இயலாமை
அற்புதமாக சொற்பொழிவாற்றினார்
ஆன்மீகவாதி ஒருவர்
அனாவசியமாக
அற்பஉயிரையும்
அழிக்கக்கூடாதென
அவரால்கூட காப்பாற்றமுடியவில்லை
அவர் காலடியில் கிடந்த
எறும்பை!
_________________________________________________________________________
எது உண்மை?
கோவில் கட்ட
கோடிகோடியாய்
கொட்டிக்கொடுக்கும் சிலர்
பள்ளிக்கூடங்களையும்
ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்
கண்டுகொள்வதில்லை
முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு என்பதை
யார் இவர்களுக்கு புரிய வைப்பது?
Tweet | ||||||
32 comments:
தோழரே ..அழிப்பது தானே ...அளி என்று இருக்கிறது ...
விடுமுறை முடித்து வீட்டிற்கு வந்ததும், நம்ம கோகுல் பாஸின் பதிவு...
படிப்போம்..
எல்லா ஓட்டுப் பட்டையிலும் குத்தியாச்சு.
இண்ட்லியை மட்டும் காணலை.
இயலாமை என்ற தலைப்பின் கீழ், மனிதர்கள் சறுக்கி விழும் தருணங்களினைக் கவியாக்கியிருக்கிறீங்க.
நல்ல கவிதைகள் நண்பா
@கோவை நேரம்
நன்றி!திருத்திவிட்டேன்!
@நிரூபன்
அதைத்தான் எல்லோரும் நேத்திலுருந்து
தேடிட்டு இருக்கோம்!
அருமையான் பகிர்வுகள். பாராட்டுக்கள்.
முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு என்பதை
யார் இவர்களுக்கு புரிய வைப்பது?//
முற்றிலும் உண்மை நண்பா..
@இராஜராஜேஸ்வரி
நன்றி!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வாங்க கருன்!சண்டே ரெஸ்டா?
நாளைக்கு மறுபடியும் ஸ்கூலு!அவ்வவ்
Super Kavithai . .
இரண்டும் அருமை. மிக சாதாரண வார்த்தைகளைக் கொண்டு மிகப்பெரிய விஷயத்தை கையாண்டு இருப்பதற்கே பாராட்ட வேண்டும்.
@பாரத்... பாரதி...
வருக நண்பரே!கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி!
http://ta.indli.com/
மக்களே!
//பராமரிப்பு காரணங்களுக்காக இன்ட்லி தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது.//
///கோவில் கட்ட
கோடிகோடியாய்
கொட்டிக்கொடுக்கும் சிலர்
கல்விநிறுவனங்களையும்
ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்
கண்டுகொள்வதில்லை/// அதே அதே ...இதை நாம் சொன்னால் தெய்வக்குத்தம் ஆகிடும் எண்டு பொல்லை தூக்கிக்கொண்டு துரத்துவாங்கள் பாஸ் )))
யோசிக்க வைக்கும் கவிதை நண்பா.. நன்றி
கல்வி நிறுவனங்கள் தான் லட்ச லட்சமாக கொள்ளை அடிக்கிறார்களே...
தமிழ்மணத்தில் ஏழாவது ஓட்டு...
அன்பின் கோகுல் - அருமையான வரிகள் - இயலாமை - நம் கையில் இல்லையே - என்ன செய்வது ..... நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா
பாஸ் உங்கள் சண்டேயின் ரெண்டும் சூப்பர்..
இண்ட்லிக்கு என்ன நடந்தது.
கோகுல் உங்கள் கவிதை நன்று..
கடவுள் காப்பாத்துவார் என்று நம்புவதும் / மனிதன் ஏமாற்றுவான் என்று நம்புவதுமே கராணம்...
மாப்ள கொன்னுட்ட போ!
முடிந்தவரை
முடியாதவர்களுக்கு உதவுவதே
உண்மையான இறைத்தொண்டு. . .மனிதர்களுக்கு செய்த பாவங்களுக்கு, பலிதீர்க்க கோவிலுக்கு கொட்டி கொடுக்கின்றனர். . .பாவம். . .
நல்ல பதிவு சகா. . .
சாட்டையடியாய்
கேள்விகள்..
எருமை மாடாய் மக்கள்!!!!!!!!!
பணம் கொடுப்பதோ..
உணவு கொடுப்பதோ..
மட்டும் உதவியல்ல..
நல்ல சிந்தனைகளால் ஒருவரை உழைத்து வாழ அறிவுறுத்துவதும்
ஒருவகையான கொடைதான்..
இது பொருளை விட மதிப்புமிக்கது..
என்பது என் கருத்து..
உண்மை மெய்ஞானத்தை பிரதிபலிக்கும் கவிதை... அருமை நண்பா...
வாழ்த்துகள்...
முள்ளாய் குத்தும் வரிகள்
கலக்கல் இரட்டையர்கள்...
வணக்கம் பாஸ்
சமுதாய விழிப்புணர்வூட்டும் வரிகளிற்கு வாழ்த்துக்கள்
Post a Comment