Showing posts with label மோட்டல். Show all posts
Showing posts with label மோட்டல். Show all posts

Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை.

வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை விட்டு இறங்கியவுடன் நாமும் மறந்து தான் போகிறோம்.
யாராவது கேட்டாலும் நமக்கென்ன என யாரும் கண்டு கொள்வது கிடையாது.இங்கே எல்லாம் இப்படித்தான் நடக்கும் என சகித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதற்கு பயந்துகொண்டே(அ) சமாளிக்க இயலாமல் எத்தனையோ  வயிறுகள் பட்டினியாக பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.பிசைக்காரர்களாவது,அம்மா தாயே என கேட்டு தான் பிச்சை வாங்குகிறார்கள்,கொள்ளைக்காரர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இவர்கள் இதில் எந்த பட்டியலில் வருகிறார்கள் என தெரியவில்லை.,


ஒரு சாம்பிள் இதோ .,


இது மாமல்லபுரம் புலிக்குகைக்கு எதிரே உள்ள மோட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்,அச்சிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை மார்க்கரால் அழித்துவிட்டு பத்து ரூபாய் பாக்கெட்டை பதினைந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.(எம்.ஆர்.பி.யில் மாற்றம் செய்வது,அதற்கு மேல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்.)

இவங்களை என்ன தான் செய்வது? நீங்களே சொல்லுங்கள்,

மேலும் வாசிக்க "பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??"

Thursday, September 22, 2011

மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!







 வணக்கம் நண்பர்களே!
முந்தைய பதிவில் இதற்க்கு கூட காசு வாங்கணுமா? என மோட்டல் கழிவறைகளின் கொடுமையை கூறியிருந்தேன்.கழிவறைகள் தான் இப்படி இருக்கின்றன.

சரி!சாப்பிடலாம்னு போனா விலையெல்லாம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு.தரமோ கையேந்திபவன விட கேவலம்.ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஓசூரில் இருந்து சேலம் வரும்போகும்போது கிளம்பற அவசரத்துல சாப்பிடாம கிளம்பிட்டேன்.செம பசி  வழியில் கிருஷ்னகிரிக்கு அருகில் உள்ள ஒரு மோட்டல்ல பஸ் நின்னுச்சு.

சாப்பிடலாம்னு போய் உக்காந்தேன்.
மெனு கார்ட் கொடுத்தார்கள்.அடங்கோ!இது வேறயான்னு நினைச்சுகிட்டு மெனுவை பார்த்து ஷாக்காகிட்டேன்.டிஷ்சுக்கு ஒரு ரேட்டாம்.சைட் டிஷ் தனி ரேட்டாம்!பரோட்டா முப்பதுரூபா!அதுக்கு சைட் டிஷ் முப்பது ரூபாயாம்!சரி ஒருடீ குடிச்சுட்டு வேளைய முடிசுக்கலாம்னு பாத்தா டீயே எட்டு ரூபாயாம்!நினைவு கொள்ளுங்கள் மூன்று வருடங்களுக்கு முன்!சரி பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கலாம்னு பாத்தா எம்.ஆர்.பியை விட மூன்று ரூபாய் அதிகம்!வாட்டர் பாட்டிலும்தான்!


வேற வழியில்லாமஅன்னைக்கு ஒரு பிஸ்கட் பாக்கட்டோட அன்னைய பசிய அடக்கிகிட்டேன்!அன்னைக்கு முடிவு பண்ணேன்.கொய்யால இனிமே இந்த மோட்டல்ங்க பக்கமே வரக்கூடாதுன்னு.அதுக்கப்பறம் பஸ்ல போகனும்னா வீட்ல இருந்தே ஒரு பாட்டில்ல தண்ணியும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் எடுத்துட்டு போயிடுறேன்!.இருந்தாலும் தொலைதூரப்பயணங்களில் பசிக்கொடுமைக்கு பயந்து கேக்குற காச கொடுத்து சாப்பிட வேண்டிய கட்டாயம் பலருக்கு இருக்கு.


இருந்தாலும் சும்மாவேனும் பஸ் நிக்கும் மோட்டல்லலாம்போய் நாலைஞ்சு அயிட்டங்களை விலை கேட்பேன்.பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்தது போல அதிக விலைதான்.விலைய கேட்டுட்டு ஏற இறங்க பாத்துட்டு வந்துடுவேன்!.
இப்படி பஸ்சுக்கு பத்து பேர் விலைய மட்டும் கேட்டுட்டு எதையும் வாங்காம திரும்பி வந்தா அவங்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்.


இதுல நடக்கும் இன்னொரு கொடுமை என்னன்னா பேருந்து ஓட்டுனர்கள் குறிப்பிட்ட மோட்டல்களில் பஸ்ஸை நிறுத்த மேலிடத்திலிருந்து கட்ட்யாப்படுத்தப்படுகின்றனர்.இதை மக்கள் தொலைக்காட்சி கொஞ்ச நாள்களுக்கு முன் படம் பிடித்துக்காட்டியது.போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகளே பேருந்துகளை குறிப்பிட்ட நிறுத்துமாறு திருப்பி விட்டதை காட்டியது அதிர்ச்சி அளித்தது.மேலும் கடந்த பதிவிற்கு நண்பர் சம்பத்குமார்(TAMILPARENTS.COM) அனுப்பிய மெயிலில் மோட்டல் நிர்வாகத்தினரால் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் “நன்கு’’ கவனிக்கப்படுவதாலும்,மக்கள் பிரதிநிதிகள் பேருந்துப்பயணம் மேற்கொள்ளாமல் காரிலேயே வலம் வருவதாலும் இந்த நிலை தொடர்வதாகவும் ஆதங்கப்பட்டார்.

நானறிந்தவரை(நீங்களும்தான்) தமிழகத்திலுள்ள பெரும்பாலான மோட்டல்களில் சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் இல்லை.விற்கப்படும் உணவுப்பொருட்கள் எம்.ஆர்.பி.யை விட மூன்று ரூபாய் முதல் அதிகமாகவே விற்கப்படுகின்றன.மேலும் உணவுப்பொருட்கள் தரமாக இருப்பதாகவும் தெரியவில்லை.


இன்னொரு சந்தேகமும் இருக்கிறது தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் எத்தனை முறையான அனுமதி பெற்று இயங்குகின்றன? என்பது தான் அது.ஆனால் “முறையான”அனுமதியுடன் பல மோட்டல்கள் இயங்குவதே உண்மை.

கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததைப்போல் FACEBOOK-ல் ASK கேட்டால் கிடைக்கும் என்ற குழுவின் மூலம் இது போல் அதிக விலைக்கு உணவுப்பொருட்களை விற்ற திருத்தணியில் உள்ள ஒரு மோட்டலைப்பற்றி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புகார்கள் தொலைபேசி மூலம் அளிக்கப்பட்டன.


இதே போல் ஊரில் உள்ள அணைத்து மோட்டல்களின்`தரத்தையும்,விலையையும் அரசே நிர்ணயித்து அனுமதி வழங்கி,அந்த மோட்டல்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்த போக்குவரத்து துறையினரை பணிக்கவேண்டும் என ஒரு கோரிக்கையை அரசுக்கு நாம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டும்.இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!நன்றி!

பின்குறிப்பு-விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் செங்கல்ப்பட்டு அருகில் மாமண்டூர் என நினைக்கிறேன்.அங்கு ஒரு மோட்டல் உள்ளது.இங்கே கழிப்பிடம் இலவசம்,அதுவும் அதி சுத்தமாய்!(அதியசம் ஆனால் உண்மை).பொருட்களும் நியாமான விலையில்.விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் இங்கே நின்று செல்லுமாம்.விழுப்புரம் கோட்ட நிர்வாகம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்,தெரியவில்லை.இது போல் எல்லா மோட்டல்களும் அமைந்து விட்டால் நமது பயணம் புத்துணர்ச்சியுடன் முடியும் என்பதில் சந்தேகமில்லை. 
__________________________________________________________________________________

நண்பர்களே!இந்த பதிவை(கடந்த பதிவையும்) தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துசெல்லுங்கள்!
__________________________________________________________________________________



மேலும் வாசிக்க "மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!"

Monday, September 19, 2011

இதுக்கு கூட காசு வாங்கணுமா?



நாம் ஏதாவது பயணம் மேற்கொள்ளும்போது அது,ரயில் பயணமாக இருந்தா தப்பிச்சோம்.ஏன்னா ரயில் பயணங்களில் சாப்பிடவும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் பிரச்சினை இல்லை.திட்டமிட்ட பேருந்துப்பயணமா இருந்தா சாப்பிட ஏதாவது கட்டுச்சோறாவது எடுத்துட்டுப்போவோம்.ஆனால் இயற்கை உபாதைகளை கழிப்பதில் பிரச்சினைதான்.


திடீர் பயணம் செய்யும் போது(பேருந்துகளில்) எதுவும் எடுத்துட்டு போக முடியாது.அந்த மாதிரி நேரத்துல சாப்பிடவோ இயற்கை உபாதைகளை கழிக்கவோ பேருந்துகள் வழியில் நிற்கும் மோட்டல்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இந்த மோட்டல்கள் பார்த்தாலே மிரள வேண்டியிருக்கிறது.பெரும்பாலான மோட்டல்கள் பயணிகளிடம் பணம் பிடுங்கும் கொள்ளைக்கூட்டமாகவே செயல்படுகிறது.அது கூட பரவால்லைங்க,ஒன்னுக்கு உடுறதுக்கு கூட மூணு ரூவாயில இருந்து ஐஞ்சு ரூவா வரைக்கும் புடுங்கறாங்க.








 சரிடா!காசுதான் வாங்குரிங்களே!கொஞ்சமா சுத்தமா வச்சுக்கப்படாதா?உள்ள போனா 
குடலப்புடுங்குது,நாத்ததோட வயித்தெரிச்சலும் கூட சேர்ந்து ஒண்ணுமே வரமாட்டேங்குது போங்க!
ஆம்பிளைங்க பாடுவது பரவால்ல பஸ் நிக்கற இடத்துல ஏதாவது ரோட்டோரமா வேலைய முடிச்சுட்டு போய்டலாம்.பெண்கள் பாடுதான் திண்டாட்டம்.


எனக்கு ஒரு விஷயம் தான் புரியல,காசு கொடுத்து அரிசி வாங்க முடியாத ஏழைகள் இருக்காங்கன்னு தான ரெண்டு ரூவாய்க்கும்,இலவசமாவும் அரிசி போடுறாங்க.சாப்பிடவே செலவு செய்ய முடியாதவன இதுக்கு செலவு செய்ய வைப்பது என்ன லாஜிக்கோ?


கிரைண்டர்,மிக்சி.பேன்,லாப்டாப் இதெல்லாம் இலவசமா கொடுக்கும் போது பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பறை நடத்தமுடியாதா ?அத டெண்டர் விட்டு சம்பாதிக்கனுமா?


ஒரு வேளை இவங்க இந்த விசயத்துல மொபைல் நெட்வொர்க் காரர்களின் பாலிசிய பாலோ பண்றாங்களோ?அதாங்க இன்கமிங் ப்ரீ.அவுட்கோயிங்குக்கு காசு!


பேருந்துநிலையங்கள் என்று மட்டுமல்ல சுற்றுலாதளங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் போதுமான அளவில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தருவது அரசின் கடமை இல்லையா?நாமெல்லாம் அடக்கிக்கொண்டு போகத்தான் யாரும் இது பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அரசின் செவிக்கு கேட்கும் அளவுக்கு குரல் கொடுப்போம்.படிக்கும் நண்பர்கள் இதனை அரசுக்கு கொண்டு செல்ல தேவையான ஆலோசனைகள் தரவும்.


FACEBOOK-ல்கேட்டால் கிடைக்கும்-ASKஎன்ற அமைப்பின் மூலம் இது போன்ற விஷயங்களை கேட்பதற்கான சிறிய விதை போடப்பட்டுள்ளது.இந்த குழுவில் உள்ளவர்களும் இது குறித்து ஆலோசனைகளும் முயற்சிகளும் செய்யவும்!மன்னிக்கவும்!செய்வோம்!
__________________________________________________________________________________


இப்படிப்பட்ட பயணங்களின் போது சாப்பாட்டிக்கு படும் பாடு அடுத்த பதிவில்!
__________________________________________________________________________________


நன்றி-இணையங்கள் for photos&my friend madesh(last photo)

மேலும் வாசிக்க "இதுக்கு கூட காசு வாங்கணுமா?"