Saturday, September 3, 2011

எங்கே போய் சொல்ல?






பூகம்பத்தில் இடிந்து விழுந்தது
வீடு கட்ட வாஸ்து பார்க்கும்
வாஸ்து நிபுணர் வீடு!

அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேளை உணவில்லை!

அம்பாளை பூஜிக்கும் அர்ச்சகர் வீட்டில்
அடுப்பு எரியவில்லை
ஐந்து நாட்களாக!

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்
தற்கொலை செய்து கொண்டார்
அதிர்ஷ்டக்கல் வியாபாரி!

பட்டப்பகலில் வீடு புகுந்து
துணிகரக்கொள்ளை
போலிஸ்காரர் வீட்டில்!

எல்லை காத்து நிற்கும்
இராணுவவீரன் வயலில்
வரப்புத் தகராறு!

தவறுகளை மாணவர்களுக்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஆசிரியரே
தம் அடித்துக்கொண்டிருக்கிறார்!


எங்கே போய் சொல்ல?


41 comments:

சசிகுமார் said... Reply to comment

வித்தியாசமான கற்பனைகள்.... ஆனால் உண்மைகள்....

கோகுல் said... Reply to comment

@சசிகுமார்
முதல் முறையா என் தளத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்!
நன்றி சசி!

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

நல்லாயிருக்கு .

சக்தி கல்வி மையம் said... Reply to comment

சபாஷ்.. அருமை..
பாராட்டுகள்..

கோகுல் said... Reply to comment

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்லாயிருக்கு .
//
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சபாஷ்.. அருமை..
பாராட்டுகள்.//

நன்றி!நன்றி!நண்பர்களே!

Unknown said... Reply to comment

மாப்ள நச்!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

எங்கே போய் சொல்ல?

படமும் கருத்துக்களும் வித்தியாசமான கருத்துக்களும் கவர்ந்தன.அருமை. பாராட்டுக்கள்.

மகேந்திரன் said... Reply to comment

எதிர்மறை வினைகளை அழகாக
எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.
எடுத்துவந்த கோணம் அருமை.

காந்தி பனங்கூர் said... Reply to comment

நல்ல கவிதை. அசத்துங்க பாஸ்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இந்த முரண்பாடுகலால் நிறைந்ததுதான் உலகம்.....

நல்லா வந்திருக்கு கோகுல்
வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சபாஷ்...

K.s.s.Rajh said... Reply to comment

//அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேலை உணவில்லை!//


அருமையான நச்...வரிகள்

அந்நியன் 2 said... Reply to comment

உணர்ச்சியுன் உச்சமிது.

வாழ்த்துக்கள் சகோ.

தமிழ் மணமும் ஓK.

Unknown said... Reply to comment

அதான் ஏற்கனவே இங்க சொல்லீட்டீங்க நாங்க எல்லாம் படிச்சுட்டோம்

சூப்பர் கற்பனை நண்பா..

செங்கோவி said... Reply to comment

நல்லாத் தான் யோசிக்கிறீங்க..

சுதா SJ said... Reply to comment

நிஜமானா ஆதங்கமே நண்பா....
கவிதைக்கேற்ற போட்டோ
ஹீ ஹீ

சுதா SJ said... Reply to comment

நல்ல சிந்தனை பாஸ், சூப்பர்

Anonymous said... Reply to comment

ரூம் போட்டு யோசிச்சதுக்கு வாழ்த்துக்கள்...

தனிமரம் said... Reply to comment

முகத்தில் அறையும் உண்மைகள் நல்ல கணிப்பு!

கூடல் பாலா said... Reply to comment

ஹைக்கூ மாலை ...அட்டகாசம் !

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

நண்பா.... இது கற்பனை அல்ல... உண்மை கவிதை

M.R said... Reply to comment

நல்ல சிந்தனை பகிர்வுக்கு நன்றி

M.R said... Reply to comment

tamil manam 13

Manish said... Reply to comment

//அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேலை உணவில்லை!//

மிகவும் அருமை!!

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

எங்கே போய் சொல்ல..

அருமையாக உள்ளது நண்பா

சாட்டையால் அடித்தது போல சமூக அவலங்களை அழகாக உணரும்படி சொல்லிய விதம் பாராட்டத்தக்கது.

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

கோகுல் உண்மையச் சொல்லுங்க..

படத்துக்காக கவிதை எழுதுனீங்களா.?

கவிதைக்கு ஏற்ற படம் கிடைத்ததா?

இரண்டுமே மிகவும் இயைபாக உள்ளது.

அருமை.

கோகுல் said... Reply to comment

விக்கியுலகம் said...
மாப்ள நச்!
////
இராஜராஜேஸ்வரி said...
எங்கே போய் சொல்ல?

படமும் கருத்துக்களும் வித்தியாசமான கருத்துக்களும் கவர்ந்தன.அருமை. பாராட்டுக்கள்.
//
மகேந்திரன் said...
எதிர்மறை வினைகளை அழகாக
எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.
எடுத்துவந்த கோணம் அருமை.
//
காந்தி பனங்கூர் said...
நல்ல கவிதை. அசத்துங்க பாஸ்.
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
இந்த முரண்பாடுகலால் நிறைந்ததுதான் உலகம்.....

நல்லா வந்திருக்கு கோகுல்
வாழ்த்துக்கள்...
//
# கவிதை வீதி # சௌந்தர் said...
சபாஷ்...
//
K.s.s.Rajh said...
//அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேலை உணவில்லை!//


அருமையான நச்...வரிகள்
//
அந்நியன் 2 said...
உணர்ச்சியுன் உச்சமிது.

வாழ்த்துக்கள் சகோ.

தமிழ் மணமும் ஓK.
//
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
அதான் ஏற்கனவே இங்க சொல்லீட்டீங்க நாங்க எல்லாம் படிச்சுட்டோம்

சூப்பர் கற்பனை நண்பா..
////

வருகை தந்து கருத்துரை கூறிய அணைத்து நட்புகளுக்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...
நல்லாத் தான் யோசிக்கிறீங்க..
//
ஆமாங்க நானா யோசிச்சேன்!ஹிஹி!

கோகுல் said... Reply to comment

துஷ்யந்தன் said...
நிஜமானா ஆதங்கமே நண்பா....
கவிதைக்கேற்ற போட்டோ
ஹீ ஹீ

//
துஷ்யந்தன் said...
நல்ல சிந்தனை பாஸ், சூப்பர்
//

நன்றி துஷி!

கோகுல் said... Reply to comment

ரெவெரி said...
ரூம் போட்டு யோசிச்சதுக்கு வாழ்த்துக்கள்...//

ரூம் வாடகை கொஞ்சம் அதிகமாகிடுச்சு!
உங்க தலையில் கட்டலாம் னு இருக்கேன்!

கோகுல் said... Reply to comment

Nesan said...
முகத்தில் அறையும் உண்மைகள் நல்ல கணிப்பு!
//

koodal bala said...
ஹைக்கூ மாலை ...அட்டகாசம் !
//

வாங்க நேசன்!பாலா!நன்றி!

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
நண்பா.... இது கற்பனை அல்ல... உண்மை கவிதை
//

M.R said...
நல்ல சிந்தனை பகிர்வுக்கு நன்றி

tamil manam 13
//
Manish said...
//அடுத்தவரின் எதிர்காலத்தை
கணிதுக்கூறும் சோதிடருக்கு
அடுத்த வேலை உணவில்லை!//

மிகவும் அருமை!!
//

நண்பர்களே தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி!

கோகுல் said... Reply to comment

முனைவர்.இரா.குணசீலன் said...
எங்கே போய் சொல்ல..

அருமையாக உள்ளது நண்பா

சாட்டையால் அடித்தது போல சமூக அவலங்களை அழகாக உணரும்படி சொல்லிய விதம் பாராட்டத்தக்கது.


கோகுல் உண்மையச் சொல்லுங்க..

படத்துக்காக கவிதை எழுதுனீங்களா.?

கவிதைக்கு ஏற்ற படம் கிடைத்ததா?

இரண்டுமே மிகவும் இயைபாக உள்ளது.

அருமை.

//
தங்கள் கருத்துக்கு நன்றி!முனைவர் ஐயா!
இது நான் கல்லூரியில் படித்த காலத்தில் எழுதியது.இப்போது தான் பதிவிடுகிறேன்!படம் கவிதைக்காக சேர்க்கப்பட்டது தான்!

காட்டான் said... Reply to comment

என்ன மாப்பிள தொட்டதுக்கெல்லாம் ஈமெயில் அனுப்புவ ஏன்யா இதுக்கு அனுப்பல... பரவாயில்ல என்ர மாப்பிள்ளையின் கடதானே அழைக்கோனுன்னு சட்டமே..நாமலா வந்து கும்மிறதுதானே ஹி ஹி வாழ்த்துக்கள் மாப்பிள... வித்தியாசமானதும் உண்மையானதும் இக்கவிதை வரிகள்... ஓட்ட போட்டுட்டு போறேன்யா மாப்பிள...

காட்டான் குழ போட்டான்...

நிரூபன் said... Reply to comment

எங்கே போய் சொல்ல?//

என் மனதினுள் வித்தியாசமான இரு வேறு பொருளினைத் தருகின்றது.

ஒன்று,
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு தான் கருமங்களில் சிறந்தவர்களாக இருந்தாலும் காலச் சக்கரத்தில் இன்பமும், துன்பமும் சரி சமன் என்பதனை உணர்த்தி, ஏற்றத் தாழ்வுகள் அனைவருக்கும் பொதுவானவை என்பதனை உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது.

நிரூபன் said... Reply to comment

அடுத்து எதிர்மறையா விடயங்கள் எல்லோருக்கும் நிகழும் என்பதனையும் உங்களின் கவிதை சொல்லி நிற்கிறது.

மாலதி said... Reply to comment

தவறுகளை மாணவர்களுக்கு
சுட்டிக்காட்ட வேண்டிய ஆசிரியரே
தம் அடித்துக்கொண்டிருக்கிறார்!//உண்மைகள்....

Rathnavel Natarajan said... Reply to comment

அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

நாவலந்தீவு said... Reply to comment

கவிதை அருமை...
முரண்பாட்டில் முதன்மை...

இனிய நண்பனுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

அம்பலத்தார் said... Reply to comment

ஜப்பானியக் ஹைக்கூ பாணியில் மும்மூன்று வரிகளில் முத்தான படைப்புக்கள்.அசத்திட்டிங்க

Navanee said... Reply to comment

Simply superb....