Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை.

வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை விட்டு இறங்கியவுடன் நாமும் மறந்து தான் போகிறோம்.
யாராவது கேட்டாலும் நமக்கென்ன என யாரும் கண்டு கொள்வது கிடையாது.இங்கே எல்லாம் இப்படித்தான் நடக்கும் என சகித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதற்கு பயந்துகொண்டே(அ) சமாளிக்க இயலாமல் எத்தனையோ  வயிறுகள் பட்டினியாக பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.பிசைக்காரர்களாவது,அம்மா தாயே என கேட்டு தான் பிச்சை வாங்குகிறார்கள்,கொள்ளைக்காரர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இவர்கள் இதில் எந்த பட்டியலில் வருகிறார்கள் என தெரியவில்லை.,


ஒரு சாம்பிள் இதோ .,


இது மாமல்லபுரம் புலிக்குகைக்கு எதிரே உள்ள மோட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்,அச்சிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை மார்க்கரால் அழித்துவிட்டு பத்து ரூபாய் பாக்கெட்டை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.(எம்.ஆர்.பி.யில் மாற்றம் செய்வது,அதற்கு மேல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.)

இவங்களை என்ன தான் செய்வது? நீங்களே சொல்லுங்கள்,

மேலும் வாசிக்க "பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??"

Tuesday, July 24, 2012

பல"சரக்கு"கடை 9(24/07/12)




சல்யூட் கேப்டன்


நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணியின் பேயை கொண்ட படையில் கர்ஜித்த தமிழச்சி,மருத்துவராக இருந்த போதிலும் நாட்டிற்காக போஸின் அழைப்பை ஏற்று அவரது படையில் இணைந்தவர்.மருத்துவராக,போராளியாக,மாநிலங்களவை உறுப்பினராக,2002 குடியரசு தலைவர் வேட்பாளராக என பன்முகம் கொண்ட கேப்டன் லட்சுமி செகால் நேற்று காலமாகியிருக்கிறார்,அவருக்கு நமது அஞ்சலிகள்.
________________________________________________________________________

"பிராந்தி"ய ஒதுக்கீடு

 போன வாரம் புதுவையில் “பிராந்தி”ய இட ஒதுக்கீட்டை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது,நிற்க(சரி உக்காந்து இருந்தாலும் பரவால்ல விடுங்க இப்ப அது விஷயம் இல்ல)அது என்ன பிராந்திய இட ஒதுக்கீடு? புதுச்சேரியில் உள்ள மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு புதுவையின் ஆளுமைக்குட்பட்ட காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் இட ஒதுக்கீடால் புதுவை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம்.இதனை செயல்படுத்தக்கூடாது எனக்கோரி தான் இந்த முழு அடைப்பு நடைபெற்றது.

ஏனுங்க.,

புதுச்சேரில இருக்கவங்க அரசுபணியில் காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகள்ல வேலை செய்றாங்க,இல்ல இதனால அங்கே இருக்கவங்க இதனால பாதிக்கப்பட்றாங்க அப்டின்னு விட்டு கொடுத்துட வேண்டியதுதானே.,
_____________________________________________________________________

மறக்க முடியாத ஒலிம்பிக் துவக்கம்


2012 ஒலிம்பிக் எந்த நாளில் துவக்கப்பட்டது என வரும்காலங்களில் என்றைக்காவது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி,கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ஒரு கோடிக்கான கேள்வியில் இந்த கேள்வியை கேட்டால் நிச்சயமாக ஜூலை 27 என சொல்லி அசத்திவிடுவேன்,சும்மாவா?மறக்கக்கூடிய நாளா அது? திருமதி.கோகுலோட பிறந்த நாள் அன்னிக்கு தான்.(மறந்துட்டு இருந்துட முடியுமா என்ன?)
________________________________________________________________________


யப்பா முடியல......

நேத்து பைக்ல போகும்போது ஒருதற்கு கழுத்து ஒடிஞ்ச மாதிரி வைச்சுக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போனாரு,ஆமாங்க காதுல அதேதான்.,சரி ஹாரனை அடிச்சு முந்திட்டு போலாம்னு ஹாரன் அடிச்சு முந்தறேன்,அவரோட(?) வண்டி அப்டியே இடதுல இருந்து வலதுக்கு வந்துட்டே இருக்கு நானும் ஓரமா முடிஞ்சா வரைக்கும் போய் கடைசில ரோட்டை விட்டு கீழயே இறங்கிட்டேன்.அப்ப தான் அந்த பிரகஸ்பதி திரும்பி ரோட்டை பாக்குறாரு.கொய்யால இதே பின்னால வந்தது பஸ்சாவோ,லாரியாவோ  இருந்திருந்தா அந்த போன்ல இருந்தே வீட்டுக்கு தகவல் சொல்லியிருப்பேன் அப்டின்னு சொல்லிட்டு போனேன்,.

____________________________________________________________________

வாங்கப்பூ பிரணாப்பு



இவருக்கு யாராரோ வாழ்த்து சொல்லிருக்காங்க முகநூல் நண்பர் பிசாசுவின் வாழ்த்து மிகவும் கவர்ந்தது,நாமும் வாழ்த்துவோம்,
“”அதாகப்பட்டது !!!!!!!

இந்த பரந்து விரிந்த பாரத நாட்டினிலே , மக்களை விலைவாசி ஏற்றத்தால் தவிக்கவிட்ட ஒரு கொடுங்கோலனை , அரிசியை கடலில் கொட்டும்போது வாய்த்திறக்காத ஒரு டோமரை , பொருளாதார நிபுநிபுநிபுணியை , ஒன்றுக்கும் உதவாத ஒரு பதவிக்கு இவ்வளவு அலப்பறை கொடுத்து அதிபராக அமர வைத்திருக்கிறார்கள் ........ புல்லரிக்கிறது ........ எத்தனை மக்களின் பிராணத்தை வாங்கப்போறாரோ ???????

#
செந்தமிழ் நாடெனும் போதினிலே ......””” @ Pisaasu Kutty Pk

___________________________________________________________________________

70 பைசா எல்லாம் ஒரு மேட்டரா?விடுங்க பாஸ்


பெட்ரோல் விலை 70 பைசா உயர்ந்திருக்காம்,விடுங்க பாஸ் 70பைசா எல்லாம் ஒரு மேட்டரா?நூறு ரூவாய்க்கு கோழி பிரியாணி,எண்பது ரூவாய்க்கு குவார்ட்டர்,நூறு ரூவாய்க்கு சினிமா பாக்குறீங்க பெட்ரோல் விலை 70 பைசா ஏத்துனா மட்டும் ஏன் கொதிக்கீக?(அப்டீன்னு நான் சொல்லலீங்க யாராவது சொன்னாலும் சொல்லுவாக)


மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 9(24/07/12)"

Friday, July 20, 2012

நெட்வொர்க்கும் நொந்தகுமாரனும்



ஏம்பா,ஒரு பத்து பைசாக்கு ஆசைப்பட்டது குத்தமா?இல்ல குத்தமானு கேக்குறேன்.ஏதோ வயசுப்புள்ள ஆர்வக்கோளாறுல ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான்னு நினைச்சு நிமிசத்துக்கு பத்து பைசாக்கு பேசலாம்னு புதுசா நம்பர் வாங்கி சந்தோசமா பேசலாம்னு நினைச்சா அவன இப்படியா டார்ச்சர் பண்ணறது.




என்னய்யா பண்ணான் உன் கஸ்டமரு,போன் பேசிட்டு அலுப்பா இருக்குன்னு தூங்கிட்டு இருந்தான் எழுந்து பாக்கறதுக்குள்ள ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தீங்க,அதுக்கு பத்து ஓவாவையும் அமுக்கிட்டீங்க,சரி எதுக்கு எடுத்தீங்கனு பாத்தா ஹாய்!மச்சான் உங்களுக்கு நமீதா பேக் ஆக்டிவேட் ஆகியிருக்கு அப்டின்னு வந்திருக்கு. என்னய்யா பாவம் பண்ணான் இந்த பச்சப்புள்ள,உன் மொகரகட்டைக்கு நமீதா கேக்குதானு கொமட்டுல குத்து வாங்க வைக்குற?


அப்புறம் ஒருநாளு மாச கடைசியாச்சே பேலன்சே இல்லையேன்னு சம்பளம் வர வரைக்கும் தாக்கு பிடிச்சுடலாம்னு ரீசார்ஜ் பண்ணான்,அம்பது ரூவாய்க்கு தான்யா பண்ணான்.அதையும் நீங்களா ஏதோ காலர் டியூன் வைச்சு சுவாகா பண்ணிட்டிங்க,அந்தப்பையன் எவ்வளவு கெஞ்சுனான்,நான் ஒன்னும் பண்லனு,இரக்கம் இல்லையா உங்களுக்கு.


                              [ என்கிட்டே காசு இல்லடா என்ன விடுங்கடா ]

அப்புறம் உங்க சேவை மைய உயர்(?)(யாரு யாரு)அதிகாரிகளை தொடர்பு கொள்ள என்ன பாடு பட்டிருப்பான்,அவங்கள்ட ஊர்ல இருக்கற சாமி மேல எல்லாம் சத்தியம் பண்ணானே அப்ப கூடவா நம்பிக்கை வர்ல அவன் மேல,அதெல்லாம் கூட தாங்கிக்கிட்டான்யா,காசு போச்சேன்னு போன் போட்டு உங்கக்கிட்ட அழுவரத்துக்கும் அவன்கிட்ட மூணு நிமிசத்துக்கு அம்பது காசு ஆட்டைய போட்டுடீங்களே.அத நினைச்சு நினைச்சு தேம்பி தேம்பி அழுதது உங்களுக்கு தெரியாது.

நல்லா இருங்கய்யா நல்லா இருங்க.,பாவம் அந்த பச்சப்புள்ள ரூம் போட்டு அழுதுட்டு இருக்கு.இந்த பாவம் எல்லாம்,,,,,,,,,,வேணாம்யா நல்லா இருங்க.
மேலும் வாசிக்க "நெட்வொர்க்கும் நொந்தகுமாரனும்"

Saturday, July 14, 2012

என் விகடன் மனதில் கோகுல் மனதில்



இந்த வாரம் ஆனந்த விகடன் ஆனந்தமாக இது என் விகடன் என சொல்ல வைத்தது.வடக்கு மண்டல ( பாண்டி,கடலூர்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்) என் விகடன் வலையோசையில் எனது கோகுல் மனதில் வலைப்பூ இடம் பெற்றுள்ளது.


எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்த விகடன் குழுமத்தார்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வரும்,பின் தொடரும் ,ஆதரவு தரும்,நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.


வலையோசையில் இடம் பெற்றுள்ள பதிவுகள் 








மேலும் வாசிக்க "என் விகடன் மனதில் கோகுல் மனதில்"

Saturday, July 7, 2012

பல"சரக்கு"கடை - 8(07/07/2012)

வந்தாச்சு,வந்தாச்சு

வணக்கம் நண்பர்களே,நலமா?திருமணமும்,வரவேற்பும் நல்லபடியா நடந்துச்சு,வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும்,வர வாய்ப்பில்லாமல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.கொஞ்சம் நிறையவே இடைவெளி விட்டாச்சு,இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.கல்யாணத்துக்கு அப்புறம் எழுதறத விட்ராதீங்கனு வரவேற்புக்கு வந்த நண்பர்கள் சொன்னாங்க(விதி வலியது).


ஏனிந்த அக்கறை?


திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு ராஜ்மோகன் சந்திரா என்பவர் இரு நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.நிலா ஆக்கிரமிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள்,உயர்(?)அதிகாரிகள்,ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வந்திருக்கிறார்.கிரிவலப்பாதையில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.சமூக விரோதிகள் சுதந்திரமாகவும்,சமூக ஆர்வலர்கள் பயந்து பயந்தும் வாழும் ஊரில் நாமும் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.சென்னை பதிவர் சந்திப்பில் திரு.யோகநாதன் நான் இரவு நேரங்களில் செல்லும் போது அக்கம் பக்கம் பார்த்து தான் போவேன் என சொன்னது நினைவுக்கு வருகிறது.கூடவே பராசக்தி வசனமும்.

காப்பாத்துங்க...

திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு ரோஜா செடிகளும்,மரக்கன்றுகளும் கொடுத்தோம்.ஆர்வமாக எல்லோரும் வாங்கிச்சென்றனர்.வாங்கியதில் இருந்த ஆர்வம் நட்டு வளர்ப்பதிலும் இருந்தால் மிக்க சந்தோசம்.ஒரிருவர் கன்றுகள் துளிர் விடுவது பற்றி கூறி மகிழ்வடைந்தனர்.கிட்டத்தட்ட ஐநூற்றைம்பது கன்றுகள் வழங்கினோம்.எல்லா கன்றுகளும் வாடிவிடாமல் காப்பாற்றப்படட்டும்.(படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்)


கோக்கா?சரக்கா?

பாரீசில் உள்ள சர்வதேச நுகர்வோர் கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் கோக்,பெப்சி உள்ளிட்ட பானங்களில் ஒரு லிட்டருக்கு பத்து சதவீதம் வரை ஆல்கஹால் கலந்துள்ளது என தெரிவித்துள்ளது.அது மட்டுமல்லாமல் அலர்ஜி ஏற்படுத்தும் டெர்பென்ஸ் எனும் பொருளும் சேர்க்கப்படுகிறதாம்.பதிலளித்த நிறுவனங்கள் அமெரிக்காவில்(மட்டும்) இப்படி நடப்பதில்லை என சொல்லியிருக்கின்றனவாம்.இனிமே யாராவது நான் சரக்கு அடிக்க மாட்டேன்னு சொன்னாலும் பொய் சொல்றாங்கன்னு தான் அர்த்தம்.

கிழடு தட்டிய சிறுத்தை

கல்யாணமானதும் ஏதாவது படத்துக்கு கூட்டிட்டு போகனும்னு வேண்டுகோள் வந்ததால் சரி போவோம்னு போனா ஊரெல்லாம் சகுனி தான்,வேற வழியில்லாமல் (விமர்சனங்களை தாண்டி) சிறுத்தையில் பாதியாகவாவது இருக்கும் என போனால் இது கிழடு தட்டிய சிறுத்தையாகத்தான் இருந்தது.சந்தானம் மட்டும் அங்காங்கே சலிப்பில் இருந்து விடுவிக்கிறார்.



ஐ'ம் பேக்


சமீப காலங்களில் தற வரிசையில் பின்னடைவு பெற்று வந்த ரோஜர்பெடரர்  தற்போது பார்மில் இருக்கும் முதல் நிலை ஆட்டக்காரர் ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தி விம்பிள்டன் இறுதிக்குள் நுழைந்து ஐ'ம் பேக் என சொல்லியிருக்கிறார்,இறுதியில் வெல்ல வாழ்த்துவோம்.
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 8(07/07/2012)"