Monday, September 19, 2011

இதுக்கு கூட காசு வாங்கணுமா?நாம் ஏதாவது பயணம் மேற்கொள்ளும்போது அது,ரயில் பயணமாக இருந்தா தப்பிச்சோம்.ஏன்னா ரயில் பயணங்களில் சாப்பிடவும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் பிரச்சினை இல்லை.திட்டமிட்ட பேருந்துப்பயணமா இருந்தா சாப்பிட ஏதாவது கட்டுச்சோறாவது எடுத்துட்டுப்போவோம்.ஆனால் இயற்கை உபாதைகளை கழிப்பதில் பிரச்சினைதான்.


திடீர் பயணம் செய்யும் போது(பேருந்துகளில்) எதுவும் எடுத்துட்டு போக முடியாது.அந்த மாதிரி நேரத்துல சாப்பிடவோ இயற்கை உபாதைகளை கழிக்கவோ பேருந்துகள் வழியில் நிற்கும் மோட்டல்களையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் இந்த மோட்டல்கள் பார்த்தாலே மிரள வேண்டியிருக்கிறது.பெரும்பாலான மோட்டல்கள் பயணிகளிடம் பணம் பிடுங்கும் கொள்ளைக்கூட்டமாகவே செயல்படுகிறது.அது கூட பரவால்லைங்க,ஒன்னுக்கு உடுறதுக்கு கூட மூணு ரூவாயில இருந்து ஐஞ்சு ரூவா வரைக்கும் புடுங்கறாங்க.
 சரிடா!காசுதான் வாங்குரிங்களே!கொஞ்சமா சுத்தமா வச்சுக்கப்படாதா?உள்ள போனா 
குடலப்புடுங்குது,நாத்ததோட வயித்தெரிச்சலும் கூட சேர்ந்து ஒண்ணுமே வரமாட்டேங்குது போங்க!
ஆம்பிளைங்க பாடுவது பரவால்ல பஸ் நிக்கற இடத்துல ஏதாவது ரோட்டோரமா வேலைய முடிச்சுட்டு போய்டலாம்.பெண்கள் பாடுதான் திண்டாட்டம்.


எனக்கு ஒரு விஷயம் தான் புரியல,காசு கொடுத்து அரிசி வாங்க முடியாத ஏழைகள் இருக்காங்கன்னு தான ரெண்டு ரூவாய்க்கும்,இலவசமாவும் அரிசி போடுறாங்க.சாப்பிடவே செலவு செய்ய முடியாதவன இதுக்கு செலவு செய்ய வைப்பது என்ன லாஜிக்கோ?


கிரைண்டர்,மிக்சி.பேன்,லாப்டாப் இதெல்லாம் இலவசமா கொடுக்கும் போது பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பறை நடத்தமுடியாதா ?அத டெண்டர் விட்டு சம்பாதிக்கனுமா?


ஒரு வேளை இவங்க இந்த விசயத்துல மொபைல் நெட்வொர்க் காரர்களின் பாலிசிய பாலோ பண்றாங்களோ?அதாங்க இன்கமிங் ப்ரீ.அவுட்கோயிங்குக்கு காசு!


பேருந்துநிலையங்கள் என்று மட்டுமல்ல சுற்றுலாதளங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் போதுமான அளவில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தருவது அரசின் கடமை இல்லையா?நாமெல்லாம் அடக்கிக்கொண்டு போகத்தான் யாரும் இது பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அரசின் செவிக்கு கேட்கும் அளவுக்கு குரல் கொடுப்போம்.படிக்கும் நண்பர்கள் இதனை அரசுக்கு கொண்டு செல்ல தேவையான ஆலோசனைகள் தரவும்.


FACEBOOK-ல்கேட்டால் கிடைக்கும்-ASKஎன்ற அமைப்பின் மூலம் இது போன்ற விஷயங்களை கேட்பதற்கான சிறிய விதை போடப்பட்டுள்ளது.இந்த குழுவில் உள்ளவர்களும் இது குறித்து ஆலோசனைகளும் முயற்சிகளும் செய்யவும்!மன்னிக்கவும்!செய்வோம்!
__________________________________________________________________________________


இப்படிப்பட்ட பயணங்களின் போது சாப்பாட்டிக்கு படும் பாடு அடுத்த பதிவில்!
__________________________________________________________________________________


நன்றி-இணையங்கள் for photos&my friend madesh(last photo)

25 comments:

சம்பத்குமார் said... Reply to comment

//இந்த மோட்டல்கள் பார்த்தாலே மிரள வேண்டியிருக்கிறது.பெரும்பாலான மோட்டல்கள் பயணிகளிடம் பணம் பிடுங்கும் கொள்ளைக்கூட்டமாகவே செயல்படுகிறது.அது கூட பரவால்லைங்க,ஒன்னுக்கு உடுறதுக்கு கூட மூணு ரூவாயில இருந்து ஐஞ்சு ரூவா வரைக்கும் புடுங்கறாங்க.//

உண்மைதான் நண்பரே..மோட்டல்கள் இருக்கும் பகுதியின் சுத்தம் சுகாதாரம் படு மோசம்.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

மோட்டல்கள் இலவச நோய் விநியோகத் திட்டமாக அறிவித்திடாமல் இருந்தால் சரி.

காட்டான் said... Reply to comment

உண்மைதான் மாப்பிள இது சிந்திக்க வேண்டிய விடயம்தான்... தெருவோரங்களில் அதிக கழிப்பிடங்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.. இதில் நானே அனுபவபட்டது.. ஆனா பெண்கள் பாடுதான் கஷ்டம்..

செங்கோவி said... Reply to comment

//அதாங்க இன்கமிங் ப்ரீ.அவுட்கோயிங்குக்கு காசு!//

ஹா..ஹா..சூப்பர் கோகுல்.

தனிமரம் said... Reply to comment

உண்மைதான் சகோ இந்த அவதி அதிகம் இதை அரசு கவணத்தில் எடுக்கனும் மக்களின் திண்டாட்டம் தீர்க்கனும்!

மகேந்திரன் said... Reply to comment

அதிமுக்கிய விஷயம் நண்பரே...
எங்கேயாவது ஊருக்கு போகும் போது பேருந்து நிலைய கழிவறைக்குப் போனால் அவ்வளவுதான் மூக்கு ஒரு பத்து நாளைக்கு வேலை செய்யாது... அவ்வளவு அசுத்தம்....
அதிலும் காசு வாங்கிப் போடுவதில் தான் குறியாக இருப்பார்கள்...
சரியான கேள்வி கேட்டீர்கள் நண்பரே...
எத்தனையோ இலவசங்கள் கொடுக்கையில் மனித இயற்கை உபாதைக்கு போக இலவச இடம் இல்லையா ???

உங்களுக்கெல்லாம் போது இடத்தில வந்தா தானே தெரியும்.......

சத்ரியன் said... Reply to comment

//எனக்கு ஒரு விஷயம் தான் புரியல,காசு கொடுத்து அரிசி வாங்க முடியாத ஏழைகள் இருக்காங்கன்னு தான ரெண்டு ரூவாய்க்கும்,இலவசமாவும் அரிசி போடுறாங்க.சாப்பிடவே செலவு செய்ய முடியாதவன இதுக்கு செலவு செய்ய வைப்பது என்ன லாஜிக்கோ?//

கோகுல்,

கேட்டீயளே ஒரு கேள்வி. சூப்பர் கேள்வி.

கட்டணம் வசூலிப்பது கூட ஏற்றுக்கொள்ளலாம்! -

நாசமாப் போறவங்க ,

அதை சுத்தமாக வைத்திருக்காமல் ’தப்பித் தவறி’ உள்ளே போனால், உயிருடன் திரும்ப உத்தரவாதம் இல்லாமல் வைத்திருப்பது தான் பெருங்கொடுமை.

kobiraj said... Reply to comment

சிந்திக்க வேண்டிய விடயம்

காந்தி பனங்கூர் said... Reply to comment

அந்த கழிவறைக்கு போறது நரக(ல்) வேதனைங்க. ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேருந்துகளாவது அந்த உணவகத்தில் நிற்கும். பேருந்துக்கு 10 பேர் என வைத்தாலே 1000 பேராவது கழிப்பறையை உபயோகிப்பார்கள். அப்படியென்றால் தினசரி வருமானம் ரூ3000. மாத வருமானம் 90,000. தண்ணீர் செலவு ஊதியர்களின் செலவு என மாதம் ரூ 50,000 போனால் கூட 40,000 ரூபாய் மிச்சம் இருக்கும். இவ்வளவு வருமானம் வரும் அந்த கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அவர்களுக்கு என்ன சிரமம்னு தான் தெரியல. யாராவது அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நல்லது .

அனைவரும் யோசிக்க வேண்டிய பதிவு நண்பா.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

இது டாஸ்மாக் போல்.

Yaathoramani.blogspot.com said... Reply to comment

மிக முக்கியமான பிரச்சனையை முன் வைத்து
பதிவிட்டமைக்கு நன்றி
தங்கள் வாதங்கள் மிக மிக அருமை
த.ம 5

Mathuran said... Reply to comment

//கிரைண்டர்,மிக்சி.பேன்,லாப்டாப் இதெல்லாம் இலவசமா கொடுக்கும் போது பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பறை நடத்தமுடியாதா ?அத டெண்டர் விட்டு சம்பாதிக்கனுமா?//

அப்பிடிகேளுங்க பாஸ்

SURYAJEEVA said... Reply to comment

roaming la incomming um kaasu thaan... local la irunthaa thaan incoming free... ithayum ezhuthiyirunthaa superaa irunthirukkum..

K.s.s.Rajh said... Reply to comment

ஆதங்கப்பதிவு.............சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்க

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இந்தியாவில் இந்த ஒரு பிரச்சனைதான் காசுபார்க்கும் தொழில் போல் நடத்துகிறார்கள்...

இன்னும் தெளிவான மனநிலையில் நாடு இல்லை....

இயற்க்கை உபாதைகளை கழிக்க இலவசமாக நிறை இடங்களில் அமைத்தால் தான் நாடு சுத்தமடையும்...

விழிப்புணர்வு பதிவு...
வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இன்னும் காசுக்கும் இயங்கும் சில இடங்களில் சுத்தம் என்பது கொஞ்சம் கூட இல்லை...

உதா..
சென்னை பாரீர் பேருந்து நிலையத்தில் இருக்கிறது பாருங்கள் அதைவிட கேவலமான கழிப்பறையை நான் எங்கும் பார்த்ததில்லை...
அதற்க்கு 2 ரூபாய் 5 ரூபாய் என வசூல் வேறு...

சசிகுமார் said... Reply to comment

தகவலுக்கு நன்றி

MUTHU said... Reply to comment

கிரைண்டர்,மிக்சி.பேன்,லாப்டாப் இதெல்லாம் இலவசமா கொடுக்கும் போது பேருந்து நிலையங்களில் இலவச கழிப்பறை நடத்தமுடியாதா ?அத டெண்டர் விட்டு சம்பாதிக்கனுமா?

//SUPER SENTENCES //

சிவா said... Reply to comment

உங்களது பதிவு நல்ல முயற்சி...
நான் கூட ஒன்னுக்கு போறதுக்கு 4 கிலோ அரிசிய கொடுத்திட்டு வந்திருக்கேன் பா..

அதாங்க 4 ரூவாய கொடுத்திட்டு வந்திருக்கேன்னு சொல்ல வர்றேன்...

கவி அழகன் said... Reply to comment

நாக்க புடுன்கிரமாதிரி கேள்வி முக்க புடுன்கிற விஷயம்

குறையொன்றுமில்லை. said... Reply to comment

மிகவும் முக்கியமான விஷயம் தான் சொல்லி இருக்கீங்க. கேட்க வேண்டியவர்காதுகளில் விழுந்தால் சரி.

அம்பலத்தார் said... Reply to comment

இந்த தொல்லை இந்தியாவில் மட்டுமில்லை. நான் சிலகாலங்களின்முன் இலங்கை சென்றிருந்தபொழுது பெரும்பாலான தொலைதூரப் பயணங்களிலும் இதனை அனுபவித்தேன். அப்பொழுது மற்றுமொருவிடயத்தையும் அறிந்து கவலைகொண்டேன். விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் பெருந்தெரு ஓரங்களில் A9 பெருந்தெருவோர முறிகண்டி போன்ற இடங்களில் அவர்களால் கழிவறைகள் கட்டப்பட்டு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டதாம். அவர்களத் மறைவுடன் அவர்கள் செயல்படுத்தத் தொடங்கினார்கள் என்பதால் அக்கழிப்பிடங்கள் அரசாங்கத்தினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாம்

மாய உலகம் said... Reply to comment

சரியான பதிவு நண்பா.... இந்த மாதிரி விசயங்களுக்கு அரசு முக்கிய துவம் தரணும்..... அதையெல்லாம் கண்டுக்காம ஏதோதோ இலவசங்குற பேருல மக்கள முட்டாளா ஆக்கிட்டுருக்காங்க... பகிர்வுக்கு நன்றி நண்பா

கோவை நேரம் said... Reply to comment

மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் யூரின் போக 1 ரூபாய் மற்றும் மலம் கழிக்க 2 ரூபாய்..இது அரசு போட்ட உத்தரவு.ஆனால் சிறுநீர் கழிக்க 2 ம் மத்ததுக்கு 5 ம் அவர்கள் வாங்குவது.
நான் கேட்டேன் ஏன் இப்படி என்று ..அவர்கள் சொன்னது டிரைவர் கண்டக்டர் களுக்கு மட்டும் தான் அந்த ரேட் என்று....கடைசியில் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டுதான் சென்றேன்...

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - அரசு ச்நிசயித்த காசு செல்லாது - அவர்கள் கேட்கின்ற காசு தான் கொடுக்க் வேண்டும். சுத்தம் சுகாதாரம் இவ எல்லாம் கிடையவே கிடையாது - வேறு என்ன செய்வது - தலைவிதியே எனச் செல்ல வேண்டியது தான். ம்ம்ம்ம் நல்ல பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா