Tuesday, December 23, 2014

தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!


தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி  பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வேற  கேப்பாங்க இல்ல). அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் அதி(பயங்கர) மேதாவிகளே.



நீங்கள்தான்  ரசிகர்களின்  கலைத்தாகத்தை தீர்க்கும் அமுதத்தை ,(அடிக்கடி சொல்லமாட்டேன் நீங்களே அவ்வப்போது இந்த பத்தியில எங்கெங்க தேவைப்படுதோ  போட்டுக்கங்க,எதையா? ஏன்யா என் வாயாலே சொல்ல வைக்குறிங்க?அதான் ,அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்)தரும் வல்லவர்கள்.
நீங்கள்தான்உங்கள் கலைப்படைப்பின் மூலம் துவண்டு கிடக்கும் ரசிகனோடதை தட்டி எழுப்புகிறீர்கள்,எதையா ?என்னய்யா உங்களோட? புத்துணர்ச்சியைத்தான்.
நீங்கள் தான் ரசிகனின் தேவையை உணர்ந்து  அவனுக்கு என்ன தேவையோ அதை அவனிடம்சரியாக கொண்டு போய் சேர்ப்பதில்  கை தேர்ந்தவர்கள்.
நீங்கள் தான் உங்கள் மூளையை மீண்டும் சொல்கிறேன் உங்கள் மூளையை கசக்கிபிழிந்து புதுப்புது பரிமாணங்களில்(பரிணாமங்களில் கூட )சினிமாவை ரசிகனிடம் கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்.
நீங்கள்தான் .......இன்னும் சொல்லிக்கொண்டே போலாம் போதும் கை வலிக்கிறது.(அதுமட்டுமல்ல ஒருநாளைக்கு நான்கைந்து பொய்கள் தான் சொல்வது வழக்கம்)


விசயத்துக்கு வருவோம்
நாங்கள் ரசிகர்களுக்காக படம் எடுக்கிறோம் அவர்கள் ரசிக்கிறார்கள்,ஆனால் இந்த இணையத்தில் எழுதுபவர்கள்தான் நொர நாட்டியம் பேசுகிறார்கள்,நொட்டம் சொல்கிறார்கள் என்கிறீர்கள்.சரிதான்

நீங்கள் சோறு தானே சாப்பிடுகிறீர்கள்?அய்யய்யோ கதை கெட்டுது,(அட உங்க கதை இல்லைய்யா,நான் சொல்ல வந்த கதை) நான் சொல்ல வந்ததின் அர்த்தம் அதுவல்ல.நீங்கள் உணவு உண்கிறீர்கள் தானே.உதாரணத்திற்கு உங்கள் மனைவி சமைத்ததை சப்புக்கொட்டி சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் அப்போது உங்கள் மனைவி நேற்று டிவியில் பார்த்த புது பதார்த்தமொன்றை,நானே புதுசா ஒரு ஐட்டம் ட்ரை பண்ணியிருக்கேன் (எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்)சாப்பிடுங்கன்னு வைக்குறாங்க,அதை சாப்பிட்டதும் உங்க முகம் இஞ்சி சாப்பிட்ட சிங்கம் மாதிரி ஆனாலும் வெளிக்காட்டிக்காம நல்லா இருக்கும்மா அப்படின்னுட்டு போயிடுவீங்க( இதுதான் நீங்க சொல்ற ரசிகர்களுக்காக படம் எடுக்குறோம் அவங்க ரசிக்குறாங்க).

இப்போ  நீங்க செம்ம பசியில போய் ஒரு  ஹோட்டல்ல எது ரெடியா இருக்கோ சீக்கிரம் கேட்டுட்டு இட்லி என்றதும் நாலு வாங்கி  சாப்பிடுறீங்க,பசியடங்கிய பின் மெனு கார்டை பார்த்து இருப்பதிலே விலையுயர்ந்த ஒண்ணை ஆர்டர் செஞ்சுட்டு காத்திருக்கீங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வந்த ஐட்டமோ அன்னைக்கு உங்க மனைவி செஞ்ச புது ஐட்டத்தை விட சுமாராதான் இருக்கு.என்ன உப்பு தான் கொஞ்சம் கூட(பயபுள்ள உங்க மூஞ்ச பாத்து என்ன நினைச்சுதோ தெரியல).இப்ப உங்க ரியாக்சன் எப்படி இருக்கும் அன்னைக்கு சாப்பிட்ட மாதிரி பொத்திக்கிட்டு சாப்பிட்டுட்டு வந்துடுவீங்களா?ஓட்டலாயா நடத்துறீங்க ஓட்டலுன்னு கலகலப்புல வர்ற ஆண்ட்டி ரேஞ்சுக்கு சவுண்டு விடமாட்டீங்க?

உங்க சத்தத்தை கேட்ட ஹோட்டல் சூப்பர்வைசர் வந்து பிரச்சினையை கேட்டுட்டு,"சாப்பிட இஷ்டமா இருந்தா சாப்பிடு இல்லன்னா திண்ணதுக்கு பில்லை கட்டுட்டு போயிட்டே இரு","அவனவன் எவ்ளோ கஷ்டப்பட்டு சமைக்கிறான்,ஒரு நாள் பூரா நெருப்புல நின்னு,அங்கங்க சூடு பட்டுக்கிட்டு புகையில,மசாலா நெடியில லோல் பட்டுக்கிட்டு புதுப்புது ஐட்டமா செஞ்சு குடுத்தா நல்லாயில்லயாம்ல,நல்லாயில்ல.நாலு இட்லி சாப்டவுடனே உன் பசி அடங்கிடுச்சுல்ல,அப்பவே எழுந்து போக வேண்டியது தானே.இந்த ஐட்டமே வெளிய இருக்க கையேந்திபவன்ல பாத்திரம் கழுவுறவரு சொல்லித்தந்த மெனுயா.இஷ்டமா இருந்தா திண்ணு இல்லன்னா போயிட்டே இரு"."எங்க சாப்பாட்டை சப்புக்கொட்டி சாப்பிட நிறைய ஆளுங்க இருக்காங்க அவங்களுக்குதான் நாங்க ஹோட்டல் நடத்துறோம்,போங்க சார்"


அவர் சொல்வது போல கஷ்டப்பட்டு சமைக்கும் ஒரே காரணத்திற்க்காக நல்லா இல்லன்னா கூட மூடிக்கிட்டு சாப்பிட்டுட்டு வரவா முடியும்.
அப்படித்தான் இருக்கிறது உங்கள் பிரசங்கமும்.

ஓகே ஆல்ரைட்.கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன் இணையத்தில் இயங்கும் திரைப்படரசிகர்கள் சார்பில்.
தலைப்பை ஒரு முறை வாசிக்க,
உங்களுக்கு விமர்சனத்தை தாங்கிக்கும் பக்குவம்(வக்கு என்றும் பொருள் கொள்ளலாம்)இல்லையெனில் இணையப்பக்கம் வராமல் மூடிக்கொண்டு இருக்கவும்,எதையா உங்களுக்கு ஓயாம விளக்கம் குடுக்கனுமாய்யா?உங்கள் லேப்டாப்பையும்,இன்ன பிறதையும்.என்ன இன்ன பிறதுன்னாவா ??ஷ்ஷ்ஷ்ஷ் பா,PCயையும் மொபைலையும்.கடைசியா வைத்திருப்பது டாட்


3 comments:

ADMIN said... Reply to comment

ஆஹா... கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்...!

rajesh said... Reply to comment

ஹலோ ... ஒரு ஹோட்டல்ல போய் எல்லாரும் நல்லா இருக்குன்னு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது நீ மட்டும் வம்படியா சண்டை போடனும்னே நல்லா இல்லைன்னு சொன்னேனு வச்சிக்க ... கொஞ்சம் நேரம் பேசி பார்ப்பான்... அப்புறம் உள்ளே கொண்டு போய் விறகு கட்டையால பொளந்துடுவான்... எதுக்கு ஒரு அளவு உண்டு...

NAGARJOON said... Reply to comment

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Alloy Manufacturers in Chennai
Alloy Manufacturers in Ambattur
Best Aluminium Alloy Manufacturers in Ambattur
Aluminium Alloy Manufacturers in Chennai
Die Casting in Chennai
High Pressure Die Casting in Chennai
Gravity Die Casting in Chennai
Aluminium Die Casting in Chennai
Aluminium Pressure Die Casting in Chennai
Manufacturer of Aluminium Alloy Ingots in Chennai
Automobile Products Manufacturers in Chennai
Coupler Body Manufacturers in Chennai