Thursday, January 26, 2012

மாட்டுப்பொங்கல் வாழ்த்து யாருக்கு?

 

வணக்கம் நண்பர்களே,
ஊர் சுத்தப்போனதோட போன பதிவில விட்டுட்டு போயிட்டேன்.தொடரலாமா?

ஊருக்குப்போய் ரொம்ப நாள் ஆனதால சொந்தக்காரங்க,நண்பர்கள் எல்லோருடைய வீட்டுக்கும் போய் சின்னதா ஒரு அட்டன்டன்ஸ் போடப்போனேன்.போன இடத்திலெல்லாம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே சாப்பிட்டுத்தான் போகனும்னு அன்புக்கட்டளைகள். அப்படி இப்படி செம கட்டு கட்டுனதுல ஒரு ரவுண்டு பெருத்தாச்சு.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்,எல்லா பண்டிகைக்கும் நாம ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து சொல்றோம்.மாட்டுப்பொங்கலுக்கு யாருக்கு வாழ்த்து சொல்றது அப்படின்னு ஒரு டவுட்டு வந்தது.சரி பொதுவா சொல்லுவோம் ஹேப்பி மாட்டுப்பொங்கல்னு மொபைல்ல பேஸ் புக்ல இப்படி போட்டேன்,நம்ம மதுரன் குசும்பா சேம் டூ யூ பாஸ் அப்படின்னு வாரி விட்டுட்டாரு.ஓகே.மாட்டுப்பொங்கல் எனக்கு சின்ன வயசிலிருந்தே ரொம்ப இஷ்டம்( .பொங்கல் பண்டிகையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச நாள் குறிப்பா கிராமங்கள்ல இந்த நாளன்னிக்குத்தான் ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க. சின்ன வயசிலிருந்தே ஏன் பிடிக்கும்னா அந்த நாளன்னிக்குதான் எல்லா சொந்தக்காரங்களும் எந்த ஊர்ல இருந்தாலும் தவறாம வந்திடுவாங்க என்னென்ன உறவு முறைகள் நம்ம வழக்கத்துல இருக்கோ அவங்க எல்லோரையும் இந்த நாள்ல ஒண்ணா பாக்கலாம்.

அப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு சில சிறப்புப்பணிகள்(?) எப்பவும் காத்துக்கிடக்கும் அது என்னன்னா மாடு குளிப்பாட்டுறது,கொம்புக்கு பெயின்ட் அடிக்கறது,பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்குறது,பொங்கல் வைக்க இடம் தயார் பண்றது இப்படி இதெல்லாம் செய்யும் போது ஒரு ராமராஜன் படத்துல அவருக்கு பதிலா நடிச்ச ஒரு பீலிங்(அவரு அளவுக்கு நம்மால முடியாது ஏதோ நம்மால முடிஞ்சது).

( கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்)

                                        ( மேதைக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகிடுச்சா

காலையில் முன்னோர்களுக்கு படையல் வைச்சு வணங்கிட்டு அன்னைய ஒரிஜினல் ஹீரோவ தயார்படுத்தும் வேலையில இறங்கியாச்சு.சமத்தா நின்னா மேதை படம் பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னதால தாத்தா வீட்டு பசு எந்த டிஸ்டர்ப்பும் பண்ணாம அமைதியா நின்னுச்சு.


சுத்து வட்டாரத்துல இருக்குற சில குடும்பங்கள் ஒண்ணா சேர்ந்து,அவங்க வீட்டுல இருக்குற கால்நடைகள் எல்லாத்தையும் ஒரே இடத்துல கூட்டிவந்து ஒண்ணா பொங்கல் வைச்சு படிச்சு அவங்களை சிறப்பிச்சு,நன்றி சொல்லி,அவங்களுக்கு இந்த வருஷம் நோய் எதுவும் தாக்காம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு எல்லோரும் ஒண்ணா பொங்கலோ பொங்கல் அப்படின்னு கூவுனது பக்கத்து ஊருக்கே கேட்டிருக்கும்.கையில தட்டு வைச்சுக்கிட்டு குச்சியால வாண்டுகள் செம தட்டு தட்டுனுச்சுங்க.  


உறவினர்கள்,நண்பர்கள் கேலி,கிண்டல் பேச்சு,நலம் விசாரிப்புகள்,வாழ்த்துபரிமாற்றம் அவர்களுடன் நேரச்செலவிடுதல் இவைதான் ஒரு பண்டிகையின் உண்மையான கொண்டாட்டம், உண்மையான மகிழ்வு இது எல்லாமே எனக்கு ஒவ்வொரு பொங்கலுக்கும் என்னோட கிராமத்துல கிடைக்கும்.இது வேறெந்த பண்டிகைக்கும் கிடைக்காது.


அடுத்த நாள் மாடு பிடித்த கதையை எழுதலாமா?வேணாமா யோசித்துக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம்.

__________________________________________________________________________________________________________________________
இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதி வருகிறேன்.உங்கள் ஆதரவை அங்கும் எதிர்பார்க்கிறேன் ,நன்றி.
_____________________________________________________________________________________________________________________________


மேலும் வாசிக்க "மாட்டுப்பொங்கல் வாழ்த்து யாருக்கு?"

Saturday, January 21, 2012

தானே முன் வரலாமே...


வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.அதற்கான நிவாரணங்கள் அரசு,தனியார் என பல இடங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.ஆனால் சேதம் ,இழப்பு கணக்கிட இயலாதது.அவற்றை ஈடு செய்வது என்பதும் முடியாத ஒன்றுதான்.

நம் மக்களுக்கு நமது சகோதர,சகோதரிகளுக்கு நாம் உதவாமல் போவோமா?குஜராத் பூகம்பம்,கார்கில் நிதி,சுனாமி நிவாரணம் இப்படி எல்லா நேரங்களிலும் நமது மக்களுக்காக நாம் அளித்த பங்கு கணிசமானது என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூராமமலிருக்க முடியாது.
இப்போது தானே ஏற்படுத்திய துயரத்தை சற்றே துடைக்கும் வகையில் விகடன் குழுமம் தனது சார்பில் ரூ.10 லட்சத்தை அளிக்க முன் வந்துள்ளது அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் சார்பில் வாசகர்களிடமிருந்தும் உதவிக்கரம் நீட்ட கோரியுள்ளது.வாசகர்களும் ஆதரவுக்கரம் நீட்டியவண்ணம் உள்ளனர்.

நண்பர்களே!வலைப்பூ வாசகர்களே!

இந்தப்பதிவு மூலம் உங்களையும் தங்களால் முடிந்த அளவு தானேவால் ஏற்ப்பட்ட துயரம் துடைக்க உதவுமாறு வேண்டுகிறேன்.இதன் விபரங்களுக்காக விகடனால் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகப்பக்கம்  http://www.vikatan.com/thane/  இங்கே சென்று விபரங்கள் பெறலாம்.இது குறித்த விகடனின் அறிவிப்பு இதோ,
________________________________________________________________________________________________________________
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
நெஞ்சில் ஈரம் உள்ள அனைவரும் நம் தமிழ்ச் சொந்தங்களின் துயர் துடைக்க முன்வரலாம். Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: ICIC 0000009 , நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாக அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IDIB000C032 , எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், கீழே நாங்கள் அளித்து உள்ள படிவத்தையும் தயவுசெய்து  பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
வாருங்கள் வாசகர்களே... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்


- ஆசிரியர்

 ____________________________________________________________________________________________________________


நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் உதவி சேகரித்து வருகிறேன், கணிசமான தொகை சேர்ந்ததும் விகடன் மூலம் உரியவர்களுக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.
எனது icici savings acc.no - 099601500497
Name- M.GOKUL
Branch- Karaikal .
இந்த சேமிப்பு கணக்கிற்கும் நீங்கள் பணமாக அனுப்பலாம். வலைப்பூ நண்பர்கள் சார்பாக அந்த பணத்தை அனுப்பி விடுகிறேன்.எனது கணக்கிற்கு பணம் அனுப்புபவர்கள் gokul304@gmail.com மெயிலுக்கோ அல்லது +91 9486146881,  +91 9791961976 என்ற எனது தொலைபேசியிலோ முன்னமே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விடுங்கள். பணம் அனுப்பியவர்களது பெயரை பணம் அனுப்பியதும் எனது தளத்தில் பணம் அனுப்பியதற்கான சான்றுடன் வெளியிடுகிறேன்.முடிந்தவரை பணம் அனுப்புபவர்கள்(எனக்கு அனுப்புபவர்கள் மட்டும்) அடுத்த வெள்ளிக்குள்(27/01/2012) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முடிந்தவரை இந்த பதிவை பலரிடம் கொண்டு சேர்க்கவும்.நன்றி.

மேலும் வாசிக்க "தானே முன் வரலாமே..."

Friday, January 20, 2012

நாங்களும் பொங்குவோம்லஎன் இனிய வலை மக்களே! உங்கள் பாசத்துக்குரிய கோகுல் மனதில் கோகுல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.இந்த முறை உங்களுக்கு சமர்ப்பிக்க எனது கிராமத்தின் சில பக்கங்களை  வண்ணங்களாக என் எண்ணங்களாக எடுத்து வந்திருக்கிறேன். கொங்கு மண்டலத்தின் கடைக்கோடியில் இருக்கும் இந்த கிராமத்தின் ஒரு திருநாளில் எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,வாருங்கள் இந்த கிராமத்தில் திரியும் பறவையாக மாற உங்களையும் அழைக்கிறேன்.படமெடுக்க நண்பனாய் எனது கைப்பேசி காமிராவுடன்,எனது அனுபவமும்,ஒரு கிராமத்தின் கொண்டாட்டமும் உங்கள் பார்வைக்காக இதோ,
                                          

நேத்து நைட்டு கே டி.வில பாரதிராஜா படமெல்லாம் எதுவும் பாக்கலைங்க,பொங்கலுக்கு ஊருக்கு போய் வந்ததுல தானா கை அப்படி டைப் அடிக்க ஆரமிச்சுடுச்சு.இது என்னோட கிராமத்துல எனது பொங்கல் அனுபவம் அதாங்க மேட்டரு.சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?இளையராஜா சரியாதான் பாடியிருக்காரு.சொந்த ஊர் அனுபவம் எல்லாருக்கும் அப்படித்தான்.நான் எப்பவும் பொங்கலின் போது எனது கிராமத்தில் இருக்க தவறியதில்லை.எப்பாடு பட்டாவது(இவ்விடத்தில் எத்தனை பல புளுகு மூட்டைகளை அவிழ்த்தாவது என அர்த்தம் கொள்க)லீவு வாங்கி நான்கைந்து நாள் அங்கே இருப்பது போல் போய்விடுவேன்.


போகியன்று மூச்சுத்திணற வேலைக்கு போய் வந்து அன்னைக்கு இரவு கிளம்பி போனேன்,முதல் மரியாதை க்ளைமாக்சில் ராதா வரும் போது சிவாஜிக்கு சிலிர்ப்பது போல எனக்கும் சிலிர்த்தது(கொஞ்சம் பனி ஜாஸ்தி).போனவுடன் அந்த சூழல் எனக்கு ஓட்ட மறுத்தது என்னை மறந்து போய் விட்டாயே என ஊடல் கொண்ட காதலியைப்போல.கொஞ்ச நேரம் கழித்து உறவுகளின் நலம் விசாரிப்புக்குப்பின் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக எனது நிலையை புரிந்து கொண்டு ஊடல் தீர்ந்து என்னுடன் கலக்க ஆரம்பித்தது.இப்போதும் சிலிர்த்தது ஆனால் இப்போது காரணம் பனி அல்ல.

நீங்கல்லாம் போகிக்கு என்ன எரிச்சிங்கன்னு கேட்டேன்.நம்மக்கிட்ட என்ன இருக்கு எரிக்க அப்படின்னாங்க.அங்கெல்லாம் எதுவும் இல்லன்னாலும் எதையாவது போட்டு எரிப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்.இங்க போகிய காப்புக்கட்டு அப்படின்னு சொல்லுவோம்.அதாவது வேப்பிலையுடன் ஆவாரம்பூ,பூளைப்பூ இதெல்லாம் சேத்து கட்டி வீடு,மாட்டு கொட்டகை,வாகனங்கள்,வயல் இங்கெல்லாம் வைப்போம்.அவ்வளவுதான்.

                        
                                               ( இது மட்டும் நெட்டில் சுட்டது )
                          
பொங்கல்னா கரும்பு இல்லாமலா?அல்வாவ திருநெல்வேலியிலயும்,மாம்பழத்த சேலத்துலயும்,வாங்குறது தான் சிறப்பு அதுபோல கரும்பு வாங்க கரும்புத்தோட்டத்துக்கே போயாச்சு.நாம காட்டுற கரும்ப வேரோட புடுங்கித்தந்தாங்க.பத்து கரும்ப ரெண்டு பேரு தூக்க முடியல அவ்வளவு கனம். 


கரும்ப தோட்டத்துல வாங்கிட்டு மஞ்சள மட்டும் கடையிலையா வாங்குவோம்?பக்கத்து தோட்டத்துக்கு போய் அதையும் புடுங்கி வந்தாச்சு,இதையெல்லாம் பாக்கும் போது நமக்கு தேவையானத நாமளே விளைய வைச்சு மத்தவங்களுக்கும் கொடுக்குறத விட்டுட்டு,கையெழுத்து போட்டுட்டு நமக்கு மேல ஒரு மேனேஜர்,அவருக்கு ஒரு மேனேஜர் யாரோ முதலாளிக்கு சொல்லும் வேலையை செய்ய போனதை நினைத்து ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி உறுத்தியது.ALL IS WELL.


வாங்கி வந்த கரும்பு மஞ்சளுடன் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து,கடந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்ததற்க்கு நன்றியும் இவ்வருட விளைச்சல் அமோகமாக இருக்க துணைபுரிய வேண்டுதலும் செய்தோம்.பொங்கல் படைச்சு முடிச்சு அக்கம்,பக்கம் உள்ளவங்க எல்லோரும் பொங்கல் பரிமாற்றம் வாழ்த்து பரிமாற்றம் பண்ணிக்கிட்டோம்.பொங்கல் சாப்பிட்டுட்டு ஒரு கரும்பை கையில எடுத்துக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டே  ஊர் சுத்த கிளம்பியாச்சு.


கிராமத்துலே சிறப்பே மாட்டுப்பொங்கல் தான் அது எப்படி இருந்ததுன்னு இன்னுமோர் பதிவில பாப்போம்...

மேலும் வாசிக்க "நாங்களும் பொங்குவோம்ல"