Tuesday, September 13, 2011

இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?

ஊழலுக்கு எதிரா ஒரு மிகப்பெரிய போராட்டம் அன்னா ஹாசரே அவர்களால் நடைபெற்று நாட்டின் அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு திரண்டிருந்தது.மகிழ்ச்சி!


ஆனா இப்போ நம்ம தமிழ்நாட்டில் மக்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் வகையில் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுஉலைகளை திறக்கக்கூடாது என போராடத்துவங்கி இன்று 127 பேர் உண்ணாவிரத போரட்டத்தை துவக்கி உள்ளனர்!
இந்த போராட்டத்திற்கு நம்மால் முடிந்த வரை சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டுவோம்!நம் சக பதிவர் கூடல் பாலா நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!அவருக்கும் நமது ஆதரவையும்,போராட்டம் வெற்றி பெற நம் பங்களிப்பையும் தருவோம்!


முதலில் ஏன் அணுஉலையை திறக்க்கக்கூடாது  என்பவர்கள் பாலாவின் இந்த பதிவு கள்பதிலளிக்கும்!

கூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் !


கூடங்குளம் அணு உலைக்கெதிராக போராட்டம் ஏன் ?நேரடி ரிப்போர்ட் .


இந்த பதிவுகளுக்கு நான்  அளித்த பின்னூட்டத்தை மீண்டும் எனது  கருத்தாக இங்குவைக்கிறேன்!


"ஐயா!மன்மோகன் நல்ல விஷயங்கள்ல மத்த நாடுகளோட போட்டி போடுங்க!இது மாதிரி விஷயங்கள்ல வேண்டாம்!

காமன்வெல்த் பாலம் ரேஞ்சுக்கு அணுஉலைகள் கட்டப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.நம்ம நாமே அணுக்கதிர்களால் தாக்கிக்க சூழலை உருவாக்காதீர்கள்!
முடிஞ்சா பேஸ்மட்டத்த ஸ்ட்ராங்கா போடுங்க இல்லன்னா ஆணியே புடுங்க வேண்டாம்!"
"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இது போன்ற ஒரு விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு எந்த ஒரு அதிகாரியும் இது வரை சரியான பதிலை அளிக்கவில்லை .
//
இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பாதுகாப்பானது என பிரதமர் சிலநாட்களுக்கு முன் நம் பிரதமர் சொல்லிருந்தார்!
இதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?
அப்படி இங்கே உள்ள அணு உலைகள் உண்மையிலேயே பாதுகாப்பானது தான் என்றால் விஷயம் தெரிந்த மக்கள் பிரதிநிதிகளை கூட்டி விளக்கமளிக்கவேண்டியதுதானே?
சரி உண்மையிலே பாதுக்காப்பானது என நிரூபித்தாலும் சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்தது போன்று இயற்கைச்சீற்றங்களைத்தாங்கும் சக்தி உள்ளது என்பதற்கு என்னை உத்திரவாதம்.அப்படி நடக்கும் பட்சத்தில் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்பே அதிமாகும் அல்லவா?
முதலில் பாதுகாப்பு குறித்த அணைத்து விசயங்களையும் பூர்த்தி செய்துவிட்டு அப்பறம் அணு உலைகளை திறப்பது பற்றி அரசு யோசிக்கட்டும்!
நாங்கள் இருளில் கூட மூழ்கி இருக்கிறோம்(உயிரோடு)."
இன்னுமொரு பதிவுலக நண்பர் சூர்யாஜீவா அவர்களும் தனது ஆதரவு கரத்தை தனது பதிவுகளின் மூலம் நீட்டி உள்ளார்!

கூடும் குலம்,நான் இதற்க்கு முன்பு கவிதை வடிவில் ஒரு பதிவிட்டுளேன்!

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?


நான் ஒன்றும்ம் கண் மூடித்தனமாக அணுஉலைகளை மூடச்சொல்லி சொல்லவில்லை.நான் ஒரு வேதியியல் முதுநிலை பட்டதாரி!எனக்கு ஓரளவுஅணு உலைகளால் ஏற்படும் நன்மை பற்றி தெரியும்.அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் தெரியும்.கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் வரை தொடரும் என்றும் தெரியும்.அதனால் தான் சொல்கிறேன்,அணுஉலைகள் உண்மையிலே யே பாதுகாப்பானதாகஇருந்தால்எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்று மக்களுக்கு உணர்த்திவிட்டு,ஒருவேளை கதிர் வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களை எந்த அளவிற்கு பாதுகாப்பாக காப்பாற்றுவீர்கள் என்று செயல் முறையில் காட்டிவிட்டு,மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வித இடைஞ்சலும் வராது என உத்திரவாதம் அளித்துவிட்டு அணுஉலைகளை திறப்பதைப்பற்றி யோசியுங்கள்!போராடுபவர்களின் நோக்கமும் இதுதான்!
_________________________________________________________________________________________
நேற்று கூட பிரான்ஸ் நாட்டு செர்நோபில் அணுநிலையத்தில் ஒருவர் 
உயிர்இழந்திருக்கிறார்!உண்மையான காரணத்தை நிர்வாகத்தினர் 
சொன்னதாக தெரியவில்லை.மேலும் கவலை அளிக்குவிஷயமாகவும்,நமக்கு எச்சரிக்கவும்செய்கிறது!
_________________________________________________________________________________________

51 comments:

செங்கோவி said... Reply to comment

நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கின்ரீர்கள்..நல்லதே நடக்கட்டும்.

Unknown said... Reply to comment

நாங்கள் போராட்டத்தில் நிச்சயமாக வெல்வோம்

தனிமரம் said... Reply to comment

உண்மைதான் பிரென்ஸில் நடந்ததை அவர்கள் பூசிமெழுகாக்கின்றனர். அணுவின் தாக்கம் விளக்கப்படனும் பொதுமக்களுக்கு இப்படியான விடயத்தை பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

சுதா SJ said... Reply to comment

கலக்கல் பாஸ், ஒரு நல்ல விடயத்தை அழகாக பதிவிட்டு உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

K.s.s.Rajh said... Reply to comment

நல்லவிடயம் நல்லது நடக்கட்டும்

Anonymous said... Reply to comment

நண்பர்களே ... அணு உலைகளை பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.

1 ) அணு உலை கடல் மண்ணால் கட்டப்பட்டது என்பதை எப்படி நாம் ஏற்று கொள்ளமுடியும்..? ஒரு 10 அடி உயரத்தில் 4 சுவரை கட்டி கடல்மன்னால் ஒரு வீடு கட்ட முடியுமா ..? யோசித்து பாருங்கள் .... எத்தனை பல ஆயிரங்கள் டன் எடையுள்ள உபகரணங்கள் பொருத்தப்பட்ட அணு உலை எப்படி கடல் மண்ணால் கட்டப்பட முடியும் . நீங்களே யோசியுங்கள் ..

2 .) பிரான்சில் நடந்தது அணு உலை விபத்து அல்ல. அந்த இடத்தில எந்த அணு உலைகளும் கிடையாது. தயை கூர்ந்து இந்த மாதிரி செய்திகளை வெளியிடும் முன் உலக அளவில் செய்திகளை கொஞ்சம் சேர்த்து பாருங்கள்.

3 . ) கொஞ்சம் யோசித்து பாருங்கள் . மக்களை அழித்து மின்சாரம் தயாரிக்க நாம் என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம். காங்கிரெஸ் கட்சி மட்டுமல்ல , பிஜேபி மற்றும் குஜரால் ஆட்சி எல்லாரும் எதற்கு ஆதரவு கொடுத்தார்கள். காரணம் என்ன ...? சுற்று சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் நம்முடைய மின் தேவையை சந்திக்க முடிகிற அளவில் அணு சக்தி தான் பயன்படும்.

நல்ல ஜனங்களை சிலர் சுய லாபத்திற்காக தூண்டி விடுவது கொஞ்சம் வேதனை அளிக்கத்தான் செய்கிறது. நான் தங்களை குற்றம் சொல்ல வேண்டும் என்று எழுதவில்லை. நன்றி ...

rajamelaiyur said... Reply to comment

பாலா அவர்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

rajamelaiyur said... Reply to comment

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

கூடல் பாலா பக்கத்துக்குச் சென்று அடுத்து தங்கள் பக்கத்துக்கு வந்தேன்.

போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையில்..

போராடுவோம்

ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

SURYAJEEVA said... Reply to comment

அனாமதேயரே, பிரான்ஸ் நாட்டில் நடக்கவில்லை என்று கூறும் நீங்கள் ஜப்பான் விஷயத்தில் அமைதி காத்தது எந்த வகையான வதந்தி.. ஜேர்மனி யில் அணு உலைகளை இனிமேல் திறக்க போவதில்லை என்றும் இருக்கும் அணு உலைகளை மூடப் போவதாகவும் கூறியுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளவும்... பூகம்பம் வர வாய்ப்பில்லாத இடத்தில் தான் அணு உலை கட்டப் பட வேண்டும், ஆனால் சமீப காலமாய் தமிழகம் பூகம்ப அதிர்வுகளை தாங்கி வருவது கொஞ்சம் எச்சரிக்கை மணி அடிக்க தானே செய்கிறது..

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல விஷ்யம்தான் சொல்லி இருக்கீங்க.

Prabu Krishna said... Reply to comment

என்னால் இயன்றவை இந்தத் தகவலை பகிர்ந்து உள்ளேன் சகோ.

சசிகுமார் said... Reply to comment

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Unknown said... Reply to comment

வெங்காயம் வெட்ட அருவாளை பயன்படுத்துறதுக்கு சமம் இந்தியாவின் மின்உற்பத்திக்கு அணு உலைகளை பயன்படுத்துவது..

அது சரி ஜப்பான் அணு உலை இருந்த இடம் எங்கே? கூடங்குளம் அணு உலை அமையப்போகும் இடம் எங்கே?

மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இது போன்ற ஆபத்துக்களை வைப்பது தகுமா?

காந்தி பனங்கூர் said... Reply to comment

எதையும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தும் ஜப்பானே அனுக்கசிவை நிறுத்த பெரும் பாடு படுகிறது. ஊழலை தவிற ஒன்னும் தெரியாத இந்திய அரசாங்கம் யோசித்து முடிவெடுத்தால் நல்லா இருக்கும்.

சென்னை பித்தன் said... Reply to comment

த.ம.7

சென்னை பித்தன் said... Reply to comment

நல்ல பகிர்வு கோகுல்!போராடுவோர்க்கு வாழ்த்துகள்!நல்லதே நடக்கட்டும்!

Unknown said... Reply to comment

உரிய நேரத்தில் உரிய பதிவு
ஏன் உயர்ந்த பதிவு என்றே
சொல்ல வேண்டும்

நன்றி நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

Unknown said... Reply to comment

நல்லதே நடக்கட்டும்

நிரூபன் said... Reply to comment

வணக்கம் நண்பா,
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அணு உலைகள் என்பது வருத்தமான செய்தி.

உண்மையில் மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களாய் அரசாங்கம் இவர்களின் உண்னாவிரதப் போராட்டத்திற்கு நிச்சயம் பதில் சொல்லித் தான் தீர வேண்டும்,

அணு உலைகள் பற்றிய உங்களின் விளக்கம் அருமை நண்பா.

Anonymous said... Reply to comment

@suryajeeva

ஜெர்மனி 2020 ல் அணு உலைகளை படி படியாக குறைக்க போவதாக சொல்லியிருக்கிறது. ஆனால் ஜெர்மெனியின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ௮ கோடி . மொத்தம் 17 அணு உலைகள் உள்ளது. ஒரு தனி மனிதனின் சராசரி மின் பயன்பாடு 7000 KWh . ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. மொத்தம் 20 அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளது. ஒரு தனிமனிதனின் சராசரி மின் பயன்பாடு 700 KWh . இப்பொழுது தங்களுக்கு புரிகிறதா ஏன் இந்தியா ஜெர்மேனியை போல முடிவு எடுக்க முடியாது என்று. ஜெர்மன் தன்னிறைவு அடைந்து விட்டது.

ஜப்பானின் சோகம் உண்மையில் ஒரு துரதிர்ஷ்டம் தான். தாங்கள் விரும்பினால் ... நான் அதை குறித்து உங்களுக்கு விளக்க முடியும்.
தங்களின் கேள்விக்கு நன்றி

Anonymous said... Reply to comment

@suryajeeva

தங்களுக்கு இன்னொரு விளக்கமும் சொல்ல கடமை பட்டுள்ளேன். பூகம்பம் குறித்து பேசினீர்கள். கூடங்குளம் பகுதி 2 ல் ( வெகு அரிதாக பூகம்பம் நடக்கும் இடங்கள் ) வருகிறது. அடிக்கடி பூகம்பம் வரும் ஜப்பானில் இதனை அணு உலைகளை அவர்கள் கட்டினார்கள் என்றால் அணு சக்தியின் ஆக்கப் பூர்வ பலனை நீங்கள் அறிந்து கொள்ளமுடியும் என்று நினைக்கிறன்.

தங்கள் அனைவரையும் வருதப்படுதுவது என் நோக்கமல்ல. நண்பர் கோகுல் மன்னிக்கணும்

Anonymous said... Reply to comment

@ஜ.ரா.ரமேஷ் பாபு

புகுசிமாவை சுற்றிலும் சுமார் 5 லட்சம் ஜனங்கள் வசித்தார்கள் . விபரத்திற்கு அணுகவும்
http://www.tvtrip.com/School-and-university%2B18-info/Fukushima-University%2Bu1BSf2%3Futm_source%3Dmaps.google%26utm_medium%3Dorganic%26utm_campaign%3Dpoi_ontologies_20110502

Anonymous said... Reply to comment

@காந்தி பனங்கூர்

ஊழலை தவிர வேறெதுவும் தெரியாத இந்தியா காற்றை விட வேகமாக செல்லும் ப்ரித்வி ஏவுகணையை தயாரிக்க முடியும் , பல செயற்கை கோள்களை ஏவ முடியும் , யார் துணையும் இல்லாமல் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடியும் என்பதை தங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன் . நன்றி

காட்டான் said... Reply to comment

அணுவுலைகள் தேவையே இல்லையப்பா.. செர்னோபியில நடந்ததைப்போல் ஒரு சம்பவம் இங்கு நடந்தால்..!!?அதை சுற்றியுள்ள 10 லட்சம் மக்களையும் எப்படி அகற்றுவார்கள்..??அதை விட செர்னோபி அணுகசிவு இன்னும் முடிந்தபாடில்ல.. அன்மையில் ஐரோபிய நாடுகள் ஒன்று சேர்ந்து அந்த அணுவுலைய மூடி மாபெரும் சுற்று சுவர் அமைப்பதற்கு  நிதி ஒதுக்கியுள்ளார்கள்.. இப்ப புக்கிசிமா அணுவுலையை சுற்றியும் இப்பிடி செய்வதற்கு பிரான்சின் அரேவா நிறுவனம் ஒரு மாபெரும் ஒப்பந்தம் செய்துள்ளது.. இவர்கள் பணம்பண்ணுவதற்கே இப்படி செய்கிறார்கள்.. அன்மையில் பசுமை விகடனில் ஒரு கட்டுரை படித்தேன் காற்றாலையை அமைத்து அந்த கிராமத்துக்கே மின்சாரம் கொடுத்து உபரியை விற்பதாக..!? இந்தியாவில் சூரிய ஒளி காற்றாலைகள் போன்ற மரபுசார விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அனோமி போன்றவர்கள் பிழைப்புக்காக பத்து லட்சம் மனிதர்களையும் பலிகொடுக்கச்சொல்கிறீர்களா..!!?

Anonymous said... Reply to comment

@காட்டான்

அன்பு நண்பர் .. பிழைப்புக்காக என்ற வார்த்தையை நீங்கள் வாபஸ் பெறவேண்டும் . பதிவுலகில் எல்லாரும் ஒரே கருத்தை தான் சொல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறதா ...? இது கருத்துகளின் சுதந்திரம். நீங்கள் சொன்னிர்கள் காற்றாலை மூலம் மின் சக்தி உண்டு பண்ண முடியும் என்று. உண்மை .. கொஞ்சம் யோசித்து பாருங்கள் மாண்புமிகு இந்நாள் முதல்வர் போன முறை முதல்வராக இருந்த போது காற்றாலையில் தமிழ்நாடு முதலாவது இடத்தில் தான் இருந்தது . ஆனால் போன ஆட்சியில் நடந்தது என்ன....? மின் பற்றா குறையால் ஆட்சி பறி போனது. காரணம் ... போதிய காற்று இல்லாத படியால் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. காற்றாலைகள் அமைக்க வேண்டுமானால் எத்தனை ஏக்கர் விளை நிலங்கள் ஆக்ரமிக்க படும் என்பதை உங்கள் கணிப்புக்கே விடுகிறேன். ( 1000 MWe மின்சாரம் தயாரிக்க கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவை ) . பலி கொடுத்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு எப்படி வர முடியும்...? நான் உங்கள் எதிரி அல்ல. நாட்டின் நன்மைக்காக பரிதவிக்கும் உங்களை போன்ற குடிமகன் தான். நன்றி நண்பரே

காட்டான் said... Reply to comment

நன்பரே பிழைப்புக்காக என்ற கருத்தை நான் உங்களுக்கு சொல்லவில்லை அணுவுலைகலை விற்கும் நாடுகலைதான் சொன்னேன் அது உங்களை குறிப்பதற்காக அல்ல உங்களுக்கு ஏற்பட்ட மன உழைச்சலுக்காக வருந்துகிறேன்..

மாய உலகம் said... Reply to comment

வணக்கம் நண்பா,
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அணு உலைகள் என்பது வருத்தமான செய்தி.

உண்மையில் மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களாய் அரசாங்கம் இவர்களின் உண்னாவிரதப் போராட்டத்திற்கு நிச்சயம் பதில் சொல்லித் தான் தீர வேண்டும்,

அணு உலைகள் பற்றிய உங்களின் விளக்கம் அருமை நண்பா.

காட்டான் said... Reply to comment

நன்பரே காற்றாலைகளுக்கு விளைநிலங்கள் தேவையில்லை கடலின் நடுவிலேயே லட்சக்கனக்கான காற்றாலையை அமைத்துள்ளார்கள் இங்கு நான் ஒரு சிறந்த பதிவர் இல்லைத்தான் ஆனால் நான் ஒருவருமே பின்னூட்டம் போடத ஒரு பதிவில் இதைப்பற்றி கூறியிருந்தேன் கடலுக்குள்ளும் தரிசு நிலங்களிலும் காற்றாலைகள் இருப்பதை படத்துடன் போட்டுள்ளேன்.. சூரிய ஒளியில் விமானத்தையும் ஓட்டி பார்துள்ளார்கள் இந்த குளிர் நாட்டிலேயே!!!!!  உங்களை புண்படுத்துவது எனது நோக்கமல்ல.. அத்துடன் விளை நிலங்களிலும் காற்றாலைகள் இருக்கின்றன.. காற்றாலைகள் அதிக இடத்தை பிடிக்காது.. ஒருவர் நிற்குமிடமே காணுமையா.. நீண்ட காலத்திற்கு முன்னர் மொரிசியஸ் தீவிற்கு இங்குள்ள அந்த நாட்டு நன்பர் என்னை அழைத்துக்கொண்டு போனார் அங்கு கூடுதலான வீடுகளின் தேவையில் அரைவாசிக்குமேல் சூரிய மின்சாரம்தான்.. இப்போது இன்னும் கூடியிருக்குமென்று நம்புகிறேன்..!! அங்குள்ளவர்கள் யாராவது அறியத்தாருங்கள் அங்குள்ள இன்றைய நிலைமையை..!! நான் விதண்டாவாதம் செய்யவில்லை மாற்றுக்கருத்தையே முன்வைக்கிறேன்...

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!! said... Reply to comment

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான என்னுடைய பதிவையும் படிங்க

http://vairaisathish.blogspot.com/2011/09/127.html

காட்டான் said... Reply to comment

நன்பரே மண்னித்துக்கொள்ளுங்கள் அனோமின்னு உங்களை குறித்து எழுதியதற்காக.. அந்த இடத்தில் அனுவுலைகளை விற்கும் நாடுகள்ன்னு வாசிக்கவும்.. உங்களை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன்..

Unknown said... Reply to comment

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான என்னுடைய பதிவையும் படிங்க

4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

மகேந்திரன் said... Reply to comment

அன்பு நண்பர் கோகுல்
ஆதரவுக் கரம் கொடுப்போம்....
ஆட்சியாளர்களின் செயவிஎரும் வரை
உரக்கக் கத்துவோம்

பிரணவன் said... Reply to comment

அணுமின் நிலையம் தேவையான ஒன்று தான். ஆனால் ஏதேனும் பாதிப்புகள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்திவிட்டால் நல்லது. . .

அம்பாளடியாள் said... Reply to comment

முயற்சி திருவினையாக்கும் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .......

அம்பாளடியாள் said... Reply to comment

தமிழ்மணம் 13

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

அன்பு நண்பா..

தக்க நேரத்தில் தேவையான பதிவை சிந்திக்கும் விதமாக வெளியிட்டிருக்கிறீர்கள்.

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

127 உயிர்களின் கேள்வியாக..

அடக்கம் செய்யவா அறிவியல்

என்னும் தலைப்பில் என் சமூகக் கோபத்தை வெளியிட்டிருக்கிறேன் நண்பா.

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

Thennavan said... Reply to comment

அணு கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிநுட்பம் இன்னும் கண்டறியப்படவில்லை. நாளை அணு உலை வேண்டாம் என்று எந்த அணு உலையை மூடினாலும், அந்த அமைப்பை இடித்து தள்ள முடியாது. சில நூறு ஆண்டுக்காவது அதை அதிக செலவில் பாதுகாக்க வேண்டும்.

வருங்கால சந்ததிகளுக்கு நாம் வழங்கும் சொத்து இதுதானா ?

Anonymous said... Reply to comment

நல்ல பதிவு கோகுல்.இந்திய அரசியல் வாதிகளுக்கு எங்க இதல்லாம் புரியப்போகுது..அவர்கள் ஊழல்களை நிகழ்த்தவே அவர்கள் லாயக்கு..பாவம் மக்கள்

M.R said... Reply to comment

அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் நண்பரே

M.R said... Reply to comment

t.m voted

Unknown said... Reply to comment

சிந்திக்க வைக்கும் கருத்துகளை சொல்லியிருக்கிறீர்கள்.
பெட்ரோல் போன்ற மரபு சார்ந்த எரிபொருள்கள் தீர்ந்து போய்விடக்கூடிய சூழலில் நாம் இருக்கிறோம் என்பதையும் மறுத்து விட இயலாது. ஆனால்
செர்னொபில், புகுஷிமா போன்ற உலைகளின் வெடிப்பும் யோசிக்க வைக்கிறது.

Anonymous said... Reply to comment

அனாமதேயரே...

ஒரு ரோடே ஒழுங்காக போடத்தெரியாத நம் நாட்டில் எதை நம்பி அணுஉலை அடுத்த தெருவில்...

நீங்களே யோசியுங்கள்...

M.R said... Reply to comment

தங்கள் தளத்தின் லிங்க் எனது இன்றைய பதிவில் கொடுத்துள்ளேன் நண்பரே

அந்நியன் 2 said... Reply to comment

பாஸ்.

போராட்டம் நடக்கட்டும்.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

இருதயம் said... Reply to comment

@ரெவெரி

ஐயா ... நீங்கள் இந்த தேசத்தில் தானா இருக்கிறீர்கள் ....? சந்திரனுக்கு நாம் ராக்கெட் அனுப்பினோம் என்ற அனாமதேயரின் கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்

அந்நியன் 2 said... Reply to comment

பல உயிர்களை காப்பாற்றுவதற்காக இங்கே சில உயிர்கள் விஷம பரீட்சையில் கிடக்கின்றது.

மின்சாரம் இல்லாமல் வாழ்ந்திடலாம் ஆனால் உயிர்கள் இல்லாமல் வாழ முடியாது பொதுமக்கள்களின் கருத்துகளை நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதே ஆட்சியாளர்களின் பொறுப்பு அதே நேரத்தில் எதிர் கட்சிகளும் ஆளும் கட்சியை வீழ்த்துவதற்க்காக அப்பாவிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

காந்திய வழியில் போராட்டம் நடக்கின்றது ஆனால் யாரும் காந்தியாகி விட முடியாது.

உங்கள் குடும்பங்களையும் மனதில் நினைத்து போராடுங்கள் தங்களை தாங்களே வறுத்திக் கொள்ளாதிர்கள்.

அம்மக்கள்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் அதே நேரத்தில் அரசுக்கும் தர்ம சங்கடங்களை கொடுப்பதை பொது மக்கள்கள் நிறுத்தியால்தான் அரசின் கவனம் நாட்டின் நலம் பக்கம் திரும்பும்.

அன்றாடம் நாம் அவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்போமேயானல் நாட்டின் வளர்ச்சியும் சமுதாய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு தமிழ் நாடு இருட்டு நிறத்தை பெற வேண்டி வரும் என்பதை எல்லோரும் மனதில் கொண்டு அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் போராட முன்வரனும்.

வாழ்த்துக்கள் boss

சம்பத்குமார் said... Reply to comment

இன்றைய எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே..

ஒன்றிணைந்து ஓங்கிக்குரல் கொடுப்போம் எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்படி செய்வோம்

வெற்றி நமதே.. வெற்றி நமதே..