Friday, August 21, 2015

க்ளிக் க்ளிக் க்ளிக்

"க்ளிக்" எழுத்து நாலு வடிலுவில் இப்படித்தான் சொல்லமுடியும்,உண்மையில் சப்தங்களை அப்படியே எழுதிட இயலாது.
சில சப்தங்களுக்கு போதையூட்டும் வல்லமையுண்டு.
கேமராவிலிருந்து வரும் சப்தமும் போதைதான்.

ஒரு போட்டோ எடுத்துட்டு வியூ பாக்கும் போது புதுப்பேட்டைல வர்ற மாதிரி ஏய்ய்ய்.......ஏய்ய்ய்ய்ய் நாந்தான்........... நாந்தான் ., அப்படி இருக்கும்.
மொபைல் கேமிராவிலும்,basic model டிஜிட்டல் கேமிராவிலும் சும்மா க்ளிக் பண்ணிக்கொண்டு எனது புகைப்படக்கலைத்திறனை(?) வளர்துக்கொண்டிருந்தேன்.சர்வன் பிறந்த பிறகு அவனுக்காகவே அவனுடன் சேர்ந்து எனது புகைப்பட ஆர்வமும்,திறமையும் வளரவேண்டுமென ஒரு DSஞ்சாLR கேமிரா வாங்கப்பட்டது.


நிச்சயம் அவன் வளந்துடுவான் 
எனது புகைப்பட ஆர்வமும்,திறமையும்?? 
காத்திருங்க...........(சன் டிவி சினிமா செய்திகள்ல வர்ற பொண்ணு ஸ்டைலில்படிங்க  )

கேமிரா என் கைக்கு வந்தது சர்வன் பிரசவித்த நேரம் போலவே தவிப்பான தருணம்.
சர்வனின் முதல் பிறந்தநாளை புது கேமிராவில் பதிவு செய்யவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கேமிரா மாடல்,விலைஆன்லைனில் வாங்குவதா,ஷோ ரூமிலா என பல விவாதங்கள்,பரிந்துரைகள் எல்லாம் முடிந்து இறுதியில் "CANON EOS 1200D" மாடல் ஆன்லைனில் ஷோரூமை விட கிட்டத்தட்ட 2500ரூபாய் குறைவாகக்கிடைத்தது.ஆனால் தலைவரின் பிறந்தநாளைக்கு இருந்ததோ ஐந்து நாட்களே,ஆர்டர் செய்தவுடன் estimated delivery date பிறந்தநாளை விட ரெண்டு நாட்கள் கழித்து இருந்தது.

ப்ரியாவுக்கு கேமிராவுக்கு இவ்வளவு செலவு செய்வது அவ்வளவாக விருப்பமில்லை,ஒரு வழியாக  சமாதானப்படுத்தி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்திருந்தேன்.இப்போ பிறந்தநாளைக்கு கேமிரா கிடைப்பது போல தெரியவில்லை என்ற தகவலை அவளிடம் சொல்வதற்கான மனோதிடம் அப்போதைக்கு என்னிடம் இல்லை.

ஆனால் நம்பினேன்,சர்வனின் பிறந்தநாளன்று கேமிரா கிடைத்துவிடுமென நம்பினேன்.எப்படியென்றால் உள்ளுக்குள் பட்சி சொன்னது"பட்சி'பட்சி"அது போக INSTINCT சொன்னது ,ஆமாம் Its "GOKUL INSTINCT".
உள்ளுக்குள்ள "கெதக்"னு இருந்தாலும் வெளிய 'கெத்'தாக காட்டிக்கொண்டேன்.

இடையே கஸ்டமர்கேர்க்கு மெயில் ஒன்றை தட்டினேன்."இந்த ஆர்டர் எனக்கு முக்கியமானது,இது எனக்கு உங்கள் estimated delivery dateஐ விட ரெண்டு நாளைக்கு முன்னதாக தேவைப்படுகிறதுetc,etc போட்டு ,கிட்டத்தட்ட சிலர் பரிட்சை  பேப்பரில் எழுதுவார்களே "என் வாழ்கையே உங்க கையில தான் இருக்கு எப்படியாவது எனக்கு பாஸ்மார்க் போட்டுடுங்க"னு.கிட்டத்தட்ட அப்படியான மெயில் அது.

ஆன்லைனில் ஆர்டரை  நாலு  நாட்களாக ட்ராக் செய்துகொண்டே இருந்தேன்.
பிறந்தநாளைக்கு முதல் நாளானது."என்ன கேமிரா இன்னும் காணோம்?"
இல்லம்மா ட்ராக் பண்ணிட்டு இருக்கேன் நாளைக்கு காலைல வந்துடும்னு சொல்லி சமாளிச்சுட்டேன்.முதல் நாள் இரவு ட்ராக் செய்து பார்க்கையில் பார்சல் பாண்டியை வந்தடைந்தது தெரிந்தது.பெருமூச்சிலும் பெருமூச்சு அப்போதுதான் வந்தது.ஆனாலும் இந்த கொரியர் பாய்ஸை நம்ப முடியாது நல்லா வைச்சு செய்வாங்களே.அதனால கொரியர் கஸ்டமர்கேர்க்கு தொலைபேசி "நானே உங்க இடத்துல வந்து என் பார்சலை வாங்கிக்குறேன் இடம் எங்கேன்னு சொல்லுங்க"அப்படின்னேன்.அவங்களோ இடத்தையெல்லாம் சொல்ல முடியாது சார் உங்க இடத்துக்கே வரும் அப்படின்னாங்க,சரிங்க இன்னைக்கு கிடைக்குமா அப்படின்னு கேட்டா தெரியல சார் அது எல்லா ப்ராசஸூம் ,முடிஞ்சா தான் தெரியும் அப்படின்னுடாங்க.என்னடா இது GOKUL INSTINCTக்கு வந்த  சோதனைன்னு நினைச்சுகிட்டு,பிறந்தநாளன்று  ஆபீஸ்ல முக்கியமான வேளை இருக்கு போயிட்டு பத்து மணிக்கு வந்துடறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.(அப்பாடா கொஞ்ச நேரம் எஸ்கேப்)

ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி மதியம் பார்சல் வந்துடுமாம்னு சும்மக்காசும் சொல்லிட்டேன்.பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தா இராம.நாராயணன் படத்தில் வில்லனை பழி வாங்கும் நேரத்தில் வரும்உக்கிர அம்மன் சாயலில் அம்மணி.
"உன்னை நினைத்து சார்லி- பேட்டரி போடல?
சிங்க முத்து-போடல"சீன் போல என்னம்மா இன்னும் பார்சல் வரல என கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.ஆபத்பாந்தவனாய் ஒரு அழைப்பு வந்தது.

"ம்,கோகுல் தான் சொல்லுங்க,...........
............................
சரி,இப்போ எங்கே இருக்கீங்க?...........
............................
நான் வீட்ல தான் இருக்கேன்.வாங்க வாங்கிக்கிறேன்.பக்கமா வந்து கால் பண்ணுங்க."ஓகே.

"என்னங்க கொரியர்ல இருந்தா போன்,பார்சல் வந்துடுச்சா?"
ஆ...மாம்.
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் அதே அழைப்பு."வீட்டுக்கு வெளியே நிக்குறேன் வாங்க"பேசிவிட்டு மனைவிடம் எம்ப்டி சிலிண்டர் எங்க இருக்குன்னு கேட்டேன்.இப்ப எதுக்குங்க எம்ப்டி சிளிண்டர்னு கேட்டா.இல்லம்மா வந்தது கொரியர் கால் இல்ல முந்தாநேத்து புக் பண்ண கியாஸ் சிலிண்டர்னு சொல்ல,என் நிலைமை உங்கள் கற்பனைக்கு.

மற்றொரு அரைமணி கழித்து இன்னுமோர் அழைப்பு இந்த முறை கண்டிப்பாக கொரியர் காலாகத்தான் இருக்குமென சும்மா இல்லாமல் இந்த INSTINCT வேறு சொல்லியது."ஹலோ............................,"

இந்த முறை அவள் நம்பவில்லை,அடுத்த பத்தே நிமிடத்தில் வந்துசேர்ந்தது கொரியர் வண்டி.கையெடுத்து கும்பிடாத குறையாக வாங்கிக்கொண்டேன்.சர்வன் பிறந்து என்கையில் தவழ்ந்த தருணம் போல சரியாக அவன் பிறந்தநாளன்றே அந்த அனுபவம் கிடைத்தது.கேமிராக்குழந்தை.
 
 இப்போது என் கையில்.இப்போ இன்னுமொரு பிரச்சினை MANUAL எல்லாம் படிக்க நேரமில்லை DSLR அது நாள் வரை தொட்டுப்பார்த்தது கூட கிடையாது.எப்படி படம் எடுக்கப்போகிறோம் என்ற திகில் எட்டிப்பார்த்தது.சொல்லப்போனால் நானும் போட்டோவில் வர வேண்டும் அல்லவா அப்படியானால் சில போட்டோக்களை எடுக்க யாருக்காவது சொல்லி வேற தரவேண்டும் (எப்படி சிக்கி இருந்தேன் பாத்தீங்களா?)போதாததற்கு ஏற்கனவே இருந்தா பேசிக் மாடல் டிஜிடல் காமிராவும் இயங்கவில்லை.
 
புது பேட்டரியை சார்ஜ் போட்டுட்டு ,சரி  இருக்கவே இருக்கு மொபைல் நிலைமை கைமீறிப்போனால் மொபைல்ல பாத்துக்கலாம்னு வேலையை பாக்க ஆரம்பிச்சாச்சு.(வேற வழி).சார்ஜ் ஆன பேட்டரியை கேமிராவில் பொருத்தி லென்சை கேமிரா மாட்டி முதல் போட்டோ எடுக்க போகஸ் செய்தால் திக் திக் சப்தத்தை என் செவி உணர்ந்தது.அந்த முதல் "க்ளிக்" சப்தம் 
ப்ப்ப்ப்பா.சிலிர்த்தே விட்டது.முதல் போட்டோ வியூவில் பார்க்க பொத்தானை அமுக்கும் போது கை நடுங்க துவங்கியது
 
.பார்த்தவுடன் எனக்கு நானே சொல்லிக்கொண்டது நீ பிறவிக்கலைஞன்டா.
 பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தேறியது.எனது விலா தப்பியது.
நட்புடன்,
ம.கோகுல்9 comments:

Nagendra Bharathi said... Reply to comment

காமிரா கதை அருமை

சீனு said... Reply to comment

//உள்ளுக்குள்ள "கெதக்"னு இருந்தாலும் வெளிய 'கெத்'தாக காட்டிக்கொண்டேன்.// ha haa haa

சித்திரமும் கைப்பழக்கம் தானே.. என்ன நம்மைப் போன்ற பிறவிக் கலைஞர்களுக்கு அது தேவை இல்லை ;-)

Geetha said... Reply to comment

வணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்...நன்றி

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

வணக்கம்...

தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

how is it ...? excited...? put a comment... thank you...

அன்புடன்
பொன்.தனபாலன்
9944345233

ADMIN said... Reply to comment

இப்படி ஒரு கேமிரா கதையா? பரவால்ல.. விலா எலும்பு தப்பிச்சதே! அதுவரைக்கும் சந்தோசம்தான். முதல் படம் அதைவிட சந்தோஷத்தை கொடுக்குது. அருமையா இருக்கு கோகுல். !

NAGARJOON said... Reply to comment

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Bharatanatyam Dancer
Bharatanatyam exponent
Bharatanatyam USA
Bharatanatyam Reviews
Bharatnatyam classes in New Jersey
Dance Schools for Bharatanatyam
Bharatanatyam teachers
Best Bharatanatyam Dancers
Natya shastra scholar
Bharatnatyam classes
Bharatanatyam Karanas
Bharatanatyam Dance Workshop
Dancer Workshop
Workshop for Bharatanatyam Dance

Mk said... Reply to comment

Really masss neenga.....

Buy instagram followers India said... Reply to comment

They are so informative post. I likes you post. Few days back i bought 50k active followers for instagram, and i would also suggest best website to Buy instagram followers India

Regrads,
SNK Social Fame

smmshop99.com said... Reply to comment

I read this article. I think You put a great deal of exertion to make this article.
buy instagram likes
high quality smm service provider
We Provide High Quality Smm Service Buy Smm Services