Monday, September 12, 2011

முத்தமிட வாரீயளா?


யாருக்கு எப்படியோ
இந்த பழக்கம் எனக்கு
எப்படி வந்தது என்று
எனக்கே தெரியவில்லை

அவளது உதடுகளை உரசாமல்
அன்றைய தினம் எனக்கு
அவ்வளவு இனிப்பாய் இருப்பதில்லை

அது என்னவோ தெரியவில்லை
ஒரு நாள் தவறினால் கூட
ஒரு கை இழந்தது போலிருக்கும்

நான் முத்தமிடும் நேரத்தில்
எனக்கு சொந்தமான அந்த உதடுகள்
எஞ்சிய நேரங்களில் வேறு யாருடனோ  
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்


இதில் எனக்கு  அவமானமோ வருத்தமோ
இம்மியளவும் இருப்பதில்லை
சொல்லப்போனால் இது எனக்கு
சந்தோசத்தையே தருகிறது

ஏனிப்படி சொல்லுகிறேன் என்றால்
இச்சமூகத்தில் நிலவிய
சாதி பாகுபாட்டை
சிறிதளவு குறித்த பெருமை இவளது
உதடுகளையே சேரும்



சிலநேரம் இவளை முத்தமிடும் தருணங்களில் தான்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன
அது அரசியலாகட்டும்
அலுவலகமாகட்டும்
ஆனால் பல நேரங்களில்
இததருணங்கள் இக்கட்டில் போய் முடியும்

ஆனாலும் அவளது உதடுகளை
முத்தமிடாமல் என்னாலிருக்கமுடியாது
என்னால் மட்டுமல்ல என்னைப்போல்
பலரும் அவளது உதட்டு சுவைக்கு
அடிமையாகிக்கிடக்கின்றனர்
அப்படிதானே!
இதோ நீங்களும் முத்தமிடுங்கள்
அவளது உதடுகளில்!!!







______________________________________________________________________________
ப்ளாக் ஸ்கூலுக்கு விட்ட லீவு முடிஞ்சு திரும்பி வந்தாச்சு!யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திக்கிட்டு இருந்தப்ப போட்ட டீய கொஞ்சம் சுட வைச்சு குடுத்திருக்கேன்.குடிச்சிட்டு இருங்க சுட சுட புது டீ போட்டுட்டு வரேன்!எல்லார் கடைலேயும் வந்து டீ குடிக்கிறேன்!வரட்டுமா?
_________________________________________________________________________________


21 comments:

M.R said... Reply to comment

டீ நல்லா தான் இருக்கு ,டீன்னு சொன்னா யாரும் வரமாட்டாங்குன்னு முத்தம்னு.....

K.s.s.Rajh said... Reply to comment

ஆகா டீ சூப்பர்.அது ஏன் பாஸ் முதல அந்தப்படத்தை இந்த நேரத்தில் போட்டு தலைவி வாழ்க்கையில் கும்மி அடிக்க நினைத்த உங்களுக்கு ந.தா.ரசிகர் மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்/ஹி.ஹி.ஹி.ஹி

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

இச்

Unknown said... Reply to comment

ஏன்யா ஏன் இப்படி டீ போட்டீரு ஹிஹி!

SURYAJEEVA said... Reply to comment

தம்பி டீ இன்னும் வரல... ஆஹா வடை போச்சே.. -வடிவேலு

நிரூபன் said... Reply to comment

முத்தமிட வாரீயளா?//

நீங்க ஓக்கேன்னா...நான் ஓக்கே பாஸ்.,

அதான் விடுமுறையில் யோசித்தீங்களா..
அவ்............

நிரூபன் said... Reply to comment

சாதி பாகுபாட்டை
சிறிதளவு குறித்த பெருமை இவளது
உதடுகளையே சேரும்//

இது உண்மை, யதார்த்தமான வரிகளும் கூட.

நிரூபன் said... Reply to comment

சிலநேரம் இவளை முத்தமிடும் தருணங்களில் தான்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன
அது அரசியலாகட்டும்
அலுவலகமாகட்டும்
ஆனால் பல நேரங்களில்
இததருணங்கள் இக்கட்டில் போய் முடியும்//

அடடா...இம்புட்டு விடயங்கள் முத்தத்தின் பின்னர் பொதிந்திருக்கிறதா.....

நிரூபன் said... Reply to comment

அடிமையாகிக்கிடக்கின்றனர்
அப்படிதானே!
இதோ நீங்களும் முத்தமிடுங்கள்
அவளது உதடுகளில்!!!//

அவ்..இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து,
ஒரு பின் நவீனத்துவப் பாணிக் கவிதை..

கலக்கல் பாஸ்,,,

ஆம்...
"முத்தமிட வாரீயளா?"//

தேநீர்க் கோப்பையை முத்தமிட வாரீயளா?

K said... Reply to comment

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்!///

சார், உங்க பேச்சைக் கேட்டு நானும் முத்தமிட்டுப் பார்த்தேன்! உதடு ரெண்டும் பொசுங்கிடுச்சு!ஹி ஹி ஹி !!!

Unknown said... Reply to comment

ஆகா!ஆகா! கோகுல்-நீர்
அளித்த முத்தப் பாகில்
வேகா உதடுகள் இல்லை-சூடு
வேண்டின் அதுவே தொல்லை
வாகாய் தலைப்பூ தந்தே-உங்கள்
வலையில் பலரும் வந்தே
நோகா வகையில் விழுந்தார்-பின்
நோக்கிய மெதுவாய் எழுந்தார்

புலவர் சா இராமாநுசம்

மகேந்திரன் said... Reply to comment

சுவையான முத்தம்....

சக்தி கல்வி மையம் said... Reply to comment

வித்தியாசமான சிந்தனை..

டி ? சூப்பர்...

காந்தி பனங்கூர் said... Reply to comment

டீ கப்பு(கோப்பை)க்கு பதில் இனிமேல் முத்த கப்புன்னு சொலலாம் போல. அருமையான முத்தம்... மன்னிக்கவும் அருமையான கவிதை.

rajamelaiyur said... Reply to comment

நல்ல பதிவு

சுதா SJ said... Reply to comment

என்ன தலைப்பையா இது??? ரெம்ப ஆசையா ஏதோ நினைச்சு ஓடி வந்தேன்
கவுத்துட்டியே மாப்பிள்ளே

சுதா SJ said... Reply to comment

கவிதை அழகு தான்
போட்டோஸ் செம கிக்

Anonymous said... Reply to comment

ஆறிப்போன டீ யய் சூடாக்கியதுக்கு நன்றி...

செங்கோவி said... Reply to comment

முத ஸ்டில்லு போட்டதுமே டீ சூடாகி இருக்குமே..

Philosophy Prabhakaran said... Reply to comment

டீயை காமத்துப்பாலில் போட்டிருக்கிறீர்கள்...

மாய உலகம் said... Reply to comment

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்