நான்- எப்படிங்க?

எதிர்முனை- நான் நினைச்சுக்கூட பாக்கலைங்க

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

எதிர்முனை - அதே தான் நானும் சொல்றேன்.

இப்போது  வேர்க்கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டே ( ஏங்க மறுபடியும் ஏன் மண்டைலயே குறியா இருக்கீங்க) யோசிசும் புரியல.

#########################################################################################

அன்று மாலை சாட்டில்.,

நண்பர் - கோகுல் நான் உங்கள என்னவோ நினைச்சிருந்தேன்.,

நான் - ஏங்க அப்டி சொல்றீங்க?

நண்பர் - பின்ன இப்டி பண்றீங்க?

நான் -  நான் ஒன்னும் பண்ணலைங்க!!

நண்பர்     - அதே தான் நானும் சொல்றேன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அடுத்தநாள் காலை ஒரு மெயில்

மெயில்--""அன்புள்ள நண்பருக்கு வணக்கம் ,

நான் உங்களிடம் நிறைய எதிர்பார்த்திருந்தேன்,ஏமாற்றமாக இருக்கிறது.""


எனது ரிப்ளை-- "" நண்பரே எனக்கு ஒன்றும் புரியவில்லை,நான் ஒன்னும்  பண்ணலைங்க!!

அவரது ரிப்ளை -- அதே தான் நானும் சொல்றேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இப்போ நீங்க நினைச்சது நடந்துடுச்சுங்க,ஆமாம் இம்முறை மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்ததில் கிடைத்துவிட்டது ஒவ்வொருவரும் நான் ஒன்னும் பண்ணலைன்னு சொல்லும் போது ,ஆமாம் அதே தான் நானும் சொல்றேன் அப்டின்னு சொல்றாங்க அப்டின்னா என்னவா இருக்கும்னு மண்டை உடைந்தவுடன் தான் தெரிந்தது.அனைவரும் கேட்டது அடே மடையா பதிவர் சந்திப்பு முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது இன்னும் அதப்பத்தி ஒரு பதிவு கூட போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரா?

அந்த பேச்சுக்கெல்லாம் நான் ஆளாக விரும்பாமல் இதோ,



            [ இப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் புண்ணியத்தை கொட்டிக்கொண்ட மண்டபம்]



          [ நீங்க இன்னும் வளரனும் என கேபிளை தட்டிகொடுக்கும் மெட்ராஸ்பவன் சிவா ]




                                                [  நிகழ்ச்சிக்கு முன் தீவிர டிஸ்கசன்] 


                              [ திடங்கொண்டு போராடும் சீனுவுடன் குடந்தையூர் சரவணன் ]


                                       [ தம்பி இப்போ நான் என்ன சொல்டேன்னு இப்டி சிரிக்குற
                                             போவண்டோக்கு சைட்டிஷ்ஷா  போண்டா சாப்டா இப்டிதான்   ] 




  [  ஒரு வாசகம் சொன்னாலும் ஒரு வாசகம் சொன்ன பிரபா- ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம்              இல்லைங்க ]


                                                       [ ஏன் சார் இப்டி குறு குறுனு பாத்தா எப்டி பேச்சு வரும்? ]

ம்ம்ம்.,வளைச்சு வளைச்சு  கேட்டீங்க இல்ல அதுக்குள்ள முடிஞ்சுடுமா என்னே? 

22 comments:

Kathiravan Rathinavel said... Reply to comment

இருந்தாலும் நீங்க இப்படி பன்னிருக்க கூடாது?

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ம் ...

Admin said... Reply to comment

சிறப்பு..

r.v.saravanan said... Reply to comment

நல்லா தான் இருக்கு கோகுல்
தங்களை சந்தித்ததில் மக்ழிச்சி வாழ்த்துக்கள்

அனுஷ்யா said... Reply to comment

பதிவு உங்களுக்கு உரிய பாணியில்... :)
நல்லா இருக்கு...

நாய் நக்ஸ் said... Reply to comment

கோகுல்..நாம் ஏன் பாண்டி-யில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தக்கூடாது...,???

சக்தி கல்வி மையம் said... Reply to comment

புது மாப்பிள்ளையை மறுபடியும் சந்தித்ததில் சந்தோசம்..

கோகுல் said... Reply to comment

@நாய் நக்ஸ்

எல்லோருடைய ஃபுல் ஆதரவு கிடைத்தால் தாராளமாக நடத்தலாமே!!!

Unknown said... Reply to comment



முன்னுரையும் படங்களும்

சிறப்பு!

அஞ்சா சிங்கம் said... Reply to comment

சூப்பரு ..........................

CS. Mohan Kumar said... Reply to comment

//நாய் நக்ஸ் said...
கோகுல்..நாம் ஏன் பாண்டி-யில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தக்கூடாது...,???//

:)))

ஐயா தயவு கூர்ந்து இதனை தாங்கள் அவசியம் செய்யவும்,. மேலும் இங்கும் எந்த பதிவரும் தண்ணி அடிக்க கூடாது என்னும் கொள்கையை தாங்கள் கடைபிடிப்பீர்கள் என நம்புகிறோம் :))

CS. Mohan Kumar said... Reply to comment

கோகுல்: உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ( இந்த வரிக்கு ஒரு காபி ரைட் வாங்கிடுவோம் )

MARI The Great said... Reply to comment

கலகலப்பு!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

கோகுல் - கலக்கல்

கோவை நேரம் said... Reply to comment

பிஸ்கட் , கடலை இதோட முடிந்து விட்டதே..அப்புறம் நாய் நக்க்ஸ் நான் வழி மொழிகிறேன்...

Anonymous said... Reply to comment

அருமை! கலக்கலான டெக்குனிக்குங்க ஆறம்பமே!

Anonymous said... Reply to comment

கோகுல்..நாம் ஏன் பாண்டி-யில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தக்கூடாது...,???// கண்டிப்பா நடத்துங்க! சென்னையில விட்டத இங்க பிடிச்சுடுவோமில்ல!

arasan said... Reply to comment

வாங்க வாங்க என்னடா கம்பெனில ஒருத்தர காணோமே நெனச்சேன் ,, வந்துடுச்சி ...உங்க பதிவு ..
நறுக்கு தெரித்தார் போல் உள்ளது கோகுல் ..

முத்தரசு said... Reply to comment

நல்லா உடைக்குரீறு மண்டையை.....

எங்க மண்டையை சொன்னேன்

சீனு said... Reply to comment

என் போட்டோவ போட்ட உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுனே....

அண்ணே அந்த 203 நான் தான்

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

ஒண்ணுமே பண்ணாததுக்கே இவ்வளவு பெரிய பதிவுன்னா! நீங்க ஏதாவது பண்னியிருந்தா! பதிவு கலக்கல்!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி7
http://thalirssb.blogspot.in/2012/09/7.html

Unknown said... Reply to comment

@நாய் நக்ஸ் said...
கோகுல்..நாம் ஏன் பாண்டி-யில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தக்கூடாது...,???
////////////////
சுரேஸ்குமார் : Rs501

மொய் வச்சாச்சு இனி நான் பாண்டி பதிவர்!